உணவு உயிரினத்தின் மீது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா? புராணக் கதைகளில் அசுரர்கள் அமுதம் உண்டதினால் தேவர்களாக மாறினார்கள். ஆதாம் ஏவாள் தடை செய்யப்பட்ட ஒரு தோட்டத்துக் கனியை உண்டதினால் இந்த பூமியின் நன்மை தீமைகளை அனுபவித்தார்கள். இது சாத்தியமா? சாத்தியம் என்கின்றது இயற்கை அறிவியல்.
தேனீக்கள் இதற்கான ஒரு விளக்கத்தை கொடுக்கின்றன. ஒரே விதமான முட்டையிலிருந்து உருவான கூட்டுப் புழுக்கள். எப்படி ராணி தேனீக்களாகவும் ஆண் தேனீக்களாகவும் வேலை ஆட்களாகவும் மாறுகின்றன. அதற்குக் காரணம் அமுது, ராயல் ஜெல்லி என்ற ஒரு உணவு.
ஒரு தேனீ குறிப்பாக அதிக அளவு அமுதை, ராயல் ஜெல்லியைப் பெற்றால் மட்டுமே அது ஆட்சியாளராகின்றது. சுரப்பு பூச்சிகளின் மரபணு அமைப்பை எவ்வாறு மாற்றுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
ராணி தேனீக்கும் அதன் வேலையாட்களுக்கும் அதிக ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டும் வெவ்வேறு படைப்புகள். மாறுபட்ட இரண்டு படைப்புகளை ஒரு உணவு உருவாக்கின்றது. உணவு மனிதனை எவ்வாறெல்லாம் மாற்றுகிறது. ஒற்றைக் கரு இரட்டையர்களை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வுகள் சொல்லுகின்றது.
இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு சூழல் வெவ்வேறு உணவு வெவ்வேறு சமூகத்தில் வாழும் போது அவர்கள் மாறுபட்ட குணாதிசயங்களை கொண்டவர்களாக இருந்தார்கள், ஒருவர் முரட்டுத்தனமாகவும் மற்றவர் மென்மையாகவும் இருந்தார் என்பதை நிரூபித்திருக்கின்றது.
ஒருவருக்கு சர்க்கரை நோய் மற்றவருக்கு சர்க்கரை நோய் இல்லை. ஒரே மரபணுவை கொண்ட இரட்டையர்களில் இது எப்படி சாத்தியமாகும். பூவோடு சேர்ந்த நாரும் நறுமணம் பேசும். நல்ல மனிதர்கள் அறிவுள்ளவர்கள் சேர்க்கை உங்களையும் அறிவுள்ளவர்களாக மாற்றும்.
ஒரே தாய் தந்தையிடம் ஒரே மாதிரியான மரபணுவை பெற்ற நான்கு குழந்தைகளும் ஒரே மாதிரி பிறப்பதில்லை.
மாறுபட்ட உடல் அமைப்பு மாறுபட்ட குணாதிசயங்கள் அறிவு கொண்டவர்களாக பிறக்கிறார்கள். இதற்கு காரணம் உணவு சுற்றுச்சூழல். சமூகம். பெற்றவர்களின் எண்ணங்கள், அந்த காலகட்டத்தில் பெற்றவர்களின் வாழ்க்கைத்தரம் பிறந்த பிள்ளைகளில் பிரதிபலிக்கின்றது. அசுரர்கள் வானத்திலிருந்து குதிப்பதில்லை கருவில், சமூகத்தினால் உருவாக்கப்படுகிறார்.
ஒரு சமூகம் யுத்தத்தினால் பாதிக்கப்படும்போது உடல் நிறை மனவளர்ச்சி குன்றிய, ஸ்கிசோஃப்ரினியா. ஆஸ்பெர்கர் நோய்க் குறிகள் கொண்ட குழந்தைகள் பிறக்கின்றார்கள். கொரோனா பாண்டமிக் காலத்தில் பிறந்த குழந்தைகளின் அறிவாற்றல் நோய்கள் வாழ்க்கை தரம் எப்படி இருக்கும் என்பதை இனிவரும் காலங்களில் தான் கணக்கிட வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் சுற்றுச்சூழல் மற்றும் சமூகம், மனிதர்தளுடனான சேர்க்கை ஒரு மனிதனை நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றுகின்றது என்பதை இது காட்டுகின்றது.
டிஎன்ஏ எத்தனை சதவீதம் டிகோட் செய்யப்படுகிறது? 99 சதவீதம் சகல மனிதருக்கும் டி என் ஏ ஒரே மாதிரியாக இருக்கின்றது. நமது மரபணுக்கள் 0.1 சதவிகித எழுத்துக்களில் மட்டுமே வேறுபடுகின்றன இருப்பினும், ஒவ்வொரு நபரும் தனித்துவமாகவே இருக்கிறார்கள். அதற்குக் காரணம், உணவு, சுற்றுச்சூழல் "எபிஜெனெடிக்ஸ்" மரபணுவை சுவிட்ச் ஆஃப் சுவிட்ச் ஆன் செய்து விடுகின்றது.
எபிஜெனெடிக்ஸ் என்றால் என்ன?: எபிஜெனெடிக்ஸ் என்பது: உயிரியலின் ஒரு பிரிவு. உயிரினங்களின் மரபணுக்களில் சுற்றுச்சூழலின் தாக்கம் என்ன என்ற கேள்வியை அவர் கையாள்கிறார் . இது 'எபிஜெனெடிக்ஸ்' என்ற வார்த்தையிலும் பிரதிபலிக்கின்றது. பண்டைய கிரேக்க மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது,
இது 'மரபியல் கூடுதலாக' போன்ற பொருள். மன அழுத்தம் அல்லது கிரீன் டீ குடிப்பது போன்ற சுற்றுச்சூழல் தாக்கங்கள் , மரபணு தகவலை ( டிஎன்ஏ ) மாற்ற முடியாது, ஆனால் அவை மூலக்கூறுகளைச் சேர்ப்பதன் மூலம் அல்லது அகற்றுவதன் மூலம் மரபணு செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன .
எனவே எபிஜெனெடிக் செயல்முறைகள் எந்த மரபணுக்களைப் படிக்கலாம் என்பதைத் தீர்மானிக்கின்றன, இதனால் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் அவை படிக்காமல் முடக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஒரே மாதிரியான இரட்டையர்கள் அல்சைமர் போன்ற நோய்களுக்கு ஒரே மாதிரியான மரபணு அமைப்பைக் கொண்டிருக்கலாம் , இருப்பினும் ஒருவருக்கு வரலாம் மற்றவருக்கு உருவாக்கவில்லை என்பதையும் இது விளக்குகின்றது.
எபிஜெனெடிக்ஸ்
மரபணு ஒழுங்குமுறையின் கூறுகள்
DNA- மெத்திலேஷன் மரபணுக்களை அணைத்துவிடும்
ஹிஸ்டோன் மாற்றம்.[DNA படிக்க முடியாது]
ஹிஸ்டோன் குலைப்பு, DNA செயல்படுத்தப்பட்டது
[DNA படிக்கும் படி மாற்றப்படுகின்றது]
எபிஜெனெடிக் பரம்பரை: அல்லது குறுக்கு தலைமுறை எபிஜெனெடிக் விளைவுகளா?
சுற்றுச்சூழல் தூண்டுதல் சுற்றுச்சூழல் தூண்டுதல்: மாற்றங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அனுப்பப்படுகின்றன சுற்றுச்சூழல் தூண்டுதல்: மூன்று தலைமுறைகளின் மரபணு அமைப்பில் நேரடி விளைவைக் கொண்டுள்ளது
மரபணு எட்டு இழைகள் கொண்ட ஒரு நூல்க்கட்டையில் சுற்றி வைக்கப்பட்டுள்ளது.[நியூக்ளியோசோம்] இது அவிழ்க்கப்பட்டு படிக்கப்படுகின்றது.
படைப்பின் தடயங்களை தேடி…..
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக