வியாழன், 22 ஜூன், 2023

A message from the seabirds: On the edge of a world-famous tourist destination, Venice is seen as a great

கடல் பறவைகள் சொன்ன ஒரு செய்தி: உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தின் விளிம்பில், வெனிஸ் மிகச் சிறந்த இடமாக பார்க்கப்படுகின்றன. காலை உணவுக்காக கடற்கரை வழியாக செல்லும் போது ஒரு கடல் பறவையின் திடீர் தாக்குதல் காட்சியை பார்த்தேன்.

அந்த பறவை  ஒரு இளம் பெண்ணின் கையில் உள்ள சாண்ட்விச் ரொட்டியை  தட்டிப் பறித்து எடுத்துச் சென்றது. அந்த பறவையின் பெயர் "கடல் சீகல்இந்த பறவைக்கு என்ன நேர்ந்தது அதனுடைய உணவு மீன்தானே எதற்காக அது ரொட்டியை தின்னுது, என் கவனம் பூராகவும் அந்த பறவையின்  பக்கம் திரும்பியது,

மறுநாள் மதிய உணவகம் தேடி, ஒரு கடல் உணவு உணவகத்தில் அமர்ந்தேன் ஒரு சுவை மிக்க மீன் உணவை ரெடி பண்ணி தந்தார்கள். சற்று நான் எதிர்பார்க்கவில்லை இந்த தாக்குதலை, எங்கிருந்தோ பறந்து வந்த, பறவை சீகல் எனது தட்டில் உள்ள மீனை தூக்கி சென்றது."அச்சச்சோ, 10 யூரோ மீனு போச்சே"

முதுகுக்கு பின்னால் பறந்து வரும் போது சற்று பயந்தேன் பின்னால் அதை ஆச்சரியமாக பார்த்தேன். அது ஒரு செய்தியை எங்களுக்கு சொல்லாமல் சொல்லி பறந்து சென்றது.

என்னுடைய உணவை நீ வலை போட்டு எடுத்தால் அதற்குப் பதில் நான் உன்னுடைய உணவை எடுத்துச் செல்கின்றேன். அது எனக்கான உணவு உனக்குத்தான் பருப்பும் கீரையும் இருக்கின்றது தின்னு. "இது எனக்கான உணவு, உனக்கு உணவு தேவை என்றால் விதைத்து அறுவடை செய்"

மனிதன் கடலை காலி பண்ணி நீண்ட காலம் ஆகிவிட்டது எவ்வளவோ மீன் இனங்கள் இல்லாமல் அழிந்து போய்விட்டன. மேற்கோளாக கயல் மீன், மணலை போன்றவை.

மனிதன் அந்த பறவைக்கு எவ்வளவு கொடூரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றான். கடலில் ராஜா போல் வாழ்ந்த அந்த பறவை இன்று பஞ்சம் பிழைக்கின்றது. திருடுகின்றது வழிப்பறி செய்கின்றது. வேறு வழியில்லாமல் ரொட்டி, பன், கேக் எதை வேண்டுமானாலும் சாப்பிடக்கூடிய ஒரு பறவையாக பழக்கப்பட்டு விட்டது.

அதனால்தான் அவர்கள் கடற்கரைக்கு செல்பவர்களிடமிருந்து கூடைகள் அல்லது பைகளை சோதனை செய்ய கொள்ளையடிக்க விரும்புகின்றன.

கடற்பறவைகள் குறிப்பாக பறவை சீகல் சர்வவல்லமையுள்ள ஒரு கடல் பறவை அதன் இறக்கையை விரித்து வைத்தால் ஒரு மீட்டர் இருக்கும் கடல் காட்டில், காற்றின் அலைகளில் அதனுடைய ஆளுமை அவ்வளவு அழகாக இருக்கும்.

முதன்மையாக மீன், ஓட்டுமீன்கள் மற்றும் மொல்லஸ்க்குகள் போன்ற விலங்குகளின் உணவை உண்கின்றார். அதனுடைய உணவை நாங்கள் கொஞ்சமாவது விட்டு வைக்கவில்லை. இது கடற்பறவைகள் எனக்கு சொன்ன ஒரு செய்தியை உங்களுக்காக பதிவிடுகிறேன். மனிதா உனக்கு இருக்கு இதற்கான பதிலடி.

எல் நினோ: கடந்த 2016 ஆம் ஆண்டு எல் நினோ கொலம்பியாவில் கடுமையான வறட்சிக்கு பங்களித்தது, இது தென் அமெரிக்காவின் பிற இடங்களில் வெள்ளத்திற்கு வழிவகுத்தது என்பது வருத்தமான உண்மை. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பருவநிலை நிகழ்வு இனி வரும் காலங்களில் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதன் பொருள் உலகம் புதிய வானிலை மாற்றங்களை எதிர்கொள்கின்றது.

எல் நினோ, ஸ்பானிய மொழியில் "குழந்தை-கிறிஸ்து" [குழந்தை இயேசு] இயேசுவின் பிறப்பு இதுபோன்ற வானிலை அடையாளங்களுடன் எப்பவும் பேசுகின்றது. உயிர்த்தெழுதல் நம்பிக்கை, மனிதன் தப்பிப் பிழைத்த கதைக்கு ஒரு அடையாளமாக சொல்லப்படுகின்றன.

ஆயிரம் வருடங்கள் முதற்கொண்டு இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கின்றது மற்றும் உலகெங்கிலும் உள்ள வானிலையை பாதிக்கின்றது. பலத்தைப் பொறுத்து, எல் நினோ உலகின் சில பகுதிகளில் அதிக மழை அல்லது வறட்சி அபாயத்தை அதிகரிப்பது போன்ற பல விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று காலநிலை ஆய்வாளர் கருதுகின்றனர். இதன் பொருள் "பஞ்சம் பட்டினி" வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் பஞ்சம் பிழைக்க ஊரு விட்டு ஊரு நாடு விட்டு நாடு இடம்பெயர்வு.

பொதுவாக காலநிலை நிகழ்வு எப்போதும் பசிபிக் பகுதியில் நிகழ்கின்றது. புயல் வெள்ளம் சுனாமி, சூறாவளி, கடலின் சில பகுதிகளில் உள்ள நீரின் மேற்பரப்பு வெப்பநிலை குறுகிய காலத்திற்குள் கடுமையாக உயர்ந்தால், இது எல் நினோவின் தொடக்கத்தின் தெளிவான அறிகுறியாகும். வெப்பமண்டல பசிபிக் பகுதியின் மத்திய பகுதியில் வெப்பநிலை தற்போது நீண்ட கால சராசரி மதிப்புகளை விட 0.8 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது.

இதன் பொருள் கடல்நீரின் மேற்பரப்பு கடுமையாக ஆவியாதலுக்கு உட்படுகின்றது பசிபிக் பகுதியிலுள்ள நாடுகள் கடுமையான  புயல் மழை வெள்ளம் அடிக்கடி ஏற்படும் அபாயம் 60 விழுக்காடுகள் அதிகரித்துள்ளது.

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக