புதன், 21 டிசம்பர், 2022

What food did the ancient /Semitic people [Sumerians, Egyptian Babylonians] eat?

பண்டைய மக்கள் /செமிடிக் [சுமேரியர்கள், எகிப்திய பாபிலோனிய மக்கள் ] எந்த உணவை சாப்பிட்டிருப்பார்கள். இதற்கான பதிலையும் களிமண் மாத்திரைகள் சொல்லுகின்றன

மேய்ப்பர்கள், வெண்ணெய், சீஸ் மற்றும் பீர், ரொட்டி பற்றி பேசுகின்றார்கள்.தேனைத் தவிர, பேரீச்சம்பழம்,பேரீச்ச பழச்சாறு பாகு [சிரப்பும்] இருந்தது, உலர்ந்த பழங்கள் இது இனிப்புக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

இனன்னா [துர்கா/காளி] கூறுகிறார், அவளுடைய அன்பின் தெய்வம் மற்றும் சூரியக் கடவுளான உடுவின் சகோதரி. மேய்ப்பனின் வெண்ணெய் மற்றும் பாலின் தரத்தை உது பாராட்டுகிறார்.

கியூனிஃபார்ம் மாத்திரைகளில் சொல்லப்பட்டதை படிப்பது கடினம் இப்படி தூண்டுதுண்டாகத்தான் எழுத முடியும்.

கியூனிஃபார்ம் மாத்திரைகளில் விரிவான சமையல் குறிப்புகள் மற்றும் சமைப்பதற்கு சுருக்கமான வழிமுறைகள் இரண்டும் உள்ளன என்று மான்சியர் பொட்டெரோ எழுதுகிறார்,

அவை ரெசிபியின் நீண்ட பதிப்பின் பகுதிகளை கொண்ட  கோழி உணவுகள் மற்றும் தானிய கஞ்சிக்கான சமையல் குறிப்புகளைக் காணலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தண்ணீரில் சமைப்பது [அவித்த உணவுகள், சுட்ட உணவு] விவரிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக முட்டைகளும் சேர்த்திருப்பார்கள். சமையலுக்காக மட்பாண்டங்கள், செங்கல் அடுப்புகள் பயன்படுத்தினார்கள்.

புளித்த பால் உணவுகள்[மோர், சீஸ், பாலாடை கட்டிகள்] மற்றும் போதை தரும் திராட்சை ரசம் [ஒயின்] கோதுமை பீர். கோதுமை ரொட்டி. ஆட்டு இறைச்சி, நன்னீர் மீன், பசு பாலுக்காகவும் காளைகள் வேளாண்மைக்காக பயன்படுத்தப்பட்டது. ஆட்டுப்பாலை அதிகமாக விரும்பி சாப்பிட்டிருக்கின்றார்கள்.

சுமேரியர்கள் வேளாமை உணவுகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளை மட்டுமே நம்பியிருந்தார்கள்அவர்கள் தேனுக்காக தேனீக்களை வளர்த்தார்கள். அதற்கான ஆதாரங்களை களிமண் மாத்திரைகளில் விட்டு சென்றிருக்கின்றார்கள்.

மெசபடோமிய உணவு வகைகளில் மசாலாப் பொருட்களும் மிகவும் முக்கியமானதாகத் தெரிகின்றது மற்றும் சுமார் 36 வெவ்வேறு சுவையூட்டும் பொருட்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன.[உப்பு புளிப்பு இனிப்பு ] உறைப்பு அறியப்படவில்லை.

குறிப்பாக சுவைக்காக உள்ளி/பூண்டு. வெங்காயம், லீக்ஸ் கிட்டத்தட்ட ஒவ்வொரு சமையல் செய்முறையிலும் காணப்படுகின்றது,

எகிப்தியர்கள், சுமேரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் போன்ற ஆரம்பகால மேம்பட்ட கலாச்சாரங்களுக்கு உப்பு ஏற்கனவே ஒரு முக்கிய பொருளாக இருந்தது. அவர்கள் அதை ஒரு மசாலாப் பொருளாகவும், தங்கள் உணவுப் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தினர்.

புதினா, சீரகம், வெந்தயம், கொத்தமல்லி மற்றும்  விதைகள், கிழங்கு, நிலக்கீரைகள் பண்டைய சமையலறையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

பாபிலோனியர்களுக்கு ரொட்டி ஒரு மிக முக்கியமான உணவுப் பொருளாக இருந்தது, அவர்கள் பண்டைய எகிப்தியர்களுடன் தங்கள் சமையல் முறைகளை பகிர்ந்து கொண்டார்கள்.

மெசபடோமியா 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்களின் நிலை என்ன, அவர்களின் திருமணம் கருவுறுதல் மகப்பேறு பிள்ளை வளர்ப்பு பற்றி களிமண் மாத்திரை என்ன சொல்கின்றது.

மனித மகப்பேறு, பிள்ளை வளர்ப்பு என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. குறைந்தது மனிதப் பிள்ளையை ஆறு வயது மட்டுமாவது கண்ணும் கருத்துடன் வளர்த்து விட வேண்டும்.

எந்தவிதமான அறிவும் இல்லாமல் எப்படி மகப்பேறு பிள்ளை வளர்ப்பை மேற்கொண்டு இருப்பார்கள்.

யார் மகப்பேறு மருத்துவம் பார்த்தார்கள் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டி விட வேண்டும் என்று யார் சொல்லிக் கொடுத்தார், இன்றுள்ள மகப்பேறு வலியை அன்றுள்ள பெண்களும் அனுபவித்திருப்பார்கள் கடினமான மகப்பேறுகளுக்கு யார் மருத்துவிச்சியாக செயல்பட்டார்,

ஆறுமாத  காலம் தாய்ப்பாலும் பிறகு குழந்தைக்கு திட உணவுகளை அவித்து மசித்து குடுக்கவேண்டும் என்று யார் சொல்லிக்கொடுத்தார்கள் இவர்களுக்கு பின்னால் மாபெரும் சக்தியாக இனன்னா/துர்கை அம்மன் இருந்தாள்.

பெண்களின் சட்ட நிலை குறித்து கியூனிஃபார்மில் எழுதப்பட்ட பண்டைய சட்ட நூல் அசிரியா [ஈராக்] கி.மு. 12 ஆம் நூற்றாண்டு ஜெர்மனி/பெர்லினில் அருங்காட்சியகத்தில் காணப்படும் களிமண் மாத்திரையில் உள்ளது விளக்கம். நான் நேரில் சென்றுபார்த்த, அறிந்த தகவல்கள் இது.

ஆணாதிக்க திருமணங்களாக இருந்தது பெண்கள் ஆண்களைச் சார்ந்திருந்தார்கள்.

பெண்களை பாதுகாக்கும் மாபெரும் சக்தியாக இனன்னா இருந்தாள். பெண்களை கொடுமைப்படுத்தும் ஆண்களின் தலையை எடுக்கும் காளியாக இனன்னா/துர்கை அம்மன் இருந்தார். இதனால்தான் இனன்னா ஆயுதங்கள் ஏந்திய போர்க்குணம் உள்ள தெய்வமாக மதிக்கப்பட்டு வந்தது.

துர்க்கை அம்மன் வழிபாடு பெண்கள், தாய்மார்களின் வழிபாடாக இன்றும் தொடர்கின்றது.

சுமேரிய நாகரிகம் , முதல் பண்டைய நாகரிகம் மட்டும் கிடையாது அது ஒரு மாதிரி நாகரீகம் கூட அங்கு பயிற்சிவிக்கப்பட்ட மக்கள் பிற்காலத்தில் பல இடங்களில் குடியேற அனுப்பி வைக்கப்பட்டார்கள். பண்டைய விழுமியங்களின் தொடராக என்னுடைய தாத்தா சிவக்கொழுந்து அப்பாவின் அளவெட்டி  ஊர் அருகாமையில் தெல்லிப்பளை/ யாழ்ப்பாணம் அருள்மிகு   துர்க்கை அம்மன் விளங்குகின்றது

பண்டைய மனிதர்களுக்கு குறைந்தது 10 உணவு வகைகளைத் தவிர வேறு எந்த உணவுகளும் இருந்ததாக தெரியவில்லை இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் ஆனால் இன்று நவீன மனிதனுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகள் இருக்கின்றன இருந்தும் பாதி மக்கள் பட்டினியாக கிடக்கின்றார்கள்.

ஆரம்பகால சித்திரங்கள் [பிட்ரோக்கிராம்] பிற்கால உச்சரிப்பு களிமண் மாத்திரைகள் [குத்தெழுத்துக்கள்] கியூனிஃபார்ம்

கியூனிஃபார்ம்,ஆயிரம் ஆண்டுகாலம்  பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்கள் பிற்காலத்தில் அக்காடியன்கள்/ ஃபீனீசியர்களின் எழுத்துருக்களின் வருகையினால் கைவிடப்பட்டது. அக்காடியன்கள் அல்லது செமிடிக் மக்கள் இவர்களின் வழித்தோன்றல்கள் இன்றுயூதர்கள் மற்றும் அரேபியர்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக