செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

வெந்தயம் வெந்தயத்தின் பூர்வீகம்  எகிப்துபழங்கால எகிப்தியர்களின் கலாச்சார பயிர்களில் இதுவும் ஒன்றாகும். நறுமண விதைகளாக கருதிரொட்டி மாவு மற்றும் மசாலா கலவையாகவும் அழகு சாதனபொருளாகவும் பயன்படுத்தியிருக்கின்றார்கள்

வெந்தயம், சமையல் பாவனைக்கு வருவதற்கு முன்னால் அது மருத்துவ பயன்பாட்டில் உயரத்திலிருந்ததொரு மூலிகைபெரும்பாலான பூர்வ குடி பெண்கள் தலைமுடி உதிர்வை தடுப்பதற்காகவும் பளபளப்பான முடி சருமத்திற்காகவும் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

அதிகமாக யாழ்ப்பாணத்து பெண்கள், நல்ல அடர்த்தியான நீளமான கூந்தலுக்காக சீயாக்காய் வெந்தயம் இரண்டையும் சேர்த்து அவித்து, அதை அம்மியில் வைத்து அரைத்து  தலையில் தேய்த்து   குளிப்பார்கள். வெந்தயம் சமையலுக்கு மட்டுமின்றி, அழகான கூந்தல் மற்றும் வயிற்று வலி, வயிற்றுளைவு, வயிற்றுப்போக்கு, வெந்தயத்திலுள்ள வழுவழுப்பு பொருள் குடல் புண், எரிச்சல் உடற் சூட்டை தணிக்கவும் பயன்படுகின்றது.

வெந்தயத்தில் அப்படி என்னதான் இருக்கின்றது மற்றைய சமையல் மசால பொருட்கள் போல் இதுவும் விற்றமின்கள் கனிமசத்துக்களை கொண்டுள்ளது இருப்பினும் தாவரங்களின் இரண்டாம் நிலை ஆற்றல் பொருட்கள் மட்டும் வேறுபடுகின்றது.இந்த ஆற்றல் பொருட்கள்தான் ஒரு மூலிகை/வெந்தயத்தின் வேதியியல் விளைவை கொடுக்கின்றது.

தாவரங்களின் இரண்டாம் நிலை ஆற்றல் பொருட்கள் என்பது: விற்றமின்கள் கனிமங்களையும் கடந்து தாவரங்கள் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு சில பிரத்தியோகமான இரசாயன சேர்மங்கள் ஆகும்எடுத்துக்காட்டாக, தாவரங்களின் நச்சு, கசப்பு சுவை, பிசின் ஆகும்.

வெந்தயத்தில் கசப்பான பொருட்கள், சபோனின்கள் மற்றும்  வழுவழுப்பு சளிப்பொருள் (கோந்து) மற்றும் உயர்தர அமினோ அமிலங்கள் உள்ளது.

உயர்தர அமினோ அமிலங்கள் (4-ஹைட்ராக்ஸிசோலினின்) இது  வளர்சிதை மாற்றத்தில், உயிரணுக்களில்  குறைபாடுகளை சரிசெய்யலாம்/ வெட்டி விடலாம் அல்லது வளர்சிதை மாற்றத்தில் பங்கெடுத்து செல்களை புதுப்பிக்கலாம். சு|ரு: சொன்னால் குணமாக்கலாம்  அல்லது புதுப்பொலிவைத்தரலாம்.

வெந்தயம்♂டெஸ்டோஸ்டிரோன் ஆண் ஹார்மோனை சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றது மற்றும் ஆண்களின் தசை கட்டுமானத்தை ஊக்கிவிக்கக்கூடியது. மேலும் ஈஸ்ட்ரோஜன் பெண் ஹார்மோனை ஊக்கிவித்து  பெண்களின் முடி இழப்பை தடுக்கக்கூடியது, பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகச்சிறந்தது. உயர் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகின்றது.

உயர்தர அமினோ அமிலங்கள் (4-ஹைட்ராக்ஸிசோலினின்) இது மாத்திரை வடிவிலும் கிடைக்கின்றது. ஹைட்ராக்ஸைசின் என்பது ஆண்டிஹிஸ்டமைன்களின் குழுவிலிருந்து வரும் ஒரு மருந்து  உற்சாகம் அமைதியின்மை, உறங்குவதில் சிரமம் மற்றும் பல்வேறு தோல் படை நோய் (யூர்டிகேரியா),நோய்களின் அறிகுறியாக வெளிப்படும் அரிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றது.

ஹைட்ராக்ஸைசின் என்ற மருந்தின் விளைவுகள் உடலில் பல இடங்களில் செயல்படுகின்றது இது மூளையிலும் உடலின் மற்ற பகுதிகளிலும் உள்ள பல்வேறு தூது அமைப்புகளை பாதிக்கின்றது.

இதன் விளைவாக, இரவு முழுவதும் அமைதியான ஒரு தூக்கத்தை ஊக்குவிக்கின்றது தூக்கத்தை கெடுக்கும் இரவுநேர கடுமையான அரிப்புக்கான ஒரு நிவாரணம்.

மற்றும் பதற்றம், கவலை நிவாரண விளைவைக் கொண்டுள்ளது, குமட்டல், வலி, அரிப்புகளை நீக்குகின்றது. ஒவ்வாமை தோல் நோய்களில், திசு ஹார்மோன் ஹிஸ்டமைன் அரிப்பைத் தூண்டுகிற ஹிஸ்டமைனின் விளைவை பலவீனப்படுத்துகின்றது.

இந்த குறைபாடு உள்ளவர்கள் உங்கள் மருத்துவரின் பரிந்துரையில் வாங்கி பயன்படுத்தலாம்

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் "சுய மருத்துவம் உடல்நல கேடு"  சரியான மருத்துவ அறிவு இல்லாமல் எந்தவொரு மருந்தையும் பயன்படுத்தாதீர்கள் மருந்துகளின் கூட்டு விளைவுகள் நோய்கள் தரும் வேதனையை விட படுமோசமானதாக இருக்கும். (விற்றமின்கள், எண்ணைய், சர்க்கரை, புரதங்களை  தாவரங்கள் சொந்தமாக உற்பத்தி  செய்கின்றது, கனிமங்களை மண்ணிலிருந்து எடுத்துக்கொள்கின்றது)


💚வெந்தயம்ஊட்டச்சத்து தகவல்கள்

◻️வெந்தய அளவு100 கிராம்

◻️கலோரிகள் 323

◻️கொழுப்பு உள்ளடக்கம் 6 கிராம்

◻️நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் 1.5 கிராம்

◻️கொழுப்பு 0 மி கிராம்

◼️கனிம சத்துக்கள்.

சோடியம் 67 மி.கி.

பொட்டாசியம் 770 மி.கி.

கார்போஹைட்ரேட்டுகள் 58 கிராம்

ஃபைபர் 25 கிராம்

புரோட்டீன் 23 கிராம்

கால்சியம் 176 மிகி

இரும்பு 33.5 மிகி


◼️விற்றமின்கள்

விற்றமின் ஏ: பீட்டா கரோட்டின் 0.0 μg 2.000 μg (விற்றமின் A-ரெட்டினோல்)

விற்றமின் B1: (தியமின்)  320 μg 1,100 μg

விற்றமின் B2 : ( ரிப்போபிலவின்) 370 μg 1,200 μg

விற்றமின் B 3: (நியாசின்), நிகோடினிக் அமிலம் 1,640 μg 15,000 μg

விற்றமின் B5: (பாந்தோத்தேனிக் அமிலம் )500 μg 6,000 μg

விற்றமின் B6 : (பைரிடாக்சின்) 200 μg 1,500 μg

விற்றமின் B7: பயோட்டின் (விற்றமின் H) 10 μg 100 μg

விற்றமின் B9: ( ஃபோலிக் அமிலம்) 57 μg 400 μg

விற்றமின் B 12: (கோபாலமின்) 0.0 μg 3 μg (= 0.0%)இல்லை

விற்றமின் சி: (அஸ்கார்பிக் அமிலம்) 3,000 μg 100,000 μg

விற்றமின் டி: (கால்சிபெல்லோல்) 0.0 μg 20 μg

விற்றமின் ஈ : (டோக்கோபெருல்) 0.0 μg 0.0

விற்றமின் கே: (ஃபைலோகுவினோன்) 0.0 μg 70 μg

தாவரங்களின் முதன்மை நிலை மற்றும் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை ஆற்றல் பொருட்கள்


தாவரங்கள் / மூலிகைகள் எப்படி நோய்களை குணப்படுத்தும் சக்தியை பெறுகின்றன, ஏன் அசைவ உணவுகளை விட தாவர உணவுகள் நோய்களை குணப்படுத்தும் தன்மையை பெறுகின்றன, பிரத்தியோகமாக இயற்கை தாவரங்களுக்கு  என்னென்ன  ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கின்றது, தாவரங்கள், மனிதனும் நோயும்  தோன்றுவதற்கு, பல கோடி வருடங்களுக்கு முன்னால்  இருந்தே இந்த பூமியை ஆண்டு வந்த  முன்னோடிகள்இந்த மண்ணில் கொட்டிக் கிடக்கும் சகல புதையல்களையும் (வேதியல் பொருட்கள்) உள்வாங்கி வைத்திருக்கின்ற ஆற்றல் உள்ளதாக, அலர்தல்-பரிணாமம்  அடைந்திருக்கின்றது.


விற்றமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும்  இறைச்சி உணவுகளை விட தாவரங்களுக்கு இருக்கும்  மற்றொரு சிறப்பம்சம் எதுவென்றால்  அதனுடைய சாயங்கள் (பச்சை, மஞ்சள், சிவப்பு) வாசனை, நறுமனம் , நாற்றம் மற்றும் சுவைகள் (இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம், உவர்ப்பு, துவர்ப்பு ) மேலும் மூன்றாம் நிலையாக உருப்பெறும் வேறொரு பருப்பொருள்  அதனுடைய நச்சுக்கள்.


ஓவ்வொரு  சாயங்களும் தனித்துவமானது, நோய்களை குணப்படுத்தும் வேதியல் தன்மையை பெற்றிருக்கின்றது மேலும் அறுசுவை, வாசனைகள் மற்றும் மாறுபட்ட நச்சு பருப்பொருட்களும் உடல் விழிப்புறல் பங்காளி பொருளாகவும் செயல்படுகின்றது


முதன்மை நிலை ஆற்றல் பொருட்கள் இனிப்பு (குளுக்கோசு), பச்சையம் மற்றும் வழுவழுப்பு (ஜெல்லி)


இரண்டாம் நிலை  ஆற்றல் பொருட்கள் மருத்துவ வேதியல் பொருட்களை உள்ளடக்கியது, நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது, இயற்கையை விட்டு மறைந்தது போக மிகிதம் இருக்கும் ஆற்றல் பொருட்கள். கிட்டத்தட்ட 100.000 மேற்பட்ட இரண்டாம் நிலை ஆற்றல்  பொருட்கள்  இருக்கின்றது, இதில் 5,000 முதல் 10,000 வரை மனித ஊட்டச்சத்தில் முக்கியமானது, இருப்பினும் இதுவரைக்கும் ஆயிரத்திற்கும்  உட்பட்ட இரண்டாம் நிலை ஆற்றல்  பொருட்கள் தான் சரியாக அறியப்பட்டிருக்கின்றது அதிலிருந்து எனக்கு தெரிந்த ஒரு சில …..


கரோட்டினாய்டுகள்: சாயங்கள்  (மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு) கேரட், தக்காளி, மிளகு, குடைமிளகாய், பச்சை காய்கறிகள் (கீரை, கோவா ), திராட்சைப்பழம், சர்க்கரை, முலாம்பழம், பூசணி காய்களில் காணப்படுகின்றது.700 கும் மேற்பட்ட கரோட்டினாய்டுகள் இதுவரைக்கும் அறியப்பட்டிருக்கின்றது.


மருத்துவ குணங்கள்: நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தும் ஒட்சிசன் ஏற்ற தடுப்பு மற்றும்  கண் நோய் ( கண்புரை) +தசைச் சிதைவு மற்றும் கார்டியோவாஸ்குலர் நோய்க்கான ஆபத்தை குறைக்கின்றன.மேலும்  உயர் இரத்த அழுத்தம் , உயர் கொழுப்புமன அழுத்தம் மற்றும் ஆவி / அறிவுசார்ந்த திறன்


பைட்டோஸ்டெரால்ஸ்: கடலை (நட்ஸ்), ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள், எள்ளு, சோயா, பருப்பு வகைகளில் காணப்படுகின்றது.(…..)


சபோனின்: பருப்பு வகைகள், சோயா, அஸ்பாரகஸ், ஓட்ஸ் காணப்படுகின்றது.(…..) 


பினோலிக் அமிலங்கள்: (பெண் பாலியல் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜனுக்கு  இணையானது) காபி, தேநீர், சிறு/முழு தானியங்கள், முட்டைக்கோஸ், கோவா, சூரியகாந்தி விதைகள், எள்ளு, சோயா விதையில்  காணப்படுகின்றது.


மருத்துவ குணங்கள்: கார்டியோவாஸ்குலர் நோய், புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவுகின்றது  மற்றும் பாக்டீரியா, காளான், வைரஸ்களின்  வளர்ச்சியை  அடக்குகின்றன மேலும் எலும்பு கரைதல், ஒட்சிசன் ஏற்றம் தடுப்பு  மற்றும் இரத்த உறைவு ஒருங்கிணைப்பு பணிப்பாளர்.


ஃபிளாவனாய்டுகளின்: சாயங்கள் (மஞ்சள், நீலம், ஊதா, கருப்பு மற்றும் பச்சை) ஆப்பிள்கள், திராட்சை, செர்ரி, பிளம்ஸ் மற்றும் மென்மையான பழங்கள், வெங்காயம், கோவா, கத்திரிக்காய், கருப்பு / பச்சை தேநீரில் காணப்படுகின்றது.


அந்தோசியனின்கள்: சாயங்கள் (கருப்பு, நீலம்) கருப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகள்  (கருப்பு திராட்சை) காணப்படுகின்றது. கசப்பு பொருள், பாலிசாக்ரைடுடன் (சர்க்கரை) பாலி பெப்டைடு, அமினோ அமிலங்கள் (…..) 


மூன்றாம் நிலை ஆற்றல் பொருட்கள் நச்சு, பிசின், மது மற்றும் மயக்கப் பொருள் (போதைப் பொருட்கள்) தாவரங்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு என்று கூட சொல்லலாம்


புகையிலை செடிகள், பூச்சி புழுக்கடிகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள நிக்கோட்டின் என்ற நச்சுப் பொருளை உமிழ்கின்றது, மரங்கள் காயம் படும்போது பிசினை உமிழ்ந்து காயத்தை ஆற்றுகின்றது, ஓபியம் பாப்பி காய்கள் மற்றும்தென்னை, பனை மரத்தின் பாளையை கீறி விடும் போது  ஓபியம், கள்ளு போன்ற மயக்கப் பொருளை உற்பத்தி செய்கின்றது,


மருத்துவ குணங்கள்: இந்த இரசாயன பாதுகாப்பு பொருட்கள் மன/உடல் வலிகளுக்கு மருந்தாக பயன்படுகின்றது. (வலி நிவாரணி) (…..)


பீட்டா கரோலின் ◾- புற்று நோய் தடுப்பு ◾- பலமுள்ள நோய் எதிர்ப்பு  ◾- கொழுப்பு சமநிலை  ◾- பாக்டீரியா தடுப்பு


சல்பைடு- இலவச ஆக்கிரமிப்பு தடுப்பு ◾- எரிச்சல், அதைப்பு ◾- அழற்சி எதிர்ப்பு ◾- புற்று நோய் எதிர்ப்பு ◾- இரத்த அழுத்த கட்டுப்பாடு


குளுகோஸ் சினோலேட் ◾ - புற்று நோய் தடுப்பு ◾- பாக்டீரியா தடுப்பு  ◾- கொழுப்பு எதிர்பொருள் ◾ - ஊளைச்சதை குறைப்பு


ஃபிளாவனாய்டு ◾ - விஷத்தன்மை எதிர்ப்பு ◾- மனச்சோர்வு தடுப்பு◾ - இரத்த உறைவு எதர்ப்பு ◾- உயர்  இரத்த அழுத்தம் குறைப்பு   ---> தொடரும்...