வெள்ளி, 23 டிசம்பர், 2022

Can artificial light make you sick?

செயற்கை ஒளி உங்களை நோய்வாய்ப்படுத்துமா?  இயற்கை மற்றும் செயற்கை ஒளி இரண்டும் மனித உயிரியல் கடிகாரங்கள் இவை மனித வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் மற்றும் நாளமில்லா அமைப்புகளை சீர்குலைத்து  உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

உடல் இரவு பகலை சம பங்குகளாக  பிரித்து தன்னை வகைப்படுத்தி வைத்திருக்கின்றது. பகல் உழைப்புக்கும் இரவு உறக்கத்திற்கும் உரியதாக வைத்திருக்கின்றது. இதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் உடலின் சமநிலையை பாதிக்கின்றது. [செரோடோனின்-பகல், மெலடோனின்-இரவு]

மூளையில் உள்ள சிறிய சுரப்பியான பினியல் சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன் செரோடோனின் மெலடோனின் தொடக்கப் பொருளை உருவாக்குகின்றது.

பகலைப் போல் இரவிலும் வெளிச்சத்தில் இருந்தால் உடல் தனக்கு ஓய்வு இல்லை என்று நினைக்கின்றது.

ஒளியின் புற ஊதா மற்றும் நீல பகுதிகள்  உடலின் இயக்கத்தை சேதமடைய செய்வதற்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளன

செயற்கை வெளிச்சம் சக்கரை நோய் இதய நோய் பாதிப்பை  அதிகப்படுத்தும். அதிக நேரம் செயற்கை வெளிச்சத்தில் வாழ்பவர்கள். வளர்சிதை மாற்ற கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்கள்.

இருப்பினும், இருண்ட குளிர்கால மாதங்களில் ஏற்படும் குறைவான ஒளியின் வெளிப்பாடு உண்மையில் உளவியல் மற்றும் உடல் ரீதியான மாற்றங்களைத் தூண்டும் என்பதை நீண்ட காலமாக மருத்துவத்தில் நிரூபித்துள்ள ஒன்று.

குறிப்பாக ஐரோப்பா வாழ் மக்கள் இந்த இருண்ட கால மனச்சோர்வு  உற்சாக மின்மை துன்பங்களை நீண்ட காலமாக அனுபவித்து வருகின்றார்கள்.

நரம்பு செல் மீது நறுக்குதல் புள்ளியாக செயல்படும் செரோடோனின் 1A ஏற்பி மிகவும் குறைவான செயல்திறன் கொண்டது. மேலும் விற்றமின் D3 குறைபாடு, குறைந்த வெளிச்சத்தில் மனச்சோர்வு மற்றும் கவலைக் கோளாறுகளை இட்டுச் செல்லும்.

எண்டோர்பின்கள்: மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் செரோடோனின் மற்றும் டோபமைன் ஆகிய இரண்டு நரம்பியக்கடத்திகள் "மகிழ்ச்சி ஹார்மோன்கள்" என்று அழைக்கப்படுகின்றன. அவை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வெளியிடப்பட்டால், மூளையில் உள்ள இணக்கம் பாதிக்கப்படுகின்றது. செரோடோனின் உணர்ச்சி நிலை மற்றும் தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சிகளில் ஒரு பங்கு வகிக்கின்றது.

சுப்ராச்சியாஸ்மாடிக் நியூக்ளியஸ் என்பது மனித உடல் கடிகாரத்தின் முக்கிய டைமர் ஆகும், இது ஒரு எண்டோஜெனஸ் சர்க்காடியன் ரிதத்தை உருவாக்குகின்றது. அதன் செயல்பாடு மெலனோப்சின் கொண்ட விழித்திரை கேங்க்லியன் செல்கள் மூலம் ஒளி மற்றும் இருளை உணர்தல் மூலம் மாற்றியமைக்கப்படுகின்றது.

குளிர்கால மனச்சோர்வு கோபமூட்டும் காலப்பகுதியாக, பல குடும்ப உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தும் குழப்பமான காலப் பகுதியாக கடந்து வந்திருக்கின்றது.

அதிக செயற்கை ஒளி, மிகக் குறைந்த பகல் ஒரு மனிதனை நோயாளியாக்கும் என்பதில் நீங்கள் எப்போதும் தெளிவாக இருக்கலாம்.

செரோடோனின் மற்றும் டோபமைன் இந்த இரண்டும் இல்லாத மனிதனுக்கு காதலும் சிரிப்பும் வராது. காதல், சிரிப்பு மாத்திரை வடிவில் கிடைக்கும்.  ஒக்ஸிடாஸின், காதல் உணர்வுக்கு முக்கியமானது இந்த ஹார்மோன் தான் காதல் மாத்திரையில் உள்ளது.

இருண்ட வருடங்கள் கடந்தது, 2023 அமைதியும், சமாதானமும் நிறைந்த புத்தம் புதிய ஆண்டாக மலரட்டும். இந்த ஆண்டிற்கான விருப்பம் புதிய பண்ட ஆற்றல். இயற்கையும் மனிதனும் சமாதானத்துடன் கூடிவாழ குதூகலமான ஆண்டாக இருக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்த்துக்கள்.



புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக