வியாழன், 7 அக்டோபர், 2021

ஹிஸ்டமின் சகிப்பின்மை ஹிஸ்டமின், கிரந்தி என்னும் தமிழ் வார்த்தையினால் அறியப்படுகின்றது, ஹிஸ்டமின் என்பது நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு வெளிப்பாடு, இது சிவந்த தோல், தடிப்பு அரிப்புக்கு காரணியானது.

பாக்டீரியா, ஒற்றை செல் உயிரிணங்கள் ஒட்டுண்ணிகள் போன்ற நோய்க்கிருமிகள் புண்கள் காயங்கள் வழியாகவும் சுவாசம், தோல், குதம் மற்றும் சளி சவ்வுகள் வழியாக ஊடுருவ விரும்புவதால், ஹிஸ்டமினை வெளியிடும் மாஸ்ட் செல்களை அதிகளவில் அங்கே காணலாம். ஒரு பாதுகாப்பு பணிக்காக மாஸ்ட் செல்கள் அங்கே விரைந்து செயல்படுவதற்காக அமரந்திருந்து நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு பாதுகாக்கும் பணியை கொண்டுள்ளது.

ஹிஸ்டமின் ஒரு திசு ஹார்மோனாகும், இது உடலில் பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. மூளையிலும் மிக முக்கியமான செயல்பாட்டினை கொண்டுள்ளது அங்கு, ஹிஸ்டமைன் ஒரு நரம்பியக்கடத்தியாக செயல்பட்டு, தூக்கம்-விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்துகின்றது. பல வகையான திசுக்களில், குறிப்பாக தோல், நுரையீரல், வயிறு, குடல் மற்றும் மூளை இடைத்திசுக்களில் ஹிஸ்டமைன் சுரப்பு அடிக்கடி ஏற்படுகின்றது.

ஹிஸ்டமைன் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி உள்ளூர் இரத்த விநியோகத்தை அதிகரிக்க செய்கின்றது. இதன் நிமித்தம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கணிசமான ஹிஸ்டமின் அதிகரிப்பு ஏற்படுகின்றது. இந்த மாஸ்ட் செல்களின் சகிப்பின்மைதான் ஹிஸ்டமின் சுரப்பு அதனால் அதிக ஹிஸ்டமின் உடலில் குவிகின்றது.

ஹிஸ்டமின் வெளியீடு உடலில் விரும்பத்தகாத எதிர்விளைவுகளுக்கும் வழிவகுக்கும், இது ஒவ்வாமை தும்மல் அரிப்பு கண் எரிச்சல், படை நோய், வீங்கிய கண் இமைகள், அரிக்கும் தோலழற்சி மற்றும் இரைப்பை குடல் புகார்கள். மூக்கில் நீர் வடிதல், ஒற்றைத் தலைவலி, கொப்புளங்கள் மற்றும் சுவாச வழி தடிப்பு, மூச்சுக்குழாய் வீக்கம் மூச்சிழுப்பு ஆஸ்துமா போன்ற அறிகுறிகளுக்கு காரணியாகின்றது. இதன் நிமித்தம் உடலில் அதிகரித்த ஹிஸ்டமின் இரைப்பை அமில உற்பத்தியை அதிகரிக்கசெய்து அமில மிகைப்பு ஏற்படுகின்றது.

மகரந்த ஒவ்வாமை(அலர்ஜி) நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு தவறான புரிந்துணர்வு மகரந்த மணிகளை ஒட்டுண்ணிகளாக புரிந்து கொண்டு ஹிஸ்டமினை வெளியிடுகின்றது இதனுடைய விளைவுதான் மகரந்த ஒவ்வாமை.

உணவு ஒவ்வாமை (புரத ஒவ்வாமை) உணவு ஜீரணமாகாமல் இரைப்பை குடலில் தேக்கமடையும் போது ஹிஸ்டமின் குடலில் குவிகின்றது. இறால், நண்டு, கத்திரிக்காய், ரின் மீன் சீஸ், தொத்திறைச்சி மற்றும் ஈஸ்ட் சாறு, ஒயின் மற்றும் பீர் போன்ற நுண்ணுயிரிகளால் நொதித்தல் மூலம் பெறப்படும் உணவுகளில் ஹிஸ்டமின் இயற்கையாகவே உள்ளது.

அலர்ஜி ஒவ்வாமையை குணப்படுத்த முடியுமா என்று கேட்டால், பருவகாலத்தில் ஏற்படும் மகரந்த ஒவ்வாமை(அலர்ஜி) உணவு ஒவ்வாமையை (புரத ஒவ்வாமை) குணப்படுத்த முடியாது, இருப்பினும் மருந்து மாத்திரைகள் மூலம் தணித்துக் கொள்ளமுடியும். ஒவ்வாமைக்கு மிகச்சிறந்த மருந்து, மாத்திரை எதுவென்றால் ஒவ்வாமைக்கு காரணியாக இருக்கும் சூழல், உணவுகளை விட்டு விலகுவதுதான்.

டவுசின் எம்சைம்: ஹிஸ்டமின் வெளியீடு உடலில் விரும்பத்தகாத எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உடலுக்கு தெரியும் அதனால்தான் ஹிஸ்டமினின் தேவை முடிந்ததும் அதை வெளியேற்ற டவுசின் என்ற எம்சைமை உடல் உற்பத்திசெய்கின்றது. இதற்கான மூலம் பரம்பரையாக தாய்வழியாக கடத்தப்படுகின்றது, இதனால்த்தான் ஆஸ்துமா, அலர்ஜி உணவு ஒவ்வாமை பரம்பரை நோயாக பார்க்கப்படுகின்றது.

இந்த டவுசின் என்ற எம்சைம், டயமைன் ஒக்சிடேஸ் (DAO), ஹிஸ்டமினேஸ் என்றும் அழைக்கப்படுகின்றது, இது 99 விழுக்காடு செப்பைக் கொண்டிருக்கும் ஒரு நொதியமாகும் மற்றும் துத்தநாகம் விற்றமின்-B6 உற்பத்தி செய்வதற்கு அவசியமானது. இது பல்வேறு பயோஜெனிக் அமின்களை இதனால் உடைக்க முடியும், குறிப்பாக ஹிஸ்டமைன் மற்றும் புட்ரெசின். DAO அனைத்து உயிரனங்கள், விலங்குகளாலும் உற்பத்தியாகி பயன்படுத்தப்படுகின்றது.

மனிதர்களில், சிறுகுடல் பெரும்குடல், சிறுநீரகம் மற்றும் அமுதசுரம் (நஞ்சுக்கொடி) கல்லீரலிலும் வெள்ளை இரத்த அணுக்களிலும் காணப்படுகின்றது. ஹிஸ்டமைனின் முறிவில் DAO மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. உணவு ஒவ்வாமை என அழைக்கப்படும் வாய்வழி உட்கொள்ளும் ஹிஸ்டமைனுக்கு சகிப்புத்தன்மை எதிர்வினைகள், DAO குறைபாடு ஒரு காரணமாக இருக்கின்றது.

டைமைன் ஆக்சிடேஸ் நொதியத்தின் மூலம் ஹிஸ்டமைனின் முறிவைத் தடுக்கலாம் அல்லது கடினமாக்கலாம். இதன் விளைவாக, ஹிஸ்டமைன் சகிப்புத்தன்மையின் அறிகுறிகள், குறிப்பாக தலைவலி, வயிற்றுப்போக்கு, குறைந்த இரத்த அழுத்தம், இதய தசை இறுக்கம்(அரித்மியா) மாதவிடாய் பிடிப்புகள், சருமம் சிவந்து போதல் அந்தரங்க அரிப்பு ஆஸ்துமா, ஒவ்வாமை தாக்குதல்களிலிருந்து காப்பாற்றி கொள்ளமுடியும்.

டயமைன் ஒக்சிடேஸ் (DAO), எம்சைம் குறைபாட்டிற்கு வேறு ஏதாவது காரணிகள் இருக்கமுடியுமா, கனிமச்சத்து செப்பு, விற்றமின்-B6 குறைபாடு மற்றும் அதிகளவு மதுபானம், செயல்த்திறன் இல்லாத குடல் அழிந்து போன சளிச்சவ்வு, மற்றும் கல்லீரல் பழுதுபட்டு போவதுதான் முக்கிய காரணமாக இருக்கின்றது. இதனால்தான் குடிகார்களின் சருமம் உலர்ந்து அரிப்பு ஏற்பட்டு சொறிந்து சொறிந்து சிவந்து புண்ணாகி போகின்றது.

டயமைன் ஒக்சிடேஸ் (DAO), எம்சைம் மாத்திரை வடிவிலும் கிடைக்கின்றது சாப்பிடுவதற்கு முன்பு டவுசின் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம், சிறுகுடலில் உள்ள DAO இன் அளவு அதிகரிக்க செய்து, குடலில் உள்ள ஹிஸ்டமைனை உடைக்கும் திறனை அதிகரிக்க முடியும். இது செரிமான மண்டலத்தில் உள்ள உணவுகளிலிருந்து வெளிப்படும் ஹிஸ்டமைனை போதுமான அளவு உடைக்க அனுமதிக்கின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக