செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கொரோனா மற்றும் கர்ப்பம்💚❤💖தடுப்பூசியின் அவசியம் குறித்து இன்னும் அறியப்படாமலேயே பல மக்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம், நீங்கள் ஏன் தடுப்பூசி போடவில்லை என்று  கேட்டால் அதற்கான பதில் பத்தாம் பசலித்தனமானதாக இருக்கும்.

பாண்டமிக் காலத்தில் கர்ப்பம் தரிப்பது எவ்வளவு தூரம் ஆபத்தானது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பெண்கள் கர்ப்பமாகும் போது எதிர்பாராமல் கொரோனா டெல்டா வைரஸ் தொற்று ஏற்படுவது அது கருவிலிருக்கும் சிசுவை பாதிக்கும்.

சுவாசக்கோளாறு கருத்தரிப்பதை கடினமாக்கும், அப்படி கருத்தரித்தாலும் அந்த குழந்தையின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடும். வைரஸ் தொற்று ஏற்பட்டு தாய் சுவாசிப்பது கடினமாகும் போது கருவிலிருக்கும் மழலைக்கு போதுமான ஒட்சிசன்-O2  கிடைக்காமல் மூளை பாதிப்பு ஏற்படலாம். கருச்சிதைவு அல்லது ஊனமுள்ள பிள்ளைகள் பிறப்பதற்கு காரணியாக அமையலாம்.

நீங்கள் குழந்தை பெற விரும்பினால், உங்கள் தடுப்பூசி பாதுகாப்பைகர்ப்ப காலத்திற்கு ஓரிரு வருடங்களுக்கு முன் நல்ல நேரத்தில் சரிபார்க்க வேண்டும் தேவைப்பட்டால், கொரோனா, சிக்கன் பாக்ஸ், அம்மை மற்றும் குறிப்பாக ரூபெல்லாவுக்கு எதிராக தடுப்பூசி  கண்டிப்பாக போட வேண்டும், முன்கூட்டியே திட்டம் போடுவது தாய்க்கும் சேய்க்கும் ஒரு பாதுகாப்பான பக்கத்திலிருக்க உதவுகின்றது.

பொதுவாக, குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு தீவிர நோய்களின் முன்னேற்ற ஆபத்துக்கள் குறைவாகவே உள்ளது. காரணம் கருத்தரித்த கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சாதாரண காலத்தைவிட  பத்துமடங்கு அதிகமாகவே இருக்கும் இதனால் குறைவான அறிகுறிகளை உருவாக்குகின்றன, நோய்காப்புத்திறன்  அவ்வளவு வீரியம் மிக்கதாக கருவை காத்துவரும்இதன் நிமித்தம் நோயின் கடுமையான போக்கிற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்பது கருவுற்ற தாய்மார்களுக்கு  ஆறுதலளிக்கின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக