மருந்தும் மனிதனும்; உயிர்நிலை என்பது நூறு வருடங்கள் வறண்ட நிலத்தில் ஒரு விதை இருந்தாலும் அந்த விதை மழையில் நனைந்தவுடன் விருச்சமாக வளர்ந்து விடும். விதைகளின் உயிர் நிலைகள் அழியா வரம் பெற்றவை.
மனித உடலும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் போது இந்த உயிர்நிலைகள் உயிருடன் இருக்கும். 50-60 வயது தாண்டியவுடன் இந்த உயிர் நிலைகள் தங்களுடைய துடிப்பை இழந்து விடுகின்றன. மனித உடலில் சுமார் 60 மில்லியன் உயிர் நிலைகள் உள்ளது இதில் பாதிக்கு மேல் இழக்கும் போது ஒரு மனிதன் நோய் வாய்ப்படுகின்றான்.
அதை மீண்டும் இயங்க வைப்பதற்கு மருத்துவம் உதவுகின்றது ஒரு காலகட்டத்தில் அந்த உயிர் நிலைகளை முழுவதையும் மருத்துவம் தன்னகப் படுத்தி வைத்திருக்கின்றது.
மருத்துவம் தன்னை நிறுத்திக் கொள்ளும் போது அவன் மரணத்தை தழுவிக் கொள்கின்றான். 60 வயது தாண்டிய 70% மக்கள் மருத்துவத்தில் தான் உயிர் வாழ்கின்றார்கள். அந்த மருத்துவமும் மருந்தும் அவனை கைவிடும் பட்சத்தில் நடைப்பிணமாகி மண்ணுக்கு திரும்புகின்றான். அதில் ஒரு மருத்துவத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இரத்தம் கழுவுதல் [டயாலிசிஸ்]; தவறான வாழ்வியல், பெரும் தீனி, முறையான மருத்துவம் இல்லாத சர்க்கரைநோய், தவறான மருத்துவம் மருந்துகளின் பாவனை மற்றும் இயற்கையான முதுமைக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளினால், மேற்கோளாக: உடல் பருமனுக்காக எடுக்கப்படும் மருந்துகளினால் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்து அல்லல் படும் மக்களை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு அதிகமாகி கொண்டே வருகின்றது.
மருத்துவத்தில், டயாலிசிஸ் என்பது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது அவற்றின் செயல்பாட்டை மாற்றும் ஒரு செயல்முறையைக் குறிக்கின்றது. எனவே இது சிறுநீரக மாற்று சிகிச்சை செயல்முறை என்றும் குறிப்பிடப்படுகின்றது. இரத்தத்தில் இருந்து அதிகப்படியான நீர், கழிவுகள் மற்றும் வெளியேற்றும் பொருட்களை அகற்ற டயாலிசிஸ் பயன்படுத்தப்படுகின்றது,[டயாலிசிஸ் கழிவு பொருட்கள்: உடலில் இருந்து நச்சுகள், அதிகப்படியான உப்பு யூரியா அல்லது கிரியேட்டினின் போன்ற வளர்சிதை மாற்ற இறுதி பொருட்களை நீக்குதல்]
டயாலிசிஸ், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அன்றாட வாழ்வில் மாற்றம், சிகிச்சைகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும். இருப்பினும், கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றை அதிகரிக்க அவை குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கின்றன.
சிறுநீரக நோயாளிகளின் வாழ்க்கை உயிர் இந்த டயாலிசிஸ் இயந்திரத்திற்கு உள்ளே தான் முடக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு தரம் டயாலிசிஸ் செய்வதை மறந்தால் போதும் அது உயிர் ஆபத்தை ஏற்படுத்த கூடும். டயாலிசிஸ் உடலுக்கு மிகவும் அழுத்தமாக இருப்பதால், சிகிச்சையானது இரத்த அழுத்தம் குறைவதற்கும் வழிவகுக்கும். தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியவை பக்க விளைவுகளாகும், அவை அவசியம் ஏற்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் ஏற்படலாம்.
சிறுநீரக நோயை மேம்படுத்த டயாலிசிஸ் உதவுமா, இல்லை. வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமில்லாத வரையில் டயாலிசிஸ் வாழ்க்கைக்கு அவசியம்..
சிறுநீரக செயலிழப்பு, மிக முக்கியமான இரண்டு சிகிச்சை முறைகள்.
ஹீமோடயாலிசிஸ்- HHD [Hemodialysis] என்றால் என்ன?
டயாலிசிஸ் மையங்களில்த்தான் இதற்கான வசதிகள் அத்துனையும் உண்டு, பெரும்பாலும் அங்குதான் செய்யப்படுகின்றது, சிறுநீரகங்கள் செய்யும் வேலையை இயந்திரங்கள் [செயற்கை சிறுநீரகங்கள்] மூலம் கைகளிலுள்ள இரத்தக்குழாய்கள் வழியே இரத்தத்தை வெளியில் இருந்து சுத்திகரிப்பு செய்யும் முறை 5-6 மணித்தியாலங்கள் வரை சிகிச்சைக்கான நேரம் எடுக்கும்
இதை வாரம் 3-4 முறை செய்ய வேண்டும் டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்கள் தங்கள் இரத்தத்தில் பொஸ்பேட் சத்தை சரியான அளவு கட்டுப்படுத்தி வைத்திருப்பது அவசியம் பொட்டாசியம் மிக அதிகம் உள்ள உணவுப்பொருட்களை அறவே தவிர்க்கவும் மருத்துவர்களின் ஆலோசனையின் படிதான் தண்ணீர், உணவுகளை எடுக்க வேண்டும்.
பெரிடோனியல் டயாலிசிஸ் - CAPD [Peritoneal dialysis] அறுவை சிகிச்சையின் மூலம் துளையிட்டு ஏற்க்கனவே நோயாளியின் வயிற்றினுள் ஒரு குழாய் பொருத்தப்பட்டிருக்கும் இதன் மூலம் சுத்தீகரிப்பு திரவத்தை வயிற்றுக்குள் செலுத்தி சில மணிநேரம் கழித்து
திரும்பவும் வெளியே இந்த திரவத்தை எடுக்கும் முறை, இதை தினம் 4-5 முறை செய்ய வேண்டும். இதனை வீட்டிலேயே செய்து கொள்ளலாம். மிக சுத்தமாக இதை செய்ய வேண்டும். அப்படி வெளியேறிய திரவத்தில் சிறுநீரகத்தின் மூலம் வெளியேற வேண்டிய கழிவுப் பொருக்கள் இதில் அடங்கி இருக்கும் இவர்கள் டயாலிசிஸ் மையம் சென்று எட்டு-பன்னிரண்டு வாரங்களில் ஒரு முறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
உடலில் விற்றமின்கள் மற்றும் புரதம், சர்க்கரை இழப்புக்களை சமநிலைப்படுத்த உணவில் கவனம் செலுத்த வேண்டும். மற்றும் படி டயாலிசிஸ் மையம் மருத்துவர்களின் ஆலோசனையின் படிதான் தண்ணீர், உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மற்றவர்களின் ஆலோசனை எதையும் நீங்கள் கேட்கக் கூடாது உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்ததையே நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
கிரியேட்டினின், GFR, யூரியா. சிறுநீரக ஆய்வக மதிப்புகள். சாதாரண GFR 90 - 120 ml/min உள்ளது
GFR என்பது ஒரு ஆய்வக மதிப்பாகும், இது சாதாரணமாக செயல்படும் சிறுநீரகங்களுக்கு நிமிடத்திற்கு 90-130 மில்லிலிட்டர்கள் ஆகும். இதன் பொருள் ஆரோக்கியமான சிறுநீரகம் நிமிடத்திற்கு 90 மில்லி லிட்டர் இரத்தத்தை சுதந்திரமாக வடிகட்டக்கூடிய பொருட்களிலிருந்து சுத்தம் செய்து சிறுநீரில் வெளியேற்றுகிறது.
நிலை விளக்கம் GFR [ml/(min*1.73 m²)]
1 GFR மிக அதிகமாக உள்ளது அல்லது இயல்பானது ≥90
2 லேசான சிறுநீரக பாதிப்பு - சற்று GFR மிகக் குறைவு 60 - 89
3 மிதமான சிறுநீரக பாதிப்பு - மிதமான GFR மிகக் குறைவு 30 - 59
4 கடுமையான சிறுநீரக பாதிப்பு - கடுமையான GFR மிகக் குறைவு 15 - 29
5 சிறுநீரக செயலிழப்பு <15 (அல்லது டயாலிசிஸ்)
கிரியேட்டினின்: அளவீட்டு முறை மற்றும் வயதைப் பொறுத்து,
பெண்களில் 0.4–1.12 mg/dl [35–99 மைக்ரோமோல்கள்/லிட்டர்], ஆண்களில் 0.57–1.3 mg/dl [50–115 மைக்ரோமோல்கள்/லிட்டர்]
GFR: ஆரோக்கியமான சிறுநீரகங்களைக் கொண்ட இளைஞர்களில், 90-130 மிலி/நிமிடம். 60 மிலி/நிமிடத்திலிருந்து ஒருவர் நாள்பட்ட சிறுநீரக பலவீனத்தைப் பற்றி பேசுகிறார், சுமார் 10 முதல் 15 மிலி/நிமிடத்திற்குக் கீழே டயாலிசிஸ் [இரத்தக் கழுவுதல்] பொதுவாக எதிர்காலத்தில் அவசியமாக இருக்கும்.
சிறுநீரில் அல்புமின்: 30 மி.கி/24 மணி நேரத்திற்கும் குறைவாக
யூரியா: 17-43 mg/dl [2.8-7.2 mmol/லிட்டர்]
யூரிக் அமிலம்: பெண்கள் 2.3-6.1 mg/dl [137-363 மைக்ரோமோல்கள்/லிட்டர் இரத்த சீரம்]
ஆண்கள் 3.6-8.2 mg/dl [214-488 மைக்ரோமோல்கள்/லிட்டர்]
பொட்டாசியம்: 3.7-5.1 மிமீல்/லிட்டர்
கால்சியம்: 8.6-10.3 mg/dl [2.15-2.58 mmol/லிட்டர்]
பாஸ்பேட்: 2.6-4.5 mg/dl [0.84-1.45 mmol/லிட்டர்]
அல்புமின் ஒரு புரதம். இது இரத்த சீரத்தில் உள்ள மொத்த புரதத்தில் 60 சதவிகிதம் ஆகும். இது முதன்மையாக கல்லீரல் செல்களில் [ஹெபடோசைட்டுகள்]
சிறுநீரக செயலிழப்பிற்கு மிக முக்கிய காரணிகளில் ஒன்று; இரத்த சுற்றோட்ட கோளாறுகள். மிக முக்கியமான இருதய நோய்களில் உயர் இரத்த அழுத்தம் [உயர் இரத்த அழுத்தம்] ஆஞ்சினா பெக்டோரிஸ், மாரடைப்பு, இதய செயலிழப்பு, கார்டியாக் அரித்மியா மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் ஆகியவை அடங்கும்.
இரத்த சோகை: பொதுவாக இரத்த சோகை அல்லது இரத்தக் குறைபாடு என்றும் அழைக்கப்படுகின்றது [ இரும்புச்சத்து குறைபாடு: சிவப்பு இரத்த நிறமியின் [ஹீமோகுளோபின்] விகிதம் மிகவும் குறைவாக உள்ளது அல்லது இரத்தத்தில் மிகக் குறைவான சிவப்பு இரத்த அணுக்கள்[எரித்ரோசைட்டுகள்] உள்ளன சிவப்பு இரத்த அணுக்களின் குறைபாட்டிற்கு வேறு சில அரிதான காரணிகளும் உண்டு அது இங்கு தேவைப்படவில்லை.
நோயறிதலுக்கு பல்வேறு அளவுகோல்கள் தீர்க்கமானவை அது இரத்த பரிசோதனை மூலம் அளவிடப்படுகின்றது; சிவப்பு இரத்த நிறமியின் [ஹீமோகுளோபின்] விகிதம் மிகவும் குறைவாக உள்ளது அல்லது இரத்தத்தில் மிகக் குறைவான சிவப்பு இரத்த அணுக்கள் [எரித்ரோசைட்டுகள்] உள்ளன . உங்களுக்கு இரத்த சோகை இருக்கிறதா என்பதைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை அவசியம்.
இதைச் செய்ய, மருத்துவர் முதலில் நோயாளியிடமிருந்து இரத்தத்தை எடுத்துக்கொள்கிறார். ஆய்வக ஊழியர்கள் பின்னர் ஹீமோகுளோபின் மற்றும் எரித்ரோசைட்டுகளின் அளவை தீர்மானிக்கிறார்கள். ஆண்களில், ஒரு டெசிலிட்டருக்கு 13 கிராமுக்கும் குறைவான ஹீமோகுளோபின் செறிவு [Hb மதிப்பு]
இருந்தால் அவருக்கு இரத்த சோகை இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெண்களுக்கு ஒரு டெசிலிட்டருக்கு 12 கிராமுக்கு குறைவானதாக இருந்தால் அவர் இரத்தப் பற்றாக்குறை உள்ளவர் என்று அறியப்படுகின்றார். பெண்களுக்கு இரத்தப் பற்றாக்குறை, இரும்பு சத்து குறைபாட்டிற்கு மாறுபட்ட காரணங்கள் உண்டு, மாத சுழற்சி, மகப்பேறு, சிசேரியன்.
சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின்; இரத்த பிளாஸ்மா [தெளிவான, மஞ்சள் நிற திரவம்] கூடுதலாக , இரத்தத்தில் பல்வேறு இரத்த அணுக்கள் உள்ளன: இரத்த தட்டுக்கள் [த்ரோம்போசைட்டுகள்] வெள்ளை [லுகோசைட்டுகள்] மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் [எரித்ரோசைட்டுகள்]பிந்தைய ஒரு முக்கிய கூறு சிவப்பு இரத்த நிறமி [ஹீமோகுளோபின்]ஆகும். இதில் அதிக இரும்புச் சத்து இருப்பதால் ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கின்றது.
இருப்பினும், ஹீமோகுளோபினின் மிக முக்கியமான பணி ஒட்சிசனை[O₂] பிணைப்பதாகும் . இரத்த ஓட்டத்தின் மூலம் ஒட்சிசனை உடலின் செல்களுக்கு கொண்டு செல்வதற்கும் , செல்களில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடை [CO₂] வெளியேற்றுவதற்கும் சிவப்பு இரத்த அணுக்கள் பொறுப்பு .
இரத்த சோகை இருப்பதற்கு மிகவும் பொதுவான அறிகுறிகள்: தலைச்சுற்றல், பலவீனம், செயல்திறன் குறைதல், படபடப்பு, இறுக்கம் மற்றும் மார்பு வலி.சோர்வு மற்றும் சோம்பல் கொட்டாவி சோர்வு இரத்த சோகையைக் குறிக்கும். ஒருவருடைய சோர்வு, போதுமான தூக்கம் இல்லாது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தால், அது இரத்த சோகை காரணமாக இருக்கலாம். இந்த காரணிகள் சிறுநீரக செயலிழப்பிற்கு இரத்த சோகையின் சாத்தியமான குறிகாட்டிகளாகும்.
உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட காரணியை மீள் ஆய்வு செய்வதற்கு கீழே உள்ள இந்த கட்டுரை உதவும். சிறுநீரக-நோய்-Kidney Disease
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக