ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

இந்த பேரண்டத்தின் இயக்கம் முழுவதும் தன்னிச்சையானது, பரப்பிரம்மம், அன்பின் பரிசாக அதில் சரி பாதியை நாங்கள் வாழுகின்ற இந்த பூமிக்கு  அரும் கொடையாக கொடுத்திருக்கின்றது.

கட்டுரை நீண்டுகொண்டு போகாமல் இருக்க எடுத்துக்காட்டாக ஒன்றை மட்டும் சொல்லி, நான் சொல்ல வந்த விஷயத்தை எடுத்துசெல்கின்றேன்நீங்கள் ஒரு கல்லை மல்லாக்க/செங்குத்தாக வானத்தை நோக்கி எறிந்தால் அந்த கல் கீழ் நோக்கி விழுவது தன்னிச்சையானது, எறிவது மட்டும்தான் உங்களுடைய வேலை அதை கீழே விழுத்துவது பரப்பிரம்ம சக்தியின் வேலை.

அந்த கல் எந்த நேரத்தில், எந்த விசையில் எந்த கோணத்தில் யார் தலை மேல் விழும் என்பதை கணக்கிட்டு சொல்வதுதான் விஞ்ஞானம்.

நாங்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் பாதி சுமையை, வேலையை எங்களுடன் இணைந்து இந்த பரப்பிரம்ம சக்தியும் செய்கின்றது. நீங்கள் பத்து கிலோ நிறையுள்ள ஒரு பொருளை தூக்கினால் அதில் சரிபாதி, ஐந்து கிலோ எடையை இயற்கை தூக்குகின்றது.

அதிவேகமாக சுழலும் ஒரு பொருளை ஒற்றை விரலினால் தூக்க முடியும், அது தூக்கமுடியாத பாரமாக இருந்தாலும். ஆஞ்சநேயர் தத்துவம்  எடுத்துக்காட்டாக எவராலும், ஒரு கால்பந்தை ஒரு விரலினால் தூக்கமுடியாது. அதை வேகமாக சுத்திவிட்டு தூக்கினால் ஒரு சிறு பையனினால் கூட ஒரு விரலில் வெகுசுலபமாக தூக்கமுடியும்.    

மனித உடலின் சரிபாதி தொழில்பாடுகள் தன்னிச்சையானது, அதன் இயக்கத்திற்கு உயிரின்விசை அவசியமில்லாதது. எடுத்துக்காட்டாக சுவாசித்தல் கண்ணிமைப்பது, உணவு விழுங்குவது அந்த உணவு கழிவாகும் போது வெளியேற்றுவது.

பரிணாமவளர்ச்சியின் மாற்றமும் தன்னிச்சையானது அதற்கான காரணங்களை நம்மால் தேடமுடியாது நாம் சாப்பிடுகின்ற உணவு கூட ஒரு காரணியாக இருக்கலாம்.

கருவிழி நிறமிகளின் வித்தியாசங்கள். ஏன், மனிதனுக்கு மனிதன் கருவிழியின் நிறங்கள் வித்தியாசப்படுகின்றது. கருவிழியின் நிறத்திற்கு காரணமாக இருப்பதும் தோலின் நிறத்திற்கு காரணியாக இருக்கும் மெலனின் நிறமிதான், ஆதிமனிதனின் கருவிழியின் நிறம் பழுப்பு (பிரவுன்) நிறம்தான். பிரவுன் வர்ணம் அடர்த்தியாகும் போது அது எங்களுக்கு கருமையாக தெரிகின்றது.

கலபின மக்களின் வருகைக்கு பிறகுதான் குறிப்பாக வெள்ளை நிறத்தோல் மக்களின் வருகைக்கு பிறகுதான் நீலம், பச்சை, வானவில் நிறத்தில் கருவிழி உள்ள மனிதர்களை காணமுடிந்தது. உலகில் இன்று 74 விழுக்காடுகள் பிரவுன் 15 விழுக்காடுகள் வானவில் 10 விழுக்காடுகள் நீலம் 1 விழுக்காடு பச்யை நிறம் உள்ள மனிதர்கள் வாழ்கின்றார்கள்.

வெள்ளை நிறத்தோல் ஒரு நிறம் கிடையாது மாறாக அதுவொரு குறைபாடு, இது போல் கருவிழியின் வானவில் நிறத்திற்கும் மெலனின் நிறமியின் குறைபாடுதான் காரணமாக இருக்கின்றது.. உடலின் ஏற்படும் மெலனின் குறைபாடு வெள்ளைநிறத்தோல் நீலநிற கண்கள் இன்று அழகின் இலக்கனமாக மதிப்பிடப்படுகின்றது

உடலில் ஏற்படும் குறைபாடு ஒரு ஊனமாக மதிப்பிடப்படாமல் இந்த உலகத்திற்கு அழகுள்ள மனிதர்களை தந்தது மட்டுமில்லாமல் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகளையும் தந்திருக்கின்றது.

ஜெர்மன் இசையமைப்பாளர் மற்றும் பியானோ கலைஞர், இசைஞானி லுட்விக் வான் பீத்தோவன் அவருக்கு காது சரியாக கேட்காது, அதற்காக கண்ட கண்ட மருத்துவமெல்லாம் பார்த்து உள்ளதையும்  கெடுத்துக்கொண்டார்

அவர் தனது கச்சேரிகளில் தனது காதுகளினால் தான் வாசிக்கும் இசையை கேட்கும்படி மிகவும் ஆழமாக பலத்த சத்தமாக பியானோவை வாசிப்பார் இதுவே அவருக்கு ஒரு முகவரியை கொடுத்தது. உடலில் ஏற்படும் ஒரு சில குறைபாடு நேர்மறையான பாதிப்பை மனிதனுக்கு கொடுத்திருக்கின்றது என்பதுதான் உண்மை.

இயற்கை மருத்துவத்தில் கருவிழியில் ஏற்படும் மாற்றங்களை வைத்து உடலில் பாதிப்புக்களை கண்டறிதல் கருவிழியைக் கண்டறிவதன் மூலம், நோய்கள் மற்றும் அழுத்தங்களை (பக்கவாதம்) முன்கூட்டியே கண்டறிவது சாத்தியமாகும்.

நோய்கள், பல ஆண்டுகளாக பாதிப்பு செயல்பாட்டு இயல்புடையதாக இருந்தும்  உடலில் உருவ சான்றுகள் ஏதும் இல்லாமல் இருக்கும் அதாவது நோயாளிகளுக்கு புகார்கள் உள்ளன, ஆனால் மருத்துவத்தினால் இரத்த பரிசோதனை, ஸ்கேன் எடுத்தும் கண்டுபிடிக்கமுடியவில்லை .

கருவிழியை கண்டறியும் போது, ​​இந்த செயல்பாட்டு கோளாறுகளை கண்களில் கண்டறிய முடியும். பல தசாப்தங்களுக்குப் பிறகு வெளியேறக்கூடிய சுமைகளை / படிவுகளை   கூட இந்த வழியில் காணலாம். (போதைவஸ்து பாவனை, அதிகமாக நுகரப்படும் செப்பு போன்ற தாதுக்கள், உணவின் நச்சு, நீங்கள் கடந்துவந்த பாதையை சுட்டிக்காட்டும்  ஒரு பதிவு பெட்டி (கருப்பு பெட்டி) மரணத்திற்கு பின்னால் கூட மரணத்திற்கான காரணத்தை துல்லியமாக சொல்லிவிடும்.

கருவிழி ஒரு சுருக்கு தசையாக செயல்படுகின்றது  அதிக வெளிச்சம் படும்போது விழி-லென்ஸ் (கேமரா ஷட்டர்) சுருங்கியும் மங்கலான ஒளியில் விரிவடையவும் செய்கின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக