வெள்ளி, 29 ஏப்ரல், 2022

allergic histamine intolerance

அலர்ஜி/ஒவ்வாமை: எந்த மகரந்த ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வசந்தகாலத்தில் துன்புறுகின்றார்கள். கொரோனா,கோவிட்-19 நோய்குறிகளை தவிர்த்து மகரந்த ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை எப்படி கண்டறிவது, அதிலிருந்து எப்படி ஒரு பருவகால ஒவ்வாமை நோயாளி தன்னை பாதுகாப்பது. அதிக தும்மல், கண் எரிச்சல் இதை வேறுபடுத்தி காட்டுகின்றது.

செழித்து வளரும் மரங்கள் பூச்செடிகளின் அழகு பற்றி ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு கடினமான நேரம். கண்களில் நீர் வடிதல், மூக்கு ஒழுகுதல் மற்றும் தொண்டை அரிப்பு ஆகியவற்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றை விடுத்து, மரங்களின் மகரந்தமும் ஒரு காரணமாகும். + இதனுடன்  சுற்றுப்புற மாசு (N02) இணைந்து தொல்லை கொடுக்கும்

உங்கள் மொபைல்போன் காலநிலை அறிவிப்பு மற்றும் மகரந்த தகவல் சேவையானது எந்த மகரந்தம் எந்த செறிவில் பறக்கின்றது என்பதை துல்லியமாக கண்காணித்து சொல்லுகின்றது. மேலும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம் என்பதற்கான உதவிக்குறிப்புகளையும் அந்த சேவை வழங்குகின்றது.

இந்த சேவையின் அறிவிப்பை பார்த்து ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் அலர்ஜியை தூண்டும் மகரந்தத்தை அறிந்து அதிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அடிக்கடி இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்களில் அரிப்பு. தூக்கமின்மை, தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகளுக்கு. தாவரங்களின் மகரந்த மணிகள் காரணமாகும், இது ஒவ்வாமை நோயாளிகளில் ஒரு ஆன்டிபாடி எதிர்வினைக்கு வழிவகுக்கின்றது, இது ஒவ்வாமை அறிகுறிகளைத் தூண்டுகின்றது அதாவது உடலில் ஹிஸ்டமின் சகிப்பின்மையை ஏற்படுத்துகின்றது.

இது நபருக்கு நபர் மாறுபடும் மகரந்த ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து மகரந்தங்களுக்கும் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை, சில வகையான மகரந்தங்களுக்கு மட்டுமே ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகின்றது.

ஒவ்வாமை நோய் உள்ளவர் எந்த மகரந்தத்திற்கு எதிர்வினையாற்றுகிறார் என்பதை மருத்துவ பரிசோதனை மூலம் அறிவது முக்கியம். அல்லது எந்த காலத்தில் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகின்றது அந்த காலத்தில் எந்த மரம் பூத்திருக்கின்றது என்பதை வைத்தும் கூட அறிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக: நவம்பர் மாதம் ஆரம்பித்து ஜனவரி இறுதி வரை மாமரங்கள் பூத்திருக்கும் இந்த காலத்தில் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் அதுனுடைய மகரந்த மணிகள்தான் காரணம்,

ஐரோப்பாவில் வசந்தகாலத்தில் பெரும்பான்மையான மரங்கள் ஒரே நேரத்தில் பூக்கும் காரணத்தினால் எந்த மரம் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த காலத்தில் முகக்கவசம்(மாஸ்க்) அணிதல், உப்புநீர் கரைசல் கொண்டு நாசி கழுவுதல் மூக்கிலிருந்து மகரந்தத்தை கழுவுவதற்கு நிவாரணம் அளிக்கின்றது. மேலும் தினமும் சுத்தமான ஆடைகள் அணிதல், தலை கழுவுதல், வெளிப்பயணங்களை குறைத்துக்கொள்ளுதல்,

வீட்டு ஜன்னல்களில் மகரந்தத் வடிகட்டி திரைகளை பொருத்துதல், காற்று சுத்திகரிப்பு சாதனங்கள் உட்புற மகரந்த அளவைக் குறைக்க உதவுகின்றது உங்கள் காரில் உள்ள தூசி/மகரந்த வடிகட்டியை தவறாமல் அடிக்கடி மாற்ற வேண்டும் இந்த நடவடிக்கைகள் ஒரு மருத்துவரின் உதவியின்றி உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள உதவுகின்றது.

ஒவ்வாமை உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். உங்களுக்கு எந்த மகரந்தம் ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்துகின்றது என்பதை மருத்துவ பரிசோதனைகள் சந்தேகத்திற்கு இடமின்றி துல்லியமாக தீர்மானித்து சொல்ல முடியும். மேலும் ஆன்டிஹிஸ்டமின்கள் போன்ற மருந்துகளையும் மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம்.

சாதாரண தும்மல்தானே என்று இருந்துவிடாதீர்கள், பல ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்படாத மூன்றில் இருவருக்கு ஒவ்வாமை ஆஸ்துமாவாக மாறும் ஆபத்துள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதனுடைய ஒரு தொடர்ச்சியாக உணவு ஒவ்வாமைக்கும் வழிவகை தேடித்தரும். (நண்டு, இறால், ஆப்பிள், கத்திரிக்க்காய் புரத ஒவ்வாமை)

உணவு ஒவ்வாமை ஹிஸ்டமைன் சகிப்புத்தன்மை என்பது: உணவுடன் உட்கொள்ளும் ஹிஸ்டமைனுக்கு சகிப்புத்தன்மையின்மை  என்பதை காட்டுகின்றது.  இதற்கு காரணம் உடலில் சுரக்கும் ஹிஸ்டமைனை சிதைக்கும் நொதியம் டைமைன் ஒக்சிடேஸ் (DAO)  குறைபாடு அல்லது ஹிஸ்டமைன் மற்றும் DAO க்கு இடையிலான ஏற்றத்தாழ்வு. ஹிஸ்டமைனை சிதைக்கும் நொதியம் "டைமைன் ஒக்சிடேஸ்"  மாத்திரை வடிவிலும் கிடைக்கின்றது.

ஒரு முறை நோய் எதிர்ப்பு சக்தி மகரந்தங்களுக்கு எதிராக தன்னுடைய சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அது உங்கள் உடலில் இருக்கும். உங்களுக்கு எதிரான மகரந்தங்கள் காற்றில் பறக்கும் போது திரும்பவும் தலைதூக்கும். இதன் பொருள் அலர்ஜி/ஒவ்வாமையை எந்த மருத்துவத்தினாலும் குணப்படுத்த முடியாது.

மருத்துவத்தில் ஒவ்வாமைக்கு நோயெதிர்ப்பு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. „ஹைபோசென்சிட்டிசேஷன்“ ஒவ்வாமை ஏற்படுத்தும் மகரந்தமணிகளுடனான ஒரு சமாதான ஒப்பந்தம் இந்த மகரந்த மணிகள் வந்தால் அதை சும்மாவிட்டுவிடு அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இப்படித்தான் உங்கள் உடலை வித்தியாசமாக செயல்பட கற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றது இந்த சிகிச்சை முறை. இது உங்கள் சொந்த ஒவ்வாமைக்கு எதிராக மகரந்த சாறுகளை ஊசி அல்லது மாத்திரைகள்/சொட்டுகளாக எடுத்துக் கொள்ளலாம். (சிகிச்யைகாலம் இரண்டு,மூன்று வருடங்கள்)

இந்த சிகிச்சை சிறு பிராயத்தில் மேற்கொண்டால் ஒரு சில குழந்தைகளுக்கு சாத்தியப்படுகின்றது, வளர்ந்தவர்களுக்கு அவ்வளவாக பலன் அளிப்பதில்லை. குழந்தைகளை அவ்வளவு சுத்தமாகவும் அதை தொடாதே இதை செய்யாதே என்று பொத்திப்பொத்தி வளர்காதீர்கள்.

அவர்களை தெருவிலும் மணலிலும் விளையாட அனுமதியுங்கள் இந்த உலகத்தினினுடான ஒரு தொடர்பினை ஏற்படுத்தி கற்றுக்கொள்ளட்டும் நோய்எதிர்ப்புசக்தி எதையெல்லாம் மழலை பருவத்திலிருந்து அறிந்து வருகின்றதோ அதையே வளர்ந்துவரும் காலத்திலும் அனுசரித்து போகின்றது. சிறுவயதில் மாமரத்தின் பூக்களுடனான ஒரு தொடர்பு பிற்காலத்தில் அதை சகித்திக் கொள்கின்றது.

நகரத்தில் வளர்ந்த ஒரு பிள்ளை கிராமத்திற்கு செல்லும்போது புதிதாக மாமரத்தின் மகரந்தங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதை ஒரு அந்நியப்பொருளாக நினைத்து எதிர்க்கின்றது.

இதற்கு காரணம் பெரும்பான்மையான மகரந்த மணிகள் வைரஸ், ஒட்டுண்ணிகளின் வடிவங்கள் போன்றது. இந்த வடிவத்தை பார்த்து நோய் எதிர்ப்பு தவறாக புரிந்துகொள்கின்றது. இந்த தவறான புரிதல் ஒவ்வாமையின் வெளிப்பாடு. இது போன்ற நடவடிக்கைகள் ஒவ்வாமை குறைபாட்டினை முன்கூட்டியே வராமல் தடுக்கலாம். மற்றும் மருந்து மாத்திரைகள் மூலம் அதனுடைய வேகத்தை தணித்துக் கொள்ளமுடியும்.

மருத்துவ சந்தையில் கிடைக்கும் ஆன்டிஹிஸ்டமின்கள் போன்ற மருந்துகள் ஒவ்வாமை அறிகுறிகளின் தீவிரத்தை கணிசமாகக் குறைக்க உதவுகின்றன. நன்றி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக