டேன்டேலியன்: இந்த புற்செடி, சமையல் மற்றும் மருத்துவத்திலும். பயன்படுகின்றது. இதனுடைய இலை வேர் பூ என்று முழு தாவரமும் உண்ணக்கூடியது. இப்போது ஐரோப்பாவில் / ஜெர்மனியில் மஞ்சள் தரை விரிப்பு போல் புல்வெளிகளில் பூத்துக் குலுங்குகின்றன.
பொது வெளியில் பூத்திருந்தாலும் பெரிய அளவில் பறிப்பதற்கு அனுமதி தேவை. உங்களுக்கு சொந்த நிலம் பூத்தொட்டி இருந்தால் விதைத்து அறுவடை செய்யலாம். மற்றும்படி உழவர் வாரச் சந்தையில் வாங்கி கொள்ளலாம்.
புதிதாக பறிக்கப்பட்ட பூக்கள், இலைகள் மற்றும் வேர்கள் அப்படியே பச்சையாக உண்ணலாம். உலர்ந்த பூக்கள், இலைகள், வேர்கள் மருந்தாக கூட பதப்படுத்தப்படுகின்றன. டேன்டேலியன் தேநீர், சாறு, ஜாம் மற்றும் சாலட் போன்றவற்றை தயாரிக்கலாம்.
இதனுடைய மருத்துவ குணம் மற்றும் குணப்படுத்தும் விளைவுகள்: இயற்கை மருத்துவத்தில், டேன்டேலியன் கல்லீரல், பித்தம் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை ஆதரிக்கின்றது. டேன்டேலியன் தேநீர் ஒரு டையூரிடிக் விளைவைக் கொண்டிருக்கின்றது, முழுமை உணர்வுகளுக்கு எதிராக உதவுகின்றது மற்றும் உடலின் கொழுப்பு எரிவை தூண்டுகின்றது.
டையூரிடிக் உணவுகள்: நமது மூளையில் உள்ள ADH ஹார்மோனைத் தடுக்கின்றது. இந்த ஹார்மோன் சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றது. புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக