ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

 👐கைரேகை வித்தியாசம் பெரும்பாலும் ஆள்க்காட்டி விரல் ரேகை ஒவ்வொரு தேசியத்திலும் ஆண் பெண் இருபால் மக்களுக்கு, மூன்று விதமான மாதிரி வடிவங்களில் அதற்குள்ளே எண்ணில் அடங்காத சூட்சமங்கள் உள்ளடக்கப்பட்டு அமையப்பெற்றிருக்கும், அதில் ஏதாவது ஒன்று தான் என்னுடைய / உங்களுடைய கைரேகையாக இருக்கும்.

டிஎன்ஏ போல், ஒவ்வொரு கைரேகையும்  நூறு விழுக்காடு தனித்துவமானது, இது ஆண் அல்லது பெண்ணினுடைய கைரேகை என்று உடனடியாக சொல்லி விட முடியும், ஆணின் கைரேகை பதிவுகள் சற்று பெரியதாகவும் அதிலுள்ள பாப்பில்லரி வரிகள் என்று அழைக்கப்படும் ரேகைகள் அதிகமாகவும் விரிசலடைந்தும் காணப்படும்.

உங்களுடைய சொந்த குடும்பத்திலுள்ள கைரேகை அத்துனையும் ஒரு ஒழுங்கான மரபுரிமை பெற்றிருக்கும், உதாரணத்திற்கு வீட்டுக்குள்ளே நுழைந்த திருடனின் கைரேகையுடன்  ஒப்பீடு செய்து பார்க்கையில்   திருடனின் கைரேகை  தனித்திருப்பது தெரிய வரும்.

கைரேகையின்  அடிப்படையில் ஒரு தேசிய இனத்தின் தோற்றத்தை சுட்டிக்காட்டி சொல்லி விட முடியும் ஏனென்றால், உலக மக்கள் சுழல்கள் மற்றும் சுருள்/அரை நான், வில் /வளைவு வடிவ அடிப்படை வடிவங்களாக பிரிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒரு கைரேகையில் அடிப்படை  புள்ளிகள் 12 💙💚💗♥♫ ♪♥கைரேகை என்பதுவெறுமன கருவறையில் ஏற்பட்ட சுருக்கம் மட்டும் கிடையாது மாறாக அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டு,   அதற்குள்ளே எண்ணற்ற தகவல்கள் பொறிக்கப்பட்ட பரம்பரை வடுக்கள்.

💜சுழல்கள் பெரும்பாலான ஐரோப்பியர்கள் மத்தியில் இந்த சுழல் மாதிரியை காணமுடியும். இத்தகைய மக்களின் குணாம்சத்தின் அடிப்படையில் பார்வையிடுகையில் ஒரு அமைதியான, சமச்சீர் தன்மை பேசுகின்றவர்களாகவும்,  திறந்த மனப்பான்மை உடையவர்களாகவும் எளிதில் மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

💚வில் வடிவம் பெரும்பாலான கலப்பின மக்கள் மத்தியில் இந்த சுருள் மாதிரியை காணமுடியும். ஒரு முறை ஒரு முடிவை எடுத்து விட்டால் அதை இறுதி வரைக்கும் எடுத்துச் செல்லும் மனப்பாங்குள்ளவர்கள், மற்றும் புத்திக் கூர்மை தன்நம்பிக்கை, முடிவுகளை மாற்றி அமைக்கும் தன்மை, தனக்கு சரி என பட்ட ஒரு விடையத்தை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பது மேலும் கடினமான தருணங்களில் எதையாவது  செய்து சமாளிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

💛சுருள் வடிவம் பெரும்பாலான ஆசியா மக்கள் மத்தியில் இந்த சுருள் மாதிரியை காணமுடியும். அறிவு ஆற்றல், இசை கலை மொழி வேளாண்மை என பல பழைமையான விடையங்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் மற்றும் நீதித்துறை, விஞ்ஞான நடவடிக்கைகளில் நல்ல நிருவாகத் திறமை இருக்கும் மேலும்  நல்ல சிந்தனையாளர் ஆவார்.

முன்னத்தே சொல்லப்பட்ட தகவல்கள் அத்துனையும்  பொது விதிக்கு உட்பட்டு எழுதப்பட்டதே தவிர இந்த கைரேகை உள்ளவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் அல்லது இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை, இவர்களின் குணாம்சம் , தனித்தன்மைகள் மாறுபட்டுக் கூட காணப்படலாம் என்பது குறிப்பிட தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக