மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மனிதனுக்கு வரமா சாபமா.? மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் உயிரினத்தின் சிறப்புகள் என்ன? மனிதன் எதற்காக இயற்கையில் இருந்தவைகளை மாற்ற நினைத்தான். அவைகள் குறைவான சாகுபடியை கொடுத்தன.என்ற ஒரே காரணம்தான். சுவையான இனிப்பு மிகுந்த நிறைய பழங்களை கொடுக்கும் மரங்களை உருவாக்கினார்கள். முன்பு பத்து மரங்கள் கொடுத்த விளைச்சலை இன்று ஒரு மரம் நல்ல மகசூல் கொடுக்கின்றன.
ஒரு வருடத்தில் 22 முட்டைகள் போட்ட கோழி இன்று ஒரு வருடத்திற்கு 220-300 முட்டைகள் இடுகின்றன. நாள் ஒன்றுக்கு நல்ல கறவை பசு 26-28 லீட்டர் பால் தருகின்றது.
இன்று மனிதனின் கையில் சாகுபடி பயிர்களாக இருக்கும் இந்த கலாச்சார உணவுப் பயிர்கள் ஏதோ ஒரு காலத்தில் காடுகளுக்கு சொந்தமானதாக இருந்த பயிர்கள் இப்போது மனிதனின் கையில் வளர்ப்பு பயிர்களாகவும் விலங்குகளாகவும் இருக்கின்றன.
இப்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, மாற்றியமைக்கப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள் அரிதாகவே அடையாளம் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக: அரிசி/நெல் இதனுடைய பூர்வீகம் காட்டுப்புல் அரிசியாக இருந்தவை. இன்று பல ரகங்களில் கிடைக்கின்றன. மற்றுமொரு எடுத்துக்காட்டு; காட்டு வாழைப்பழம் நிறைய பெரிய விதைகள் இருப்பதால் அதை சாப்பிடமுடியாது.
ஆதியில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கும், இன்று மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அன்று மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பூச்சி, புழுக்கள், வண்டுகள் உண்ணும் ஒரு பயிர்களாகவும் அழுகி கெட்டுப் போகும் உணவுகளாகவும் இருந்தது. இன்று உள்ள காய்கறிகள் பழங்கள் பயிர்களை பூச்சிகள் உண்ண முடியாது அப்படி உண்டால் இறந்து விடுகின்றனர் அல்லது மயக்கம் போட்டு விழுகின்றது.
இந்த உணவுகளை சாப்பிடும்போது மனிதனுக்கு நன்மை செய்யும் குடல் வாழ் நல்ல பாக்டீரியாக்கள் எப்படி ஏற்றுக் கொள்ளுகின்றன. வெளியில் புளித்து அழுகி கெட்டுப்போகாத உணவுகளை எப்படி குடலுக்குள் பாக்டீரியாக்கள் உடைக்கின்றன சரியாகத் தெரியாது, இருப்பினும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒரு விடயம்.
புளித்து கெட்டுப்போகாத பாலில் இருந்து எப்படி தயிர் மோர் எடுக்கமுடியும், புளிக்காத மாவிலிருந்து தோசை ஆப்பம் எப்படி சுடமுடியும். சாப்பிட்ட உணவுகள் புளித்தால்தான் நல்ல செரிமானம் அடையும். பாக்டீரியாக்கள் மூலம் உணவு உடைக்கப்பட்ட பின்னர்தான் ஊட்டசத்துக்கள் பிரிக்கப்பட்டு உறுஞ்சப்படும்.
மரபணு பொறியியல் பல வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது, ஆனால் இது இன்சுலின் உற்பத்தி போன்ற மருத்துவ நோக்கங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், மரபணு ரீதியாக கையாளப்பட்ட பயிர்கள் உயிரினங்களின் எதிர்காலம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் உள்ளன இவைகள் மனிதனின் கைகளினால் பயிரிடப்பட்டு உணவு அளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவை மனிதன் இல்லாத போனால் இவைகளும் அழிந்து போகும்.
CRISPR/Cas9 எப்படி வேலை செய்கின்றது? இந்த முறையானது டிஎன்ஏவின் முழுத் துண்டுகளையும் அல்லது தனித்த நியூக்ளியோடைடுகளையும் ஒரு மரபணுவில் உள்ள உயிரணுக்களில் உள்ள பிறழ்வு மூலம் குறிப்பாக மாற்றுவதை சாத்தியமாக்குகின்றது.
ஒரு செயற்கை Cas9 புரதம் செயற்கை gRNA உடன் இணைக்கப்பட்டு இலக்கு கலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. உயிரினங்களின் மரபணுப் பொருளை மாற்ற அல்லது அகற்ற பயன்படும் ஒரு உயிர்வேதியியல் கருவிக்கு, பெரும்பாலும் மரபணு கத்தரிக்கோல் என்று குறிப்பிடப்படுகின்றது, CRISPR/Cas9 தொழில் நுட்ப வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்ட இடத்தை மிகவும் துல்லியமாக வெட்டுகின்றது. மற்றும் புதிதாக ஒன்றை செருகி வைக்கவும் உதவுகின்றது
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக