மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கொரோனா கோவிட்-19 க்கு பிற்பாடு.
இலவச பொது போக்குவரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக
லக்சம்பர்க் ஆனது.
2020 முதல், பேருந்துகள், ரயில்கள் மற்றும் புத்தம் புதிய டிராம் போன்ற அனைத்து பொதுப் போக்குவரத்தும் லக்சம்பர்க் முழுவதும் இலவசம். இந்த சேவை உள்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும் .
இதன் நிமித்தம் இந்த நாடு போக்குவரத்து நெரிசலை குறைத்து இருக்கிறார். சாலைகள் எல்லாம் காலியாக கிடக்கின்ற. நகரத்தின் வாகன நெரிசல்களை தவிர்த்து இருக்கின்றது. நகரத்தின் காற்று தூய்மை பெற்றிருக்கின்றது.
லக்சம்பர்க் மக்கள் தனியார் வாகனங்களை அதிக அக்கறை கொள்ளாமல் பொது போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் தங்களுடைய அன்றாடம் பணி வேலைகளை பார்த்துவிட்டு சுதந்திரமாக பொது போக்குவரத்தில் ஆனந்தமாக பயணிக்கிறார்கள் பயணிகள் நெரிசல்கள் இல்லாத பயணம் அவர்களுக்கு வசதியாக இருக்கின்றன.
லக்சம்பர்க் நெட்வொர்க்கில் இருந்து ஜெர்மன், பிரஞ்சு மற்றும் பெல்ஜிய நெட்வொர்க்குகளுக்கு நேரடி அணுகலுடன், மேம்படுத்தப்பட்ட எல்லை தாண்டிய இணைப்புகளையும் கொண்டுள்ளது.
லக்சம்பர்க் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகர்களில் ஒன்று. சுற்றுலா பயணிகள் சுத்தி பார்க்க வேண்டிய ஒரு நாடு. தலைநகரம்: லக்சம்பர்க் அதிகாரப்பூர்வ மொழிகள்: லக்சம்பர்கிஷ், பிரஞ்சு, ஜெர்மன் ரோமர்களுடைய பழமையான கோட்டை அரண்மனைகள் நிறைந்த நகரம் அதனால்தான் அதன் பேரை தாங்கி வருகின்றது.
கார்ல் மார்க்ஸ் - பிறந்த டிரையர் என்ற நகரம் லக்சம்பர்க் அருகாமையில் உள்ளது.
கார்லோ அகுடிஸ் இறந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகின்றது . ஆனால் 15 வயதில் இறந்த சிறுவனை வணங்கும் பல மத கத்தோலிக்கர்களின் நினைவுகளில் அவர் வாழ்கிறார். கத்தோலிக்க திருச்சபையின் உயர்மட்ட பிரதிநிதிகள் கூட கார்லோ சாதாரண இளைஞன் அல்ல என்று நம்புகிறார்கள் .
அற்புதங்கள் செய்யும் சிறுவன்: கடவுளின் ஆசி பெற்ற பல அற்புதங்களை செய்யும் அதிசய சிறுவன் என்று அவரைப் புனிதப்படுத்தினார்கள். கார்லோ தனது மரணத்திற்குப் பிறகு இரண்டு அற்புதங்களைச் செய்ததாகக் கூறப்படுகின்றது. பல நாடுகளில் இருந்து வந்த பல மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் நோய்கள் குணமாக அவரை வேண்டி காத்திருந்தார்கள்.
கார்லோவுக்குக் கூறப்பட்ட முதல் அதிசயம், பிறவியிலேயே கணைய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பிரேசிலியன் சிறுவனைக் குணப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. கார்லோவின் நினைவுச்சின்னத்தைத் தொட்ட பிறகு அவர் ஆரோக்கியமாகிவிட்டார் என்று கூறப்படுகின்றது.
ஃப்ளோரன்ஸில் படித்துக் கொண்டிருந்த கோஸ்டாரிகாவைச் சேர்ந்த இளம் பெண்ணும் எதிர்பாராத விதமாக குணமடைந்ததாகக் கூறப்படுகின்றது. அவள் சைக்கிள் விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்தாள், அந்த நேரத்தில் ஏற்கனவே முக்தி பெற்ற கார்லோவிடம் பிரார்த்தனை செய்தபின் விரைவில் குணமடைந்ததாக கூறப்படுகின்றது. இந்த புனித தேவ ஆலயத்தை லக்சம்பர்க் நகரத்தில் காண முடியும்.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக