டார்வினின் பரிணாமக் கோட்பாடு
டார்வின் கோட்பாடு தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.கோட்பாடு என்பது ஒரு ஊர்ஜிதம், உறுதியாக இல்லாமல் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கருத்தை அடித்தளமாக கொண்டு மெய்ப்பித்தலை முன்மொழிகின்றது.
டார்வினின் பரிணாமக் கோட்பாடு இன்று நமக்குத் தெரிந்த அத்துனை விலங்கு மற்றும் தாவர இனங்களும் பிற உயிரினங்களிலிருந்து உருவானது என்று கூறுகின்றது. டார்வின் இந்த வளர்ச்சி வடிவத்தை ஒரு இனத்தின் தேர்வு என்று குறிப்பிட்டு, அவைகள் அவற்றின் சூழலுக்கு ஏற்ப சிறந்த தழுவல் கொண்ட ஒரு இனத்தின் சந்ததியினர் மட்டுமே இந்த பூமியில் வாழ தகுதியுள்ளவையாக தெரிவாகி இன்று வாழ்கின்றனர்கள்.
டார்வினுக்கு தொல்லுயிரினம் டைனோசர்கள் இந்த பூமியில் வாழ்ந்த கதை தெரியுமா.. கண்டிப்பாக அவருக்கு தெரிந்திருக்க வாய்பே இல்லை அப்படி தெரிந்திருந்தாலும் இன்று நாங்கள் அறிந்து வைத்திருப்பது போல் அவர் தெரிந்திருப்பதற்கு அன்று சாத்தியமே இல்லை.
அப்படி தெரிந்திருந்தால் கண்டிப்பாக மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்ற தனது நிலைப்பாட்டை மாற்றி எழுதியிருப்பார். டார்வின் கோட்பாடு எங்களுடைய சமகாலத்து உயிரினங்களின் தோற்றத்திலிருந்து தொடங்குகின்றது. டார்வின் வாழ்ந்த காலம் பிறப்பு: பிப்ரவரி 12,1809, ஐக்கிய இராச்சியம் இறப்பு: ஏப்ரல் 19,1882
டைனோசர்களின் முதல் புதைபடிவம் 1859 இல் கண்டுபிடிக்கப்பட்ட காம்ப்சோக்னாதஸ் படிமம் உலகின் முதல் முழுமையான டைனோசர் எலும்புக்கூடாகும். இருப்பினும் 19ம் நூற்றாண்டுக்கு பிற்பாடுதான் அதிகமாக அதை பற்றிய கதைகள் வெளியில் தெரியவந்தது.
இதற்கு முன்னால் வாழ்ந்த தீர்க்கதரிசிகள், தத்துவஞானிகள், மதவாதிகள் விஞ்ஞானிகள் எவருக்குமே தெரியாது டைனோசர்கள் என்ற தொல்லுயிரினம் இந்த பூமியில் வாழ்ந்து அழிந்திருக்கின்றது என்று.
டார்வினுக்கு தெரிந்தது மட்டும் உலகம் கிடையாது அவருக்கு பின்னால் பல விஞ்ஞானிகள் பல நல்ல கண்டுபிடிப்புகள் அறிவியல் கருத்துகளை கண்டு சொல்லியிருக்கின்றார்கள்.
சுமார் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து ஒட்டு மொத்தமாக அழிந்து போன. டைனோசர்கள் மற்றும் இன்று வாழ்கின்ற உயிரினத்திற்கும் இடையில் குறைந்தது 70 மில்லியன் வருடங்கள் கடல் கூட வற்றிப்போய் ஒன்றுமே இல்லாமல் வெறுமனவே இந்த பூமி கிடந்தது.
டைனோசர்கள் அழிக்கப்பட்டதிற்கு பல காரணங்களை நவீன விஞ்ஞானம் சொல்லுகின்றது. அதுவும் ஒரு கோட்பாடுதான் பரவாயில்லை இருக்கட்டும். பரப்பிரமத்தினால், உணவு பற்றாக்குறை என்ற ஒரே ஒரு காரணத்தின் நிமித்தம் டைனோசர்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே அழிக்கப்பட்டது.
ஒரு டைனோசர் இலை தழை மாமிசம் கடல் உயிர்கள் என ஒரு நாளைக்கு தொன் கணக்கில் உணவு தேவைப்படுகின்றது. இதனால் காடுகள் தங்கள் பொலிவை இழந்து அழியத்தொடங்கியது. இன்று யானைகள் மரக்காடுகளை அழிப்பது போல் அன்றும் நடந்தது. வளிமண்டலம் 30 விழுக்காடுகள் அதனது ஒட்சிசன் செறிவை இழந்தது. உருவத்தில் பெரிதான விலங்குகள் சுவாசிக்க அதிகளவு ஒட்சிசன் தேவைப்பட்டதினால் சுவாசிக்க முடியாமல் இறந்து விழுந்தது.
இன்றைய பாக்கிஸ்தானாக இருக்கும் நிலப்பரப்பு பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் மழைக்காடுகளாக இருந்த ஒரு இடம் இங்கும் டைனோசர்களின் புதைபடிவங்கள் கிடைத்திருக்கின்றது. அந்த காடுகளும் பருவநிலை மாற்றத்தினால் அழிந்திருக்கின்றது.
வெறும் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னால் இருந்தே இந்த பூமி பூத்துக் குலுங்க தொடங்கியது. அதுவும் டைனோசர்களின் காலத்தில் வாழ்ந்த உயிரினங்களின் மரபணுவை கொண்டவைகளாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.
டைனோசர் காலத்து விலங்குகள் பெரிய உருவத்திலும் கொம்பு மற்றும் அடர்த்தியான மயிர்களும் இல்லாத முரட்டு தோல் கவசம் உள்ள முட்டை இட்டு அடைகாக்கும் விலங்குகள்.
இன்று எங்களுடைய காலத்து உயிரினங்கள் வந்த பிற்பாடுதான் அடர்த்தியான மயிரும் கொம்பு வைத்த குட்டி ஈனும் பாலுட்டி விலங்குகள் உருவானது.
டைனோசர் காலத்து இராட்சத கடல் ஆமை, முதலைகள், சுறா திமிங்கிலங்கள் அன்று எப்படி ஆறு மீட்டர் உடலமைப்பை கொண்டுள்ளதோ இன்று அதே விலங்குகள் உருவத்தில் மட்டும் சின்னதாக ஒரு மீட்டர் நீளமுள்ளதாக உருவாகியிருக்கின்றது.
எடுத்துக்காட்டாக: “மெகாலோடன்” இராட்சத சுறாவை எடுத்துக் கொண்டால் அதனுடைய சாம்பல் நிறம், மூஞ்சியின் அமைப்பு, சங்கிலித்தொடர் வெட்டும் பற்கள் இன்றுள்ள சுறாவை போன்றுதான் அன்றும் இருந்தது. பல்லுயிரினம் காட்சியகம், தொல்லுயிர் அருங்காட்சியகம் சென்றால் பார்க்கமுடியும் நான் நேரில் சென்று பார்த்ததைதான் இதில் பதிவிடுகின்றேன்.
இன்றைய உயிரினங்கள்/மனிதனுக்கு இருக்கும் அதே இதயம், கல்லீரல் நுரையீரல் மூளை, எலும்பு தசை,நரம்பு செரிமான கருவிகள் நோய் எதிர்ப்பு சக்தி என்று உடலின் அத்திய அவசிய உறுப்புகளெல்லாம் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னாலிருந்தே தோன்றிவிட்டது. என்ன கொஞ்சம் பெரிது பெரிதாக இருந்தது அவ்வளவுதான் வித்தியாசம்.
ஒரேயொரு கேள்வி மட்டும்தான் தொக்கி நிற்கின்றது பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் அழிந்த ஒரு உயிரினத்தின் மரபணுவை யார் சேமித்து வைத்து அதேபோல் சின்னதாக புதிய உயிரினங்களை உருவாக்கியது. இது என்னுடைய ஆய்வின் கட்டுரை. நன்றி மகேஷ்-இரவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக