வியாழன், 29 டிசம்பர், 2022

Good-bye Corona, Never come Again

குட்-பை கொரோனா: 2023 நல்லதொரு ஆண்டாக மலர எங்களை விட்டுவிடு கொரோனா, உன்னுடைய வேடத்தை கலைத்து விடு.

கொரோனா வைரஸ்கள் மனித உடலுக்குள்ளே நுழைவதற்கு டெல்டா, ஓமிக்ரான் என்று பல வடிவங்கள் எடுத்தாலும் அதனுடைய உயிரியல் பண்புகளை விட்டு அது விலகவில்லை, அதாவது சுவாச தொற்று, சுவாச அழற்சி நோயை ஏற்படுத்தும் என்ற வரம்புக்குள்ளேதான் இன்று வரைக்கும் அறியப்பட்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ்கள் அதனுடைய உயிரியல் வரம்புகளை மீறிய செயல்களில் ஈடுபடுகின்றதா என்று இன்று வரைக்கும் அறியப்படவில்லை. அதாவது கருச்சிதைவு அல்லது திடீர் மாரடைப்பு, மரணங்கள் மற்றும் நரம்பு மண்டல சிதைவுகளுக்கு காரணியாக செயல்படுகின்றதா என்று இன்னும் அறியப்படவில்லை. அல்லது வேறு ஏதாவது தொழில்நுட்ப செயல்பாட்டிற்கு பயன்படுகின்றதா [...?]

இருப்பினும் தன்னியக்க ஆன்டிபாடிகள்: [மிகைப்படைந்த நோய் எதிர்ப்பு] SARS-CoV-2 இன் கடுமையான நீண்டகால விளைவுகள் 2022ல் அதிகமாக தலை தூக்க தொடங்கி இருக்கின்றன என்று மருத்துவ அறிக்கைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இது எதனால் ஏற்படுகின்றது, தடுப்பூசியா அல்லது கொரோனாவா சரியாக அறியப்படவில்லை இதைப்பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றேன்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மனிதகுலம் தப்பிப்பிழைப்பதற்கு மூன்று வருடகாலம், படித்தவர்கள் தொடங்கி பாமர மக்கள் வரைக்கும் நல்ல படிப்பினை இன்றைய தகவல் தொழில்நுட்ப வசதிகள் தந்திருக்கின்றது.

கொரோனா வைரஸ்களை ஒட்டுமொத்தமாக ஒழிக்கமுடியாது, அதுவொரு ஒட்டுண்ணி அது எங்களிடையேதான் ஒட்டி வாழப்போகுது. அதை எப்படி தடுப்பது என்ற அறிவு எங்களிடத்தில் நிறையவே இருக்கின்றது. கொரோனா வைரஸ் மருத்துவம் அதற்கான மருந்து மாத்திரைகள் வெகு சிறப்பாக செயலில் உள்ளது.

ஆகையால், இனிவரும் காலங்களில் கொரோனா வைரஸ் குறித்து அதிகம் பயம் கொள்ளத்தேவையில்லை. ஜெர்மனி/ஐரோப்பா இந்த வருடத்துடன் [26.12.2022] கொரோனா வைரஸ்க்கு விடை கொடுக்கின்றது குட்-பை கொரோனா. . நன்றி  எசன் நகரம் மகேஷ் ரவி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக