குளுக்கோஸ்:
கார்போஹைட்ரேட்டுகள்- எளிய சர்க்கரைகள் (மோனோசாக்கரைடுகள்) இரட்டை சர்க்கரைகள் (டிசாக்கரைடுகள்) பல சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) என்று பல சர்க்கரைகள் இருந்தாலும் உடலின் சக்தி பரிமாற்றத்திற்கு குளுக்கோஸ்(C₆H₁₂O₆) என்ற ஒற்றை சர்க்கரைதான் தேவை.
பல ஒற்றை அல்லது எளிய சர்க்கரைகள் இயற்கையிலுள்ளன, சிறந்தவை: பழச் சர்க்கரை (பிரக்டோஸ்), டெக்ஸ்ட்ரோஸ் (குளுக்கோஸ்) மற்றும் கேலக்டோஸ் இந்த எளிய சர்க்கரைகள் செரிமானத்தின் போது உடைக்கப்பட வேண்டியதில்லை மற்றும் இந்த சர்க்கரை உடனடியாக இரத்த ஓட்டத்தில் உடலால் உறிஞ்சப்படுகின்றன. அங்கே இவை இன்சுலின் உதவியுடன் உடலுக்கு ஆற்றல் சப்ளையராக சேவை செய்கின்றது.
மற்ற சர்க்கரைகள் செரிமானத்தின் போது உடைக்கப்பட வேண்டிய சர்க்கரைகள் எடுத்துக்காட்டாக: பால் சர்க்கரை (லாக்டோஸ்) குடலில் சுரக்கப்படும் லாக்டாஸ் என்ற நொதியத்தின் உதவியுடன் பால் சர்க்கரை உடைக்கப்பட்டு, குளுக்கோஸ் உடலின் பயன்பாட்டிற்கும் கழிவு சர்க்கரை குடல்-வாழ் பாக்டீரியாக்களுக்கும் உணவாகின்றது. (லாக்டோஸ் = பால் சர்க்கரை = குளுக்கோஸ் + கேலக்டோஸ்) இதிலுள்ள கேலக்டோஸ் கழிவுச்சர்க்கரை.
தாய்ப்பாலிலுள்ள பால்சர்க்கரை குழந்தைகளுக்கு அவசியமானது. குடல்-வாழ்-நல்ல-பாக்டீரியாக்கள் வளர்ச்சி பெறுவதற்கு உதவுகின்றது. ஒரு சில பிள்ளைகளுக்கு இரண்டு வயதிற்குமேல் இந்த நொதியம் சுரப்பதை நிறுத்திக்கொள்கின்றது இதன் நிமித்தம் லாக்டோஸ் சகிப்புத்தன்மை ஏற்படுகின்றது.
இரட்டை சர்க்கரை இரட்டை சர்க்கரைகள் (டிசாக்கரைடுகள்) கரிம-வேதியியல் எளிய சர்க்கரைகளின் கலவைகள் (மோனோசாக்கரைடுகள்). மனித உயிரினம் டிசாக்கரிடேஸ்களைப் பயன்படுத்தி பிரிக்கின்றது, இதன் விளைவாக வரும் எளிய சர்க்கரைகளிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றது. சுக்ரோஸ் (கரும்பு மற்றும் பீட் சர்க்கரை), மால்டோஸ் (மால்ட் சர்க்கரை) மற்றும் லாக்டோஸ் (பால் சர்க்கரை) ஆகியவை அடங்கும்.
பழங்கள், காய்கறிகள், டேபிள் சர்க்கரை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் கரும்பு (சுக்ரோஸ்) மால்டோஸ் மால்ட் சர்க்கரை இயற்கையாக ஏற்படாது பீர் போன்ற மால்ட் பொருட்களில் உருவாக்கப்படுகின்றது. பால்சர்க்கரை: பால் மற்றும் பால் பொருட்கள் (லாக்டோஸ்)
சாராம்சம்: ஒற்றை சர்க்கரை உள்ள உணவுகளை எடுத்தால் அது உடனடியாக உடலில் உறிஞ்சப்படுகின்றது. இரட்டை சர்க்கரை உணவுகள் கொஞ்சம் காலதாமதமாகும் பல சர்க்கரைகள்(பாலிசாக்கரைடுகள்) உள்ள உணவுகளை நீங்கள் எடுத்தால் உடைக்கப்பட்டு உறுஞ்சப்படுவதற்கு நீண்டநேரம் எடுக்கின்றது.
கார்போஹைட்ரேட்டுகள் (சாக்கரைடுகள்)
ஒற்றை/எளிய சர்க்கரைகள் (மோனோசாக்கரைடுகள்) உள்ள உணவுகள்
டெக்ஸ்ட்ரோஸ் = குளுக்கோஸ், பழங்கள், தேன், திராட்சை.
பிரக்டோஸ் = பழ சர்க்கரை கேலக்டோஸ், பால் சர்க்கரை.
இரட்டை சர்க்கரைகள் (டிசாக்கரைடுகள்) உள்ள உணவுகள்.
லாக்டோஸ் = பால் சர்க்கரை = குளுக்கோஸ் + கேலக்டோஸ் பால் மற்றும் பால் பொருட்கள்.
மால்டோஸ் = மால்ட் சர்க்கரை = குளுக்கோஸ் + குளுக்கோஸ் (பீர்)
பல சர்க்கரைகள் (ஒலிகோசாக்கரைடுகள்)
உள்ள உணவுகள்.மால்டோடெக்ஸ்ட்ரின் பெரும்பாலும் கார்போ தயாரிப்புகளில் காணப்படுகின்றது ரஸ்க், மிருதுவான ரொட்டி.
பல சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) உள்ள உணவுகள். ஸ்டார்ச் சத்து: தாவர மற்றும் சிறுதானியங்களான கேழ்வரகு, தினை, கம்பு, வரகு, சாமை, குதிரைவாலி, போன்ற தானிய பொருட்கள் (பாண், ரொட்டி), காய்கறிகள், சோள மாவு, உருளைக்கிழங்கு மற்றும் கோதுமை.
செல்லுலோஸ்: நார்ச்சத்து உணவுகளிலுள்ள சர்க்கரை.
கிளைகோஜன்: விலங்கு பொருட்கள், இறைச்சி உணவுகளிலுள்ள சர்க்கரை.
ஒற்றை சர்க்கரை என்பது- குளுக்கோஸ் இரட்டை சர்க்கரை (டிசாக்கரைடு) என்றால் என்ன? : இரண்டு எளிய சர்க்கரைகளின் கலவை இரட்டைச் சர்க்கரை எனப்படும்.
பல சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) என்றால் என்ன? : பல எளிய சர்க்கரைகள் நீண்ட மூலக்கூறு சங்கிலிகளில் வரிசையாக இருக்கும்போது, பல சர்க்கரைகள் என்று அழைக்கப்படும். காய்கறிஸ்டார்ச்சத்து, பாலிசாக்கரைடு மற்றும் சிறிய துகள்களின் அமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த பாலிசாக்கரைடுகள் நீண்ட காலத்திற்கு ஆற்றலை வழங்குகின்றன, மேலும் அவை சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை நேர தாமதத்துடன் செரிமான மண்டலத்தில் உடைந்து, பல மணிநேரங்களுக்கு இரத்தத்தில் நிலையான இரத்த சர்க்கரை அளவினை கொடுக்கின்றது.
அளவுக்கதியமான கார்போஹைட்ரேட்டுகளை உடல் கிளைகோஜனாக (C₂₄H₄₂O₂₁) சேமிக்கின்றது, இதில் சுமார் 5000 குளுக்கோஸ் எச்சங்கள் உள்ளன. விரதம்/ உணவுப் பற்றாக்குறை மற்றும் குறிப்பாக விளையாட்டு உடல் உழைப்பின் போது இந்த கிளைகோஜன் குளுக்கோஸ் சக்தியாக மாற்றப்பட்டு பயன்படுத்துகின்றது. இப்படி மாற்றப்பட்ட சர்க்கரைக்கும் (குளுக்கோஸ்) இன்சுலின் தேவை.
இது போன்ற அவசரகால தேவைகளுக்காக கிளைகோஜன் தசைகளில் மற்றும் குறிப்பாக கல்லீரலில் சுமார் 400 கிராம் வரை சேமிக்கப்படுகின்றது. உடலின் சக்தி பரிமாற்றத்திற்கு குளுக்கோஸ்(C₆H₁₂O₆) என்ற ஒற்றை சர்க்கரைதான் தேவை. மற்ற சர்க்கரைகளை குடல் செரிமான நொதியங்கள் உடைத்து ஒற்றை சர்க்கரையாக மாற்றுகின்றது. இந்த சக்தி பரிமாற்ற இடைவெளியை சர்க்கரை நோயாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
சர்க்கரை= (குளுக்கோஸ் + சர்க்கரை)
ஒற்றை சர்க்கரை: குளுக்கோஸ் (C₆H₁₂O₆)
பழச்சர்க்கரை: வாழைப்பழம், மாம்பழம், திராட்சைப்பழம், தேன், தர்பூசணி, பலாப்பழம், வத்தகப்பழம்,சோளம் சிரப்.
கேலக்டோஸ் சர்க்கரை: சுண்டல் கடலை. பருப்பு, பயறு.. பிஸ்தா, முந்திரி. கொட்டைகள், தலாம் விதை பெரும்பாலும் வாயு உற்பத்தி விதைகள்.
பால் சர்க்கரை: பால் தயாரிப்புகள், வெண்ணைய், தயிர், மோர். பாலாடைக்கட்டிகள். ஐஸ்கிரீம், பால்பவுடர்.
பாலியோல்- சர்க்கரை: மது/ஒயின் பொதுவாக புளிப் பழங்கள்: ஆப்பிள், இலந்தை, லிச்சி, நெல்க்காய், பேரிக்காய், பிளம்ஸ், பனி பட்டாணி. பேரிக்காய், நெக்ட்ரைன்
பிரக்டான்ஸ்- சர்க்கரை: அஸ்பாரகஸ், பிரஸ்ஸல்ஸ் முளைகள், பூண்டு/உள்ளி, காலிஃபிளவர், வெங்காயம், காளான்கள், கோதுமை தானியம்.
ஒற்றைச்சர்க்கரை (மோனோசாக்கரைடுகள்)
அத்துனை கார்போஹைட்ரேட்டுகளும் மோனோசாக்கரைடுகளால் கட்டமைக்கப்பட்டவை. மோனோசாக்கரைடு என்பது குளுக்கோஸ்(C₆H₁₂O₆) (எளிய சர்க்கரை) என்று பொருள்படும், மற்றய அனைத்து வகையான சர்க்கரைகளும் டிசாக்கரைடுகள் அல்லது இரட்டைச் சர்க்கரைகள், ஒலிகோசாக்கரைடுகள், பல சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) என்று அழைக்கப்படுகின்றது, அத்துனை சர்க்கரை வகைகளும் அடிப்படை கட்டுமானத் தொகுதியாக குளுக்கோஸ் (மோனோசாக்கரைடுகள்) கொண்டு கட்டமைக்கப்பட்டது.
நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்துனை சர்க்கரைகளும் இரட்டை சர்க்கரை கொண்டு கட்டமைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக; டேபிள் சுகர்= சுக்ரோஸ் (C₁₂H₂₂O₁₁) = [ பழ சர்க்கரை+குளுக்கோஸ்] மற்றும் [குளுக்கோஸ்+குளுக்கோஸ்] தேன், கரும்பு சர்க்கரை, பணை வெல்லம், தென்னங்கருப்பட்டி, கிழங்கு சர்க்கரை, பழ சர்க்கரைகள் (மாம்பழம்,வாழைப்பழம்) சுக்ரோஸை டிசாக்கரைடுகள் (இரட்டை சர்க்கரைகள்) என்று வகைப்படுத்தலாம்.
இதிலிருந்து பகிரப்படும் குளுக்கோசு, சக்தி பரிமாற்றத்தில் பயன்படுத்தப்படுகின்றது. மற்ற உணவுகளிலுள்ள பல சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) இரட்டை சர்க்கரைகளாக உடைக்கப்பட்டு, குளுக்கோசு உறுஞ்சப்படுகின்றது. நீங்கள் எந்த வடிவத்திலுள்ள சர்க்கரையை எடுத்தாலும் உடல் குளுக்கோஸ், ஒற்றைச்சர்க்கரையைத்தான் எடுக்கின்றது. இதில் குளுக்கோசு பகிரப்படும் நேர தாமதத்தை சர்க்கரை நோயாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
சர்க்கரை பகிரப்படும் நேரம்
குளுக்கோசு - உடனடியாக.
சுக்ரோஸ் - 10-15 நிமிடங்கள்.
பாலிசாக்கரைடுகள்- 2 மணித்தியாலம்.
ஸ்டார்ச் சத்து: கடலை, விதைகள், சிறுதானியங்கள் போன்ற
நீண்ட சர்க்கரைகள்- 4- 5 மணித்தியாலங்கள்.
செல்லுலோஸ்: நார்ச்சத்து உணவுகளிலுள்ள சர்க்கரை.
கிளைகோஜன்: விலங்கு பொருட்கள், இறைச்சி உணவுகளிலுள்ள சர்க்கரை. இரட்டைச் சர்க்கரைகளை காட்டிலும் இந்த உணவுகளில் நிறைய குளுக்கோஸ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இது கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப்பட்டு, நாள் முழுவதும் சக்தி வழங்குகின்றது. அதுவும் சரியாக இன்சுலின் கிடைக்கும் பட்சத்தில்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த உணவுதான் நல்லது என்று எதுவும் கிடையாது, இன்சுலின் ஊசி எடுப்பவர்கள் காலை, மதியம் என்று உடல் உழைப்பை பொறுத்து உணவுகளை தரம்பிரித்து எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை இறக்கமுள்ளவர்கள் உடனடியாக சக்தி கிடைப்பதற்கு குளுக்கோஸ் அல்லது பழரசம், வாழைப்பழம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக