வெள்ளி, 9 ஜூன், 2023

Tomb [Masuli] of Qin Shi Huang, the first emperor of China

சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங்கின் Qin Shi Huang கல்லறை [மசூலியும்]: சீனர்கள் இன்றைய நவீன யுகத்தின் பல தொழில் நுட்பங்கள், கட்டுமான கலைகள், போர்கருவிகள், மருத்துவம், புதுப்புது உணவுகள், விவசாயம், நீரின் மேலாண்மை போன்ற பல விடயங்களில் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள்.

அவர்களிடமிருந்து இன்றைய நவீன சமூகம் பல தொழில் நுட்ப விடயங்களை பெற்று கற்றும் தெரிந்திருக்கின்றது. வெடி மருந்து தொடங்கி காகிதம், பட்டு, தானியங்கள் அரிசி, குதிரை வண்டி கட்டுதல் வரைக்கும்  பல பொருட்கள் அவர்கள் கைகளிலிருந்து நழுவி எங்களுக்கு கிடைத்திருக்கின்றது. இதற்கு அரேபியர்களுடைய வாணிபமும் மிகப்பெரிய பங்காற்றியிருக்கின்றது. 

தனித்து தமிழர்களின் பெருமையை மட்டும் பேசிக் கொண்டிருந்தால் அது வரலாறாகாது, மற்ற சமூகமும் இந்த பூமியில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டால்த்தான் வரலாற்றின் மற்ற பக்கத்தையும் பார்த்து எங்களுடைய வரலாற்றை சரி பார்க்க முடியும். இதன் நிமித்தம் ஒரு உண்மையான வரலாற்றை எங்களால் எழுதமுடியும். இன்று பேசப்படும் பல கட்டுக்கதை, புனைக்கதைகளுக்கு ஒரு முடிவு கட்டமுடியும்.

சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங்கின் இன்றைய நவீன சீனா உருவாவதற்கு காரணமானவர். அவர் இன்றைய ஒற்றை மொழி ஒற்றை சமூகம்  ஒற்றை ராஜ்யத்திற்கு வித்திட்டவர். ஜாதி, மதம் மாறுபட்ட மொழி, கலாச்சாரம், ஆடை சிகை அலங்காரம் உணவு பழக்க வழக்கங்கள், கல்வி எழுத்துருக்கள் என்று வேற்றுமை பேசும் சகலத்தையும் தூக்கி குப்பை தொட்டியில் போட்டவர். ஒன்றே குலம் ஒன்றே சமூகம் என்று ஒன்றுபட்ட சீனாவை தோற்றுவித்தவர். 

ஆரம்பத்தில் சீனாவில் பல மொழி சமூகம் இருந்ததற்கு அடையாளமாக பல சித்திர எழுத்துருக்கள் அவர்களுடைய காலத்தில் புழக்கத்திலிருந்தது. இதை கவனித்த பேரரசரான கின் ஷி ஹுவாங்கின்  அதையெல்லாம் தூக்கி  நெருபில் போட்டு எரித்துவிட்டு, தான் கிறுக்கி வைத்த ஒற்றை எழுத்துருவை  ஒன்றுபட்ட சீனாவிற்கு அறிமுகப்படுத்தினார். 

அவர் முறையாக அந்த எழுத்துருக்களை எழுதினார் என்றால் கிடையாது, ஒரு குழந்தையிடம்  பென்சிலை கொடுத்தால் எப்படி கிறுக்கி வைக்குமோ அப்படி கிறுக்கிய சித்திரங்கள் தான் சீனாவின் எழுத்துருக்கள் ஆனது. இது மட்டுமல்ல.

பழைய எழுத்துக்களை யாரும் எழுதக்கூடாது அதை கற்பித்த ஆசிரியர்களையும் உயிரோடு எரித்தார். இது போன்ற கடுமையான சட்டங்கள் மூலம் ஒற்றை மொழி ஒற்றை எழுத்துரு ஒற்றை சமூகத்தை அன்றே உருவாக்கினார்.

இதன் மூலம் பழைய சீனாவில் 200 வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டிருந்த  ஜாதி, மதம் மாறுபட்ட மொழி, இனம்  போன்ற உள்ளூர் யுத்தங்களுக்கு முடிவு கட்டினார். அன்றிலிருந்து ஒன்றுபட்ட சீனா உருவானது. இன்றைய வரைபடத்தில் இருக்கும் சீனா அவர் அன்று உருவாக்கியது. அவருடைய பெயரைக் கொண்டுதான்  ஷி [சீனா] அழைக்கப்படுகின்றது. இன்றைய நவீன சீனாவின் வளர்ச்சிக்கு  கிமு 210 [2,500 ] ஆண்டிற்கு முன்பே வித்திட்டவர்.  

அவருடைய கல்லறை மற்றும் இறுதி சடங்கு கலை பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். டெரகோட்டா இராணுவம் அல்லது டெரகோட்டா ஆர்மி என்பது சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங்கின் படைகளை சித்தரிக்கும் டெரகோட்டா சிற்பங்களின் தொகுப்பாகும்.

இறுதி சடங்கு கலையின் ஒரு வடிவம்: இது கிமு 210-209 வரையிலான இறுதிச் சடங்குகளின் ஒரு வடிவமாகும்.  பேரரசரின் பிற்பகுதியில் அவரைப் பாதுகாக்க பேரரசருடன் அடக்கம் செய்யப்பட்டவர்கள்.

ஒரு விவசாயி தன் வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக நீர் தேடி தோண்டும் போது இந்த அரிய பொக்கிஷம் கிடைத்தது. அகழ்வாராய்ச்சி ஆண்டு 1974

உலகத்தில் எத்தனையோ அகழ்வாராய்ச்சிகளில் அற்புதமான பொருட்கள் கிடைத்திருந்தாலும் இது உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றன.

8000 களிமண் போர்வீரர்கள் [டெரகோட்டா இராணுவம்]  மன்னரின் கல்லறையை பாதுகாப்பதற்காக இந்த களிமண் போர் வீரர்களை உருவாக்கி இருந்தார்கள். முதல் வரிசையில் நிற்பவர்கள் வில்வீரர்கள்.

இதிலுள்ள அதி விசேஷம்  என்னவென்றால் இராணுவ சீருடையில்  அத்துனையும் ஒன்றாக தெரிந்தாலும் ஒவ்வொரு வீரர்களும் தனித்துவமான முக அமைப்பை கொண்டவர்கள். அதாவது ஒரு வீரர் மற்ற வீரர்களிலிருந்து  முக அமைப்பில் வேறுபடுகின்றார்.

அவரைப்பற்றிய வரலாற்று குறிப்பில், தன்னுடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகு 13 வது வயதில் பதவி ஏற்று கொண்டார். பிறப்பு: பிப்ரவரி 18, 259 கி.மு Chr. மறைவு: 210 கி.மு பி.சி., ஷாகியு பிளாட்ஃபார்ம் ரெலிக்ஸ், ஜிங்டாய், சீனா

அவருடைய கல்லறை இன்னும் திறக்கப்படவில்லை அவருடைய [மம்மி] இறந்த உடல் பாதரசம் நிரப்பப்பட்ட ஒரு தடாகத்தில் வைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.

சுமார் 2,500 ஆண்டு பழமையான [கிமு 210-209 ] செப்பு காலம். சீன வரலாற்றில் பண்டைய வரலாற்று நாயகனாகக் காணப்பட்டாலும், அன்றைய மக்களுக்கு அவர் ஒரு சர்வாதிகாரியாக இருந்தார். பொதுமக்கள் அரசு ஆணைக்கு கட்டுப்பட்டு அடிமைகளாக வாழ்ந்தார்கள், அரசும், அரசு அதிகாரிகளும் உயர்குடிகளும் ஆண்டு அனுபவித்தார்கள். 

எல்லா கலாச்சாரங்களிலும் பொதுமக்கள் அடிமைகளாக அடக்கி ஆளப்பட்டார்கள் என்பது வருத்தமான ஒரு உண்மை. இவரின் காலத்தில்தான் சீனப் பெருஞ்சுவரும் கட்டப்பட்டது.

 

மேலும் சில தகவல்கள்

யாங் ஜிஃபா

கின் வெண்கலத் தேர்

லிண்டாங் மாவட்டம்

வீணை [கலைப் பொருள்]

 

முதல் வரிசையில் நிற்பவர்கள் வில்வீரர்கள். இசையமைப்பாளர்கள் நடன குழுவினர், எழுத்தாளர்கள் கவிஞர்கள், கூத்தாடிகள்.

 

படத்திலுள்ள எழுத்துக்கள்; 8000 களிமண் போர்வீரர்கள் [டெரகோட்டா இராணுவம்]  மன்னரின் கல்லறையை பாதுகாப்பதற்காக இந்த களிமண் போர் வீரர்களை உருவாக்கி இருந்தார்கள். முதல் வரிசையில் நிற்பவர்கள் வில்வீரர்கள். மற்ற வரிசைகளில் இசையமைப்பாளர்கள் நடன குழுவினர், எழுத்தாளர்கள் கவிஞர்கள், கூத்தாடிகள்.

 

18 ஆரக்கால்களை கொண்ட இரண்டு சக்கரம்,  நாலு குதிரைகள் பூட்டிய வண்டி  மத்தியில் குடை. பஞ்சு இருக்கை என்று ஆடம்பரமான ஒரு சொகுசு வண்டி.

 

சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங்கின் பேராயுதங்கள். சீனாவில் உள்ள மற்ற சக்திகளை அடிபணியச் செய்த மிகப்பெரிய ராணுவம் மற்றும் பயிற்சிவிக்குப்பட்ட ஏராளமான குதிரைகள், ஒரே நேரத்தில் பல அம்புகளை செலுத்தத் கூடிய மிகச் சிறந்த வில்லு அம்புகள், தலைக்கவசம் மார்பு கவசம் கொக்கசத்தகம் போன்ற ஈட்டி, உடைவாள். சாமுராய் வாள் போன்ற பெரிய வாள், இன்னும் பல வீச்சு ஆயுதங்கள்.இதை வைத்துதான் சீனாவின் மற்ற ராஜ்சியங்களை அடிபணியச்செய்தார்.[ குறிப்பாக சுற்றியுள்ள  வலுவான ஏழு ராஜ்சியங்கள்].


புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine

 



 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக