கொரோனா வைரஸின் தொடர்கதை இது ஒரு முடிவிலா தொடர்கதை [முடிவிலி - ∞] வைரஸ்கள் எப்பொழுதும் மாற்றமடைகின்றன அதற்கு காலங்கள் ஒரு தடை யே கிடையாது ஆயிரக்கணக்கான பிறழ்வுகள் ஏற்கனவே SARS-CoV-2 இலிருந்து [2019-2022 ] அறியப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸின் அசல் வடிவம் காட்டு வகை என்று அழைக்கப்படுகின்றது. வெவ்வேறு கொரோனா வைரஸ் மாறுபாடுகளுக்கான காரணம் பிறழ்வுகள், வைரஸின் மரபணு தகவலில் சீரற்ற நகல் பிழைகள். தவறான பிரதி எடுப்பு காரணமாக விளைந்தவைகள்.
அதாவது நோய் எதிர்ப்பு சக்தியிடம் இருந்து தன்னைக் காப்பாற்றி, தன்னைத் தக்க வைத்துக் கொள்ள பிரதி எடுக்கும் போது அந்த உயிரினத்தின் தகவல்களையும் இணைத்து புதுப் பிறவி எடுக்கின்றது.
இதன் நிமித்தம் அந்த புது பிறவி வைரஸ், நோய்-எதிர்ப்பு-சக்தியை ஏமாற்றுகின்றது. சாதாரண நோய்க்குறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு கொரோனா வைரஸ் இப்போது அந்த மனிதனை கொல்ல விஸ்வரூபம் எடுக்கின்றது.
இதற்குக் காரணம் அந்த உயிரினத்தின் உடல் திசுக்கள் உனக்கு தொற்று ஏற்படும் போது அது சாதாரண வைரஸ், அது உன் உடலில் புது பிரதி எடுத்து வரும்போது அது உனக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தானதாக மாறுகின்றது.
இதனால் தான் கொரோனா வைரஸ் ஆபத்தானதாக பார்க்கப்படுகின்றது. அது எந்த நேரத்திலும் எந்த உயிரினத்திலும் ஆபத்தான பிறழ்வாக மாறலாம். இது உடலின் உயிரணுக்களில் பெருக்கும்போது எழுகின்றது.
சில சமயங்களில் சத்தியற்ற [நோஞ்சானாக] வரலாம் மற்றும் சில சமயங்களில் வீரியமிக்கதாக புறப்படலாம். அது உன் உடலில் நடக்கும் பிரதி எடுப்பை பொறுத்தது.
கோவிட் 19 ஆரம்பம் சீனாவில் அறியப்பட்டிருந்தாலும் இந்த புதுவகை வைரஸ்களுக்கு அவர்கள் காரணம் கிடையாது. உன்னை கொல்ல நீயே புது வகை வைரஸை உற்பத்தி செய்கிறாய். வைரஸ்களின் தொழிற்சாலையாக மனித உடல் இயங்குகின்றது.
ஒட்டுமொத்தமாக, ஐந்து கொரோனா வைரஸ் வகைகளை கவலைக்குரியது என வகைப்படுத்துகின்றது. ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் காமா, ஓமிக்ரான் ஆகியவற்றுடன் தற்போது புதுப் பிறழ்வு ஓமிக்ரான் துணை வகை XB B.1.5 உலக சுகாதார நிறுவனம் கண்காணித்து வருகின்றது.
தொற்று நோய் காலங்களில் அசைவ உணவை விட சைவ உணவுகள் மிகச்சிறந்தது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு வைரஸ் தொற்று நோய் அபாயம் குறைவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக