வெள்ளி, 20 மே, 2022

Arsenic is rice poisoning

வெண்கலம் மற்றும் பித்தளை உலோகங்களிடையே உள்ள வித்தியாசங்கள்: மனிதன் முதல் முதலில் கண்டுபிடித்த உலோகம் செப்பு இல்லை வெண்கலம், காரணம் இயற்கையில் செப்பு தனியாக இருப்பதில்லை ஆர்சனிக்-(33 As) என்ற நச்சு தனிமத்துடன் இணைந்திருக்கும்.

இந்த இரண்டு உலோகங்களையும் பிரித்தெடுக்கும் தொழில் நுட்பம் கற்காலத்தில் இருந்திருக்க வாய்பே இல்லை. அப்படி இந்த இரண்டு உலோகங்களும் இணைந்திருப்பதினால் அது வெண்கலத்தின் நிறத்தையும் அதனின் தன்மையையும் பெறுகின்றது.

ஆதி மனிதன் காத்திரமான ஒரு கலப்பு உலோகத்தைதான் பயன்படுத்தியிருக்க முடியும் அதை வைத்துதான் கல்வெட்டுகளை செதுக்கியிருக்கின்றான். சுத்தமான செப்பு உளியை வைத்து கல்வெட்டுக்களை செதுக்கியிருக்க முடியாது.

சுத்தமான செப்பு பிற்காலத்தில் தொழிற்துறை வளர்ச்சி காலத்தில் வந்தது இன்று நாங்கள் பயன்படுத்தும் அத்துனை வெண்கல பொருட்களும் நச்சு ஆர்சனிக் பிரித்தெடுக்கப்பட்டு, அதற்கு பதிலாக தகரம் கலந்து வார்க்கப்படுகின்றது.

நீங்கள் பயன்படுத்தும் வெண்கலம், பித்தளை மற்றும் செப்பு பொருட்கள் கடவுள் சிலைகள், குத்துவிளக்கு, சமையல் மற்றும் பூசை பாத்திரங்கள் ஆர்சனிக் மாசு இல்லாமல் பார்த்து வாங்குங்கள். ஆர்சனிக் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது, பண்டைய காலங்களிலிருந்து அறியப்பட்டு வருகின்ற ஒரு நச்சு பல நோய்களின் அடித்தளமாக இந்த நச்சு விளங்குகின்றது.

புராணங்களில் இதை பாஷாணம் என்று அறியப்படுகின்றது. உலோகங்களை விட அரை உலோகங்கள் ஆபத்தானது. ஆர்சனிக் ஒரு அரை உலோகம், பாதி உப்பின் தன்மை கொண்ட ஒரு கெமிக்கல், இது நீரில் கரைந்து கலந்து விடும். (தனிம அட்டவணையில் அயோடினை சுற்றுயுள்ள அத்துனை தனிமங்களும் அரை உலோகம் அல்லது உலோகம் அல்லாதவைகள், அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்).

இதன் நிமித்தம் நுரையீரல், தோல்:(முகம் மற்றும் சருமம் முரட்டு தோலாக மாறும்) கல்லீரல், கணையம் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம். ஆர்சனிக் மனித ஆரோக்கியத்தில் கடுமையான தீங்கை விளைவிக்கும். செப்பு ஆலைகள் வெளியேற்றும் கழிவுநீர், புகை காற்றின் மூலம் ஆர்சனிக் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றது. இப்படி சுற்றுப்புறம் மாசுபடும் போது அந்த பிராந்தியத்தில் சாகுபடியாகும் உணவு அரசி, சிறு முழு தானியங்கள், காய்கறி, குடிநீர் என்று பல உணவுப்பொருட்களையும் மாசுபடுத்துகின்றது.

ஆர்சனிக் அனைத்து உணவுகளிலும் இயற்கையாக சிறிய அளவில் காணப்படுகின்றது, முக்கியமாக சிறுமுழு தானியங்கள், அரசி, ரொட்டி, காய்கறி, மீன், இறைச்சி மற்றும் குடிநீரில் காணப்படுகின்றது. இது சுற்றுப்புற மாசுபடுதலை பொறுத்து இதன் விழுக்காடுகள் அதிகரிக்கின்றது.

அரிசியை தினமும் உணவாக உட்கொள்பவர்களுக்கு ஆர்சனிக் செறிவு இரத்தத்தில் அதிகரித்து காணப்படும் இது அவர்களுக்கு பலதரப்பட்ட சுகாதாரபிரச்சனைகளை இட்டுச்செல்லும். அரிசி ஒரு காலத்தில் நல்ல உணவுதான் இன்று அது நச்சு உள்ளதாக மாறியிருக்கின்றது. அதற்கு காரணமும் நாம்தான். எங்களுடைய உணவு எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து கொல்லுகின்றது என்பதை கூட அறியாமல், இனம் புரியாத நோய்களுடன் தினமும் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

(வெண்கலம் CuSn (85% செம்பு Cu 29 + 15% தகரம் 50 Sn) (பித்தளை (CuZn) = செப்பு Cu 29 + துத்தநாகம் 30 Zn) இரண்டு உலோகமும் காந்தவியல் உள்ளது. (துத்தநாகம் மற்றும் தகரம் காந்த பண்புகளை கொண்டது)

நச்சு கனரக உலோகங்கள்: ஆர்சனிக், காட்மியம், நிக்கல், குரோமியம், பாதரசம், ஈயம், காலியம், கோபால்ட், அலுமினியம். ஆண்டிமனி மற்றும் செப்பு, செப்பு மனித உடலுக்கு ஒரு சுவடு கூறுகளாகத்தான் தேவைப்படுகின்றது. அளவுக்கு அதிகமாக எடுக்கப்படும் போது இதுவும் ஒரு நச்சு.

அலுமினியம் பொதி அட்டைகள், உணவுப்பொருட்களை சுற்றவும் அதிகமாக பயன்படுகின்றது. நிக்கல், குரோமியம் தண்ணீர் குழாய்களில் வெள்ளி பூச்சாகவும் காட்மியம் பெருமளவில் பெயிண்ட், வர்ண பூச்சுகளில் கலந்திருக்கின்றது. சுவரொட்டிகள், போஸ்டர்கள் வாயிலாக மழை நீரில் வழிந்தோடி குடிநீரில் கலக்கின்றது

இந்த உலோகங்கள் எல்லாம் இன்றைய வாழ்வியலில் பரவலாக்கப்பட்ட உலோகங்கள். நாங்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்கள், சாதனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளி பூச்சுகளாகவும் கலந்திருக்கின்றது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் வாழ்ந்தாலே போதும் உங்கள் மருத்துவத்திற்கான செலவுகள் தானாகவே குறைந்து போகும். கனிமச்சத்துக்கள் விற்றமின்கள் உடலுக்கு முக்கியம், ஏனென்றால் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துதல் அல்லது காயங்களைக் குணப்படுத்துதல் போன்ற பல்வேறு செயல்முறைகளுக்கு அவை தேவைப்படுகின்றன. பொதுவாக, சமச்சீர் உணவில் இருந்து நமக்குத் தேவையான பெரும்பாலான கனிமசத்துக்கள் மற்றும் விற்றமின்களைப் பெறுகிறோம்.

இருப்பினும் இது போன்ற நச்சு கனரக உலோகங்கள் உடலுக்கு அவசியமான கனிமசத்துக்களுடன் கலந்து உறுஞ்சப்படும் போது அவைகளும் பயன்பட முடியாமல் வீணாகின்றது அல்லது நச்சாக மாறுகின்றது. இதனுடன் அயோடின்-131 போன்ற அரை ஆயுள் கதிரியக்க தனிமங்கள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இணைந்து தைராய்டு தொடங்கி சிறுநீரகம் வரை பதம் பார்த்துவிட்டு போகும்.

கதிரியக்க அயோடின்-131, தைராய்டு ஹார்மோன் சுரப்புக்கு தேவையான நல்ல அயோடின் இருக்கவேண்டிய இடத்தில் ஒட்டி இருந்துகொள்ளும்.

அயோடின் 131 - கதிரியக்கச் சிதைவு மற்றும் அயோடினின் பண்புகள்: பிந்தையது பீட்டா கதிர்வீச்சாக வெளிப்படுகின்றது. கருவில் உள்ள 53 புரோட்டான்கள் மற்றும் 78 நியூட்ரான்கள் கொண்ட அயோடின் அணுவிலிருந்து, பீட்டா-மைனஸ் சிதைவின் மூலம் நிலையான (செனான்- Xe 54) 131 உருவாகின்றது.(நல்ல அயோடின் கருவில் உள்ள 53 புரோட்டான்கள் 74 நியூட்ரான்கள்)

இது தைராய்டு புற்றுநோய்க்கும் சுய-உடல்-தாக்கி நோய்க்கும் காரணியாகின்றது. சுற்றுப்புற மாசு, அணுவுலை விபத்து காலத்தில் அயோடின் நிறைந்த உணவுகள் மாத்திரைகளை எடுத்தால் கதிரியக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். நன்றி..

ஆர்சனிக், அரை உலோகம் மற்றும் கணினி உதிரிப்பாகங்களில் அரை கடத்தியாக பயன்படுகின்றது. ஆர்சனிக் இணைப்பு இரசாயன கலவைகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக