சனி, 28 ஆகஸ்ட், 2021

 ஷியாக்கள்\சன்னிகள்அரசியல் மற்றும் மத மோதல்கள்.

ஐசிஸ், எகிப்திய புராணங்களின் தெய்வம் இங்கிருந்து இவர்களின் கதை தொடங்குகின்றது. isis -k - இஸ்லாமிய அரசு - மாநிலம்  கோராசன் மாகாணம் இதுதான் இதனுடைய விரிவாக்கம் இந்த அமைப்பு பாகிஸ்தானிலிருந்து இஸ்லாமியர்களால் 2015 இல் நிறுவப்பட்டது வடக்கு மற்றும் வடகிழக்கில் இவர்களின் செல்வாக்குள்ள பகுதிகளாகும்


பெரும்பாலும் ஆப்கானிஸ்தானின் ஆதிக்கம் உள்ள சன்னி முஸ்லிம் தலிபானுடனான போட்டி. இஸ்லாமிய தலிபான் இயக்கம், ஆப்கானிஸ்தானில் 1994 இல் நிறுவப்பட்டது.


ஒரு நாடு என்பது நாலு காவல் நிலையங்களை கொண்டு கட்டமைக்கப்பட்டது கிடையாது அது தரைப்படை விமானப்படை, கடல்படை என மிகப் பிரமாண்டமான இராணுவ கட்டமைப்பைகொண்டது.


ஆப்கானிஸ்தான் அரசு, பாதுகாப்பு படை 20 வருடங்களாக அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பா என்று மிகச்சிறந்த இராணுவத்தை கொண்ட நாடுகளினால் பயிற்சி கொடுக்கப்பட்டு கட்டமைக்கபட்டது.


அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு சிறு குழுக்களிடம் மண்டியிட்டு போகாது. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இவர்களினால் கட்டமைக்கப்பட்ட விமானப்படை கடல்படையெல்லாம் எங்குபோனது, ஆப்கான் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு, எவ்வளவு பொருளாதாரம், உயிர்களை அமெரிக்கா கூட்டுபடைகள் இழந்திருப்பார்கள் மற்றவர்களை பாதுகாக்கபோய் இவர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்திருக்கின்றார்கள். அந்த தியாகத்திற்கு ஆப்பான் மக்கள் என்னபதில் சொல்லப்போகின்றார்கள்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தலிபான்களுடனான ஒரு ஒப்பந்தம் 


தலிபான்கள் தங்கள் இறையாண்மை கடமைகளை நிறைவேற்றுகின்றார்கள் மற்றும் பிற பயங்கரவாத குழுக்களுடனான உறவை துண்டித்து, வன்முறையைக் கைவிட்டு, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் கணிசமான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்ற யோசனை,குறிப்பாக1993 முதல் பல நாடுகளில் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய அல்-கொய்தா, சன்னி-இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை.


இந்த வாக்குறுதிகளுக்கு ஈடாக, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் ஏப்ரல் இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறுவதாக தலிபான்களுக்கு உறுதியளித்தது.


புதிய அமெரிக்க, ஜோ பைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான  அமைதி ஒப்பந்தத்தை ஆய்வுகளுக்கு உட்படுத்துகின்றது. அவர்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றாததால், வாஷிங்டனும் இப்போது திட்டமிட்ட படைகளை திரும்பப் பெறுவதை மறுபரிசீலனை செய்கின்றது.


இது கொஞ்சம் பழைய செய்திதான் இருப்பினும் இதற்குள்ளே ஒரு சில தகவல்களை உங்களால் எடுத்துக்கொள்ளமுடியும். சமிபத்தில் நடந்த குண்டு வெடிப்பின் பின்னணி என்ன என்று உங்களுக்கு இப்ப தெரிந்திருக்கும்.


இந்த இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையிலே ஒரு ஒற்றுமையான  விடையம் ஒன்று இருக்கின்றது அதுதான் "கலிபா அரசு"  இந்த ராஜ்ஜியத்தை உலகம் முழுவதும் அமைக்க வேண்டும் என்பது இவர்களது புராணம் இந்த காரணத்திற்காக இவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்களா


அச்சப்பட தேவையில்லை 99 விழுக்காடுகள் உலக மக்களினால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்று, இன்றய காலத்திற்கு சாத்தியப்படாதது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஒரு தலைமுறை சண்டையை தவிர வேறு எதுவும் கற்றுக்கொள்ளாத கல்வி அறிவு இல்லாத ஒரு சமூகமாக வளர்ந்து நிற்கின்றது. படித்த கல்விமான்கள் பெண்களின் உதவியில்லாமல் ஒரு  அரசாங்கத்தை தலிபான்களினால் தனியாக நடத்திவிட முடியுமா


கலிபா  வாழ்க்கை  முறை அல்லது ஒரு வாழ்வியல் வடிவம்  கலிபா என்பதின் பொருள்  பிரதிநிதித்துவம். இது 7 ஆம் நூற்றாண்டில் வேர்களைக் கொண்ட அரசாங்கத்தின் ஒரு வடிவம். இது முகமது நபியின் மரணத்திற்குப் பிறகு முஸ்லீம் மாநிலத்தில் வளர்ந்தது.

இதை பின்பற்றி வாழுகின்ற மக்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். ஆப்கான் தலிபான் தலைவர்கள் இதை மீண்டும் பழுதுபார்த்து தூசிதட்டி நவீன முறைப்படுத்தி நடைமுறைபடுத்துவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றார்கள்.


பழைய முறைகள் பழக்க வழக்கங்கள்  மீண்டும் தங்கள்மேல்  திணிக்கப்படுமோ என அஞ்சிவெளிநாட்டு படைகளின் பாதுகாப்பில்  20 ஆண்டுகாலம் சுதந்திர காற்றை சுவாசித்த மக்கள் குறிப்பாக ஆப்கான் பெண்கள் புதுமை விரும்பிகள் அமெரிக்கா கூட்டு படைகளுக்கு ஆதரவு அழித்தவர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக