புதன், 26 ஏப்ரல், 2023

Beer: Women were the first brewers.

பீர்: முதல் மதுபானம் தயாரித்தவர்கள் பெண்கள். இதற்கு ஒரு செவிவழி கதை இருக்கின்றது.  நதிக்கரை நாகரீகம்  இதை ஒரு காட்சியாக பதிய வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சமத்துவ குடியவன் வீட்டில் வீட்டுக்காரம்மா அரைப்பதற்காக கோதுமை அரிசியை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, தன் தாய் வீடு சென்று திரும்புகையில்,

தான் மறந்துவிட்ட கோதுமையை எட்டிப்பார்த்தாள் அது புளித்து நுரைத்துப் போயிருந்தது இனி அதை பயன்படுத்தமுடியாது, என்ன செய்வது,  சோர்ந்து படுத்துக்கிடந்த  தங்கள் வீட்டு பசுக்களுக்கு அதை அரைத்து நீரில் கலந்து வைத்தாள். அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது சோர்ந்திருந்த பசுக்களும் கன்று குட்டிகளும் துள்ளிக்குதித்து ஓடியது.

கிமு 9000 முதல் 5000 வரை பெயரிடப்படாத மற்றும் தெரியாத கண்டுபிடிப்பாளர்கள் தானியத்திலிருந்து பீர் தயாரிப்பது எப்படி என்று கண்டுபிடித்தனர். உலகின் முதல் உயர் கலாச்சாரம், தெற்கு மெசொப்பொத்தேமியாவில் உள்ள பண்டைய சுமேரியர்களுக்கு பீர் தயாரிக்க தெரியும் என்பது அகழ்வாராய்ச்சிகள் மூலம் உறுதியானது.

இது 8,000 ஆண்டுகளுக்கு முன் பண்டைய மெசொப்பொத்தேமியாவில் ஆரம்பமானது.[ சுமேரியர்கள்/பண்டைய தமிழர்கள்] யூப்ரடீஸ் மற்றும் டைக்ரிஸ் இடையே உள்ள நிலம் [நதிக்கரை நாகரிகம்] பீரின் பிறப்பிடமாக கருதப்படுகின்றது. இது இன்று நவீன கால துருக்கியில் உள்ளது.

பீர் குடிக்கும் கலாச்சாரம் 8,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பீர் காய்ச்சுவதும், பீர் குடிப்பதும் இப்போது ஆண்களின் களமாகவே பார்க்கப்படுகின்றது. இருப்பினும் பீர் பெண்களின் உரிமம் ஆனது, பீர் தெய்வம் கூட பெண் வடிவில் இருந்தாள்.

இந்தப் பெண் தெய்வத்தின் பெயர்  "நின்காசி"  அம்மன். பீர் காய்ச்சி குடிக்க கொடுத்து ஆண்களிடம் அடி வாங்கியதும் பெண்கள் தான். இன்று அதை எதிர்த்துப் போராடுவதும் பெண்கள் தான்.

பெண்களின் கண்டுபிடிப்பாக பீர் இருந்தது. பீர் தயாரிக்கும் முறை அனைத்து கண்டங்களிலும் சமகாலத்தில் பரவியது. இதற்கு தெய்வங்கள் [வேற்று கிரக மனிதர்கள்]  காரணம்  என்று சொல்லப்படுகின்றது.  சாதாரண மனிதனால் 5,000 6,000 வருடங்களுக்கு முன்னால் கண்டம் விட்டு கண்டம் தாவி இருக்க முடியாது.

தனித்துவமான சக்தி படைத்த ஒரு மனிதனால்த்தான் இதை பரப்பி இருக்க முடியும். இந்த நோக்கத்திற்காக உள்ளூர் விமானம்/இறக்கைகள் மற்றும் பிரத்தியேக தரையிறங்கும் தளங்களைப் பயன்படுத்தியிருக்கலாம்.  [நாஸ்கா கோடுகள்] பீர் மட்டுமின்றி நெல்லு கோதுமை போன்ற மிக முக்கியமான சாகுபடி பயிர்கள் மற்றும் விவசாயக் கருவிகள் மட்பாண்டங்கள் சற்று தாமதமாக வந்த எழுத்துருக்கள் சமகாலத்தில் இந்தியா இலங்கை போன்ற கண்டங்களிலும் பரவியிருந்தது.

உலகில் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட தொழிற்சாலை பீர் வடிக்கும் தொழிற்சாலை தான். எகிப்தில் மிகப்பிரமாண்டமான பீர் தொழிற்சாலை அமைத்திருந்தார்கள். பீர், பிரமிட் கட்டுமானத்தில் மிகப்பெரிய பங்காற்றியது. பீர் இல்லாது இருந்திருந்தால் எகிப்தில் பிரமிட்கள் எழுந்திருக்காது.

எகிப்தில் பிரமிட்களை கட்டுவதில் பெரும் சிரமங்களை அன்றைய கட்டிட பொறியாளர்கள் கொண்டிருப்பார்கள். கட்டிட பணியாளர்களின் பிரதான குடிபானமாக பீர் இருந்திருக்கின்றது. பீர் எகிப்தின் அரசு பானமாக அறிவிக்கப்பட்டு, எகிப்தில் விளைந்த தானியங்களில் பெரும் பகுதி பீர் தயாரிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

நீர், வேளாமை உள்ள இடங்களில்  பீர் காய்ச்சும் ஆலைகளை அமைத்து, தானியத்தை ஊறவைப்பதற்கும் அதை வடித்து வைப்பதற்கும், குடிப்பதற்கும் மட்பாண்டங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்ட சிதலங்களில் பெரும்பகுதி  மதுபானம் ஊற்ற பயன்பட்ட சட்டிகள்தான். பண்டைய தமிழர் கலாச்சாரங்களில் விவசாயம் போன்று பீர் தயாரிப்பதும் ஒன்றாக இருந்திருக்கின்றது.

 

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக