நாளைய சந்ததிக்காக பூமி தன்னைத் தானே சுத்திகரிக்க தொடங்கிவிட்டது.
ஒரு காட்டில் வாழ்ந்த மான்கள் ஒரு நாள் கடவுளை பார்த்து புலி சிங்கங்கள் எங்களை அடித்து தின்னுகின்றது அவைகளை கண்டிக்க சொன்னது. கடவுள் மான்களுக்கு என்ன பதிலை சொல்லியிருப்பார்.. விலங்குகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அவைகளை நான் உருவாக்கினேன்.
மனிதனின் இறப்பு என்பது இயற்கையானது. மனிதனின் பெருக்கத்தை கட்டுப்படுத்த இயற்கை அவ்வப்போது பேரழிவுகளை உருவாக்கி கொண்டுதான் இருக்கும். மான்கள் புலிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு கடவுள் அவைகளுக்கு ஓடும் திறனை கொடுத்தது போல் மனிதனுக்கு அறிவையும், தன்னை காக்கும் திறனையும் வைத்தான், உன்னால் முடிந்தால் உன்னை நீயே காப்பாற்றிக் கொள் கடவுள்(என்) மீது பழியை போடாதே
என்னதான் நீங்கள் ஆழிப்பேரலை சுனாமியை திட்டி தீர்த்தாலும் அது மீண்டும் ஒருநாள் வரும் என்பது தான் உண்மை. இயற்கை பேரழிவு என்பது பூமி தன்னைத் தானே புரணமைத்துக் கொள்ளும் திட்டங்கள் அதை கண்டு பயந்து நடுங்காதே இயற்கைக்கு மனிதன் எவ்வளவு கெடுதல்களை செய்திருக்கின்றான் அது பொறுத்திருக்குமா பொங்கித்தான் எழும்.
“உச்சத்திற்கு ஏறுவதற்கு உதவிய ஏணியை எட்டி உதைப்பார்கள் மூடர்கள்” நல்வாழ்விற்கு உதவிய கடவுளை இழிவுபடுத்தி உரைப்பது பிற்கால வாழ்கையில் மோசமான விளைவை தேடித்தரும்.
“உனக்கான காலம் குறுகியது, முடிந்தவரை உன்னை நீயே காப்பாற்றிக்கொள் மற்றவர்களை நம்பி ஏமாந்துபோகாதே”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக