உங்களுக்கு வடை சுட தெரியுமா, இது என்ன கேள்வி, சும்மாதான் கேட்டேன் உளுந்து வடை சுட தெரிந்திருந்தும் மெதுவடை எப்படி சுடுவது என்று இன்றுவரைக்கும் கற்றுக் கொண்டுதான் இருக்கின்றோம். அரிசிமா சேர்த்தால் மொறு மொறுன்னு இருக்குமா அல்லது ரவை சேர்த்தால் பஞ்சு போல இருக்குமா உளுந்தே இல்லாமல் உளுந்து வடை சுடுவது எப்படி. எண்ணெய் இல்லாமல் வடை சுட முடியுமா.?
ஒரு விஷயம் எனக்கு தெரிந்தால் மட்டும் போதுமா அதை அடுத்த தலைமுறை தெரிஞ்சிக்க வேண்டாமா, அதை எப்படி எடுத்துச் செல்வது. அடுத்த தலைமுறைக்கு இப்படித்தான் ஒரு விடயம்/விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லி எடுத்து செல்ல முடியும். பாட்டி வடை சுட்ட கதையை இப்படித்தான் எடுத்து வந்தோம். எனக்கு தெரிந்திருந்தாலும் அதை திரும்பத் திரும்ப சொல்லுவது. அடுத்த தலைமுறைக்கு இலகுவாக கடத்தப்படுகின்றது. சரி இருக்கட்டும்.
எண்ணெய் இல்லாமல் வடை சுட முடியுமா.? ஆம், எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்துக் கொள்ளலாம், எண்ணெய்க்கான செலவு மட்டுமின்றி இது உடலுக்கும் ஆரோக்கியமானது. ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரிடமிருந்து ஒரு தயாரிப்பு
"சூடான ஏர் பிரையர்" [air fryer] சமையல் சாதனம் இதில் வறுத்தெடுப்பதற்கு எண்ணெய் தேவையில்லை கொஞ்சம்போலே தெளித்தால் மட்டும் போதுமானது. பிரஞ்சு பொரியல், கோழி, மீன் வறுவல் இதில் எதை வேண்டுமானாலும் நீங்கள் எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்துக் கொள்ளலாம்.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக