செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

EG.5 is a derivative of XBB.1.9.2 [Arkturus] with an additional spike mutation to help evade the viral immune response through immune evasion. That is, it works against the immune system.

கொரோனாவின் கோர முகங்கள்: மனித உடல் ஏதோ ஒரு காலகட்டத்தில் அந்நிய ஊடுருவல்களுக்கு [ஒட்டுண்ணிகள், பூஞ்சை, காளான் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள்இடம் விட்டுக் கொடுத்து விடுகின்றது. இவைகள்  பணம் செலுத்தாத விருந்தினர்களாக உடலில் இருந்து கொண்டு வாழ்நாள் பூராவும் தொல்லை பண்ணும்.

 

உடலைக் காக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியும் இவைகளை எதிர்க்காமல் விட்டு விடுகின்றது. இதன் நிமித்தம் உடல் காலனித்துவ  ஆட்சிக்கு உட்பட்டு செயல்பட தொடங்குகின்றது. இந்த ஆக்கிரமிப்பு மருந்தும் கையுமாக உங்களை அலைய வைக்கும்.

 

கொரோனா வைரஸ் இந்த உலகத்தை விட்டு போய்விட்டதாக நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றோம் நிச்சயமாக அது இன்னும் எங்களை விட்டு போகவில்லை, அது உலக  மக்கள் தொகை மேல் குறி வைத்திருக்கின்றது. அது கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு தலையாக தட்டிக் கொண்டே போகும்.

 

EG.5 என்பது XBB.1.9.2 [Arkturus] இன் வழித்தோன்றலாகும், இது ஒரு கூடுதல் ஸ்பைக் பிறழ்வுடன், நோய் எதிர்ப்புத் தப்பித்தல் மூலம் வைரஸ் நோயெதிர்ப்பு சக்தியைத் தவிர்க்க உதவும். அதாவது  நோயெதிர்ப்பு சக்தியை மீறி செயல்படுகின்றது.

 

"எரிஸ்" என்று செல்லப்பெயர் பெற்றது. எரிஸ் என்பது ஒரு குள்ள கிரகத்தின் பெயராகும் அந்தப் பெயரை இந்த புதிய மாறுபாட்டுக்கு வைத்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் உலகில் தொடர்ந்து பரவி வருகின்றது, ஆபத்தானது மற்றும் எந்த நேரத்திலும் இன்னும் ஆபத்தான மாறுபாடுகளை உருவாக்கக்கூடும்.

 

ஆர்க்டரஸ் (XBB.1.16): இந்தியாவில் இறப்புகளில் 400% அதிகரிப்பு, [வழக்குகளில் 205% அதிகரிப்பு]. 10 அமெரிக்க மாநிலங்கள் மற்றும் 14 நாடுகளுக்கு பரவுகின்றது.

 

நாசி தடுப்பூசி: கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி பற்றிய ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டன,இப்போது பெர்லின் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள், மூக்குக்கான பலவீனமான நேரடி தடுப்பூசியை உருவாக்கி சோதனை செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது.

 

[இறந்த தடுப்பூசிகளில் முற்றிலுமாக கொல்லப்பட்ட நோய்க்கிருமிகள் உள்ளன. நேரடி தடுப்பூசிகளில் சிறிய அளவிலான இனப்பெருக்க நோய்க்கிருமிகள் உள்ளன சு|ரு: நலிவடைந்த நோய்க்கிருமிகள் உள்ளன] ஆன்டி உடல்கள் அதனுடைய பிணைப்பு தளத்தில் சுமார் ஒரு மில்லியன் சாத்தியங்களை உருவாக்கக்கூடியது. நாசிவழி பாதுகாவலர்கள் இரட்டை பாண ஆன்டி உடல்கள் [IgA]

 

 

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine

 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக