வெள்ளி, 30 டிசம்பர், 2022

Corona, covid 19 is not going to be a big problem anymore

கொரோனா, கோவிட் 19 இனி பெரிய பிரச்சனையாக இருக்கப் போவதில்லை.  இந்த மூன்று வருட கால அனுபவத்திலிருந்து, நூறு தடவைகளுக்கு மேல் என்னை கொரோனா சோதனைக்கு உட்படுத்தி இருந்தேன், ஒரு தடவையாவது  பாசிட்டிவ், நேர்மறையாக இருந்ததில்லை. கோவிட் -19  வைரஸின் தீவிரம் அதனுடைய ஆழம், அதனுடைய தடுப்பு நடவடிக்கைகளை புரிந்து கொண்டேன் ஒரு தெளிவு பிறந்தது.   

கொரோனா, கோவிட் 19 இனி பெரிய பிரச்சனையாக இருக்கப் போவதில்லை.  கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் வரும்போது கொரோனா தொற்றுகள் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இல்லை என்பது பல மருத்துவர்களின் கருத்து. அது சாதாரண வைரஸ் தொற்றாகவே அறியப்படுகின்றது.

சமீபத்திய பெரும்பாலான நோய்த்தொற்றுகள் 75 விழுக்காடுகள் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மற்றும் மனித சுவாச ஒத்திசைவு வைரஸ்களினால் [RS -வைரஸ்] தூண்டப்பட்டவை.

பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் 5 சதவீதத்தில் மட்டுமே கொரோனா வைரஸை [சார்ஸ்-கோவி-2 ] நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

RS -வைரஸ் தொற்று: கோவிட் -19 ஒத்திசைவு நோய்க்குறிகளை காட்டுகின்றது. மூச்சுத்திணறல், கடுமையான சுவாசத்துடன் இருமல். மூக்கு மற்றும் சுவாசக் குழாயில் அடர்த்தியான சளி. உணவில் நாட்டமின்மை  [சாப்பிட மற்றும் குடிக்க மறுப்பு]

சுவாசம் இடைநிறுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், உடல் சோர்வு, சக்தியின்மை போன்ற பொது உடல்நலக்குறைவுகள். பெரும்பாலும் குழந்தைகளுக்கு இது கடுமையானதாக இருக்கும்.

குழப்பம் அடைய வேண்டாம். இது கோவிட் -19 தொற்றுக்கு இணையான நோய் குறிகள் இருப்பினும் இது கொரோனா வைரஸின் தொற்று கிடையாது.

தற்போது முதியோர் குழுவில் கோவிட்-19 நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது, அதே சமயம் குழந்தைகள் மற்றும் இளையவர்கள் முக்கியமாக இன்ஃப்ளூயன்ஸா மற்றும் RSV தொற்றுகளால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மனி, கிரேட் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் போன்ற பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தற்போது ஸ்ட்ரெப்டோகாக்கி ஸ்கார்லட் காய்ச்சல் உட்பட பல்வேறு சுவாச நோய்களை ஏற்படுத்தும். வைரஸ் தொற்று நோய்களின் அலைகளை அனுபவித்து வருகின்றனர்

மேலும் நிமோகாக்கி, மூளைக்காய்ச்சல் நுரையீரல், நடுக் காது தொற்று போன்ற தீவிர நோய்களை ஏற்படுத்துகின்றது.  குறிப்பாக சிறு குழந்தைகள்  நிமோகாக்கி நோய்த்தொற்றின் அபாயத்தில் உள்ளனர்.

நிமோகாக்கல் தொற்றுகள் - MSD  ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா [நிமோகோகி]. இருமல்  தும்மல் துளி தொற்று  மூலம்  பரவக்கூடியது. நிமோகாக்கி வைரஸ்கள் அல்ல அதுவொரு  பாக்டீரியா, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா இனத்தின் பாக்டீரியாக்கள் நிமோகோகி என்று குறிப்பிடப்படுகின்றன, 

அவை மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியைக் காலனித்துவப்படுத்துகின்றன, இந்த பாக்டீரியாக்கள் பெரும்பாலும் நிமோனியா, மூளைக்காய்ச்சல்  சைனசிடிஸ் மற்றும் நுரையீரல், நடுக் காது தொற்று போன்ற தீவிர நோய்களை ஏற்படுத்துகின்றது.பொதுவாக மழலை, சிறு குழந்தைகளுக்கு  நிமோகாக்கி நோய்த்தொற்று சற்று கடுமையானதாக  இருக்கும். இந்த இரண்டு தொற்றுகளுக்கும்  தடுப்பூசி இருக்கின்றது.

இந்த மூன்று வருட கால இடைவெளியில் கொரோனா வைரஸ் அலைகள் இந்த நோய்களையும் அதன் நோய்க்குறிகளையும் அறிய விடாமல் தடுத்து தனதாக்கி கொண்டது.

நிமோனியா: சிகிச்சை ஆண்டிபயோட்டிகா [நுண்ணுயிர் எதிர்ப்பிகள்] - மூளை அழற்சி [மூளைக்காய்ச்சல்] - நடுக் காது அழற்சி [ஓடிடிஸ் மீடியா] - நுரையீரல் அழற்சி [நிமோனியா] - இரத்த விஷம் [செப்சிஸ்]




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக