சனி, 16 அக்டோபர், 2021

எங்களுடைய நோயெதிர்ப்பு அமைப்பு, ஒரு தலைமை கட்டளையின் கீழ் இணைந்து பணியாற்றுகின்ற. குறிப்பிடப்படாத நோயெதிர்ப்பு பாதுகாப்பு மற்றும் குறிப்பிட்ட நோயெதிர்ப்பு பாதுகாப்பு என இரண்டு குழுமம்மாக இயங்குகின்றது..

குறிப்பிடப்படாத நோயெதிர்ப்பு பாதுகாப்பு: கிரானுலோசைட்டுகள் மோனோசைட்டுகள் மற்றும் மேக்ரோபேஜ்கள் (விழுங்கிசெல்கள்) இணைந்து பணியாற்றுகின்றன, இவைகள் நோய்க்கிருமிகளுடனான முதல் தொடர்புனை ஏற்படுத்தி தன்னிச்சையாக அழிக்கும் திறன் உள்ளவைகள். மறுபுறம் அவை ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு எதிராக இயக்கப்படாதவை.

விளங்கசொன்னால்: இந்த வழியாக ஒரு குற்றவாழி வருவான் அவனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை கிடையாது தினமும் ரோந்து பணியில் ஈடுபடும் சாதாரண காவல்துறை அதிகாரிகள்.

சில்லறை குற்றவாழிகளை மடக்கி, மெதுவாக தாக்ககூடிய ஆயுதங்கள் (கொல்லிகளை) அதிகாரங்களை வைத்திருக்கின்றன, பாக்டீரியா, ஒட்டுண்ணி, பூஞ்சை, காளான்களுக்கு எதிராக செயல்படுகின்ற போது இவற்றின் தாக்குதலின் பொதுவான அறிகுறிகள் சிவத்தல், வீக்கம், வலி, அரிப்பு போன்றவை, மற்றும் பெரியதாக காய்ச்சல் எதுவும் ஏற்படாது.

இருப்பினும் இவர்கள் பாக்டீரியா, ஒட்டுண்ணி, பூஞ்சை மேல் முதல் தகவல், FIR குற்றவாழக்கு பதிவு செய்யப்படுவதில்லை அதாவது நினைவக செல்களில் பதிவாவதில்லை. வழக்கமான, பழக்கமான ஒரு குற்றவாளியை கையாளுவது போல் தினமும் போராட்டம் வந்ததும் தாக்குதல், அந்நிய ஊடுருவலை அடித்துவிரட்டுதல் அழிப்பது இவைகளின் பணி.

உள்ளார்ந்த நோய் பாதுகாப்பு தோல் வெட்டு காயங்கள், புண்கள் வழி ஊடுருவும் அந்நிய உடல்களுக்கு எதிரானது.◼- வெளிப்புற தோல் பாதுகாப்பு.- அனைத்து சளி சவ்வுகளின் உள்ளே இருந்து பாதுகாப்பு.- திசுக்களில் மறைந்திருந்து முதல் தாக்குதலை நடத்துகின்றது.- பாக்டீரியாவைக் கொல்லும் கொல்லிகளை கொண்டவை.- உடல் திரவங்கள்: வியர்வை, உமிழ்நீர், சளி, இரைப்பை அமிலம், சிறுநீர்.வாந்தி, பேதி இவைகள் உள்ளான பாதுகாப்பு வழிமுறைகளை தூண்டுகின்றது.. ◼-இவைக்கான அதிகாரம் இவ்வளவும் தான்.

குறிப்பிட்ட நோயெதிர்ப்பு பாதுகாப்பு: ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமி, வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் ஒரு பிரத்தியோகமாக பயிற்சி பெற்ற படைப்பிரிவு, எடுத்துக்காட்டாக: கொரோனா வைரஸ்களை தாக்கி அழிக்கும் ஆயுதங்களும் (ஆன்டி உடல்கள்) இவைகளிடம்தான் இருக்கின்றது மற்றும் முன்கூட்டியே எதிராளியை பற்றிய தகவல்கள் அத்துனையும் தெரியும். புதிய தகவல்களுக்கும் தங்களை தயார்படுத்துகின்றன.

இவைகள் உற்பத்தியாவதற்கு உயர் வெப்பநிலை தேவை அதனால்தான் உடல் அதனது வெப்பநிலையை உயர்த்துகின்றது இவைகளின் வெளிப்பாடு கடுமையான காய்ச்சல்,

தடுப்பூசி புதுப்பித்து செயல்படுத்துதல் எவ்வளவு முக்கியமானது முன்கூட்டியே எதிரியைப்பற்றிய தகவல் தெரிந்து விரைவாக செயல்படும் இல்லாது போனால் தகவல் அனுமதி வரும்வரை காத்திருக்கும் இதற்குள்ளே நோய் பரவிவிடும். தடுப்பூசிகள் இதற்கான காலத்தை சுருக்கி கொடுக்கின்றது.

குறிப்பிட்ட நோயெதிர்ப்பு எதிர்வினை வாங்கிய செல்லுலார் (T-லிம்போசைட்டுகள்) (B-லிம்போசைட்டுகள், மற்றும் பிளாஸ்மா செல்களின் ஆன்டிபாடிகள்) இவைகள் நினைவக செல்களில் பதிவாகின்றன. திரும்ப வரும் எதிரிகளை அடையாளம் கண்டு உடனடியாக செயல்படுகின்றது.

இவைகள் வந்தால் உடல் திசுக்கள் தங்களுக்கான அனுமதி அடையாள அட்டையை காட்டவேண்டும் நல்ல செல்கள், புற்றுநோய் செல்கள் அந்நிய ஊடுருவலினால் பாதிக்கப்பட்ட செல்கள். MHC-I புரதங்கள் உயிரணு மேற்பரப்பில் எண்டோஜெனஸ் மற்றும் MHC-II புரதங்கள் அந்நிய பாலிபெப்டைடுகளை (வைரஸ்கள் அல்லது சிதைந்த உயிரணுக்களிலிருந்து வரும் துகள்கள்) பொருத்தமான ஆன்டிஜென் பிணைப்பு MHC-1 இருக்கவேண்டம் இல்லாது போனால் நல்ல செல்களையும் அழித்துவிடும்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, குறிப்பிட்ட ஆன்டிஜென்களுக்கு எதிராக இயக்கப்படுகின்றது எடுத்துக்காட்டாக:. ஒரு நுண்ணுயிரியின் சில புரதங்களுக்கு எதிராக செயல்படுகின்றது. திசுக்களில் உள்ள செல்லுலார் நோயெதிர்ப்பு பாதுகாப்புக்கு T-லிம்போசைட்டுகள் பொறுப்பு,

இவை வெள்ளை இரத்த அணுக்களின் குழுவிற்கு சொந்தமானது. இவைகள் பாதிக்கப்பட்ட செல்களைப் பதிவு செய்து உடலில் இருந்து வெளியேறி எலும்பு மஜ்ஜையில் புதியவை உருவாகின்றன. 

ஆச்சரியப்படும் அளவிற்கு மனித உடல் எவ்வளவு அழகாகவும் நேரத்தியாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. எங்களுடைய நோயெதிர்ப்பு அமைப்பை புரிந்துகொள்வதற்கு இன்னுமொரு பிறவி வேண்டும் அவ்வளவு பிரமாண்டமான அமைப்பு. நன்றி.

குருதி சிறு தட்டுக்கள் (பிளேட்லெட்டுகள்/த்ரோம்போசைட்டுகள்) நோய் எதிர்ப்பு மண்டலத்தை  சேராதவை, இது எலும்பு மஜ்ஜையில் இரத்தம் உருவாகும் போது உருவாகின்றது. காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறைவதற்கு முக்கியம். இவை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ பல்வேறு நோய்களைக் குறிக்கலாம்த்ரோம்போசைட்டுகள் நுரையீரல் அடைப்பிற்கு முக்கிய காரணியாக இருக்கின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக