ஞாயிறு, 18 டிசம்பர், 2022

King Tutankhamun]: Tutankhamun was an ancient Egyptian king of the 18th Solar Dynasty

கிங் துட்டன்காமுன்]: துட்டன்காமுன் 18 வது சூரிய வம்சத்தின் பண்டைய எகிப்திய மன்னர் ஆவார், “கிங் டட்” இளைய மன்னர் என்றும் அவர் அன்று அறியப்பட்டார். அவரின் ஆட்சிக்காலம் சுமார் 9 வருடங்கள் நீடித்தது, கிமு 1332 முதல் 1323 வரை எகிப்திய பார்வோன், மன்னராக இருந்தார்.

அவர் அமர்னா என்ற இடத்தில் பிறந்தார், அவர் இறந்து போனதாக சொல்லப்படும் இடம் இன்றைய எகிப்து என்று அழைக்கப்படும் பழைய எகிப்து, இறுதி சடங்கு செய்த இடம் KV-62, எகிப்து,

முழு எகிப்திய மக்களும் துட்டன்காமுன் இறப்புக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்கள் என்று கூறப்படுகின்றது.

அவரின் தந்தை அகெனாடன் இறப்புக்கு பிறகு 10 வயது சிறுவனாக அரச பதவியை ஏற்றுக் கொண்டார். துட்டன்காமுன் இறக்கும் போது 18 வயது நிரம்பிய மெல்லிய உடலமைப்பை கொண்ட ஒரு இளைஞன், உயரம் 1.67 மீ, இருந்ததாக தடயவியல் ஆய்வுகளில் தெளிவாக குறிபிடப்பட்டுள்ளது.

தந்தை அகெனாடன் சூரிய கடவுள் “ரா” வை வணக்கத்துக்குரிய கடவுளாக ஏற்றுக் கொண்டவர் அவரது மகன் துட்டன்காமுன் அமுன் மற்றும் “ஐசிஸ்” பெண் தெய்வத்தை கடவுளாக ஏற்றுக் கொண்டவர் இவர்கள் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றது. [பக்த பிரகலாதன் கதையைப்போல]

அரச பதவிக்கு வந்த பிற்பாடு, ரா வணக்க தலங்களை இடித்து தள்ளிவிட்டு தனக்கு விருப்பமான அமுன், ஐசிஸ் அம்மன் வழிபாட்டை கொண்டுவந்தார், இதனால் பண்டைய எகிப்திய மக்கள் குழப்பம் அடைந்தார்கள் என்ற பதிவுகளும் இருக்கின்றது.

ஆரம்பத்தில் எகிப்தில் அமுன் வழிபாடு, இருந்ததாகவும் அவரது தந்தை அகெனாடன் அதை இடித்து, சூரிய கடவுள் “ரா” வை வணக்கத்துக்குரிய கடவுளாக கொண்டு வந்த தாகவும் சொல்லப்படுகின்றது.

லண்டன், ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஹோவர்ட் கார்ட்டர் என்பவர் 1922 ஆம் ஆண்டில் கிங்ஸ் பள்ளத்தாக்கில் திறக்கப்படாத ஒரு கல்லறையை கண்டுபிடித்தபோது அவர் இந்த உலகத்திற்கு அறியப்பட்டார்.

ஹோவர்ட் கார்ட்டர், கல்லறையை கண்டுபிடிக்கும் வரை காலத்தின் மணலில் அந்த பொக்கிஷங்கள் மறைந்து கிடந்தது. கிங் டட்டின் கல்லறை நான்கு அறைகளை கொண்டிருந்தது. ஒவ்வொரு அறையிலும் அரிய பல கலைப்பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அதிலுள்ள மிக முக்கியமான பொருள்களில் ஒன்று. ஐந்தடுக்கு பெட்டி, ஒன்றுக்குள் மற்றொன்று பொருத்தப்பட்ட சவப்பெட்டிகளின் கூடு. கடைசி சவப்பெட்டி திட தங்கத்தால் செய்யப்பட்டது மற்றும் சுமார் 110 கிலோ எடை கொண்டது.

இது எகிப்திய மன்னரின் உருவத்தில் செய்யப்பட்டது மற்றும் லேபிஸ் லாசுலி , கார்னிலியன் மற்றும் பிற பொருட்களால் பொறிக்கப்பட்டது. கண்கள் கால்சைட் மற்றும் அப்சிடியன் ஆகியவற்றால் ஆனது .

பண்டைய எகிப்துடன் தொடர்புடைய மிகவும் பிரபலமான படங்களில் ஒன்று துட்டன்காமூனின் தங்க மரண முகமூடி ஆகும்.

மம்மி செய்யப்பட்ட உடலில் பல அடுக்குகள் இருந்தன, மேலும் கட்டுகளின் அடுக்குகளுக்குள் ஏராளமான தாயத்துக்கள் மற்றும் பிற பொருட்களும் இருந்தன.

உலக புகழ்பெற்ற கல்லறை வளாகத்தில் 64 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது, அதில் 9 அதி உன்னத கடவுளுக்கு இணையாக கருதப்பட்ட ராஜாக்களில் ஒன்று துட்டன்காமுன் கல்லறை. எந்த கல்லறையிலும் கிடைக்காத அரிய பல கலைபொக்கிஷங்களை துட்டன்காமுன் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்டது.

அவரின் அடக்கம் அறையில் சர்கோபகஸ்[சவப்பெட்டி] மரண முகமூடி என்று, 5,000 கலை பொருட்கள் எடுக்கப்பட்டது. துட்டன்காமுனின் புதைகுழியில் எங்கும் மின்னும் தங்கம், சர்கோபகஸ் திறந்த பிறகு கல் மூடி அகற்றப்பட்டு, தங்க ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட கவசம் கிடைக்கின்றது.

ஹோவர்ட் கார்டர்,கல்லறைக்குள்ளே முதலில் நுழைந்தவுடன், வெப்பமான காற்றுடன் நறுமண திரவியங்களின் வாசனை வீசியதாக பதிவுசெய்திருக்கின்றார்.

மரத்தினால் செய்யப்பட்ட சிற்ப வேலைகளுக்கு தங்க இலை பதிக்கப்பட்டிருந்தது. துட்டன்காமுனின் முகத்தை மறைக்கும் உலக புகழ்பெற்ற தங்க மரண முகமூடியை தவிர, தங்கத்தால் செய்யப்பட்ட விலங்குகள் குரங்கு சிலைகள் நையில் நதி வாத்து, சிங்கத்தின் உருவ செதுக்கல் வேலைப்பாடுகள் உள்ள பெட்டிகள்,

சிறுத்தை உருவ வரவேற்பு அறை அலங்கார பொருட்கள் என்று எண்ணற்ற விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் கிங் டட்டின் [துட்டன்காமுன்] உடலுடன் கல்லறையில் இருந்தன.

இறந்தவர்கள் பட்டினியாக இருக்க கூடாது என்ற நம்பிக்கை காரணமாக கல்லறைக்குள்ளே பல உணவுகள், 48 வகையான உணவுகள் [காய் கறி, மாமிசம், புளிக்க வைத்த உணவு, ஊறுகாய், வத்தல் ] வைக்கப்பட்டிருந்தது. எருது வாத்து இறைச்சி வைக்கப்பட்ட மரப் பெட்டிகள் உணவக பஃபே சாப்பாடுகள் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.[ எம்பாமிங், உள் உறுப்புகள் அகற்றப்பட்டு, சோடியம் உப்புடன் உலர்த்தப்பட்ட மாமிசங்கள்]

துட்டன்காமுனின் மம்மி, சுமார்110 கிலோகிராம் தூய தங்கத்தினால் செய்யப்பட்ட சர்கோபகஸில் [சவப்பெட்டி] வைக்கப்பட்டிருந்தது.

தனியாக அவரின் மரண முகமூடி 11 கிலோ சுத்தமான தங்கத்தினால் செய்யப்பட்டது. நீலக்கல் கண்ணாடி, எனாமல்களினால் செய்யப்பட்ட கைவேலைகள், தலையில் உள்ள தங்க கிரீடத்தில் மேல் எகிப்தை பாதுகாத்த நெக்பெட்டை குறிக்கும் ஒரு நாக பாம்பும், கிரீடத்தின் முகப்பின் கீழ் எகிப்தை ஆண்ட வாட்ஜெட் என்ற தெய்வத்தை குறிக்கும் ஒரு கழுகு தலை உருவம் செதுக்கப்பட்டிருக்கின்றது.

கிங் டட்டின் கழுத்திலுள்ள ஆபரணங்கள் தங்க வட்ட கம்பிகளில் பல தாயத்துக்கள் இருந்தன பச்சை, சிவப்பு நிற ஜாஸ்பர் மற்றும் லேபிஸ் லாசுலி ஆகியவற்றால்  செய்யப்பட்ட ஆபரணங்கள், விரல் மோதிரங்கள் ரத்தின மணிகள் கோர்த்த காப்புகள் இருந்தன,

நீண்ட காலமாக நோய்வாய் பட்டிருந்ததினால் நேர்த்தி கடனாக இந்த தாயத்துக்களை பெற்றவர்கள் அல்லது பூசாரி கட்டியிருக்கலாம் இதுவொரு அனுமானம் தான். ஆனால் அவர் கழுத்து ஆபரணங்களில் நம்பிக்கை, தீய சக்திகளை வெல்லும் அதிர்ஷ்டம்  தரும் தாயத்துக்கள் இருந்தன.

பண்டைய எகிப்திய ஸ்கேராப் தாயத்துக்கள்[சாணம் வண்டு தாயத்துக்கள்] கார்னிலியன், லேபிஸ் லாசுலி, மலாக்கிட் மற்றும் டர்க்கைஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பச்சை, மேக நீலம் சிவப்பு நிறக்கற்களினால் செய்யப்பட்டது.

முகமூடியின் பின்பக்கத்தில் தீய சக்திகளிலிருந்து காப்பாற்றும் நிறைய காப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வளவு அலங்காரங்களும் ஒரேஒரு கவசத்தில் உள்ளது.

அவர்களுக்கு இவ்வளவு கிலோ தங்கம் எங்கிருந்து வந்தது, இந்த தங்கத்தை எங்கிருந்து தோண்டி எடுத்தார்கள். தங்க இலை, தங்க சரிகையை எப்படி தயாரித்தார்கள் [ நவீன கருவிகளின் உதவி இல்லாமல் ஆழமாக மண்ணில் புதைந்துள்ள தங்க கூறுகளை எப்படி வெளியில் எடுத்தார்கள்]

திறமை வாய்ந்த பொற்கொல்லர்கள், மரவேலை செய்யும் தச்சர்கள் மற்றும் ஓவியர்கள், கட்டிட கலைஞர்கள் 3,300 வருடங்களுக்கு முன்னால் இருந்திருக்கின்றார்கள். இவர்கள் யார் எங்கிருந்து வந்தவர்கள்?

துட்டன்காமுனின் சிறுவயது விளையாட்டு பொருட்கள் மரம், விலங்கு எலும்புகளினால் செய்யப்பட்ட செயல்பாட்டு விளையாட்டு பொம்மைகள். பேபி கிலுகிலுப்பை, கை வேலைப்பாடுகள் நிறைந்த படிக்கும்/விளையாடும் மேசை கதிரை, மூன்றாக மடித்து வைகக்கூடிய செயல்பாட்டு படுக்கை கட்டில்.

போர்கருவிகள் வில் அம்பு மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் தங்க வாகனம்[தேர்] ஐந்து போர் வாகனம்.[ குதிரை வாகனம்] நன்றாக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட நெய்த அங்கிகள் நூறுக்கும் மேற்பட்ட உள்ளாடைகள் [முக்கோண வடிவ ஜட்டி] சால்வைகள். தலைமுடி விக், விதம்விதமான செருப்புகள், பானங்கள் அருந்தும் குவளைகள் அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தியிருக்கின்றார்கள்.

ஒரு கால் செருப்பு சற்று உயரமாக இருந்ததாக சொல்லப்படுகின்றது அதாவது ஒரு கால் சற்று உயரம் குறைவாக இருந்தது.

எகிப்திய பார்வோனின்கள் தலையை மொட்டை அடித்து விட்டு, தலைக்கு விதம் விதமாக தலைமுடி விக் வைத்துக் கொள்வார்கள். பெண்கள் உட்பட சிறுவர்கள் வரைக்கும் தலைமுடி விக் வைத்துக் கொள்ளும் பழக்கமுள்ளவர்கள்.

எந்த சவரக்கத்தியினால் தலையை மொட்டை அடித்தார்கள் என்பது சரியாகத் தெரியாது, ஆனாலும் அவர்கள் தலைக்கு மொட்டை அடித்தார்கள் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது..

பணிப் பெண்களின் உதவியுடன் துட்டன்காமுன் தினமும் சவரம் செய்துவிட்டு தலைக்கு விதம் விதமான தலைமுடி விக் வைத்துக்கொண்டார்.

எதற்காக என்றால் தூய்மை அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் ஒன்றாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது வெண்மையான வேட்டி, சால்வை போல் இருக்கும் அங்கிகளை அணிவது, காலில் செருப்பு அணிவது, நறுமண பொருள்களை பூசுவது, ஆண் பெண் இருபாலினரும் கண்களுக்கு மை தீட்டுவது மற்றும் கடவுள் வழிபாடு, தினமும் கோயிலுக்கு சென்று பூசை செய்வது.

பிரமிட் கல்லறைகளை அலங்கரித்த அறியப்பட்ட 10 கடவுள்கள் எதற்காக விலங்கு மற்றும் பறவைகளின் உருவம் கொண்ட தலைக்கவசம், முகக்கவசத்தினால் மறைத்துக் கொண்டார்கள். யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்

எகிப்திய பார்வோனின் காலத்தில் வைரம் வைடூரியம் முத்து பவளம்  போன்ற நவரத்தினங்கள், இரும்பு, வெள்ளி, சுத்தமான செப்பு நாணயங்கள் எதுவும் பயன்பாட்டில் இல்லை. [வெண்கலம், தங்கம் பயன்பாடு மற்றும் பண்டமாற்றுக்காலம்]

ஒரேஒரு உடைவாள் மட்டும் வேற்றுக்கிரக மெட்டீரியலினால் செய்யப்பட்டிருந்தது [சிலிக்கேட் தாதுக்கள் மற்றும் இரும்பு+நிக்கல் கலவையை கொண்ட விண்கல் என்பது ஆய்வுகளில் உறுதியானது

அவர்களின் நடைமுறை பாவனை உலோகமாக வெண்கலம் இருந்தது. மரம், பாப்பிரஸ்[காகிதம்] தந்தங்கள், விலங்குகளின் எலும்பு, கல் மணிகள், நிறக்கல், தனித்துவமான நிறங்களை கொண்ட நீல லேபஸ், லாசிலி ரத்தினம் பயன்படுத்தினார்கள்.

துட்டன்காமுன், ஆறு உடன்பிறப்புகளுடன் பிறந்தவர் அதாவது ஆறு சகோதரிகள் இருந்ததாக சொல்லப்படுகின்றது. [அஞ்சிசெனமுன், செமஞ்ச்கேர், நெஃபெர்நெஃ பெருவாடன் டாஷெரிட், மெரிட்டடன், நெஃபெரெஃபெரேச்சர், மேகெட்டாடன், செட்டெபென்ரே]

திருமண கூட்டாளராக [ இணைந்து வாழ்தல் ] அவருடைய ஒரு சகோதரியை அஞ்சிசெனமுன் என்ற பெண்ணை வைத்துக் கொண்டார். அகெனாடனின் மகள், இதனால் ஒரு சகோதரி அல்லது பாதி சகோதரியாக, அத்தையாக கூட இருக்கலாம். அதாவது தந்தை ஒன்று, தாய் வேறு வேறு. துட்டன்காமூனின் சிறந்த அரச மனைவியாக அஞ்சிசெனமுன் [அஞ்சிசேனா பாட்டன்] இருந்தார்.

துட்டன்காமுன். பெற்றோர்கள் அகெனாடன், அமெனோபிஸ் III., இளைய பெண்ணுக்கும் பிறந்தார்.[அந்தபுர அழகி-ரீயா]-(ஹராம்) அரண்மனை வாசிகளுக்கு பல மனைவிமார்கள், அந்தபுர அழகிகள் அதில் ஒன்று என்று வைத்துக் கொள்ளுங்கள். [ஹராம் என்ற வார்த்தை இஸ்லாம் தோற்றுவித்த பிற்பாடு, சுல்தான், ஓட்டோமான் பேரரசு காலத்தில் வழக்கத்தில் இருந்தது]

பெரும்பாலான எகிப்திய பார்வோன்கள் நெருங்கிய இரத்த உறவுகளுக்குள்ளேயே தங்கள் மனைவிகளை தெரிவு செய்தார்கள், இதன் நிமித்தம் பல பிள்ளைகளை இளவயதிலேயை இழக்க வேண்டியிருந்தது.

துட்டன்காமுன் இறப்பை இன்று வரைக்கும் ஒரு மர்மமாகவே பார்க்கப்படுகின்றது, இவ்வளவு சின்ன வயதில் இறந்ததற்கான காரணங்களில் ஒன்று அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்,

அல்லது போர் பயிற்சியின் போது வாகனத்திலிருந்து விழுந்து காலில் அடிபட்டு, காயம் ஆறாமல் இறந்திருக்கலாம். அல்லது அவர் பிறப்பிலிருந்தே ஒரு நோயாளி, குறைபாடுள்ள பிள்ளையாக இருந்ததினால் இறந்திருக்கலாம்.

துட்டன்காமூனின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் கலைபொக்கிஷங்கள் கெய்ரோ மற்றும் லக்சரில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ளன,

துட்டன்காமூனின் வாழ்க்கையையும் மரணத்தையும் விளக்குகின்ற  அற்புதமான ஓவியங்களை அங்கு காணமுடியும்.

ஆனால் பார்வோனின் மம்மியஃபைட் உடலுடன் கூடிய சர்கோபகஸ்[சவப்பெட்டி] அடக்கம் அறையில் தொடர்ந்து ஓய்வெடுக்கின்றது. அதை பார்க்கமுடியாது/ பிரத்தியோக அனுமதி தேவை.

பண்டைய எகிப்தியர்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களுக்குள்ளே அமுன், ஒசைரிஸ், “ரா” [சூரியன்], செட், அனுபிஸ், ஐசிஸ், தோத், செக்மெட், பந்தயம், ஹோரஸ் போன்ற பல கடவுள்கள் இருந்தாலும்

சூரியக் கடவுள் [Ra] வணக்கத்திற்கு உரியவராக மதிக்கப்பட்டார், பொதுவாக எகிப்திய பார்வோனின்கள் சூரிய குலத்தவர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். தங்களுடைய கடவுள்களின் முதல் எழுத்தையே பெயர்களில் முதல் எழுத்தாகவும் வைத்துக்கொண்டார்கள் மேற்கோளாக, ராம்சஸ், அமுன்

சூரியன் போல் வட்ட வடிவ தகடுகளை தலை கிரீடத்தில் வைத்துக்கொண்டார்கள் இது அவர்களின் குலப்பெருமை கடவுள் தன்மையையும் காட்டுகின்றது.[ வட்ட வடிவ தகடுகள் சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கும்பயன்பாடும் உள்ளது]

இறந்த பிறகும் மனிதர்களுக்கு ஒரு வாழ்க்கை இருப்பதாக ஆணித்தரமாக நம்புகின்றவர்கள். ஒருவர் இறந்த பிறகு செய்யப்படும் மரணசடங்குகள் மேல் அவ்வளவு பயபக்தியாக நடந்து கொள்வார்கள்.

கருடபுராணத்தில் சொல்லப்பட்ட, பாவ புண்ணிய கணக்கு சொர்க்கம் நரகம் போன்ற நம்பிக்கைகள்  மூவாயிரம் வருடங்களுக்கு முன்னால் இருந்தே நம்பியவர்கள்.

எகிப்திய பார்வோனின்கள் கல்லறைகளை அலங்கரிக்கும் ஒரு சில உயிரினங்கள் பொருள்கள்: சாணம் வண்டு, வல்லூறு, எகிப்திய செல்லப்பிராணி நாய்கள், பூனை மற்றும் உணவு கோதுமை ரொட்டி, பீர், திராட்சை யின், பாவ புண்ணிய கணக்கு தராசு, இறக்கை வாத்திய கருவிகள் மற்றும் பணிப்பெண்கள்.

சுவர் சித்திரங்களில் நீலம், செம்மண், வெள்ளை நிறம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஸ்காராப்ஸ்[சாணம் வண்டு] அதிர்ஷ்ட வண்டுகளின் சுவர் சித்தரிப்புகள் பண்டைய எகிப்திய மொழியில் பயன்படுத்தப்படுகின்றது.

எகிப்தியர்களுக்கு சாணம் வண்டு படைப்பை குறிக்கின்றது மற்றும் சூரிய கடவுளுடன் மிக நெருங்கிய தொடர்புடையது, அது ஒவ்வொரு முறையும் சூரியன் மறைவுக்கு பிறகு திரும்பவும் உதய சூரியனாக அழைத்துவருவதாகவும் நம்பினார்கள்.

மேலும் எகிப்திய பார்வோனின்கள் சாணம் வண்டை தங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதற்காக விரல் மோதிரம், தங்க பதக்கத்தில் சாணம் வண்டை சித்தரித்து அணிந்து கொண்டார்கள். ஆண்களின் படைப்பாற்றல், மறுபிறப்பின் அடையாளமாகவும் கருதப்பட்டது,

எகிப்திய பார்வோனின்களின் அன்றாட பணிகளில் ஒன்று சூரிய கடவுளை வணங்குவது அதற்காக அவர்கள் பூசாரிகளை வைத்து பூசை சடங்குகள் செய்வது. வானசாத்திரங்கள் பார்ப்பது. எழுதப் படிக்க கற்றுக் கொள்வது.

அரச பொறுப்பாக வயல் விவசாயம், பெரும் கோதுமை விவசாயம் செய்து தானியங்களை குவித்திருக்கின்றார்கள் மற்றும் வாழை மரம், வெங்காயம் பூண்டு, திராட்சை, பேரீச்சை மரத் தோட்டங்கள்.

ஆடைகள் நெய்தல், அதற்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்தல், தொழில் செய்யும் மக்களை சந்திப்பது

பிரமிட் கட்டுமானத்தை கவனிப்பது போன்றவைகள். தங்க நகை ஆபரணங்கள் செய்வது, நிற கற்களுக்கு பட்டை தீட்டி, ஆபரண ரத்தின கற்களை உற்பத்தி செய்வது இதற்காக அவர்கள் இந்தியா உட்பட பாரசீகம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து கற்களை வரவழைத்திருக்கின்றார்கள்.

கலை சிற்பம், சித்திரம், எழுத்தறிதல், சமையல், ஓயின், பீர் மதுபான உற்பத்தி, தலைமுடி விக் தயாரிப்பது, தரைவிரிப்புகள் வீட்டு தளவாடங்கள், சமையலறை பொருக்கள் மேலும் மருத்துவம் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பண்டைய எகிப்தியர்கள் சிறந்து விளங்கினார்கள்.

ஒரு பிரமிட் கட்டுமானத்தில் குறைந்தது 100,000 கட்டுமான பணியாளர்கள்  பணியாற்றியிருப்பார்கள். இவர்களின் உணவு, தங்குமிட வசதிகள் அவர்களுக்கான மருத்துவம் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் அவர்களின் ஊதியம் குடும்பம் பிள்ளைகளின் படிப்பு, சமூக பாதுகாப்பு என்று ஏகப்பட்ட பணிப்புகளை எகிப்திய பார்வோனின்கள் அரசு கவனித்திருக்கின்றது.

பல்லாயிரக்கனக்கான  மக்கள் ஒன்றுகூடி, ஒவ்வொரு வருடமும் “ஓபெட்” திருவிழா கொண்டாடப்படுகின்றது. இது புதிய இராச்சியத்தின் மறுமலர்ச்சி திருவிழாவாக. வீதி நெடுக்க  அலங்கரிக்கப்பட்டு, தீப ஒளி ஏற்றி, ஆட்டம் பாட்டம் என்று வெகு சிறப்பாக கொண்டாடியதாக சுவர் ஓவியங்கள் மூலம் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஓப்பெட் திருவிழா அல்லது ஹெப் நெஃபர் என்பது, அமுன், முட், கோன்சு என்ற மும்மூர்த்திகளை கர்னாக் கோயிலில் இருந்து லக்சர் கோயில் வரை மூன்று புனித மரப்பட்டையை சுமந்து வீதி ஊர்வலம் வருவது. இது நைல் நதியின் வெள்ளப்பெருக்கின் போது கடவுள் மற்றும் மன்னரின் கருவுறுதலைக் கொண்டாடும் ஒரு சடங்கு பயணமாகும்.

பண்டைய எகிப்தில், திருவிழாக்கள் பொதுவாக கடவுளுக்கு நன்றி செலுத்துதல் மற்றும் வழிபாடு என்று பொருள்.

பண்டைய எகிப்தியர்கள் சந்திர நாட்காட்டியின்படி எகிப்தில் அகேத், என்று அழைக்கப்படும் நைல் நதியின் வெள்ளப்பெருக்கின் போது இரண்டாவது மாதத்தில் ஆண்டுதோறும் ஓபட் பண்டிகையை கொண்டாடினர். அகேத் [கங்கா] கிரேக்கத்தில் அலெதியா ஒரு சத்தியத்தின் தெய்வம். இன்று நீதி தேவதையாக அறியப்படுகின்றது.

இந்த திருவிழாவில், தீப்ஸ், அமோன், மட் மற்றும் கோன்ஸ் ஆட்சியாளர்கள், கர்னாக் கோயில்களில் உள்ள தங்கள் ஆலயங்களிலிருந்து ஒரு மரக்கட்டை, சடங்கு மரப் படகு,   லக்சர் ஸ்பிங்க்ஸ் கோவிலுக்கு வரிசையாக ஊர்வலமாக மற்றும் முன்பு வாழ்ந்த பண்டைய எகிப்தியர்களை அழைத்தது போல் வீதி ஊர்வலம் வருகிறார்கள். ஸ்பிங்க்ஸ் : என்பது ஒரு வரலாற்று இலக்கண பாலினம், மனித தலையுடன் கூடிய சிங்கத்தின் சிலை.[கணபதி உருவம் மாதிரி

வீதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, தீப்பந்த ஒளி விளக்குகளை சுமந்து தெருக்கூத்து ஆடல், பாடல், இசைக்கருவிகளை மீட்டல், தண்ணீர் பந்தல், உணவு வழங்குதல், அன்னதானம் என்று வெகு சிறப்பாக கொண்டாடினார்கள் இதற்கான ஆதாரங்களை  சித்திரமாக பதிவு செய்திருக்கின்றார்கள்.

எகிப்தின் கர்னாக்கில் வழிபடப்படும் அமுன், முட், கோன்சு [மும்மூர்த்திகள்] ஆகிய தெய்வங்களின் முக்கூட்டு வழிபாடு, இந்தியாவிலுள்ள பூரி/ஜெகன்நாதர் கோயிலில் வழிபடும் கடவுள்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உண்டு,

நீலநிறத்தில் காணப்படும் அமுன் = [கிருஷ்ணர்] கடவுளுக்கு இணையானது. எகிப்தில் செய்யப்படும் பல சடங்குகள், பண்டிகைகள், திருவிழாக்கள், மரண சடங்குகள் மற்றும் திருமண வைபவம் இந்துக்கள் கடைப்பிடிக்கும் சடங்குகளுக்கு இணையானது.

தேவதை என்று சித்தரிக்கப்பட்ட உருவங்கள் அத்துனையும் வேற்றுக்கிரக பண்டைய விண்வெளி வீரர்களை குறிக்கின்றது [பரப்பிரம்ம வாசிகள்/ஏலியன்கள்] குறிக்க பயன்படுத்தப்பட்ட சொற்கள் தவறான மொழிபெயர்ப்பு காரணமாக தேவதை என்று குறிப்பிடபட்டிருக்கின்றது

வீடு பொருள் வகைகள் ரத்தினங்களின் வரலாறு; மற்றும் பண்டைய எகிப்திய ரத்தின நகைகள் பண்டைய எகிப்தில் நகைகள் செய்ததற்கான முதல் சான்று கிமு 4000 க்கு முந்தையது.

பண்டைய எகிப்தில், ஆண்களும் பெண்களும் நகைகளை மிகவும் விரும்பினர் மற்றும் ஏராளமான நகைகளால் தங்களை அலங்கரித்தனர். நகைகளும் செல்வத்தையும் அந்தஸ்தையும் காட்டி தீமையிலிருந்து தங்களுக்கு பாதுகாப்பை அளிகின்றது என்று நம்பினார்கள்.இந்த பாதுகாப்பு இறந்தவர்களுக்கும் மற்றும் உயிரோடிருப்பவர்களுக்கும் கிடைத்தது,

மேலும் தற்போதைய மற்றும் பிற்கால வாழ்வில் செழிப்பைக் கொண்டுவரும் நோக்கத்துடன் தங்க நகைகளை அணியும் வழக்கம் அவர்களிடையே ஏற்பட்டது.

பண்டைய எகிப்திய நெக்லஸ் தாயத்துகள், கழுத்தணிகள், பதக்கங்கள், வளையல்கள், மோதிரங்கள், தலைக்கவசங்கள், கணுக்கால்கள், தலைப்பாகைகள், காலர், ராஜகோபுரம் உள்ளிட்ட பல்வேறு வகையான நகைகள் இருந்தன. ரத்தினக் கற்களை வெட்டும் பண்டைய எகிப்திய முறைகளும்  இருந்தன.

எகிப்தியர்களுக்கு பல விலையுயர்ந்த ரத்தினங்கள் கிடைத்தாலும், அவர்கள் கார்னிலியன் , ஜாஸ்பர் , லேபிஸ் லாசுலி , மலாக்கிட் , குவார்ட்ஸ் மற்றும் டர்க்கைஸ் போன்ற மென்மையான, அரை விலைமதிப்பற்ற கற்களைப் பயன்படுத்த விரும்பினர் .

சில நிறங்கள் துரதிர்ஷ்டம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்திலிருந்து பாதுகாப்பதாகக் கருதப்பட்டதால், நகைகள் மற்றும் ரத்தினக் கற்களின் நிறம் எகிப்தியர்களுக்கு மிகவும் முக்கியமானது. பல பண்டைய கலாச்சாரங்களில், ராயல்டி நீல நிறத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. மேலும் இது பண்டைய எகிப்தில் குறிப்பாக உண்மையாக இருந்தது, இது லேபிஸ் லாசுலி அனைத்து ரத்தினக் கற்களிலும் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாகும்.

எகிப்தியர்களின் சித்திர எழுத்துக்கள் உருவான கதை:  எகிப்தியர்கள் மாநில ஒழுங்கு, கடவுள் வழிபாடு மற்றும் கலை உணர்வு உள்ளவர்கள். கடவுள் வழிபாடு, பூசை இல்லாமல் எந்த நாகரீகமும் இல்லை.

எகிப்தியர்களும், சுமேரியர்களைப் போலவே கிட்டத்தட்ட சமகாலத்தில் சித்திர எழுத்துக்களை உருவாக்கினர், அதில் அவர்கள் படிக்க உதவும் வகையில் விளக்க எழுத்துக்களைச் சேர்த்தனர்.

ஆரம்ப காலத்திலிருந்து டெமோடிக் எழுத்து வரை ஹைரோகிளிஃப்களின் வளர்ச்சி இந்த எழுத்து பூசாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் போன்ற உயர்சாதியினருக்காக ஒதுக்கப்பட்டது

டெமோடிக் கர்சீவ் மொழியில் எழுதப்பட்ட கடைசியாக அறியப்பட்ட ஆவணம் கி.பி 470 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகின்றது மற்றும் எழுத்தின் சுயாதீன வளர்ச்சி மற்றும் எகிப்தின் வீழ்ச்சியின் முடிவைக் குறிக்கின்றது.

இருப்பினும், கிமு 2 ஆம் மில்லினியத்தில் ஃபீனீசியர்கள் எழுத்தின் வளர்ச்சிக்கான உண்மையான உத்வேகத்தை வழங்கினர். ஃபீனீசியர்கள் எழுத்து விஷயங்களில் வணிக பயணிகள்.

அவர்களின் எழுத்தில் 22 வெவ்வேறு எழுத்துக்கள் மட்டுமே இருந்தன, அவை ஒவ்வொன்றும் ஒலியைக் குறிக்கின்றன. உயிரெழுத்துக்களுக்கான எந்த அறிகுறியும் அவர்களுக்குத் தெரியாது, ஆயினும்கூடஇந்த எழுத்துக்கள் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமானதாக  பிற்காலங்களில் விவரிக்கப்பட்டது மற்றும் இன்று பயன்பாட்டில் உள்ள பல எழுத்துருக்கள் இந்த தோற்றத்திற்கு செல்கின்றன.

எகிப்தியர்களின் ஹைரோகிளிஃப்களால் ஈர்க்கப்பட்டு, அவர்களுடன் அவர்கள் நெருங்கிய பொருளாதார உறவுகளைக் கொண்டிருந்தனர். ஃபீனீசியர்கள்  ஒரு கடல்வழி மக்களாக பல வர்த்தக இடுகைகளை நிறுவினர், இதனால்

இவர்கள்தான் ஃபீனீசியர் எழுத்துக்களை மத்தியதரை கடல் பயணம் வழியாக உலகெங்கும் அறிமுகப்படுத்தினார்கள். நீங்கள் எழுத்துருக்கள் பற்றி ஆராய்வதற்கு, எங்கிருந்து தொடங்கினாலும் இவர்களின் வழி தடங்களில் தான் முடிவுறும்.

ஐரோப்பிய எழுத்துக்களான கிரேக்கம், லத்தீன் —> ஐரோப்பிய மொழிகள்  மற்றும் சிரிலிக்[ சோவித் மொழிகள் உருவாக காரணமானது, மேலும் ஃபீனீசியர் எழுத்துக்கள் பிரிவு அராமிக் -> ஹீப்ரு, அரபு, பிராமி, தேவநாகரி,எழுத்துக்கள் உருவாக காரணமானது. தேவநாகரி எழுத்து முறை 120 க்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்தப்படுகின்றது.

இதில் சொல்லப்பட்டது எழுத்துருவங்களின் தொடக்கம் பற்றியது, மொழிகளின் தொடக்கமல்ல, இவர்கள் எழுத்துருவங்கள் வருவதற்கு முன்னால் எப்படி உச்சரித்து பேசினார்கள் என்பது எவருக்கும் தெரியாது. மேற்கோளாக, சித்திர எழுத்து காளையின் தலையை கிரேக்கம், லத்தின் அதைஏ” A என்றும் வீடு போன்ற சித்திரத்தைபி”என்ற உச்சரிப்பில் எடுத்துக் கொண்டது.

மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் தங்கள் எழுத்தைப் பரப்பினர். கிரேக்கர்கள், அவர்கள் தங்கள் பெயரை a மற்றும் b உடன் எழுத்துக்களுக்குக் கொடுத்தனர்கிரேக்கம் மற்றும் லத்தின் எழுத்துக்களின் தொடக்கம் A, B, N எகிப்திய சித்திர எழுத்துக்களிலிருந்து எடுக்கப்பட்டது. காளையின் தலை -> A,  வீடு -> Bb, பாம்பு -> N  என்று ஃபீனீசியர் மக்களினால் உருவாக்கப்பட்டது.

இன்று நாங்கள், இயற்பியலில் பயன்படுத்தும் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா [கிரேக்கம்] குறியீடுகள் இவர்கள் தந்தது.

எழுத்தில் உயிரெழுத்துக்களைச் சேர்க்க கிரேக்கர்களுக்கு ஒதுக்கப்பட்டது. A, E, I, O, U மற்றும் Y ஆகியவற்றிற்கான சுயாதீன அடையாளங்கள் உருவாக்கப்பட்டு, மெய்யெழுத்துக்களுடன் சம அந்தஸ்து அளிக்கப்பட்டது ஒலிப்புக் கொள்கை நிலவியது மற்றும் a க்கு a மற்றும் b க்கு b ஆகியவை எழுத்துக்களுக்கு அதன் பெயரைக் கொடுத்தன.

22 குறியீடுகளைக் கொண்ட அடையாள அமைப்பில்: இது குறிப்பாக கி.மு. 9 ஆம் நூற்றாண்டிலிருந்து உருவானது. இது மெய் எழுத்துக்களை மட்டுமே கொண்ட தரப்படுத்தப்பட்ட எழுத்துக்கள் அனைத்து செமிடிக் மெய் எழுத்துகளின் [மேற்கோளாக ஹீப்ரு மற்றும் அரேபியகிரேக்க மற்றும் லத்தீன் எழுத்துக்களின் தொடக்க புள்ளியாக இருந்தது. வலமிருந்து இடமாகஎழுதப்பட்டது. அனைத்து ஐரோப்பிய எழுத்துக்களுக்கும் அடிப்படையானது.

கிமு 2 ஆம் நூற்றாண்டு வரை பியூனிக் மொழி பேசப்பட்டதுபின்னர் ரோமர்களால் கார்தேஜ் அழிக்கப்பட்டபோது  பல்வேறு எஞ்சிய மொழிக் கூறுகளிலிருந்து. நியூபுனிஸ்ச் உருவானது, இதில் லத்தீன் மற்றும் பெர்பரின் தாக்கங்களும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

ஃபீனீசியன் எழுத்துக்கள் இன்றைய லத்தீன் எழுத்துக்களின் முன்னோடியாகும். இருப்பினும், இது இன்னும் J, U, V, W, X, Y மற்றும் Z ஆகிய எழுத்துக்களைக் கொண்டிருக்கவில்லை.

ஃபீனீசியன் பேரரசு: பண்டைய எகிப்திய பண்டைய கிரேக்க ஃபெனிசியா, ஊதா நிலத்திற்கான ஃபீனிஸ் என்பது இன்றைய நிலப்பரப்பில் கிழக்கு மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள ஒரு குறுகிய நிலத்தின் பெயர். இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியா நாடுகள். கடற்கரையை ஒட்டிய கடல் பகுதி ஃபீனீசியன் கடல் என்று அழைக்கப்படுகின்றது.

ஃபெனிசியா கிமு 63 முதல்  ரோமானியப் பேரரசுக்கு சொந்தமானது. சிரியா மாகாணமாக சிரியாவுடன் சேர்ந்து கி.மு. இன்றைய துனிசியாவில் புவியியல் ரீதியாக அமைந்துள்ள ஒரு ஃபீனீசிய காலனி கார்தேஜ் ஆகும், இது ரோமின் எழுச்சிக்கு முன்னர் மேற்கு மத்தியதரைக் கடலில் ஆட்சி செய்தது. ரோமானியர்கள் கார்தீஜினியர்களை பியூனிக் போயினி என்று அழைத்தனர்.

காட்டுமிராண்டித்தனமான இடைக்காலத்தில், படிப்பதும் எழுதுவதும் மீண்டும் ஒரு சிறிய வகுப்பினர் மற்றும் மதகுருக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. கடவுளின் வார்த்தையைப் பரப்பும் நோக்கத்துடன் வேதங்களைப் பராமரிப்பது கிட்டத்தட்ட மடங்களில் மட்டுமே நடந்தது. இங்கே கரோலிங்கியன் மைனஸ்குல் 780 இல் உருவாக்கப்பட்டது,

இது ஏற்கனவே மேல் மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்ட முதல் நிலையான ஸ்கிரிப்டாகும். கரோலிங்கியன் ஸ்கிரிப்ட்டின் வெற்றி வடிவத்தை ஒன்றிணைப்பதில் உள்ளது. நல்ல தெளிவுத்திறன், சீரான விகிதாச்சாரங்கள் மற்றும் ஏறுபவர்கள் மற்றும் இறங்குபவர்கள் இந்த எழுத்துருவை வகைப்படுத்துகிறார்கள். வார்த்தைகள் இப்போது ஒருவருக்கொருவர் தெளிவாகப் பிரிக்கப்பட்டு, வார்த்தைப் படங்களில் படிக்க முடிந்தது.

இது மொழியின் எழுத்து உருவத்தின் தொடக்க தோற்றத்தை மட்டுமே சொல்கின்றது அவர்கள் எப்படி உச்சரித்து பேசினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எந்த ஒலியில் கடவுள்களுக்கு பூசை செய்தார்கள் என்பதும் சரியாக தெரியாது.

பிரமிட் கட்டுமானத்தில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் பணியாற்றியிருக்கின்றார்கள், மற்றும் எகிப்திய மன்னர்கள் பல நாடுகளை சேர்ந்த வணிகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்கள்.குறிப்பாக ஃபீனீசியர்கள், சுமேரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்கள்.

இவர்களிடையே பொதுவான ஒரு மொழியில் உரையாடல் நடந்திருந்தால் மட்டுமே அவர்களினால் மற்றவர்கள் சொல்வதை புரிந்திருக்க முடியும்.   

எழுத்து முறை பேச்சின் உச்சரிப்பு ஒலிகளை குறிக்க பயன்படுத்திய ஒரு குறியீடு, அது ஒருபோதும் ஆரம்ப மொழியின் அடையாளம் ஆகாது. மொழி என்பது வெகுஜன தொடர்பு, பேசுவதற்கு மட்டுமே உரியது, பண்டைய மனிதர்கள்  தங்களுக்கிடையே பொதுவான ஒரு மொழி உரையாடலை கொண்டுள்ளனர்கள் அது காலப்போக்கில் உருவான எழுத்துருவங்களினால் பல மொழிகளாக பரிணாமம் அடைந்து.

ஃபீனீசியர்கள் என்று அழைக்கப்படுவது இன்றைய லெபனான், சிரியா மற்றும் இஸ்ரேலில் அமைந்துள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்களை குறிக்கின்றது. இவர்கள் கப்பல் வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள். கிமு, 1200 வருடங்களுக்கு முன்பாக மத்தியதரைகடலில் கப்பல் கட்டி வணிகம் செய்தவர்கள். எகிப்தில் இவர்கள் நினைவாக கூட ஓப்பெட் கப்பல் திருவிழா கொண்டாடி இருக்கலாம்.

ஃபீனீசியர்கள் கலாச்சாரம். புவியியல் இருப்பிடம் மற்றும் பிற்கால வர்த்தக உறவுகள் காரணமாக, ஃபெனிசியாவின் கலாச்சாரம் எகிப்து, அருகிலுள்ள கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் ஆகியவற்றின் பண்டைய ஓரியண்டல் கலாச்சாரங்களால் வடிவமைக்கப்பட்டது.

இவர்களுக்குள்ளே தேவதாசி முறையும் இருந்தது, ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் கோவில் மனிதனுடன் ஒரு முறை உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு தங்கள் வழியைபார்த்து போகலாம்.

ஃபீனீசியன் எழுத்துக்களின் கலப்பு  இன்றுள்ள பல மொழிகளின் எழுத்துகளுக்கு அரிவரிச் சுவடாக இருக்கின்றதுஅதாவது ஐரோப்பா, அரபு, ஆசியா மொழிகளின் எழுத்துகளுக்கு மூல எழுத்தாக இருக்கின்றதுஃபீனீசியர்கள் குறைந்தது 22 ஆரம்ப எழுத்துக்களை இந்த உலகத்திற்கு தந்திருக்கின்றார்கள்

ஆதி மனிதன் எழுப்பிய ஒலிகளின் ஒலிப்பதிவு நாடாக்கள்: இரண்டு மொழிகள் மட்டுமே பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒன்றாக  உள்ள  மொழிகள். அது தமிழும், கிரேக்க மொழியும்.  

மற்ற மொழிகள் யெல்லாம், எகிப்திய மொழி  உட்பட அவர்கள் பேசுவது வேறு, எழுதுவது வேறு எழுத்துருவங்கள் கொண்டதுமேற்கோளாக.: ஆங்கிலம், ஐரோப்பா மொழிகளை எடுத்துக்கொண்டால்  பேசுவது வேறு எழுதுவது லத்தின் எழுத்துருவம். மற்றும் தேவநாகரிய எழுத்துருவத்தை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 100 மொழிகளின் எழுத்துருவம் ஆனால் அவர்கள் பேசுவது வெவ்வேறு மொழிகளில் [உச்சரிப்பு]

இவைகள் தனியான ஒரு மொழி கிடையாது மாறுபட்ட மொழி சமுகத்தை சேர்ந்த மொழிகள். எகிப்தியர்கள் சூரியனை எப்படி  அழைத்தார்கள் என்பது யாருக்குமே சரியாகத் தெரியாது  ஆனால் அதற்கான சித்திர குறியீடு ஒரு வட்டத்தை [Ο ]வரைந்து வைத்திருக்கின்றார்கள்

தமிழ் மொழி சூரியனை ரவி என்று அழைக்கின்றது. [ராகிரேக்க மொழி [R ά ]  கிரேக்க மொழி சூரியனை ஓய்லோஸ் [Ο ήλιος]   என்று அழைக்கின்றது. எகிப்தியர்களின்  வட்டத்தை [Ο] எடுத்துக்கொண்டது.

ராம்செஸ்  என்ற பெயரை எழுதுவதற்கு இ்ந்த  [Ο ] வட்ட குறியீட்டைத்தான் முதல் எழுத்தாக பயன்படுத்தியிருக்கின்றார்கள் ஆகவே  எகிப்தியர்கள் சூரியனை  கழுகு கத்தும்  "ரா ரா" என்ற ஒலியுடன்  அழைத்திருக்கலாம்.

ஆதி மனிதன் எப்படி ஒலி அலைகளை எழுப்பினான் என்றதிற்கான அத்தாட்சியாக  விலங்குகள் பறவைகள் இயற்கையின் ஒலிகளைத்தான் ஒலிப்பதிவு  நாடாவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அந்த ஒலிகள் என்றைக்குமே மாறாதவைகள்.

கழுகு, காளை, சிங்கம்பாம்பு, குஞ்சு, இலைநீர் ஓடை  ஒலிகளை மனிதன்  முதல் மொழியாக பயன்படுத்திக் கொண்டான்இதை பின்னால் வந்த எழுத்துருவங்கள்  மாற்றியமைத்து தமதாக்கி கொண்டதுமேலும்  அதற்கு  வேறுபல உச்சரிப்பு ஒலிகளையும் இணைத்துக் கொண்டது

பண்டைய எழுத்தாளன்:  லூவ்ரே/பாரிஸ் அருங்காட்சியகத்திற்கு சென்றால் ஒரு பண்டைய எழுத்தாளரை  உங்களால் பார்க்கமுடியும்.

கிட்டத்தட்ட திருவள்ளுவர் சிலையைப் போல்தோளில் துண்டு வெள்ளை முடி, தாடி மீசை மட்டுமில்லை. சமண துறவி  போல்  அரை வெள்ளை வேட்டி, அட்டணக்கால் அமர்ந்த நிலையில், வலது கையில் எழுத்தாணி,[எழுதுவது போல் ] இடது கை அரை-அவிழ்க்கப்படாத பாப்பிரஸ் சுருள் வைத்திருக்கின்ற ஒரு எழுத்தாளன்.

ஒரு தட்டையான பீடத்தில் குறுக்கு மடக்கிய அட்டங்கால் நிலையில் அமர்ந்திருக்கிற வர்ணம் பூசப்பட்ட, ஒரு எகிப்திய அமர்ந்த எழுத்தாளரின்  சுண்ணாம்பு சிலையை காணமுடியும்

இது கிமு 2600 முதல் 2350 வரையிலான பழைய இராச்சிய காலம், 4 அல்லது 5 வது வம்சத்தைச் சேர்ந்தது என தேதியிடப்பட்டுள்ளது.

எகிப்திய சித்திர குறியீடு எழுத்துகளுக்கு சொந்தக்காரரும் இவர்தான் [இவரின் வம்சாவளி] இவருக்குத்தான் தெரியும் அதனுடைய அர்த்தங்கள், பொதுமக்கள் யாருக்குமே அதை படிக்க கூட தெரியாது  ஒரு குறிப்பிட்ட கையளவு உயர் குடியினர் மட்டுமே அதை படிக்க வரைய தெரிந்து வைத்திருந்திருக்கின்றார்கள். ஆகவே  எகித்திய மக்கள் பேசிய மொழி வேறு [...]

ரொசெட்டா ஸ்டோன் காலம் 196 கி.மு ரொசெட்டா ஸ்டோன்: என்பது எகிப்தில் இருந்து எடுத்து வரப்பட்டு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில்  வைக்கப்பட்டுள்ளது. [ நெப்போலியன் ஆராய்ச்சி குழுமத்திடம் இருந்து அடித்து புடுங்கியது]

இது  ஹைரோகிளிஃபிக், டெமோடிக், கிரேக்கம் என்ற மூன்று மொழிகளில் உள்ள கல்வெட்டுடன் கூடிய ஒரு கல் துண்டு. அது பண்டைய ஹைரோகிளிஃபிக் மொழியை   எப்படி படிப்பது  என்று டெமோடிக், கிரேக்க மொழிகளில் மொழிபெயர்த்து காட்டியிருக்கின்றது.

ஹைரோகிளிஃபிக்: என்பது பழமையான அறியப்பட்ட எகிப்திய எழுத்து முறையின் எழுத்துக்கள், சித்திர குறியீடு ஆகும், இது கிமு 3200 க்கு முந்தையது. 394 முதல் பண்டைய எகிப்தில் பயன்பாட்டில் இருந்தது பிரமிட் கல்லறையில் காணமுடியும்.

டெமோடிக்: என்பது கிமு 650 இல் இருந்து பயன்படுத்தப்பட்ட ஹைரேடிக் என்பதிலிருந்து பெறப்பட்ட  எழுத்துருவம் ஆகும். பண்டைய எகிப்தில் கி.பி 450 வரை. இது வலமிருந்து இடமாக எழுதப்பட்ட ஒரு எழுத்துருவம்.

பின்னர் எகிப்தில், பண்டைய எகிப்தியர்கள்[பொதுமக்கள்அன்றாட பயன்பாட்டிற்கான எழுத்துருவாக மாறியது.

[ஹைரேடிக் என்பது பண்டைய எகிப்திய எழுத்துக்களின் படிநிலை  எழுத்துருவம்  ஆகும். மேற்கோளாக: ஒரு காளையி்ன் தலை A என்ற எழுத்தாக மாறியது போல், மற்றும் தமிழி முதல் எழுத்து k வின் பிரதிபலிப்பு காப்பா என்ற ஒலி  அப்பா [என்று ஆனது போல்]  k உண்மையில்  ஒரு எழுத்து அல்ல அது  காப்பா என்ற ஒலியை குறிக்கின்றது.

கிரேக்கம்: இன்று பயன்பாட்டிலுள்ள கிரேக்க எழுத்துருவம் கிரேக்க எழுத்துக்கள் என்பது கிமு 9 ஆம் நூற்றாண்டிலிருந்து கிரேக்க மொழியில் எழுதப்பட்ட  எழுத்துருவம் ஆகும்கிரேக்க எழுத்துக்களில் இன்று 24 எழுத்துக்கள் உள்ளன, அவை லத்தீன் எழுத்துக்களைப் போலவே பெரிய எழுத்துக்களாகவும் சிறிய எழுத்துக்களாகவும் உள்ளது. கிரேக்க எழுத்துருவம் கிரேக்க மொழி இரண்டும் ஒன்று.

ஒரு எழுத்து ஒரு ஒலிக்கு ஒத்திருக்கின்றது எங்கள் எழுத்துக்களைப் போலவே, ஒவ்வொரு சின்னமும் ஒரு ஒலிக்கு ஒத்திருக்கும். இன்றுவரை பெரும்பாலான செமிடிக் மொழிகளில் வழக்கம் போல், உயிரெழுத்துக்கள் எழுதப்படவில்லை.

எனவே, தேவையான இடங்களில், எகிப்தியலாளர்கள் "e" என்ற உயிரெழுத்தை மெய்யெழுத்துக்களுக்கு இடையே உச்சரிப்பு உதவியாகப் பயன்படுத்துகின்றனர் மற்றும் "j" அல்லது "w" போன்ற பலவீனமான மெய் எழுத்துக்களை "i" அல்லது "u" என்று படிக்கின்றனர். உதாரணமாக, ஸ்டூல் "p" மற்றும் ரொட்டி "t" ஆகியவற்றின் வரிசை "பெட்" என்று உச்சரிக்கப்படுகின்றது.சில ஹைரோகிளிஃப்கள் முழு வார்த்தைகளையும் குறிக்கின்றது

ஹைரோகிளிஃப்களின் பெயர்ச்சொல், மொழியியல் ஒரு குறிப்பிட்ட ஒலியைக் குறிக்காமல் முழு கருத்தையும் குறிக்கும் எழுத்து [ஐடியோகிராம்=சித்திரகுறியீடு]

ஒலிப்பு அடையாளமாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர, ஹைரோகிளிஃப்ஸ் வார்த்தை மற்றும் விளக்க அடையாளங்களாகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். வார்த்தை அடையாளங்கள் குறியீடாகும், அவை சரியாக எதைக் குறிக்கின்றன. எடுத்துக்காட்டாக, மணல் நிறைந்த மலை நாடு ("சேசெட்" என்று உச்சரிக்கப்படுகின்றது) பின்னர் "மணல் மலை நாடுஎன்றார்கள்.

 

பிரெஞ்சுக்காரர் ஜீன்-பிரான்கோயிஸ் (1790-1832) நம்பமுடியாத அளவிற்கு மொழிகளில் திறமை பெற்றவர்கிரேக்கம்  உட்பட அவர் பல பண்டைய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்

 

பதினொரு வயதில் அவர் பண்டைய எகிப்தின் மர்மமான ஹைரோகிளிஃப்களை புரிந்து கொள்ள முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். ரொசெட்டா ஸ்டோன் என்று அழைக்கப்படும் அத்துனை  கல்வெட்டுகளையும் புரிந்துகொள்வதில் ஒருவர் வெற்றி பெற்றால் மட்டுமே அது சாத்தியம் என்பதை அவர் அறிந்திருந்தார்,

 

 1799 இல் எகிப்தில் நெப்போலியனின் துருப்புக்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய, கருப்பு கிரானோடியோரைட் ஸ்லாப். ரொசெட்டா கல்லில் மூன்று வெவ்வேறு பண்டைய மொழிகளில்மூன்றும் ஒரேமாதிரியான உரைகள்  பொறிக்கப்பட்டுள்ளன, அவற்றில் ஒன்று ஹைரோகிளிஃப்ஸ்.

 

ரொசெட்டா ஸ்டோன் ஹைரோகிளிஃப்களின் புதிருக்கு மொழி திறவுகோலாக இருந்தது! 1822 ஆம் ஆண்டில், ரொசெட்டா கல்லில் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும் புரிந்துகொள்வதில் ஜீன்-பிரான்சுவா இறுதியாக வெற்றி பெற்றார். இவ்வாறு ஹைரோகிளிஃப்கள் புரிந்து கொள்ளப்பட்டன,  [ஹைரோகிளிஃப்கள் என்பது பண்டைய எகிப்தின் மொழிகளில் சித்திர குறியீடுகள்]

 

ரொசெட்டா ஸ்டோன், ஹைரோ கிளிப்களின் புதிரைத் தீர்த்தார், இதன் நிமித்தம் உலக மொழிகளின் எழுத்துருவ  புதிருக்கும் ஒரு விடை கிடைத்திருக்கின்றது, "ஃபீனீசியன் ஸ்கிரிப்ட்" அத்துனை உலக மொழிகளின் எழுத்துருவங்களுக்கும் முன்னோடியாக இருந்திருக்கின்றது.

 

எகிப்தியர்கள் உட்பட  அசிரியன் மற்றும் சுமேரியன்  பாபிலோன்  களிமண் பழைய ஸ்கிரிப்ட்அச்சு குத்துதல் எழுத்துக்களை விட்டு விட்டுஃபீனீசியன் ஸ்கிரிப்ட் எழுத்துக்களை கொண்டுதான் தங்கள் எழுத்துருவங்களை வடிவமைத்து கொண்டார்கள்.

 

கிரேக்கம், லத்தீன், தமிழ், பிராமி, தேவநாகரி, ஹீப்ரு, அரபு.   உட்பட எல்லா எழுத்துருவங்களுக்கும் தாய் மூலமாக இருப்பது   ஃபீனீசியன் ஸ்கிரிப்ட்  என்பதில்  நீங்கள் உறுதியாக இருக்கலாம். ஒரு மொழி உருவாக்கிய படிநிலை எழுத்துருவங்களை மற்ற மொழிக்காரர்கள் கடன்வாங்கி, அதற்கு புதிதாக கோடுகள், வரிகள், இழுவைகளை போட்டு, அதனுடன் சொந்த வரிவடிவங்களையும் இணைத்து  தங்கள் எழுத்துருவங்களை  உருவாக்கி கொண்டார்கள்.  

 

ஃபீனீசியன் ஸ்கிரிப்ட் என்பது இடது கை 22 -எழுத்துகள் கொண்ட மெய் எழுத்துக்கள் ஆகும், அதன் வரிசை அப்ஜத் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் கிமு 11 முதல் 5 ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டது. லெபனான் , பாலஸ்தீனம் மற்றும் சிரியாவில்  ஃபீனீசிய மொழி மட்டுமல்ல , அராமைக் , ஹீப்ரு மற்றும் பிற செமிடிக் மொழிகளும் நீண்ட காலமாக எழுதப்பட்டன . பண்டைய எபிரேய எழுத்துகள் ஃபீனீசியன் எழுத்துமுறையின் மாறுபாடாகும்.

 

ஃபீனீசியன் ஸ்கிரிப்ட்க்கு   இருக்கும் சிறப்பம்சம் வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் எழுத முடியும்.

 

இதில் சொல்லப்பட்டது மொழிகளுக்கான ஒரு  தொடக்கமல்ல, எழுத்துருவங்களுக்கான ஒரு தொடக்கம். இந்த எழுத்துருவங்கள்  உருவாக்கப்படுவதற்கு முன்னால்  அந்த மக்கள் எந்த மொழியில் உரையாடினார்கள் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை,

 

இருப்பினும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளும் படியான  பொதுவான  ஒரு மொழியை பேசியிருக்கின்றார்கள்அதை பின்னால் வந்த எழுத்துருவங்கள்   உச்சரிப்பு  என்ற  பெயரில் சிதைத்து  தமதாக்கி கொண்டது.

 

மேற்கோளாக: பொருள் ஒன்று, உச்சரிப்புகள் பல பண்டைய எகிப்தியர்கள் சூரியனை [Ο] வட்ட குறியீடு "ரா " என்று அழைத்தார்கள். அது  இன்று ஆதவன், கதிரவன், சன் என்று ஒவ்வொரு மொழிக்காரர்களும் ஒவ்வொரு விதமாக அழைக்கின்றார்கள்.

 

எகிப்தியர்கள்  வரைந்த வட்ட குறியீட்டை இன்றைக்கும் ஒரு பலகையில் வரைந்து வைத்தாலும்  எல்லா மொழிக்காரர்களினாலும் அது சூரியன் என்று புரிந்து கொள்ள முடியும். எல்லாராலும் புரிந்து கொள்ளக்கூடிய பயன்பாட்டு குறியீடுகள் இன்று பொது வாகன போக்குவரத்து, பயணிகள் நடபாதைகளில்  பயன்படுவது நமக்குதெரிந்த ஒன்று.

 

தனி ஒரு மொழி உரிமை கோரப்படாத படி உலக மொழிகளின்  எழுத்துருவங்கள்  எல்லாம் ஒன்றாக சுருங்கி  ஒரு சிறிய வட்டத்திற்குள்ளே Q-பிட் [0+1]  என்ற யுனிகோட் வரையறு, எழுத்துக்குறி குறியாக்கத்திற்குள்ளே அடங்கி விட்டது. நீங்கள் எந்த மொழியில் கத்தினாலும் கணினி அதை இப்படித்தான் உள்வாங்கும்.   

 

எதிர்காலத்தில் பிற மொழிகள் கற்க வேண்டிய அவசியம் இருக்காதுதாய் மொழி எதுவே அதை  சிறப்பாக கற்றுக்கொண்டாலே போதுமானது உங்களை விரைவு கணினி மொழிபெயர்ப்பாளர் மற்ற மொழி பேச்சாளருடன்  சுவாரிசியமாக  உரையாட வைக்கும்

 

ஃபீனீசியன்கள் பிற்காலங்களில் [புராணவாதிகள்] தொல் தேசத்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

 

படிநிலை எழுத்துருக்கள்:[ஹைராடிக் எழுத்துக்கள் ] எழுத்து மற்றும் எழுத்துக்களின் வளர்ச்சி தோற்றம் எகிப்திய ஹைரோகிளிஃப்ஸ்[சித்திர குறியீடு ஹைராடிக் எழுத்துக்கள்.

 

டெமோடிக் எழுத்துருக்கள்: வழக்கமான எகிப்திய சித்திர குறியீடு ஒலிகளைக் குறிக்க. இது கிரேக்க எழுத்துக்களில் இருந்து பெறப்பட்டது மற்றும் டெமோடிக் தோற்றத்தின் சில எழுத்துக்களையும் உள்ளடக்கி  விரிவாக்கப்பட்டுள்ளது,

 

ஃபீனீசியன் ஸ்கிரிப்ட் : என்பது இடது கை 22-எழுத்துகள் கொண்ட மெய் எழுத்துக்கள் ஆகும், அதன் வரிசை அப்ஜத் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் கிமு 11 முதல் 5 ஆம் நூற்றாண்டு வரை லெபனான், பாலஸ்தீனம் மற்றும் சிரியாவில் பயன்படுத்தப்பட்டது.

 

இந்த மூன்றும் படிநிலை எழுத்துருக்கள் இன்று நாங்கள் எழுதும் எழுத்துகளுக்கு முன்னோடியாக இருந்தது. இது  எந்த மொழிக்கு சொந்தம்எனது பார்வையில் எந்த மொழிக்கும்  சொந்தம் கிடையாது இந்த படிநிலை  எழுத்துருக்களின் கலப்பு, இன்றைய நவீன எழுத்துக்களின் உருவாக்கத்திற்கு காரணியானது

 

தமிழ் எழுத்துருக்கள் உட்பட உலக மொழிகளின் எழுத்துருக்கள்  அத்துனையும் பண்டைய காலத்திலிருந்து  இன்றைய கணினி யுகம் வரை தங்களை பல முறைகள் புனரமைத்துள்ளன. தமிழ் எழுத்துருக்கள் பல காலமாக  படிநிலை எழுத்துருக்கள் நிலையில் இருந்தன.

 

படிநிலை எழுத்துருக்களில் எழுதிய உரைகளை  படிப்பது, விளங்கி கொள்வது கடினம்

 

ஃபெனிசியா கிமு 63 முதல்  ரோமானியப் பேரரசு  காலனித்துவ ஆட்சியில் ஃபீனீசியர் மக்கள் சிதறடிக்கப்பட்டார்கள், இவர்கள் குடியேறிய பல நாடுகளில் ஒன்று இந்தியா/ இலங்கை.  ஃபீனீசியர் மக்கள் மிகச்சிறந்த மொழித்திறனாளர்கள் சென்ற இடமெல்லாம் தங்கள் எழுத்துருக்களை அறிமுகம் செய்தார்கள்.  


கிமு 3 ஆம் நூற்றாண்டில் அசோகரின் கல்வெட்டுகளில்  ஃபீனீசியன் எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களில் அறியப்படுகின்றது.  ஃபீனீசியன் எழுத்துக்கள் அப்ஜத் [ பல திசை எழுதும் அமைப்பு அகரவரிசை ] அசோகரின் கல்வெட்டு போல், மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் காணப்படும் கானானைட் மற்றும் அராமிக் கல்வெட்டுகளிலிருந்தும் அறியப்படுகின்றது.  நன்றி மகேஷ் ரவி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக