சனி, 2 அக்டோபர், 2021

இயற்கை கொலையாளி செல் வளர்ச்சி எலும்பு மஜ்ஜையில் உருவாகி தைமஸ் உறுப்பில்(போலீஸ் அகாடமி) பயிற்சிவிக்கப்பட்டு, ஆறு வளர்ச்சி கட்டங்களை கடந்து முதிர்ச்சியடைகின்றது. தைமஸ் உறுப்பு சிறு பிள்ளைகளுக்கு ஆரோக்கியமாகவும் பெரியதாகவும் இருக்கும், வயதானவர்களுக்கு 60 வயதை கடந்தவர்களுக்கு சிறுத்து சின்னதாகவும் அதிகம் செயல்திறன் இல்லாமலும் இருக்கும்.

செயல்பாடு: வைரஸ் நோய்த்தொற்று உள்ள செல்களை நீக்குதல் வெவ்வேறு வகை வைரஸ் குடும்பங்களை கண்டு அழித்தல்/நீக்குதல்.உ|த: ஹெர்பெஸ்விரிடே குடும்ப வைரஸ் சிக்கலான இரட்டை சுருள் வைரஸ்(டி.என்.ஏ) மற்றும் புற்று நோய் கட்டி செல்களை நீக்குதல், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய்(விந்து உந்துபை), வெண்குஷ்டம் போன்ற சுய-உடல்-தாக்கி நோய்களுக்கும் எதிராகவும் செயல்படுகின்றது.

இயற்கை கொலையாளி செல்கள்: (NK) (LTI) நிணநீர் ஓட்டம், எலும்பு மஜ்ஜை உள்ளுறுப்புகள் பாதுகாப்பு. [ILC1]- நாள்பட்ட அழற்சி, புரோட்டோசோன் பாதுகாப்பு. புரோட்டோசோன் என்பது ஒற்றை செல் உயிரினங்கள் விலங்கு ஒட்டுண்ணிகளை குறிக்கும் கிரேக்கசொல். [ILC2] புண், காயங்களை குணப்படுத்துதல் மற்றும் (ஹெல்மின்த்ஸ்) நாடா புழுக்களிலிருந்து பாதுகாப்பு. [ILC3] - காளான்கள், பூஞ்சை மற்றும் பாக்டீரியா பாதுகாப்பு.

இயற்கை கொலையாளி செல்களுக்கு இருக்கும் இன்னுமொரு சிறப்பு, செல்களுக்குள்ளே நடக்கும் அலாரம், சமிக்கைகளை அவதானிக்க கூடியது, எடுத்துக்காட்டாக: புற்றுநோய் கட்டி உருவாக்கம் அந்நிய ஊடுருவல்களை சமாளிக்கமுடியாமல் உடல் செல்கள் போடும் அலறல் சத்தம் கேட்டு உதவக்கூடியது.

விளங்கிகொள்ள: வீட்டுக்குள்ளே புகுந்த திருடன் கத்தியை காட்டி மிரட்டி வெளியில் பொலீஸ் திரியுது கதவை தட்டினால் நாங்கள் நல்லாயிருக்கிறோம் எங்களை யாரும் தொந்தரவு செய்யவில்லை என்று சொல். இந்த நிலவரத்தை ஒட்டுகேட்டு கதவை உடைத்துக்கொண்டு எதிரி மற்றும் பாதிக்கப்பட்ட செல்லையும் சேர்த்து அழிக்ககூடிய திறன் உள்ளது.

இயற்கை கொலையாளி செல்கள் ரோந்து பணியில் இருக்கும் போது செல்களுகுள்ளே என்ன நடக்கின்றது என்று துருவித்துருவி ஆராயாமல் விடாது இதனால்தான் இயற்கை கொலையாளி செல்கள் புற்றுநோய் காப்பானாக செயல்படுகின்றது. இதனுடைய எதிர் விளைவு தவறான சமிக்கை புரிந்துணர்வு, மூளை கல்லீரல், கணையம், நரம்பு பாதிக்கப்பட்ட எந்த திசுக்களாக இருந்தாலும் எதிர்த்து அழிக்கதொடங்கிவிடும்.

இது சுய-உடல்-தாக்கி நோய் வரையறைக்குள்ளே வருகின்றது. இதன் நிமித்தம் கணைய திசுக்கள் அழிக்கப்பட்டால் சின்ன வயது சர்க்கரைநோய் வகை1 ஏற்படுகின்றது. ராணுவம் புகுந்த நாடு எப்படியிருக்கும்….? மனித உடலை பரப்பிரமம் எவ்வளவு அழகாக உருவாக்கி தந்திருக்கின்றது

NK-செல் வளர்ச்சி தைமஸ் போலீஸ் அகாடமியில்  ஒவ்வொரு ஆயுதமாக பயிற்சி பெற்று, முழு தகுதியுடன் என்கவுண்டர் போலீஸாக  பட்டம் பெற்று பணிக்கு வருகின்றது.   NK-செல்கள் T-செல்களுடன்  கூட்டு ரோந்து பணியில் ஈடுபடுகின்றது.

MHC பல்வேறு வகையான ஆன்டிஜென் விளக்கக்காட்சிகளில் பங்கேற்கின்றது.

MHC- I: இந்த புரத மேற்பரப்பு எல்லாவகையான அணுக்கரு உயிரணுக்களால் வெளிப்படுத்தப்படுகின்றன.  MHC- I உடலின் சொந்த செல்களினால்  காட்சிப்படுத்துதல் இரத்த சிகப்பணுக்கள் (எரித்ரோசைட்டுகள்) உட்பட உடலின் அத்துனை  நல்ல செல்களுக்கும்  MHC-I புரதங்கள் உயிரணு மூலம் மொழிபெயர்க்கப்பட்ட சைட்டோபிளாஸிலிருந்து பெப்டைட்களை பிணைத்து அவற்றை உயிரணு சவ்வில் வழங்குகின்றன.

நச்சு T- செல்களுக்கு (CD8 + D- செல்கள்) ஆன்டிஜென்களை வழங்குவதும், கொலையாளி உயிரணுக்களால் ஆரோக்கியமான செல்கள் அழியாமல் பாதுகாப்பதும் இதன் பணியாகும்.

MHC- II   அந்நிய ஊடுருவல்  பாக்டீரியாக்கள், வைரஸ்கள்  ஒற்றை செல், கரு இல்லாத உயிரணுக்கள், ஒட்டுண்ணிகள்  ஆன்டிஜென்-வழங்கும் செல்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன   டென்ட்ரிடிக் செல்கள், மோனோசைட்டுகள்மேக்ரோபேஜ்கள்,B-செல்களினால் அடையாளம் கண்டு அழிப்பது .இதன் பணியாகும்.

MHC மூலக்கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு அடையாள அட்டை  ரோந்து பணியில் ஈடுபடுகின்ற .T-செல், NK-செல்களுக்கு காட்சிப்படுத்த தவறும் செல்களை  உடனடியாக  என்கவுண்ட செய்துவிடும்.

MHC- I: அனைத்து அணுக்கரு உயிரணுக்களால் வெளிப்படுத்தப்படுகின்றன- எரித்ரோசைட்டுகள் (இரத்த சிகப்பணுக்கள்)n - பிளேட்லெட்டுகள் (குருதிசிறுதட்டுகள்)

MHC - II: அவை ஆன்டிஜென்-வழங்கும் செல்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன, |கா:. டென்ட்ரிடிக் செல்கள், மோனோசைட்டுகள், அல்வியோலர்-மேக்ரோபேஜ்கள்,  B-செல்கள், மேக்ரோபேஜ்கள் (விழுங்கி செல்கள், நச்சு T- செல்களுக்கு (CD8 + D- செல்கள்


ஹைட்ரோனெபிரோசிஸ் ஹைட்ரோனெபிரோசிஸ் என்பது சிறுநீரகங்களில் சிறுநீர் தேங்குவதாகும். சிறுநீரகம் சிறுநீர் பாதையில் ஏற்படும் இந்த மாற்றத்திற்கு பல நோய்கள் காரணியாகின்றது.  இந்த காரணத்திற்காக, ஹைட்ரோனெபிரோசிஸ் நோயால் கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பராமரிப்பு தேவை மற்றும் பரிந்துரை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஹைட்ரோனெபிரோசிஸ் சிகிச்சையானது அதை ஏற்படுத்தும் நோயை இலக்காகக் கொண்டது, மேலும் இது மருத்துவ அல்லது அறுவை சிகிச்சையாகக்கூட இருக்கலாம்.

சில சூழ்நிலைகளில், ஹைட்ரோனெபிரோசிஸ் பிறப்பதற்கு முன்னும் பின்னும் தானாகவே தீர்க்கப்படுகின்றது.

பல நோய்களின் மறைமுக காரணியாக (ஹெல்மின்த்ஸ், புரோட்டோசோன்) ஒற்றை செல் உயிரினங்கள், விலங்கு ஒட்டுண்ணி, பாக்டிரீயாக்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் அதிகம். ஹெல்மின்த்ஸ், புரோட்டோசோன்: குடிநீர், காய்கறி தாவர ஒற்றை செல் உயிரினங்கள் மற்றும் செல்லப்பிராணிகள், வளர்ப்பு விலங்கு ஒட்டுண்ணிகளை சாதாரணமாக நினைக்காதீர்கள்,

இந்த ஒட்டுண்ணிகள் உடல் உள்ளுறுப்புகளில் மூளை உட்பட எல்லா இடங்களிலும் முட்டையிட்டு பெருக்கம் அடையக்கூடியது. இதன் நிமித்தம் உடல் சார்ந்த நோய்கள் மட்டுமின்றி மனம் மூளை சார்ந்தபாதிப்புகள், டோக்ஸோபிளாஸ்மோசிஸ் ஒட்டுண்ணிகள் பைத்தியம் பிடிக்க வைக்கும். இந்த ஒட்டுண்ணி நோய்களை ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணமாக்க முடியும். இதற்கான மருத்துவ பரிந்துரைகள் மருந்து மாத்திரைகள் மருத்துவ சந்தையில் நிறையவே கிடைக்கின்றது.

சுத்தமான காற்று பல நோய்களை குணமாக்கும் சக்திபடைத்தது இயற்கை கொலையாளி செல்களை கட்டுப்படுத்தவும், புதிப்பிக்கவும் சுத்தமான காற்றை சுவாசிப்பது அவசியமானது. பெரிய விரிச்சமாக வளர்ந்த ஒரு அரசமரம் ஒரு நாள் வெளியிடும் ஒட்சிசன் காற்று ஒரு மனிதன் 13 வருடம் உயிர் வாழ்வதற்கு போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக