கடவுள் நம்பிக்கையிலும், இலட்சியத்திலும் தாங்கள் எடுத்துக் கொண்ட கொள்கையிலும் இருந்து சற்றும் விலகாத ஒரு தொகுதி மக்கள் இந்த 22 ஆம் நூற்றாண்டிலும் மிக எளிமையான வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்று சொன்னால் நம்ப முடிகின்றதா?
இதை விட ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் மின்சாரப் பொருட்கள், நவீன அறிவியல் உபகரணங்கள் எதையும் இவர்கள் உபயோகப்படுத்துவதில்லை என்பது தான் அந்த சுவையான செய்தி.
இவர்களைப்பற்றி அறிந்ததில் இன்னும் பல சுவையான தகவல்களை அறியமுடிந்தது இவர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதே கிடையாது கல்விபயில தங்களுக்குள்ளே குரு குலவாசம் ஒன்றை ஏற்பாடு செய்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றார்கள்.
போக்கு வரத்துக்காக இன்னும் குதிரை வண்டிகளைத்தான் பயன்படுத்துகின்றார்கள். திருமணம் செய்வது கூட இவர்கள் தங்களுக்குள்ளேயே தான் உறவு வைத்துக் கொள்கின்றார்கள், வெளியில் இருந்து ஆணோ பெண்ணோ எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை.
தொடர் வண்டி, விமானம், கார்,பேரூந்து, செல்போன், மின்சாரம், கணனி. தொலைக்காட்சி, சினிமா போன்ற பொழுதுபோக்கு கருவிகள் எதையுமே, இவர்கள் தொட்டுக்கூட பார்த்தது இல்லையாம்
விவசாயம் தான் இவர்களின் வாழ்வின் ஆதாரம்.விவசாயம் செய்யக்கூட உழவு இயந்திரத்தை பாவிப்பதில்லை இன்றும் கூட வயலை உழுவதற்குப் குதிரைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்" திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் இவர்களுக்குத்தான் பொருந்தும் உழுதுண்டு வாழ்வதில் அவ்வளவு மகிழ்ச்சி இவர்களுக்கு,
இப்படி பட்டமக்கள் வாழ்கின்றார்கள் என்பது இந்த உலகிற்க்கு தெரியாமல் இருந்ததற்க்கான காரணத்தை தேடினால் இவர்கள் போட்டோ, வீடியோ-கேமராக்களை தங்கள் ஊருக்குள்ளே அனுமதிப்பதில்லையாம்
இவர்கள் யார் எந்த காட்டில் வாழ்கின்றார்கள் என்பது தான் உங்களுடைய கேள்வி இவர்கள் எந்த காட்டிலும் வாழவில்லை நவீன அறிவியல் உபகரணங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின்
பென்ஸில்வேனியா ஒஹையோ மற்றும் இண்டியானா ஆகிய மூன்று மாகாணங்களில் வாழும் ஆமிஷ் (Amish) இன மக்கள் தான் இவர்கள் 600 - 700 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே இன்றும் கூட இருக்கின்றார்கள்.
ஒரு மொபைல்போன் கிடையாது, கணனி கிடையாது ஒரு சினிமா பேஸ்புக் ட்விட்டர், டிக் டாக் எதுவுமே கிடையாது எப்படித்தான் தாங்குகின்றார்களோ இளையவர்கள்.
கி.பி.1690ளில் ஐரோப்பாவின் ஜெர்மனி ஸ்விட்ஸர்லாந்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்துவர்களில் (Protestantism ) ஒரு பிரிவினர் சக கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவ மதத்தை சரியாகப் பின்பற்ற வில்லை என்று
தனியாக பிரிந்து அமெரிக்கா சென்ற இவர்கள் தான் பின்னால் "ஜேகோப் அம்மான்" (Jakob Ammann) என்பவர் தலைமையில் உருவான இந்த கிறிஸ்துவப் பிரிவானது பிற்காலத்தில் ஆமிஷ் என்ற பெயரை பெற்றது என்பது இந்த நூற்றாண்டிலும் குறிப்பிடத்தக்க ஒரு சுவைமிக்க செய்தி
இந்த பாண்டமிக் காலத்திலும் கூட தடுப்பூசி ஏற்றிக்கொள்வதை மறுத்து வருகின்றார்கள் இதனால் ஓஹியோவில் உள்ள அமிஷ் சமூகம் COVID-19 ஆல் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மொத்த குடியிருப்பாளர்களில் வெறும் 10% மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் சொல்கின்றது.
இதில் நன்பர்கள் குடும்பங்கள் ஒன்று சேர அமர்ந்து சாப்பிடுகின்றார்கள், ஒன்றாக வேலை செய்கின்றனர், ஒன்றாக தேவாலயத்திற்கு செல்கின்றார்கள், முகக்கவசம் அணிந்துகொள்வது சமூக இடைவெளி இவர்களிடையே அரிதாகவே நடைமுறையில் உள்ளது.
இவர்களின் வாழ்க்கை பாடநூல் வகுப்புவாத வாழ்க்கைக்கு ஒப்பானது தாங்களாகவே ஒரு வட்டத்தை போட்டு அதை இறுக்கமாகவும் பிடித்துக்கொண்டார்கள்.
சுதந்திரம் என்பது உன்சமூகத்திற்கு இடையூறு இல்லாமல் நீ விரும்பியதை செய்வது, உனக்கு இன்றைக்கு தண்ணியடிக்க விருப்பமா, நாளைக்கு அது உனக்கு ஒத்துவரவில்லையென்றால் விட்டுவிடுவது இதில் யாருடைய தலையீடும் இல்லாமல் இருப்பது. பூமியை மாசுபடுத்தாமல் வைத்திருக்கும் நல்ல மனிதர்கள் என்று சொல்வது தான் இவர்களுக்கு நாங்கள் செய்யும் மரியாதை.
கலிபா வாழ்க்கை முறை அல்லது ஒரு வாழ்வியல் வடிவம் கலிபா என்பதின் பொருள் பிரதிநிதித்துவம். இது 7 ஆம் நூற்றாண்டில் வேர்களைக் கொண்ட அரசாங்கத்தின் ஒரு வடிவம். இது முகமது நபியின் மரணத்திற்குப் பிறகு முஸ்லீம் மாநிலத்தில் வளர்ந்தது.
இதை பின்பற்றி வாழுகின்ற மக்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். ஆப்கான் தலிபான் தலைவர்கள் இதை மீண்டும் பழுதுபார்த்து தூசிதட்டி நவீன முறைப்படுத்தி நடைமுறைபடுத்துவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றார்கள். பழைய முறைகள் பழக்க வழக்கங்கள் மீண்டும் தங்கள்மேல் திணிக்கப்படுமோ
என அஞ்சி, வெளிநாட்டு படைகளின் பாதுகாப்பில் 20 ஆண்டுகாலம் சுதந்திர காற்றை சுவாசித்த மக்கள் குறிப்பாக ஆப்கான் பெண்கள் புதுமை விரும்பிகள் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக