செவ்வாய், 3 ஜனவரி, 2023

Harvest Festival [Thai Pongal] The harvest day is common to all the people of the world

அறுவடை திருநாள்[தைப்பொங்கல்]; அறுவடை திருநாள் என்பது உலகமக்கள் அனைவருக்கும் பொதுவானது, அதுவொரூ வேளாமைத் திருநாள். காலநிலைகளுக்கு ஏற்ப நாடுகளிடையே அறுவடை நாள் மாறுபடுகின்றது.

மேற்கோளாக: ஐரோப்பாவில்/ஜெர்மனியில் அறுவடைத் திருநாள்: பார்லி, கோதுமை, சோளம் மற்றும் பிற பயிர்கள் ஜூன் நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் இறுதி வரை அறுவடைக்கு தயாராக இருக்கும்.

இது அவர்களுக்கு சிறப்பு மிக்க மகிழ்ச்சி பொங்கும் திருநாள். அவர்கள்  அறுவடை திருநாளை வேறு விதமான சடங்காக கொண்டாடுகின்றார்கள்.

மெசபடோமிய கடவுள்கள் & அரசர்கள் மெசபடோமிய கலைப்பொருட்கள் & உரைகள். துர்க்கை அம்மன் வழிபாடு என்பது புராண கதை அல்ல அது ஒரு வரலாறு.

பண்டைய தமிழர்களின் விவசாய தெய்வங்களில் மிக முக்கியமாக அம்மன் வழிபாடு இருந்திருக்கின்றது, இனன்னா/துர்க்கை சுமேரியர்கள்[விவசாயிகள்] துர்க்கை அல்லது காளி வழிபாட்டுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

இனன்னா/இஷ்தார் ஆற்றங்கரை நாகரிகம் [மெசபடோமியா] உருக் நகரத்தின் தெய்வம். அவள் கருவுறுதல் மற்றும் மகப்பேறு, புலமை, கலை, பயிர் வேளாண்மை, நீர் மேலாண்மை, இசையின் தெய்வம். மாலை நேரம் மற்றும் போரின் தெய்வம்.

அவள் வீரத்தின் அடையாளம், மென்மையானவள், உணர்ச்சிவசப்படுகிறாள், மேலும் கொடூரமானவள், மிருகத்தனமான காளி வடிவம் கொண்டவள். பெண்களை பாதுகாக்கும் தெய்வம்.இனன்னா தேவியைப் பற்றிய களிமண் மாத்திரை குறிப்புகள் இது .

சுமார் இனன்னா தேவி [ துர்க்கை அம்மன் ] வழிபாடு சுமேரியர்களினால் கிமு [4,000-3,000]  ஆற்றங்கரை [மெசபடோமியா] முழுவதும் கோயில்களில் கூடி மக்கள் வழிபட்டார்கள்.

உடு-இனன்னா-நண்ணார் [ஊது , இனன்னா , தந்தை நன்னாரின் சந்திரன் பிறை கடவுள் & சேதமடைந்த பப்சுகல் ] சூரியக் கடவுள் உடு , இனன்னாவிடம் பேசினார். இது சிதலமடைந்த களிமண்மாத்திரை உரையிலிருந்து.

சுமேரியர்கள் மிகச்சிறந்த விவசாயிகள் கண்டிப்பாக அவர்கள் அறுவடைக் திருநாளை கொண்டாடியிருப்பார்கள். அதற்கா சரியான ஆதாரங்கள் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை.

பொங்கல் பண்டிகை. சூரியக் கடவுள் உடு வணக்கம் அறுவடை, காளி வழிபாடு. காளையை பூசித்தல் போன்ற பல்வேறு சடங்குகளை செய்திருப்பார்கள். இன்று நாங்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை போல் பூசாரிகள் யாரும் இன்றி அவர்களே பூசை வைத்து கொண்டாடியிருப்பார்.

பகடைக்காய் விளையாட்டு , யாழ் இசைக்கருவி, சுமேரிய மொழி / ஆதாரம்

இனன்னாவின் மேன்மையை குறித்து ஒரு பாடலை இசைத்து பாடியிருக்கின்றார்கள் என்ன ராகம் தெரியாது ஒரு சில வரிகள் களிமண்மாத்திரையில் இருக்கின்றது.

[3.500 – 4.000] கிமு 3-4 மில்லினியத்தில்  இசைத்த பாடல் வரிகள். "மின்னும் ஒளி உங்கள் ஒளி உடையில் எஜமானி. வானத்திற்கும் பூமிக்கும் பிரியமானவர் எஜமானி நீங்கள் தலைவனுடன் தூங்குங்கள்"

ஒளிரும் நகைகள் உயர்ந்த கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது பிரதான ஆசாரியத்துவத்திற்காக உடையணிந்தார் எஜமானி நீங்கள் எல்லாவற்றையும் உங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள்

அனைத்து ஏழு நான் எஜமானி நீங்கள் எல்லாவற்றையும் உங்கள் கைகளில் வைத்திருக்கிறீர்கள்

என்னை அனைத்து உயர் நீங்கள் என்னை அழைத்துச் சென்றீர்கள்என்னை உன் விரல்களில் வைத்தாய்

என்னை உன்னிடம் உயர்த்தினாய்

என்னை உன் மார்பில் அழுத்தினாய் ...

 

நீங்கள் உங்கள் விஷத்தை துப்புகிறீர்கள்

நிலத்தின் மேல் ஒரு காத்தாடி போல

நீங்கள் இடியைப் போல பூமியை அலறுகிறீர்கள்

அனைத்து மரங்களும் தீயில் எரிகின்றன

வெள்ளம் போல் அவள் மேல் வருகிறாய்

மலைகள் சமவெளியில் உடைந்து விழுகின்றன

 

எஜமானி நீங்கள் உயர்ந்தவர்

நீங்கள் வானத்திற்கும் பூமிக்கும் இன்னா

நீ நெருப்பைப் பொழிகிறாய்

நீங்கள் அதை புல்வெளியை தூண்டினீர்கள்

நீங்கள் விலங்குகள் மேல் சவாரி செய்கிறீர்கள்

உங்களுக்கு பதில் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது

எல்லா சடங்குகளுக்கும் எஜமானி

உங்களுக்கு உரிமையும் வார்த்தையும் இருக்கிறது

எஜமானி நீங்கள் உயர்ந்தவர்----


மெசபடோமிய கடவுள்கள் & அரசர்கள் நினிவேயில் [ ஈராக்] உள்ள அரச அரண்மனையில் உள்ள புகழ்பெற்ற அஷுர்பானிபால் நூலகம். ஊருக் [ஊர்] இனன்னா தேவியின் பேரரசு.இதனுடைய பழமை  கிமு 3-4 மில்லினியம்.


25,000 க்கும் மேற்பட்ட களிமண் பலகைகளைக் கொண்ட நினிவேயில் உள்ள அசுர்பானிபால் நூலகம், பண்டைய ஈராக்  அண்மைக் கிழக்கிலிருந்து அறியப்பட்ட மிகப் பெரிய இலக்கியப் படைப்புகளின் தொகுப்பாகும்,


மேலும் இது மனித வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும். மிகவும் நெருக்கமாக எழுதப்பட்டதினால் அரைவாசிக்கு மேல் இன்னும் சரியாக விளங்கிக் கொள்ளப்படவில்லை. இன்னும் பல பொருட்கள், களிமண் மாத்திரைகள் சிதலமடைந்த நிலையில்லுள்ளது.  


களிமண் மாத்திரை  இலக்கியப் படைப்புகளை பாதுகாத்து வைப்பதற்காக கிமு 3-4 மில்லினியத்தில், அஷுர்பானிபால் அரச மாளிகையில்   ஒரு நூலகத்தை கூட கட்டி வைத்திருக்கிறார்கள் என்பது  எவ்வளவு அற்புதம்,


இது  எகிப்திய பாபிலோனிய அசிரிய ராஜ்யங்களுக்கு முற்பட்டது.அதுவும் ஒரு பெண்சுமேரிய கடவுள் [ விவசாயிகள் ] இனன்னா/துர்க்கை அம்மனால் ஆட்சி செய்யப்பட்டிருக்கின்றது. இந்த பூமியின் முதல் அரசாட்சி ஒரு பெண் ஆட்சி செய்திருக்கின்றாள்.


முதல் களிமண் மாத்திரை எழுத்திருவை கண்டுபிடித்தவர்/எழுதத் தொடங்கியவர் மட்பாண்டங்கள் செய்யும் ஒரு குயவன் மற்றும் வியாபாரி. பானைக்குள் இருக்கும் பொருட்களை மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருப்பதற்காக ஒரு துணியினால் மூடி களிமண்ணில் சீல் வைத்தார்கள் அந்த சீல்களில் முதல் முறையாக அடையாளங்களை பதித்தார்கள் அந்த உருவங்கள் களிமண் மாத்திரைகள் ஆனது


இசைக்கருவிகள் விளையாட்டு பொருட்கள் சமையல் பொருட்கள் கலை பொருட்கள்  போர்கருவிகள் என்று ஏகப்பட்டதை அடக்கி வைக்கப்பட்டிருந்தது.


பண்டைய வரலாறு என்ற பெயர்தான் சகலதும் புதுமையாக இருக்கின்றது. பணிப்பெண்கள் வேலை ஆட்கள் சமையலாளர்கள். அடிமைகள் எழுத்தாளர்கள் புலவர்கள் இசை அமைப்பாளர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் அந்த அரண்மனையில் பணியாற்றி இருக்கிறார்கள். சமையலறை பெண்கள் அம்மிக்கல் தேயும் வரைக்கும்  அரைத்திருக்கின்றார்கள்


குதிரை, சிங்கம், காளை, ஆடு மாடுகள் அவர்களின் வளர்ப்பு விலங்காகவும்   செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கின்றது ஆற்றங்கரை வாழ்வியல் என்பதினால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு, தோணி, அணை கட்டும் பணிகளும் நடந்திருக்கின்றது.


களிமண் மாத்திரைகள் இனன்னா/ துர்காதேவி பற்றிய இயல்புகளை மட்டுமே உரைகள் கூறுகின்றன.இந்த உரைகள் எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்வேறு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது இதை ஒன்று சேர்த்து படிப்பது என்பது கடினமானது.


மற்றும் அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களைப் படம் பிடிப்பது தடுக்கப்பட்டது.


காலநிலை இடம் சார்ந்த மரங்கள், மூலப்பொருள் மற்றும் விலங்குகள்: சில மரங்களும் விலங்குகளும் தனக்கு, உணவு  பாதுகாப்பு சான்று உள்ள இடங்களில் மட்டுமே  வாழக்கூடியவை.


குதிரையும் சிங்கமும் அடர்ந்த காடுகளில் ஒரு போதும் வாழாது, மேச்சல் நிலங்களான வறண்ட புல்வெளி பிரதேசங்களில் மட்டுமே வாழக்கூடியவை. ஆகவே குதிரையும் சிங்கமும் வனவிலங்காக இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்திருக்க வாய்ப்புகளே இல்லை.


கருங்காலி மரம், சந்தன மரம் மற்றும் பாலை மரங்கள் அடர்ந்த வெப்ப மண்டல காடுகளை சேர்ந்தது. குறிப்பாக இந்தியா இலங்கையைச் சார்ந்த மரங்கள்.


இதை எதற்காக சொன்னேன் என்றால் பண்டைய நாகரிகங்களை புரிந்து கொள்வதற்கு இந்த இடம் சார்ந்த விலங்குகளும் மரங்களும் எங்களுக்கு உதவுகின்றது.


குதிரையும் சிங்கமும் இந்த ஆற்றங்கரை நாகரீகத்துக்கு சொந்தமானவை. அங்கு கண்டெடுக்கப்பட்ட கலைப் பொருட்கள் மாறுபட்ட மரங்களினால் செய்யப்பட்டவை.


ஆற்றங்கரை நாகரிகம் [மெசபடோமியா] உருக் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட கலைப் பொருட்கள் இசைக்கருவிகள் மற்றும் சில கைவினை பொருட்கள் சந்தன மரம், கருங்காலி மரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை மற்றும் அம்மிக்கல் கிரானைட் கல், அந்த மண்ணுக்கு சொந்தமில்லாதவைகள்.


சந்தன மரம் கருங்காலி மரங்கள் இந்தியாவிலிருந்து எடுத்து வரப்பட்டு இந்த கலை பொருட்களை செய்திருக்கிறார்கள். மேலும் தங்கமும் வெள்ளியும் எகிப்து போன்ற மற்றும் சில நாடுகளில் இருந்து வரவழைத்து இருக்கிறார்கள்.


பண்டைய சுமேரிய [வேளாண்மை] நாகரிகங்கள் நீண்ட காலமாக எகிப்து, இந்தியாவுடன் தொடர்புகளை வைத்திருக்கின்றன என்பதற்கான ஆதாரமாக இந்த மரங்களும் அதில் செய்யப்பட்ட கலைப் பொருட்களும் இருக்கின்றன.


வெப்பமண்டல காடுகளில் வளரும் கருங்காலி மரங்களின் பூர்வீகம் ஆப்பிரிக்கா/கேமரூன், மடகாஸ்கர், ஆசியாவில் இந்தியா, இலங்கை.போன்ற நாடுகள்.


கருப்பு கருங்காலி என்று அழைக்கப்படும் இலங்கை கருங்காலி மிகவும் மதிப்புமிக்க கருங்காலி வகையாகும். [இதில் தான் இந்த கலைப்பொருட்கள் செய்யப்பட்டது]


எதற்காக உருக் [ஊர்] என்ற பேரரசு மலர்ந்தது: காலநிலை மாற்றங்கள், விவசாய நோக்கங்களுக்காக சுமேரியர்கள் ஊருக்கு புலம்பெயர்ந்தார்கள். [இனன்னா தேவி/துர்க்கா தேவி ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்தாள்]


உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், உருக் சமூகம் பொதுவாக உள்ளூர் சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஒரு வெற்றிகரமான தழுவலாகக் கருதப்படுகின்றது.


தெற்கு ஈராக்கில் ஒரு சதுப்பு நிலமாக இருந்தது இப்போது விவசாயத்திற்கு ஏற்ற விளை நிலங்களாகவும் மாறியிருந்தது. நான்காம் மில்லினியத்தின் முதல் பாதியில், தெற்கு மெசபடோமிய வண்டல் சமவெளிகளில் கணிசமான மழை பெய்தது இதன் நிமித்தம் பெரிய விவசாயத்திற்காக மக்கள் அங்கு குவிந்திருக்கலாம்.


பண்டைய உலகின் பெண் எழுத்தாளர்களும் இருந்திருக்க வேண்டும். பண்டைய உலகில் கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்திருக்கின்றது. அவர்களில் பெரும்பாலோர் ஆண்களாகவே இருந்தபோதிலும் களிமண் மாத்திரையில்  எழுதிய எழுத்தாளர்களில் ஒரு சில பெண்களையும் வரலாற்றில் அடையாளப்படுத்தி உள்ளனர்.


சர்கோன் மன்னரின் மகள் என்ஹெடுவானா ஒரு பிரதான பூசாரி அவள் இன்னானா தெய்வத்திற்கு மூன்று பாடல்களை எழுதினாள், அவை களிமண் மாத்திரையில் எஞ்சியிருக்கின்றன. என்ஹெடுவான்னா, வரலாற்றின் பெயரால் அறியப்பட்ட உலகின் ஆரம்பகால எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார்.


தமிழ், அறுவடை வீரம் வேளாண்மை புலமை மருத்துவம் என்று சகலத்தையும் தன்னகத்தே கொண்ட பண்டைய மொழி.

 

பொங்கலோ பொங்கல் வாழ்க தமிழ், வளர்க விவசாயம்....





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக