கொரோனா வைரஸின் தடயங்கள்: முந்தைய கொரோனா வைரஸின் தொற்றுகளில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள். கொரோனா தடுப்பூசிகள் ஐரோப்பாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை காப்பாற்றியுள்ளன இது நேர்மறையான செய்தி, மறுபுறம் கொரோனா தடுப்பூசி சேதம் பற்றிய கவலைகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது எதிர்மறையான ஒரு செய்தி இருப்பினும், பத்தாயிரம் மக்களில் ஒருத்தருக்கு இது போன்ற சேதங்கள் ஏற்படலாம்.
தடுப்பூசி சேதம் பற்றி இதுவரை அறியப்படாத காரணங்களில் ஒன்று. இதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய நரம்பு மண்டலத்தின் பாதிப்பு [மல்டிபிள் ஸ்களீரோசிஸின் ] சுருக்கமாக MS என்று அழைக்கப்படுகின்றது.
இது பல்வேறு அறிகுறிகளில் தன்னை வெளிப்படுத்துகின்றது மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வேறுபட்டது. எவ்வாறாயினும், இது ஆயிரம் முகங்களைக் கொண்ட நாள்பட்ட நோய்க்குப் பின்னால் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஒரு செயலிழப்பு/மிகைப்பு உள்ளது.
இதற்கான சரியான காரணங்கள் எதுவும் இன்னும் அறியப்படவில்லை இருப்பினும், அது 99 விழுக்காடுகள் சுய-உடல்-தாக்கி நோய் [ ஆட்டோ இம்யூன் நோய்] என்று அழைக்கப்படுவது இப்போது தெளிவாகின்றது. இதற்கு பின்னால் இயற்கையான குடல்-வாழ் நல்ல பாக்டீரியாக்கள், கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் மற்றய நோய்க்கிருமிகள், வைரஸ்களின் தொற்றுக்கள், கொரோனா வைரஸ் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை கொம்பு சீவி விடும் தடுப்பூசியின் சேர்மங்கள் ஒரு காரணியாகவும் இருக்கலாம்.
இருப்பினும் MS, நரம்பு மண்டலத்தின் பாதிப்பு ஒரு தொற்றுநோய் கிடையாது. இது நோய்க்கிருமிகளால் தூண்டப்படுவதில்லை, ஆனால் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால் தூண்டப்படுகின்றது . வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அது திடீரென்று ஆரோக்கியமான, உட்புற திசுக்களைத் தாக்குகின்றது.
MS இன் விஷயத்தில், இவை மெய்லின் உறைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை நரம்பு செயல்முறைகளை ஒரு இன்சுலேடிங் லேயர் போலச் சூழ்ந்து, இதனால் உணர்ச்சித் தூண்டுதல்களின் சீரான பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன மத்திய நரம்பு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவும் இது அழற்சியை விவரிக்கின்றது.
மூளையின் வெவ்வேறு பகுதிகள், முதுகுத் தண்டு மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இடையில் செய்திகள் அனுப்பப்படாது, மேலும் பாதிக்கப்பட்ட நரம்பு செல்கள் இறக்கின்றன. இதன் நிமித்தம் பாதிக்கப்பட்டவர் வாழ்நாள் பூராகவும் சக்கர நாற்காலியில் உட்கார வேண்டிவரும். இதை குணப்படுத்த முடியாது என்பது வருத்தமான உண்மை. உங்கள் கவலைகள், பணத்தை மீதப்படுத்த ஒரு தகவல் இது.
கொரோனா வைரஸின் தடயங்களை தேடி.... உங்களை நான் சுமார் 21 வருட ஒரு காலப் பயணத்திற்கு அழைத்து செல்கின்றேன்.
நவம்பர் 2002 இல் சீனாவின் ஹெயுவானில் உள்ள மருத்துவமனைக்கு 33 வயதான சமையல்காரர் ஒருவர் [ வௌவால் சூப் சமைத்தவர்] வறட்டு இருமல் மற்றும் அதிக காய்ச்சலுடன் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருடைய நோயின் தீவிரத்தை யாரும் சந்தேகிக்கவில்லை அது ஒரு உலகளாவிய தொற்றாக மாறும் என்று. மார்ச் 4, 2003 முதல் SARS நோயாளி கொரோனா வைரஸால் இறந்தார்
SARS எனப்படும் புதிய வகை நோய் மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
நகர மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது, அந்த நபர் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் எட்டு கிளினிக் ஊழியர்களுக்கு அவர் மூலம் தொற்று ஏற்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதால் மருத்துவர்கள் கவலையடைந்துள்ளனர். மருத்துவர்களின் மதிப்பீடு நாங்கள் முற்றிலும் புதிய மற்றும் ஆபத்தான நோயைக் கையாளுகிறோம்.
இந்த புதிய நோயை ஆராய்வதில் ஈடுபட்டுள்ள கிறிஸ்டியன் ட்ரோஸ்டன், ஒரு ஜெர்மன் வைராலஜிஸ்ட் ஆவார். 2007 முதல் 2017 வரை பான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார் அவர் புதிய வைரஸ் ஒரு ஜூனோசிஸ், அதாவது விலங்கு இராச்சியத்தில் உள்ள நோய்க்கிருமி உண்மையில் மனிதர்களுக்கு மட்டுமே மாறிய ஒரு நோய் என்று ஆரம்பத்திலேயே உறுதியாக இருந்தார். [ வௌவால்களிலிருந்து மனிதர்களுக்கு பரவியது]
SARS எனப்படும் புதிய வகை நோய் கொரோனா வைரஸிலிருந்து புதிய பிறழ்வு SARS-CoV-2 பரவத் துவங்கியது. 2019-nCoV அதிகாரப்பூர்வமாக SARS-CoV-2 என்றும் இந்த நோய்க்கு COVID-19 என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு கடந்த கால நிகழ்வுகள்.
கோவிட் 19 க்கு ஒரு தொடக்க புள்ளி இருக்கும் போது, அதை திசை திருப்ப இன்று அது வேறு விதமாக பார்க்கப்படுகின்றது. கோவிட் 19 சீனாவின் ஹெயுவானிலிருந்து தொடங்கியதாக அறியப்பட்டாலும் கொரோனா வைரஸ் அது ஒரு ஜூனோசிஸ், வௌவால்களில் இருந்து மனித இனத்திற்கு தாவியது என்பது 75 விழுக்காடுகள் உறுதியானது.
சர்வதேசபரவல், கொரோனா வைரஸை ஆய்வு செய்த ஆய்வகங்களே இதற்கான [கோவிட் 19] முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அங்கிருந்து தான் இது பரவத் தொடங்கியது அது விபத்தா அல்லது திட்டமிட்டு பரப்பப்பட்டதா? ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று. உண்மையான ஆய்வுகளுக்கு சீனா ஒத்துழைக்குமா... இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக