நம்பிக்கை சார்ந்த பழக்க வழக்கங்கள்: மதம் இனம் ஜாதி மொழி கடந்து, உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஒரு சில நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களை வைத்திருக்கிறார்கள். இந்துக்கள் கையில் நூல் கட்டுவது நம்பிக்கை சார்ந்தது மட்டுமல்ல அது அறிவுப்பூர்வமானது. வெப்பமான கோடை காலத்தில் மணிக்கட்டில் கட்டி இருக்கும் நூலை நீரில் நனைத்து, மணிக்கட்டில் செல்லும் சூடான இரத்தத்தை குளிர வைக்கிறார்கள்.
ஜெர்மனி/கொலோன் நகரத்தில், பல ஆண்டுகளாக ஒரு வழக்கம் உள்ளது. காதலில் இருக்கும் தம்பதிகள் தங்கள் நித்திய அன்பை ஒருவருக்கொருவர் சத்தியம் செய்வதற்காக - ஹோஹென்சோல்லர்ன் பாலத்தின் தண்டவாளத்தில் ஒரு சிறிய பூட்டை பாலத்தில் உள்ள இரும்பு வேலியில் பூட்டி இணைக்கிறார்கள்.
ஹோஹென்சோல்லர்ன் பாலத்தை ரயிலிலோ அல்லது கால்நடையாகவோ கடந்து செல்லும் எவரும் கொலோன் கதீட்ரலை மட்டுமல்ல (தேவாலய கோபுரம்), தொங்கும் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் வண்ணமயமான பூட்டுகளையும் கவனிப்பார்கள். காதலில் உள்ள தம்பதிகள் அவற்றை தங்கள் பெயர்கள் மற்றும் தேதிகளுடன் லேபிளிட்டு தண்டவாளத்தில் இணைத்துள்ளனர். நித்திய அன்பு மற்றும் விசுவாசத்தை சத்தியம் செய்வதற்கான பாலம். பாரம்பரியத்தின் படி, தங்கள் அன்பின் வெளிப்பாடாக, காதல் அன்பு என்றும் நிலைத்து நிற்க, பூட்டிய பூட்டின் திறவுகோலை ஒன்றாக இணைந்து ரைனில்( நதியில்) வீசப்படுகின்றது.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக