எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் காளை “அ” [A] என்ற முதல் எழுத்துருவில் தொடங்கி ஆயுத எழுத்து [ஃ] திரிசூலம் வரைக்கும் முக்கண் கடவுளை குறிக்க பயன்படுத்திய குறியீடுகள்.சுமேரியர்கள் விவசாயிகள் மட்டுமின்றி பக்தியுள்ள மக்களும் கூட
சுமேரியர்கள் [3.500 – 4.000] கிமு 3-4 மில்லினியத்தில் வாழ்ந்த மக்கள் பண்டைய தமிழர்கள் [இந்துக்கள்] .? இந்த கேள்விக்கான பதிலை அந்த மக்களே களிமண் மாத்திரைகளில் [கியூனிஃபார்ம்] விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
பண்டைய நாகரீகத்தில் வாழ்ந்த மக்களை எப்படி அடையாளப்படுத்துவது இந்த மக்கள் யார் இவர்கள் அங்கு என்ன செய்துகொண்டிருந்தார்கள். பண்டைய மக்களை அடையாளப்படுத்துவது அவர்கள் வழிபட்டு விட்டுச்சென்ற கடவுள்கள்.
சுமேரியர்கள், ஆதிபகவான் படைப்பு தெய்வங்களைத் தவிர, நன்னா, உடு மற்றும் இனன்னா ஆகிய மூன்று வான தெய்வங்களும் மற்றொரு கடவுள் நினுர்தா, தெற்கு காற்றின் [வாயு பகவான்] கடவுளுக்கும் சிறந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
இதில் ஒரு கடவுள் இஷ்தார்[இனன்னா] குறித்து பேசுகின்றேன், அக்காடியன் பேரரசின் [2,350-2,000] முத்திரையில் உள்ள இஷ்தார் தேவி அவள் முதுகில் பல போர் ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தது [ வாள்,வேல் சூலம், கதம்] எருமை மாட்டின் கொம்பு கிரீடம் அணிந்திருந்தாள். அவள் காலடியில் ஒரு சிங்கம் படுத்திருந்தது.
இனன்னா தேவி காதல், போர், நீதி, அழகு, அரசியல், அதிகாரம், வேளாமை, பசுமை, நல்ல சந்ததி விருத்தி வேண்டி வழிபட்டு வந்தார்கள் என குறிப்புக்களை களிமண் மாத்திரையில் பதிவு செய்திருக்கின்றார்கள்.
இன்னானா தேவி, சுமேரியர்களினால் கிமு[4,000-3,000] வழிபட்டார்கள், மெசபடோமியா முழுவதும் கோயில்களில் கூடி மக்கள் வழிபட்டார்கள்.
சுமேரில் இனன்னா என்ற பெயரிலும், பாபிலோனியர்கள் மற்றும் அசிரியர்களினால் இஷ்தார் என்ற பெயரிலும் வணங்கப்பட்டாள்.
அவள் சொர்க்கத்தின் ராணி, வீனஸ் கிரகத்துடன் தொடர்புடையதாக அறியப்படுகின்றாள். அசீரியர்களினால் இனன்னா மிகவும் நேசிக்கப்பட்டாள், அவர்களின் தேசிய கடவுளாக ஹீப்ரு பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அசல் களிமண் முத்திரையை சிகாகோ பல்கலைகழகத்தின் ஓரியண்டல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் சில பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டுள்ளது.
இனன்னா தேவிக்கு, பல திருவிழாக்களை எடுத்தார்கள். முளைப்பாரி போடுவது, அறுவடைத்திருநாள், பொங்கல் வசந்தகால வரவேற்பு திருவிழா மற்றும் புத்தாண்டை வரவேற்கும் பண்டிகைகளை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.
இந்த இனன்னா தேவி, இன்று துர்க்கா தேவி, மாரியம்மன், காளி என்று அறியப்படுகின்றது. பிற்காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் முதுகில் பொருத்தப்பட்ட போர் ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பதாக வரையப்பட்டிருக்கின்றது.
சுமேரியர்களின் இனன்னா தேவி [துர்க்கா தேவி] வழிபாடு ஃபீனீசிய தெய்வமான அஸ்டோரெத்தின் வழிபாட்டை பெரிதும் பாதித்தது. அதற்கு எதிர்வினையாக அவர்கள் தங்கள் கடவுள்களை மேலாடை இல்லாத இன்னும் கவர்ச்சி மிக்க சிலைகளை உருவாக்கினார்கள். அஸ்டோரெத்தின் சிலை பாரிஸ்-லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் பிற்காலத்தில் பெண் தெய்வங்களுக்கு கவர்ச்சிமிக்க சிலைகள் உருவானது.
மெசபடோமிய புராணங்களின் பாத்திரங்கள், இன்று புராண கதைகள் என்று அறியப்பட்ட பல கதைகளுக்கு ஆணி வேராக, மூலமாக இருக்கின்றது. அங்கு நடந்த சின்ன வெள்ளப்பெருக்கு மிகப்பெரிய பிரளய கதையாக வடிவமைக்கப்படுகின்றது.
சுமேரியர்கள் வாழ்ந்த ஒரு சின்ன விவசாய கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு வாழ்ந்த மக்கள் தங்களுடைய வளர்ப்பு விலங்குகள் ஆடு, மாடுகளை பாப்பிரஸ் நீர் தாவரத்தினால் வடிவமைக்கப்பட்டு ஒரு சிறிய தோணி ஒரு ஆமையில் வைக்கப்பட்டு, வெள்ளப்பெருக்கில் இருந்து தங்களையும் வளர்ப்பு விலங்குகளையும் காப்பாற்றினார்கள்.
அவர்களுக்கு அன்று கிடைத்த மூலப்பொருள்கள் தொழில்நுட்ப வசதிகளை வைத்து ஒரு தோணியை உருவாக்கினார்கள், அவர்களினால் பெரிய கப்பல்களை கட்டமுடியவில்லை,
பிற்காலத்தில் ஃபீனீசியர்கள் பெரிய கப்பல் கட்டும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தினார்கள் இன்றைய துனிசியா/கார்தேஜ் நகரத்தில் [கிமு8-9 நூற்றாண்டு] கப்பல் வணிகம், போர் கப்பல்களை நிறுத்துவதற்கான இரண்டு பெரிய துறைமுகங்களை கட்டியிருந்தார்கள் அதற்கான சிதலங்களை இன்றும் காணமுடியும். காரத்தேஜ் பேரரசு ரோமனியர்களினால் அழிக்கப்பட்டது.
ஆதாரங்கள் இருப்பதுதான் வரலாறு. ஆதாரங்கள் இல்லாதது புராணக்கதைகள். இதற்கான ஆதாரங்களை அவர்கள் களிமண் மாத்திரைகளில் விட்டுச் சென்றிருக்கின்றார்கள் அதற்கான படங்களை மேலே பார்க்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக