Y குரோமோசோம்: ஆண் பாலின குரோமோசோம். மற்றைய குரோமோசோம்களை விட இது சிறிய மற்றும் குள்ளமான மனித குரோமோசோம் ஆகும். பரிணாம வளர்ச்சியில், அது கிட்டத்தட்ட 90 சதவீத மரபணு தகவல்களை இழந்துவிட்டது. ஆயினும்கூட, மனிதன், மனிதன் என்ற உருவ அமைப்பை இன்று வரைக்கும் இழந்து விடவில்லை.
100% முற்றிலுமாக இருந்த Y குரோமோசோம் கொண்ட அந்த முதல் மனித ஜோடி எவ்வளவு கம்பீரம், பலமும் அழகிய தோற்றம் உள்ளவனாக இருந்திருப்பான். இன்றுள்ள மனித உருவம். அதில் ஒரு சதவீதம் கூட இல்லை. அதனால் தான் இன்றைய மனிதன் சகல சாமுத்திரிகா லட்சணங்களை இழந்து.
முப்பது வயதில் தொப்பை, வழுக்கை, நரை கொழுக்கட்டை மூக்கு, சொத்த பல், பலம் இழந்த எலும்புகள் என்று எந்தவிதமான அங்க லட்சணங்களும் இல்லாமல் வாழ்கின்றனர். தமிழர்களின் மரபுவழி மரபணுக்கள் காணாமல் போய் ஓட்டை விழுந்து கிடக்கின்றது.
இன்றைய பிள்ளைகளின் மண்டை, கை எலும்பு கால் எலும்புகள் உறுதியற்றது மற்றும் முட்டையோட்டுக்கு சமமாக மெல்லியதாக இருக்கின்றது. தட்டினால் ஒடிந்து விடும் அளவுக்கு மெல்லியதாக இருக்கின்றது. இதன் நிமித்தம் பைக் மொபட் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள்.
சரி இருந்துட்டு போகட்டும் அதற்கென்ன. காதுள்ளவன் கேட்கட்டும் நான் சொல்ல வந்ததை சொல்கின்றேன். Y குரோமோசோம் போன்று இந்த விஷயமும் சின்னது இருப்பினும் அதனுடைய தாக்கம் பெரியது.
Y குரோமோசோம், இது ஆண்களில் பாலின வளர்ச்சி மற்றும் விந்து உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றது மற்றும் ஒடுக்கற்பிரிவு, உயிரணுப் பிரிவிற்கு முக்கியமான மரபணுக்களையும் கொண்டுள்ளது. வயதான ஆண்களில் சில செல்களில் Y குரோமோசோமின் இழப்பு இதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் பிற நோய்களின் அபாயத்தை அதிகரிக்க செய்கின்றது.
பொதுவாக பெண்களை விட ஆண்கள் ஏன் முன்கூட்டியே இறக்கிறார்கள் இந்தக் கேள்விக்கான பதிலை Y குரோமோசோம் வழங்குகின்றது. ஆண்களின் வயது அதிகரிக்கும் போது சில உடல் செல்களில் Y குரோமோசோம் இழக்கப்படுகின்றது என்பது இதற்கான ஒரு விளக்கம்.
இது புற்றுநோய், அல்சைமர் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்னர் பரிந்துரைத்துள்ளனர். Y குரோமோசோம் இல்லாத செல்கள் இதயம் மற்றும் பிற உறுப்புகளை எவ்வாறு சேதப்படுத்துகின்றன என்பதற்கான முதல் நேரடி ஆதாரத்தை ஒரு புதிய ஆய்வு வழங்குகின்றது.
கரு வளர்ச்சியின் போது, பாலின குரோமோசோம்கள் கருவானது ஆண் அல்லது பெண் பாலியல் பண்புகளை உருவாக்குகிறதா என்பதை தீர்மானிக்கின்றது. பெண்களுக்கு இரண்டு XX குரோமோசோம்கள் உள்ளன, ஆண்களுக்கு ஒரு X மற்றும் Y குரோமோசோம் உள்ளது. இது ஆணின் வயதான காலங்களில் Y குரோமோசோம் சிதைந்து போகின்றது.
வயதான ஆண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் மூன்றாம் பாலினராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒரு சில தம்பதியர்களுக்கு பெண் குழந்தைகளாகவே பிறக்கும் அதற்கு தந்தையே காரணம் மற்றும் மலட்டு பிள்ளைகள், கிழட்டு பிள்ளைகள் மூன்றாம் பாலினர் குழந்தைகள் பிறப்பதற்கும் Y குரோமோசோம் சிதைந்த தந்தையே காரணம்.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக