சனி, 21 ஜனவரி, 2023

What victims need to know about side effects and vaccine damage after corona vaccination.

கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு பக்க விளைவுகள் மற்றும் தடுப்பூசி சேதம் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.  இந்த மூன்று வருட காலத்தில் புதிதாக ஏதாவது நோய்க்குறிகள் எனக்கு ஏற்பட்டுள்ளதா அதற்கான காரணம் கொரோனாவா அல்லது தடுப்பூசியா..?

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் தொடங்கியதில் இருந்து, தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்கள் மீண்டும் மீண்டும் புகார் அளித்துள்ளனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தடுப்பூசியின் எதிர்வினை என்பது மிகவும் இலகுவானவை மற்றும் குறுகிய காலம் கொண்டது.  அது நீண்டகால பாதிப்பாக தொடர்வதற்கு வாய்ப்புகள் இல்லை.

இருப்பினும் தடுப்பூசி நீண்ட காலத்திற்கு தங்களை பாதிக்கும் என்று சந்தேகிக்கும் பாதிக்கப்பட்டவர்களும் புகார் பட்டியலில் உள்ளனர்.

தடுப்பூசி எதிர்வினைகள் மற்றும் தடுப்பூசி பக்க  விளைவுகளுக்கு இடையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது ..? உண்மையில் தடுப்பூசி சேதத்திற்கு யார் பணம் செலுத்துகிறார்கள்..?  இதற்கான பதிலை பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தேடத்தொடங்கியுளனர்,

தடுப்பூசி சேதம் என்றால் என்ன..? ; தொற்றுநோய் பாதுகாப்புச் சட்டத்தின்படி, தடுப்பூசி சேதம் என்பது தடுப்பூசியால் ஏற்படும் உடல்நலக் கேடுகளின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார விளைவு ஆகும்,  இது தடுப்பூசி எதிர்வினையின் வழக்கமான அளவைத் தாண்டியது என  எடுக்கப்படுகின்றது.

பொதுவான தடிப்புகள், காய்ச்சல் அல்லது தலைவலி போன்ற சாதாரண பக்க விளைவுகள் இதில் சேர்க்கப்படவில்லை. உண்மையான சேதம் ஏற்பட்டதா என்பதை தடுப்பூசி போட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு தீர்மானிக்க முடியும்.

உண்மையான தடுப்பூசி சேதத்திற்கு, பால் எர்லிச் இன்ஸ்டிடியூட்டின் கூற்றுப்படி, ஓய்வூதிய அலுவலகம் மற்றும் நிபுணரால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு உடல் எதிர்வினையும் தடுப்பூசி சேதமாகும் என்று கணக்கெடுக்கப்படுகின்றது. இது அறியப்பட்ட பக்க விளைவுகளாக இருக்க வேண்டியதில்லை. [தடுப்பூசிகள் மற்றும் பயோமெடிக்கல் மருந்துகளுக்கான ஜெர்மன் ஃபெடரல் நிறுவனம்].

எந்தவொரு எதிர்வினையும் அல்லது நோயும் சாத்தியமான தடுப்பூசி தீங்கு என தெரிவிக்கப்படலாம். அதாவது இதுவரை காலமும் அறியப்படாத புதிய நோய்க்குறியாகக்கூட இருக்கலாம். ஓய்வூதிய அலுவலகத்தினால்  இதற்கான இழப்பீடு தொகை நிர்மாணிக்கப்படுகின்றது.

தடுப்பூசி செலுத்திய எவருக்கும், தடுப்பூசி  எதிர்வினை தன்னை வெளிப்படுத்தலாம் மேற்கோளாக: தலைவலி, குளிர், லேசான காய்ச்சல் அல்லது தசை வலி மற்றும் சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கும். உடம்பு ஒரு மெல்லிய குளிர்காய்ச்சலுக்கு போவது போல் அறிகுறியை காட்டலாம்.

உடலில் வைரஸ் துகள்கள் உட்செலுத்தப்பட்டு, இப்போது நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதால், அத்தகைய எதிர்வினை எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா தடுப்பூசியின் நோக்கம் இதுதான்.

தடுப்பூசியின்  சேதம், அவை இதய தசை வீக்கம் மற்றும் சைனஸ் வெயின் அல்லது பெருமூளை இரத்த உறைவு ஆகியவை அடங்கும் . அவை மாடர்னா, அஸ்ட்ராசெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. கவனிக்கப்பட்ட மயோர்கார்டிடிஸ் ஒரு லேசான போக்கைக் கொண்டிருந்தது மற்றும் முழுமையாக குணமாகும்  என்றும் சொல்லப்படுகின்றது.

இருப்பினும், ஜெர்மனியில் 40 க்கும் மேற்பட்டோர் பெருமூளை நரம்பு த்ரோம்போசிஸால் இறந்துள்ளனர். தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் மிகவும் அரிதானவை, இருப்பினும்  தடுப்பூசிகளின் பக்க விளைவுகளை முழுமையாக நிராகரிக்க முடியாது.

தடுப்பூசியின் செயல்பாடு: தடுப்பூசி செலுத்துவது -> நோய் எதிர்ப்பு சக்தியின் வெளிப்பாடு -> நினைவக செல்களில் பதிவாக்கம் [முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது] மீண்டும் இந்த குற்றவாளி வரும்போது விரைவாக அடையாளம் காணப்படுகின்றது இதுதான் தடுப்பூசியின் நோக்கம் .

தடுப்பூசி செலுத்தாதவர்கள்: நோய்க்கிருமிகள் வரும்போது நோய் எதிர்ப்பு சக்தியால் அடையாளப்படுத்த நீண்ட காலம் எடுக்கப்படுவதால் இந்த இடைப்பட்ட காலத்தில் நோயாளி ஆபத்தான கட்டத்துக்கு தள்ளப்படுகிறார். இது தடுப்பூசி செலுத்தாதவர்களின் பரிதாபங்கள்.

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine


Microsoft Edge என்ற செயலியை தரவிறக்கம் செய்து. இந்த கட்டுரைகளை சுமார் 60 மொழிகளுக்கு மேல்   மொழிபெயர்ப்பு மற்றும் கணினி வாசிப்பு செய்யமுடியும்.





வெள்ளி, 20 ஜனவரி, 2023

How to identify the people who lived in the Indus Civilization

சிந்து நாகரிகத்தில் வாழ்ந்த மக்களை [ஹரப்பா -மொகஞ்சதாரோ] எப்படி அடையாளப்படுத்துவது யார் இவர்கள் என்ன மொழியை பேசினார்கள்.

இந்த மக்கள் இன்றைய நிலப்பரப்பில் எங்கு வாழ்கின்றார். இந்தக் கேள்விக்கான பதிலை வெறும் தொல்பொருள் தளங்களின் அகழ்வாராய்ச்சி பதிவுகளை கொண்டு முடிவு செய்ய முடியாது. இவர்களைப் பற்றி அறிவதற்கு மரபணு ரீதியாக ஆய்வுகளும் தேவைப்படுகின்றது.

திருமணங்கள் வம்சாவளியைப் பகிர்ந்து கொள்வதற்கு உதவியது. இதை வைத்து இவர்களை ஓரளவுக்கு அடையாளப்படுத்தி விட முடியும்.

பண்டைய திருமணங்களும் விதிகளும்: பெண்கள் ஆண்களையே சார்ந்திருந்தார்கள். உறவினர்களினால் நிச்சயம் செய்யப்பட்ட ஆணாதிக்க திருமணங்களாகவே இருந்தன.

முதல் உறவினரை[மாமன் மகள்] திருமணம் செய்வது 4,000 ஆண்டுகளுக்கு முன்பு பொதுவானதாக இருந்திருக்கின்றது.

சீர்வரிசை கொடுக்கும் பழக்கமும் இவர்களிடையே இருந்தது, அதற்கான காரணம் பரம்பரை விவசாய நிலம் மேலும் மேலும் பிரிக்கப்படுவதைத் தடுக்க இது செய்யப்படுகின்றது.

சிந்து வெளியும் சிவ வழிபாடு இது அங்கு வாழ்ந்த மக்களை அடையாளப்படுத்தும் மிகப்பெரிய அடையாளம். நீர் தொட்டிகளை கட்டி தண்ணீரில் செய்யப்படும் சடங்குகளை மேற்கொண்டிருந்தார்கள். சுமார் 700 க்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள் நிறுவப்பட்டிருந்தது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை சிந்து/இந்து கலாச்சாரத்தின் 1022 குடியிருப்புகளை கண்டுபிடித்துள்ளனர். இதில் 406 பாகிஸ்தானிலும், 660 இந்தியாவிலும் உள்ளன. ஹரப்பா மற்றும் மொஹெஞ்சதாரோ ஆகியவை சிந்து நதியில் உள்ளது சிந்து என்பது நதிக்கரையை குறிக்கும் ஒரு சொல்.

ஹரப்பா கலாச்சாரத்தின் மக்கள் தங்கள் நகரங்களை முறையாக திட்டமிட்டு, சுட்ட மண் செங்கற்களால் தங்கள் கட்டிடங்களை கட்டினார்கள், தங்கள் தெருக்களில் நடைபாதைகளை அமைத்தனர் மற்றும் நீர் வடிகால்களை அவர்களுக்கு வழங்கினர். அவர்களின் வீடுகளில் ஏற்கனவே தண்ணீர் கழிப்பறைகள் மற்றும் குளியல் தொட்டிகள் இருந்தன.

சதுரங்க விளையாட்டு, பகடைக்காய் உருட்டுதல் மற்றும் சிறுவர்கள் பம்பரம் விடுதல், கோலி குண்டு விளையாட்டு மற்றும் பல்லாங்குழி [மங்காலா]விளையாட்டு என்று விளையாட்டுப் பொருட்களும் கிடைத்திருக்கின்றன.

சிந்து, வேளாண்மை மற்றும் கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள். சிந்து கலாச்சாரத்தின் விவசாயிகள் கோதுமை, பார்லி , பயறு , கொண்டைக்கடலை , பட்டாணி , தினை, பருத்தி, ஆளி விதை, எள் மற்றும் ஆளி செடி[கைத்தறி] ஆகியவற்றை பயிரிட்டனர். அவர்களின் முன்னோர்கள் ஏற்கனவே நீர் எருமைகளை வளர்த்து கலப்பையை கண்டுபிடித்தனர். விவசாயம் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கின்றது.

சிந்து மொழி தெரியவில்லை.இன்னும் புரிந்து கொள்ளப்படாத மொழி. ஹரப்பா/ சிந்து கலாச்சாரத்தில் இருந்து சுமார் 5000 முத்திரைகள் மற்றும் மாத்திரைகள் அறியப்படுகின்றன. இது எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று இன்னும் சரியாக அறியப்படவில்லை.

சிந்து/இந்து நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் அமைதியும் சமாதானத்துடன் வாழ்ந்திருக்க வேண்டும். அங்கு பெரிய போர்கள் எதுவும் நடந்திருக்காது காரணம் . அங்கு வேளாண்மை கருவிகளைத் தவிர, போர் ஆயுதங்கள் கோட்டை மதில் சுவர்கள் எதுவும் கட்டப்படவில்லை. குதிரைகள் கூட கிடையாது. பொதிகளை சுமக்கும் கழுதைகளை வைத்திருந்ததாக ஆய்வுகள் சொல்கின்றது.

அது அமைதியான கலாச்சாரமாக இருந்திருக்க வேண்டும். அவர்களின் எழுத்துருக்களைப் பற்றி பேசும் போது வணிக நோக்கங்களுக்காக ஒரு சில களிமண் முத்திரைகளை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். வேறு எந்த எழுத்துரு வடிவங்களையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை.

இங்கு வாழ்ந்த மக்களின் இன்னும் ஒரு அடையாளம் நீல நிற/கருவிழி கண்களை கொண்டவர்கள்.

சிந்து சமவெளி மக்கள் எந்த மொழியை பேசி இருப்பார்கள்,  சரியாக தெரியாது இருப்பினும் சிந்து மொழி= [உருது + தமிழ் + சமஸ்கிருதம்] சேர்ந்த ஒரு கலவையான ஒரு மொழியை பேசியிருக்க முடியும். இன்று எங்களுடைய பார்வையில் அவர்கள் பேசிய மொழி பலமொழி கலப்பாக தெரிந்தாலும் அவர்களுக்கு அன்று ஒற்றை மொழியாகத்தான் இருந்திருக்கின்றது.

 

Microsoft Edge என்ற செயலியை தரவிறக்கம் செய்து. இந்த கட்டுரைகளை சுமார் 60 மொழிகளுக்கு மேல்   மொழிபெயர்ப்பு மற்றும் கணினி வாசிப்பு செய்யமுடியும்.


ஞாயிறு, 15 ஜனவரி, 2023

Four Civilizations: Indus [Hindu] Civilization: Agriculture & Deity Worship and Civilization.

நான்கு நாகரிகங்கள்: சிந்து [இந்து] நாகரீகம்: வேளாண்மை& தெய்வ வழிபாடு மற்றும் நாகரீகம்.

இந்த உலகத்தின் முன்னோடி நாகரிகம், கலை, மொழி, எழுத்துரு, மருத்துவம் உணவுப் பழக்கம் வேளாண்மை பற்றி பேசுவதாக இருந்தால் நான்கு ஆற்றங்கரை நாகரிகத்தில் இருந்து தான் பேச முடியும் 

எகிப்திய: நைல் நதி நாகரிகம் மெசபடோமியா: இரண்டு நதிகளின் நாகரிகம் [ யூப்ரடீஸ், டைக்ரிஸ்] சிந்து நதி நாகரிகம். மற்றும் சீனா ஹுவாங் ஹோ பள்ளத்தாக்கு நாகரிகம்.

சிந்து கலாச்சாரம் வெண்கல யுகத்தின் மேம்பட்ட கலாச்சாரங்களில் ஒன்றாகும். சிந்து கலாச்சாரம் ஹரப்பா கலாச்சாரம் என்றும் அழைக்கப்படுகின்றது, இது பண்டைய எகிப்து மற்றும் மெசபடோமியாவின் ஆரம்பகால மேம்பட்ட நாகரிகங்களுடன் மட்டுமே ஒப்பிட்டு பேச முடியும். ஏனென்றால் இந்த கலாச்சாரம் தான் முதன்மையான  கலாச்சாரமாக  எல்லா மக்களினாலும் தெரிவுசெய்யப்பட்டது.

சிந்து நதி பள்ளத்தாக்கின் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல், மக்கள் கம்பீரமான கட்டிடங்கள், குளியலறை/கழிவறை மற்றும் விரிவாக வடிவமைக்கப்பட்ட கால்வாய்கள் கொண்ட அற்புதமான நகரங்களை உருவாக்கினர்.

கிமு 2600 க்கு இடைப்பட்ட காலத்தில் ஹரப்பாவிற்கு அருகில் மற்றும் 1800 கி.மு. மொகஞ்சதாரோ சிந்து கலாச்சாரத்தின் மையங்களில் ஒன்றாகும். நகரத்தில் 30,000 பேர் வரை வாழ்ந்தனர். இந்த இடிபாடுகள் இப்போது UNESCO உலக பாரம்பரிய தளமாக உள்ளது.

பசுபதி[சிவன்]: கிமு 2-3மில்லினியத்தில் [2000 – 3000] சிந்து நாகரிகம்&சிவ வழிபாடு [ ஹரப்பா -மொகஞ்சதாரோ] செப்பு உலோக காலம். சிந்து-சிவ சின்னங்கள் வண்டி சக்கரம், அரச மரம், புலி, யானை, காளை, பசு, எருமை.

இந்திய வனவிலங்குகள் புலி, யானை, காண்டாமிருகங்கள். உள்ள ஒரு காட்டிலுள்ள ஒரு அரச மரத்தடியில் சிவன் தவம் செய்ததாக களிமண் முத்திரையில் பதிவாகியிருக்கின்றது.

இந்தக் கதை புத்த பிக்குகளால்  சித்தார்த்த கௌதமர் என்று மாற்றப்பட்டது. பகவான் புத்தரின் கதைகளில் பெரும்பகுதி உண்மை கிடையாது  அதில் புனையப்பட்ட கதைகள் ஏராளம்.

சிந்து நாகரிக பசுபதி[சிவன்] வழிபாடும் சுமேரிய நாகரிக துர்க்கை அம்மன் [இனன்னா தேவி] வழிபாடும் புராணக்கதை அல்ல, அது களிமண் மாத்திரையில் பதிவாகியுள்ள ஒரு வரலாறு. சிந்து மக்கள் பசுபதியை தலைவனாக ஏற்று அவர் கட்டளைக்கு கீழ்படிந்து வாழ்ந்திருக்கின்றார்கள். 

சிந்து நாகரிகம்,  எகிப்திய நாகரிகம் போல் மன்னர்கள் அரசர்களுடைய  வரலாற்றை சொல்லும் நாகரிகம் கிடையாது அது பொது மக்களுடைய வாழ்க்கையை சொல்லும் ஒரு நாகரிகம். மெசபடோமியா நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள், அங்கு ஏற்பட்ட நெருக்கடி,  அடிக்கடி ஏற்படும் எல்லை தகராறு யுத்தம் காரணமாக  அதிலிருந்து விடுபட்டு, சமாதானம் தேடி சிந்து வெளியில் தங்களுடைய வாழ்கையை தொடர்ந்தார்கள்.

[சத்திரிய,போர்க்குணத்தை விட்டொழித்து சமாதானத்தை தேடி வந்ததினால்  இவர்களை திராவிடர் என்று பின்னால் அழைக்கப்பட்டார்கள்] "இந்து" "திராவிடர்" என்ற பெயர்கள் எங்களுக்கு நாங்களே வைத்துக் கொண்ட பெயர்களே தவிர, வரலாற்றுப்பதிவு கிடையாது.

வேளாமை தொழில்துறை கருவிகள், கப்பல், கட்டுமரம் நவீன மாடி வீடுகள், வீதிகள், பொது வீதி அமைப்பு, மொட்டை மாடி, சமையலறை, படுக்கையறை, இணைக்கப்பட்ட குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள், கடைத்தெரு, சந்தை, வணக்கத்தலம், முன்னோர் ஆலோசனை, பஞ்சாயத்து, பொழுதுபோக்கு அரங்கங்கள்  உள்ள ஒரு கட்டமைப்பு சமூகம் கி.மு மூன்றாம் மில்லினியத்தில் சிந்து நாகரிகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றால், அந்த சமூகம் எப்பேற்பட்ட அறிவுள்ள சமூகமாக இருந்திருக்கும். 


"விட்டுக்கொடுத்து  தோற்பது தோல்வியல்ல, அது மிகப்பெரிய  சமாதானத்துக்கான வெற்றி"

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Happy Pongal-2023


புதன், 11 ஜனவரி, 2023

Stop abusing drugs

மருந்துகளை தவறாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள் அது கொரோனாவுக்கான ஆன்டிவைரல் மருந்தாக இருந்தாலும் சரி மலேரியா தொற்றாக இருந்தாலும் அல்லது நுண்ணுயிரிகள், பாக்டீரியாக்கள் தொற்றுகளுக்கான ஆண்டிபயாட்டிக் மருந்தாக  இருந்தாலும் சரி,  

வைரஸ் தொற்றுகளுக்கு தவறாக ஆண்டிபயாட்டிக் மருந்துகளை எடுப்பது மற்றும்  மருத்துவ ஆய்வுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லாத  மூலிகை மருந்துகள் மற்றும் மலேரியா மருந்தை  கோவிட்-19 க்கு  பரிசோதிக்கும் ஆய்வுகளை நிறுத்துமாறு விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர். கலாச்சார ரீதியாக பின்பற்றி வந்த கைமருத்துவம் கொரோனாவுக்கு எடுபடாமல் வழக்கற்றுப் போய்விட்டது.

தவறாக பயன்படுத்தும் மருந்துகள் புது பிறழ்வு நோய்க்கிருமிகளை தோற்றுவிக்கின்றன இதன் நிமித்தம் தற்சமயம் கைகளில் இருக்கும் மருந்துகளுக்கு கட்டுப்படாத புதுப்புது நோய்களின் உருவாக்கத்திற்கு காரணியாக அமைகின்றது.

உங்களுக்கு எந்த நோயாக இருந்தாலும் முறையாக  மருத்துவம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய தீயாக இருந்தாலும் அதை முறையாக அணைக்க வேண்டும். ஏதாவது மிச்சம் வைத்தால் அது ஏதோ ஒரு காலத்தில் கட்டுக்குள் அடங்காத தீயாக மாறும்.

கை மருத்துவம் பார்க்கும் நாடுகளான சீனா ஆப்பிரிக்கா பிரேசில் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தான் புது வகை கொரோனா வைரஸ்கள் தோன்றியது. அதற்கு அவர்கள் பார்த்த கை மருத்துவம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

இன்று வரைக்கும் கொரோனாவின் ஆரம்ப புள்ளியாக அறியப்படும் வௌவால்களுக்கு அடுத்து பாங்கோலின் என்ற பாலூட்டி தான் அறியப்படுகின்றது. பாங்கோலின் / பைன் கூம்பு விலங்குகளின் செதில்களை சீன மருத்துவத்தில் பயன்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேரியா நோய்க்கிருமி பிளாஸ்மோடியம் : மலேரியாவைத் தூண்டும் அனோபிலிஸ் கொசு, பிளாஸ்மோடியம் இனத்தைச் சேர்ந்த ஒட்டுண்ணிகளை பரப்புகின்றன இவைகள் இரத்த சிவப்பணுக்களை சிதைக்கின்றன.

ஆர்ட்டெமிசினின் மலேரியாவுக்கு எதிரான மிக முக்கியமான மருந்து. ஆனால் ஆராய்ச்சியாளர்களும் உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கின்றன. அதற்கான காரணம் இந்த மருந்துகள் ஏதோ ஒரு காலகட்டத்தில் தங்களுடைய செயல் திறனை இழந்து விடுகின்றன.

மேலும் மேலும் மலேரியா ஒட்டுண்ணிகள் எதிர்ப்புத் திறன் கொண்டவையாக மாறி வருகின்றன. இதன் விளைவுகள் மரணமாக இருக்கலாம்.

பல ஆண்டுகளாக, ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும் புதிதாக பிறழ்ந்த நோய்க்கிருமிகளைக் கவனித்து வருகின்றனர். மலேரியாவுக்கு எதிரான மருந்து சிகிச்சைகளில் மிக முக்கியமான செயலில் உள்ள மூலப்பொருளான ஆர்ட்டெமிசினினை எதிர்க்கும் பிறழ்வுகளைக் கொண்ட ஒட்டுண்ணிகள் குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்காவில் பரவி வருகின்றன.

இந்த பூமியில் வாழ்கின்ற இன்றைய உயிரினங்கள் அத்துனையும் ஏதோ ஒரு வகையில் காலநிலை உணவு மாற்றங்களை எதிர்த்து தங்களை தக்க வைத்து வாழக்கூடிய உயிரினங்கள்.அது கருப்பு அல்லது வெள்ளைத்தோலாக இருந்தாலும் சரி அவை கால நிலையை தக்க வைத்துக் கொள்ள உருவானவை.

இதற்கு எந்த விதத்திலும் தொற்று நோய்களும் சளைத்தவை அல்ல அவைகளும் தங்களை தக்க வைத்துக் கொள்ள மாறிக்கொண்டே வந்திருக்கின்றன ஒரு காலத்தில் கை மருத்துவத்துக்கு, இஞ்சிக்கும் மிளகுக்கும் கறி மஞ்சளுக்கு கட்டுப்பட்டவைகள் இன்று அதை எதிர்த்து வாழ பழகி விட்டன.

ஆண்டிபயாட்டி மருந்துகளுக்கு கூட எதிர்த்து வாழ பழகி விட்டன. இன்று ஆண்டிபயாட்டி எதிர்ப்பு பாக்டீரியாக்கள் பெருகி வருகின்றன. இவைகளை எந்த மருந்தை கொண்டும் குணமாக்க முடியாது.

1970, 80 களில், ஆப்பிரிக்காவில் அதிகமான நோய்க்கிருமிகள் அந்த நேரத்தில் பொதுவாக இருந்த குளோரோகுயின் தயாரிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. நீண்ட காலமாக, மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் அவை மிக முக்கியமான ஆயுதமாக கருதப்பட்டன.மருந்துகளாகவும், தடுப்புக்காகவும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இருப்பினும் நோய்க்கிருமிகள், வைரஸ்கள் ஆன்டிவைரல் செயல்பாடு குளோரோகுயினுடன் பழகியபோது, அவை ஒப்பந்தக்காரர்களாக மாறுகின்றன

இதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை, உலகளவில் இறப்புகள் ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமானவையாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

சாராம்சம்: ஒரு காலத்தில் மூலிகை மருத்துவத்திற்கு கட்டுப்பட்ட நோய்க்கிருமிகள் இன்று அதை தூக்கிப்போட்டு மிதிக்கும் அளவிற்கு வீரியம் உள்ளவையாக புதுப்பிறவி எடுத்திருக்கின்றன. இவைகளை எதிர்த்துப்போராட புது மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். 

வாழத்தகுதியுள்ள அடுத்த தலைமுறையை உருவாக்க  சகலத்தையும் புதிப்பித்து கொண்டே இருக்கவேண்டும்.  



வெள்ளி, 6 ஜனவரி, 2023

The Story of the Corona Virus It's an Endless Story [Infinity - ∞]

 கொரோனா வைரஸின் தொடர்கதை இது ஒரு முடிவிலா தொடர்கதை [முடிவிலி - ∞] வைரஸ்கள் எப்பொழுதும் மாற்றமடைகின்றன  அதற்கு  காலங்கள்  ஒரு  தடை யே கிடையாது ஆயிரக்கணக்கான பிறழ்வுகள் ஏற்கனவே SARS-CoV-2 இலிருந்து [2019-2022 ] அறியப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸின் அசல் வடிவம் காட்டு வகை என்று அழைக்கப்படுகின்றது. வெவ்வேறு கொரோனா வைரஸ் மாறுபாடுகளுக்கான காரணம் பிறழ்வுகள், வைரஸின் மரபணு தகவலில் சீரற்ற நகல் பிழைகள். தவறான பிரதி எடுப்பு காரணமாக விளைந்தவைகள்.

அதாவது நோய் எதிர்ப்பு சக்தியிடம் இருந்து தன்னைக் காப்பாற்றி, தன்னைத் தக்க வைத்துக் கொள்ள பிரதி எடுக்கும் போது அந்த உயிரினத்தின் தகவல்களையும் இணைத்து புதுப் பிறவி எடுக்கின்றது.

இதன் நிமித்தம் அந்த புது பிறவி வைரஸ்,  நோய்-எதிர்ப்பு-சக்தியை ஏமாற்றுகின்றது. சாதாரண நோய்க்குறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு கொரோனா வைரஸ் இப்போது அந்த மனிதனை கொல்ல விஸ்வரூபம் எடுக்கின்றது.

இதற்குக் காரணம் அந்த உயிரினத்தின் உடல் திசுக்கள் உனக்கு தொற்று ஏற்படும் போது அது சாதாரண வைரஸ், அது உன் உடலில் புது பிரதி எடுத்து வரும்போது அது உனக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தானதாக மாறுகின்றது.

இதனால் தான் கொரோனா வைரஸ் ஆபத்தானதாக பார்க்கப்படுகின்றது. அது எந்த நேரத்திலும் எந்த உயிரினத்திலும் ஆபத்தான  பிறழ்வாக மாறலாம்.  இது உடலின் உயிரணுக்களில் பெருக்கும்போது எழுகின்றது.

சில சமயங்களில் சத்தியற்ற [நோஞ்சானாக]  வரலாம் மற்றும் சில சமயங்களில் வீரியமிக்கதாக புறப்படலாம். அது உன் உடலில் நடக்கும் பிரதி எடுப்பை பொறுத்தது.

கோவிட் 19 ஆரம்பம் சீனாவில் அறியப்பட்டிருந்தாலும் இந்த புதுவகை வைரஸ்களுக்கு அவர்கள் காரணம் கிடையாது. உன்னை கொல்ல நீயே புது வகை வைரஸை உற்பத்தி செய்கிறாய். வைரஸ்களின் தொழிற்சாலையாக மனித உடல்  இயங்குகின்றது.

ஒட்டுமொத்தமாக, ஐந்து கொரோனா வைரஸ் வகைகளை கவலைக்குரியது என வகைப்படுத்துகின்றது. ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் காமா, ஓமிக்ரான் ஆகியவற்றுடன் தற்போது புதுப் பிறழ்வு ஓமிக்ரான் துணை வகை XB B.1.5 உலக சுகாதார நிறுவனம் கண்காணித்து வருகின்றது.

தொற்று நோய் காலங்களில் அசைவ உணவை விட சைவ உணவுகள் மிகச்சிறந்தது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு வைரஸ் தொற்று நோய் அபாயம் குறைவு.




வியாழன், 5 ஜனவரி, 2023

A new Omicron sub-variant of 2023, XBB.1.5, is spreading rapidly in the US

2023 ஆண்டின்  புதிய ஓமிக்ரான் துணை மாறுபாடு  XBB.1.5 அமெரிக்காவில் வேகமாக பரவி வருகின்றது

அமெரிக்காவில், புதிய கொரோனா நோய்த்தொற்றுகளின் கணிசமான விகிதத்தை இப்போது ஓமிக்ரான் துணை வகை XBB.1.5 இல் காணலாம், இது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஓமிக்ரான் மாறுபாடு XBB.1.5 இதுவரை, ஓமிக்ரான் பரம்பரைக்குள் 650 க்கும் மேற்பட்ட துணை வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மரபணு பகுப்பாய்வுகளின்படி, XBB மாறுபாடு இரண்டு புழக்கத்தில் உள்ள BA.2 துணை வகைகளின் மறுசீரமைப்பு மூலம் எழுந்த  புதிய வைரஸ் வகை.

இந்த மாறுபாடு ஸ்பைக் புரதத்தில் [முனைப்புரதம்-S] உள்ள F486P மாற்றத்தால் வகைப்படுத்தப்படுகின்றது.

இது மனித உயிரணுக்களுடன் இணைக்கப் பயன்படுத்தும் வைரஸின் பகுதியாகும். இந்த பிறழ்வு மனித உயிரணுக்களில் ACE2 ஏற்பியுடன் எளிதாக பிணைப்பை ஏற்படுத்தும். இதன் நிமித்தம் அது பரவும் வேகத்தை அதிகரித்துள்ளது.

இந்த வகை வைரஸ்  பிறழ்வுகள் ஐரோப்பாவிலும் வேகமாக பரவி வருகின்றது. முந்தைய வகைகளை விட இது ஆபத்தானதாகத் தெரியவில்லை இந்த மாறுபாட்டின் அறிகுறிகளைப் பார்த்தால்இது லேசானது.

இருப்பினும் ஏற்கனவே  நோய்கள் உள்ளவர்கள், வயதானவர்கள் குழந்தைகள் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

சீனாவில் கண்டறியப்பட்ட நோயாளிகள் இருமல், வாசனை உணர்வில் மாற்றங்கள், காது கேளாமை [காதடைப்பு], மார்பு வலி மற்றும் நடுக்கம் போன்றவற்றை அனுபவிக்கின்றனர்.

பயம் கொள்ளத் தேவையில்லை இந்த நோய்க்குறிகள் எல்லாம் தற்காலிகமானவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப கூடியவை. கொரோனா வைரஸ்களை ஒழிக்க முடியாது அதற்காக வாழ்க்கை பூராகவும் முடங்கிக் கிடக்க வேண்டுமா..?