புதன், 11 மே, 2022

Vitamin B12

விற்றமின்- B12 : விற்றமின்- B12 இறைச்சி மற்றும் தயிர், நெய், பால் பொருட்கள் போன்ற விலங்கு உற்பத்தி பொருட்களில் மட்டுமே பிரத்தியோகமாக காணப்படுகின்றது. காய்கறி, பழங்கள் தானியங்கள் போன்ற தாவர உணவுகளில் காணப்படுவதில்லை,

அதற்கு காரணம் இரத்த உற்பத்தியில் மட்டுமே இந்த விற்றமின் பங்கெடுக்கின்றது அதனால்த்தான் விலங்கு உணவுகளில் நிறைந்து காணப்படுகின்றது. (இரத்த சிவப்பணுக்களின் முதிர்ச்சி(பழுத்தல்) மற்றும் தசை வளர்ச்சி, நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டுக்கு அவசியமானது)

மாமிச உணவுகளில் விற்றமின்- C இருப்பதில்லை, உங்களுக்கு விற்றமின்-C தேவை என்றால் தாவரங்களைத்தான் நாடவேண்டும். அதேபோல் தாவரங்களில் விற்றமின்- B12 இருப்பதில்லை. தாவரங்கள் பச்சையம் தயாரிப்புக்கு தேவையான மெக்னீசியத்தை- mg2+ மண்ணிலிருந்து எடுத்து அதிகளவில் இலை தழைகளில் சேமிக்கின்றன மற்றும் ஒட்சிசன் ஏற்ற தடுப்பாற்றலுள்ள விற்றமின்- C உற்பத்தி செய்கின்றது.

இறைச்சியில் முக்கியமாக B வளாகம் (Komplex) விற்றமின்கள் நிறைந்துள்ளது, விற்றமின்- B1 (தியாமின்) விற்றமின்- B6 (பைரிடாக்சின்) மற்றும் விற்றமின்- B12(கோபாலமின்) குறிப்பாக கல்லீரலில் இந்த விற்றமின்கள் நிறைந்துள்ளன இரண்டு வருடங்களுக்கு மேல் தசை மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படுகின்றது.

விலங்குகளுக்கு விற்றமின்- B12 எங்கிருந்து கிடைக்கின்றன.? வேட்டை விலங்குகள், நாய் பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு மனிதர்களை போல் இறைச்சி உணவுகளிலிருந்து கிடைக்கின்றது. பண்ணை வளர்ப்பு விலங்குகள் கோழி, பன்றிகளுக்கு தங்கள் தீவனத்தில் செயற்கை விற்றமின்-B12 சேர்க்கப்படுகின்றது.

நாங்கள் பயன்படுத்தும் பழரசம், குளிர்பானங்களில் இயற்கையாக பழங்களிலிருந்து வந்த விற்றமின்கள் கிடையாது அதில் செயற்கையாக சேர்க்கப்பட்ட கனிமசத்துகள், விற்றமின்கள் மற்றும் விற்றமின்-B12 கொண்டுள்ளது.

சில நன்னீர் மீன்கள்- B12 ஐ தாங்களாகவே உற்பத்தி செய்கின்றன கடல் நீரில் வாழும் மீன்கள் விற்றமின்- B12 இன் முக்கிய தயாரிப்பாளர்கள் பிளாங்க்டனாக, அவை மீன்களுக்கு முக்கியமான உணவாகச் செயல்படுகின்றன. சயனோபாக்டீரியாக்கள் பயன்படுத்த முடியாத- B12 அனலாக் விற்றமினை கொண்டுள்ளது. இருப்பினும் விற்றமின்- B12 வழங்கும் ஆர்க்கியா போன்ற மற்றய பாக்டீரியாக்களும் தண்ணீரில் நிறைய உள்ளன.

கடல் தாவரங்கள், கடற்பாசிகள் பயன்படுத்த முடியாத- B12 அனலாக் விற்றமினை கொண்டுள்ளது இதை மனிதன் உணவாக எடுத்தாலும் அதில் எந்த பிரயோசனமும் இல்லை அதை மனித ஜீரண கருவிகளால் உடைக்கமுடியாது.

கால்நடை ஆடு, மாடு போன்ற புல், தழை உண்ணிகளுக்கு விற்றமின்-B12 எங்கிருந்து கிடைக்கின்றது. ஆடு, மாடு போன்ற புல் தழை உண்ணிகள், குடலில் தனித்துவமான நுண்ணுயிரிகளை கொண்டவை இந்த குடல்-வாழ்-பாக்டீரியாக்கள் விற்றமின்-B12 உற்பத்தியில் பெரும்பங்காற்றுகின்றது. மற்றும் விற்றமின்-B12 உற்பத்தியின் முன்னோடி கோபால்ட் கனிம சத்தை மண்ணிலிருந்து அதிகளவில் நுகர்கின்றன இது விற்றமின்- B12 தொகுப்புக்கு அவசியமானது

உணவு கனிம சத்து இரைமீட்டல் மூலம் துவைக்கப்பட்டு, குடலுக்கு அனுப்புகின்றது அங்கு விற்றமின்- B12 ஐ உற்பத்தி செய்யக்கூடிய பல ஒருசெல்லுலர் உயிரினங்களும் உள்ளன. இந்த செரிமான அமைப்பு மனிதனுக்கு கிடையாது. மனித உடலால் விற்றமின்-B12 ஐ உற்பத்தி செய்ய முடியாது.

ஆற்றல் வளர்சிதை மாற்றத்திற்கும், நரம்பு செல்கள் மற்றும் இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும் உடலுக்கு விற்றமின்B-12 தேவைப்படுகின்றது. கூடுதலாக, விற்றமின்B-12 குறைபாடு சோர்வு, பலவீனம், இரத்த சோகை, நரம்பு கோளாறுகள் அல்லது நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கும்.

இரத்த சோகை பல்வேறு காரணங்களுக்காக உருவாகலாம், அவற்றில் ஒன்று விற்றமின்B-12 குறைபாடு ஆகும். ஒரே நேரத்தில் இரும்புச்சத்து குறைபாடு இருப்பது, இது இதை மறைக்கக்கூடும் அல்லது இந்த குறைபாட்டினை திசைதிருப்பிவிடுகின்றது.

இதன் நிமித்தம், உடலில் ஒட்சிசன்-O2 போக்குவரத்து குறைவாகவே செயல்படுகின்றது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் விரைவில் சோர்வடைந்து தலைச்சுற்றலால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்றுநோய் காலத்தில் கவனிக்கப்படவேண்டிய ஒரு குறைபாடு.

விற்றமின்B-12 குறைபாட்டினால் ஏற்படும் கோளாறுகள். ஆழமான உணர்திறன் கோளாறு, கை கால்களில் கூச்சம் மற்றும் கை கால்களில் உணர்ச்சி தொந்தரவுகள் இது பக்கவாதம் வரை எடுச்துச்செல்லும் தோல் மற்றும் சளி சவ்வுகளில் செல் பிரிவு கோளாறுகள், முடிகொட்டுதல், தசை பலவீனம்,

தலைவலி, ஒற்றைத் தலைவலி உடல் மன சோர்வு, குழப்பம், மோசமான நினைவாற்றல் இழப்பு (ஞாபக மறதி) பார்வை நரம்பு சிதைவு, உணவு சகிப்புத்தன்மை மற்றும் ஒவ்வாமை, குழந்தைகளில் கடுமையான வளர்ச்சிக் கோளாறுகள் (ஒல்லிகுச்சியான உடல்) பற்றாக்குறை நீண்ட காலம் நீடித்தால், செல் பிரிவு பாதிக்கப்படும்.

இதன் நிமித்தம் சில சூழ்நிலைகளில் போதுமான இரத்த அணுக்கள் உருவாகாது, இரத்த பற்றாக்குறை, ஹோமோசைஸ்டீன் செறிவு இரத்தத்தில் அதிகரிக்கின்றது.

ஹோமோசைஸ்டீன் என்பது: மனித உடலில் இயற்கையாக நிகழும் அமினோ அமிலமாகும், இது புதிய புரதங்கள் மற்றும் கிரியேட்டினின் உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும், உயர்ந்த ஹோமோசைஸ்டீன் அளவுகள், தமனிகளை கடினப்படுத்துதல்( சுருங்கி விரியும் தன்மையை இழந்து மரத்துப்போதல்) இரத்த உறைவு, இருதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும்.

அசைவம், தினமும் இரண்டு முட்டை உணவில் சேர்ப்பவர்களை காட்டிலும் சைவ உணவை எடுப்பவர்களை இரத்த உறைவு, இருதய நோய், மாரடைப்பு அதிகமாக தாக்குவதற்கு காரணம் இதுதான்.

விற்றமின்B-12 குறைபாட்டிற்கான பொதுவான காரணங்கள்: சைவ உணவு, Vegane (ஓசைவம்) அதிக அளவு மது அருந்துதல், வயிறு அல்லது குடலின் நாள்பட்ட அழற்சி மேலும் சில மருந்துகளுடன் நீண்ட கால சிகிச்சை: இரைப்பை புண்கள் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றிற்கான அமிலமிகைப்பு தடுப்பான்கள்; ஒமேபிரசோல் மாத்திரை மற்றும் நீரிழிவு நோய்க்கான மெட்ஃபோர்மின் மாத்திரை. மற்றும் வயதானவர்கள்.

சர்க்கரைநோய்க்கு மிகச்சிறந்த மருத்துவம் உடலில் குறைவுபடும் இன்சுலினை எடுத்து சமநிலைபடுத்துவதுதான். கணையம் இன்சுலினை மட்டுமின்றி இரண்டு வெவ்வேறு வேலைகளைக் கொண்டுள்ளது

முதலில், இரத்தத்தில் வெளியிடப்படும் இன்சுலின் ஹார்மோன்களை உருவாக்குகின்றது இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றது. இணையான குளுகோகன் அதை அதிகரிக்கின்றது.

இரண்டாவதாக கணையம்: செரிமான நொதியங்களை உற்பத்தி செய்கின்றது, அவை சர்க்கரைகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளை அவற்றின் கூறுகளாக உடைக்கின்றன. என்சைம்கள் ஒரு குழாய் வழியாக சிறுகுடலை அடைகின்றன. அங்கே இந்த நொதிகள் தங்கள் விளைவை வெளிப்படுத்தத் தொடங்குகின்றது.

குறிப்பாக இரண்டு மிக முக்கியமான செரிமான நொதியங்கள் கணைய லிபேஸ் (சுருக்கமாக: லிபேஸ் (PL) இது உணவில் உள்ள கொழுப்புகளை உடைக்கின்றது. கணைய அமிலேஸ் (சுருக்கமாக: அமிலேஸ்(PA), இது ஸ்டார்ச் போன்ற கார்போஹைட்ரேட்டுகளை தனிப்பட்ட சர்க்கரைகளாக உடைக்கின்றது.

கடுமையாக உழைத்து அதிர்ந்து போன கணையம் மற்றும் கடுமையான கணைய அழற்சி நோய்களில் பாதிப்புகுள்ளான கணையத்தினால் சரியான நேரத்தில் சரியாக செரிமான நொதியங்களை சுரக்கமுடிவதில்லை. சரியாக ஜீரணமாகாத உணவுகளினால் வாயுக்கோளாறு, அமிலமிகைப்பு மற்றும் உடைக்கப்படாத பித்தம்.

பாதிக்கு மேலே கணைய அழற்சி நோய்க்கு பித்த நெரிசலே காரணம். ஆரம்ப புள்ளி பித்தப்பை மற்றும் சிறுகுடலில் உள்ள கணையத்தின் பொதுவான குழாயில் சிக்கியிருக்கும் பித்தம், பித்த கற்கள் ஆகும். இந்த பித்த தேக்க நிலையில், கல்லீரல் மதிப்புகளும் அடிக்கடி அதிகரிக்கப்படுகின்றன. உடைக்கப்படாத கொழுப்புகள், இன்சுலின் எதிர்ப்பு சர்க்கரை உயர்வுக்கு காரணியாகின்றது.

இது போன்று நாள்பட்ட, நாளாந்த தொந்தரவுகளுக்குள்ளே அகப்பட்டவர்கள். எவ்வளவுதான் விற்றமின்B-12 நிறைந்த உணவுகள் மாத்திரைகளை எடுத்தாலும் குடல் உறுஞ்சுவதை தடுத்துவிடுகின்றது.

பரிந்துரை அளவீடு ஒரு நாளைக்கு 2.4 மைக்ரோகிராம். பின்னர், வாரந்தோறும் அதற்கு பின்னர் மாதாந்திரம் போதுமானது. இவர்கள் கண்டிப்பாக ஊசி மூலம் ( Hydroxy-B12 அல்லது cyano-B12 ) அல்லது நாசி தெளிப்பு விற்றமின்B-12 எடுத்துக்கொள்ளவேண்டும். மற்றவர்களுக்கு  மாத்திரை போதுமானது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக