திங்கள், 16 மே, 2022

நியோபியம்-Nb அணு எண் 41, அரிதாக நிகழும் சாம்பல் நிறத்தில் உள்ள ஒரு கனரக உலோகம். இது ஒரு இரசாயன தனிமம் மற்றும் மாறுதல் உலோகங்களில் ஒன்றாகும். கால அட்டவணையில் 5 வது காலகட்டத்திலும் 5 வது துணைக்குழுவிலும் உள்ளது. தங்கம் வெள்ளிபோல் கதிரியக்கம் மற்றும் நச்சுத்தன்மை இல்லாதது.

கைவினைபொருட்கள், ஆபரணங்கள் மற்றும் சிறு தொழில் கருவிகள், எலெக்ட்ரானிக் சாதனம், வெல்டிங் பற்றவைப்பு செய்வதற்கு நல்ல இணக்கமான ஒரு உலோகம். இது மாறுபட்ட மின் அழுத்தத்தில் பல வர்ணங்களாக, மயில் நிறங்கள் போன்று மாறக்கூடிய ஒரு மாயாஜால தனிமம்.

இதன் நிமித்தம் கைவினைபொருட்கள், ஆபரணங்கள் தயாரிப்பில் அதிகமாக விரும்பி பயன்படுத்தப்படுகின்றது. பல வண்ண திருமண மோதிரங்கள், காதணிகள் இந்த உலோகத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றது.

நியோபியம் 1801 இல் சார்லஸ் ஹாட்செட் என்பவரால் முதல் முதலில் கொலம்பியாவில் உள்ள ஒரு நதிப் படுகையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தனிமத்திற்கு கொலம்பியம் என்று அன்று பெயரிட்டார். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நியோபியம் கொலம்பியம் என்றுதான் அழைக்கப்பட்டது. பிற்பகுதியில் அது பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

1844 ஆம் ஆண்டு வரை பெர்லின் பேராசிரியர் ஹென்ரிச் ரோஸ், நியோபிக் மற்றும் தந்தாலக் அமிலம் இரண்டும் வெவ்வேறு பொருட்கள் என்று காட்டினார். ஹாட்செட்டின் அதன் பெயரைப் பற்றி அறியாத அவர், இது தந்தாலத்துடன் (73-Ta ) ஒத்திருக்கின்றதை பார்த்து, மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கொலம்பியம் தனிமத்திற்கு தந்தாலஸின் மகள் நியோப் என்று பெயரிட்டார்.

தந்தாலம்-74Ta உலோகமும் ஆபரணங்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. பல வண்ண திருமண மோதிரங்கள்: அரிதான சிவப்பு தங்கம் இந்த உலோகத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றது.

பரிசு கேடயம், வெற்றி பதக்கம், நினைவு டொலர், மயில், பொன் வண்டு, கடவுள் சிலைகளை  நியோபியம் தனிமத்தில் செய்து அசத்த முடியும்.  ஒரு மாறுதலுக்காக தங்கம் வெள்ளியை விடுத்து, இது போன்று அரிதான உலோகங்களினால் செய்யப்பட்ட மோதிரங்களை உங்கள் திருமணத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அனோடிக் ஒட்சிசனேற்ற நிறம். அனோடிக் ஒட்சிசனேற்றத்தில், ஒரு மின்சாரம் வெளிப்புற சுற்று வழியாக பாயும் போது பொருட்கள் ஒட்சிசனேற்றப்படுகின்றன. ஒட்சிசனேற்றம் என்பது ஒரு பொருள் எலக்ட்ரான்களை இழக்கின்றது. இவை ஒரு மின்முனை, அனோட் மூலம் எடுக்கப்படுகின்றன.

அனோட் என்பது: ஒரு மின்னாற்பகுப்பு கலத்தில் நேர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட மின்முனை (+நேர்மறை துருவம்).

சல்பூரிக் அல்லது குரோமிக் அமிலம்) மின்னாற்பகுப்பு முறையில், . அதாவது மின்னோட்டத்தால் சிதைந்தது. அனோட் மேற்பரப்பில் (நியோபியம்) ஒக்சைடு அடுக்கு உருவாகின்றது (மாறுபட்ட மின் அழுத்தத்தில் நிறங்கள் உருவாகின்றது) (தங்க முலாம் பூசும் ஒரு தொழில் முறை)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக