சனி, 29 ஏப்ரல், 2023

Ponni's rich story? Or history??? The film has left many clues

பொன்னியின் செல்வன்: வெள்ளிக்கிழமை [28.4 23] இரவு பொன்னியின் செல்வன் படம் பார்த்திருந்தோம் மிகவும் அற்புதமாக அந்த படத்தை   எடுத்திருந்தார்கள்.

அதில் குதிரை வீரர்கள் போரிடும் காட்சிகள் மிகவும் அற்புதமாக அமைந்திருந்தது.பல சிரமங்களுக்கு மத்தியில் அந்த காட்சிகளை படமாக அமைத்திருப்பார்கள். அவ்வளவு பிரமாண்டமாக இருந்தது, அதை IMAX  திரையில் பார்ப்பது இன்னும் பிரமாண்டமாக இருந்தது, நேரில் நின்று பார்ப்பது போல் இருந்தது. அற்புதம்.. தயாரிப்பு குழுமத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

பொன்னியின் செல்வன் கதையா ? அல்லது வரலாறா ???  நடந்த கதைகள், புனையப்பட்ட ஒரு நாவல் என்பதற்கு பல தடயங்களை இந்த படம் விட்டுச் சென்றிருக்கின்றது.

இந்தியாவில் குதிரைகள் புகழ்பெற்ற தெய்வீக மார்வாரிகள். இறுதி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து ராஜபுத்திரர்களின் போர்க் குதிரைகளாக வரலாற்றில் இறங்கினர். இதற்கு பிறகு தான் இந்தியாவில் குதிரைகள் அறியப்படுகின்றன. சோழருடைய வரலாறு இதற்கு முந்தியது. சோழருடைய காலத்தில் வளர்ப்பு பிராணியாக ஒன்று இரண்டு குதிரைகளை வைத்திருந்திருக்கலாம். அது ஒரு பெரும் படையாக இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

மாணிக்கவாசகர் காலம், காட்டில் உள்ள நரிகளை பரிகளாக [குதிரைகளாக] மாற்றி அழைத்து வந்ததைக் குறிப்பிடுகின்றது. இதை ஒரு  திருவிளையாடல் புராணமாக எடுத்துக் கொள்ளலாம். சரி இருக்கட்டும். சினிமா என்பது பெரும் பகுதி கற்பனைதான் அது ஒரு திரைப்படமாக பார்க்க முடியுமே தவிர வரலாறாக எடுத்துக் கொள்ள முடியாது.

திரைப்படத்தில், இயந்திரத் தறி ஆடைகள், நவீன அணிகலன்கள், 19 ஆம் நூற்றாண்டின் நைலான் [பெட்ரோலிம்] துண்டுகள் ஒட்டு இமைகள், உதட்டுசாயம்  பயன்படுத்தி இருந்தார்கள் இவைகளை நீக்கிவிட்டு படம் பார்த்தால் படம் வெறுமையாக இருந்திருக்கும்.

கல்கியின் புத்தகம் தன்னை ஒரு வரலாறாக சித்தரித்தது, திரைப்படம், இல்லை இல்லை இதுவொரு நாவல் என்று மெய்ப்பித்தது.

புனைகதை மற்றும் கற்பனை நாவல்கள்: ஆங்கில நாவல்களை கழுவி கல்கி ஒரு நாவலை எழுதினார், அந்த நாவலை தமிழரிடத்தில்  எப்படி எடுத்துச் செல்வது..?அதற்குப் பொன்னியின் செல்வன் என்ற பெயரை வைத்து சோழர்களை உள்ளே இழுத்து விட்டு, நாலு காசு சம்பாதித்தார்.  அந்த நாவலை படித்துவிட்டு வரலாறாக ஏற்றுக் கொண்டது தமிழர்கள் செய்த  தப்பு.

 நவீன தொழில்நுட்ப திரையரங்கங்கள்: IMAX இன் அடுத்த தலைமுறையின் புதிய லேசர் ப்ரொஜெக்ஷன் மற்றும்  சரிசெய்யக்கூடிய சொகுசு கவச நாற்காலிகளின் புதுமையான இருக்கை வசதியுடன், சினிமா ரசிகர்கள் Düsseldorf/ ஜெர்மனி  இல் உள்ள UCI திரையரங்கில் திரைப்படங்களை முற்றிலும் புதிய முறையில் அனுபவிக்க முடியும். சார்மனைக் கதிரையில் வீட்டில் இருந்து படம் பார்ப்பது போல் இருந்தது. நன்றி.. 

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine


புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக