ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

 ஒட்சிசனேற்ற அழுத்தம் எதனால் ஏற்படுகின்றது. அந்நிய ஊருடுவல், ஒருவர் தன்னுடைய உடலை தீவிரவாத செயல்களிலில் ஈடுபடுத்தும் போது ஒட்சிசனேற்றங்களின் ஏற்றத்தாழ்வு ஏற்படுகின்றது. அதிகப்படியான அளவு இந்த ஏற்றத்தாழ்வுகள் பின்னர் செல்கள் சேதமடைய வழிவகுக்கும்.


ஒட்சிசனேற்ற அழுத்தம் பல காரணங்களைக் கொண்டிருக்கலாம். சுற்றுச்சூழல் தாக்கங்கள், வலுவான சூரிய ஒளி, மிகக் குறைவான தூக்கம் அல்லது உணர்ச்சி மன அழுத்தம் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த வழியில் பார்க்கும்போது,  ஒட்சிசனேற்ற அழுத்தத்தின் வளர்ச்சியை முற்றிலுமாக தடுப்பது கடினம்.


இருப்பினும் உங்கள் உடலின் ஒட்சிசனேற்ற சமநிலையில் எந்த செயல்முறைகள் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்ற உணர்வை நீங்கள் வளர்த்துக் கொண்டால், சிக்கலை மிகவும் இலகுவான முறையில் எளிதாகச் சமாளிக்கலாம். ஒட்சிசனேற்ற அழுத்தத்தின் மிகவும் நன்கு அறியப்பட்ட காரணங்கள் பின்வரும் காரணிகளை உள்ளடக்கியது.

 

- புகைபிடித்தல், மது மற்றும் போதைப்பொருட்க்கள்.

- மோசமான உணவு, பெரும்தீனி.

- அதிகப்படியான சர்க்கரை நுகர்வு.

- உடல் மற்றும் மன அழுத்தம்.

- உளவியல் மன அழுத்தம்.

- தூக்கமின்மை, தீராத நோய்கள்.

- பல அன்றாட சுற்றுச்சூழல் காரணிகள்.

- அன்றாட தவறுகள், பழிச்செயல்கள்.

கொழுப்பு, சர்க்கரை உணவின் மூலம் நுகர்வதை கூடுமானவரை நீங்கள் தவிர்க்கலாம் அல்லது குறைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் தேவையான அளவு இந்த இரண்டையும் உடல் சுயமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.


கூடுதலாக கவனத்தில் ஈர்க்கப்படாமல் புறக்கணிக்கப்படும் புற ஊதா கதிர்வீச்சு, வெளியேற்ற வாயுக்கள் மற்றும் நுண்ணிய தூசி, சுற்றுச்சூழல் நச்சுக்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், ஆக்கிரமிப்பு கரைப்பான்கள் அல்லது கன உலோகங்கள், செயலற்ற புகைத்தல், ஓசோன் போன்ற இரசாயனங்கள்.


உங்கள் செல்லுலார் வளர்சிதை திறன் (மெட்டபாலிசத்தில்) உள்ள அந்நிய ஊடுருவல்களை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், உங்கள் உடலைப் பாதுகாக்க நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், அதே நேரத்தில், உங்கள் உயிரணுக்களில் ஒட்சிசனேற்ற சமநிலையை மீட்டெடுப்பதற்காக உங்கள் உணவில் நீங்கள் குறிப்பாக சேர்க்கக்கூடிய ஒட்சிசனேற்ற தடுப்பு  பொருட்கள் இயற்கையில் தாராளமாக உள்ளன.


( அந்நிய ஊடுருவல்கள் என்பது  கன உலோகங்கள், மாசுபட்ட சுற்றுப்புற நச்சுக்கள் மற்றும் வைரஸ்கள், இரசாயனங்கள். கதிர்வீச்சு, புற ஊதா கதிர்கள், அதிக வெப்பம், பூச்சிக்கொல்லி போன்ற அந்நிய பொருட்களை குறிப்பதற்காக  நான் பயன்படுத்தும் ஒற்றை வார்த்தை அது) 


ஒட்சிசனேற்றம் மற்றும் ஒட்சிசன் ஏற்ற தடுப்பு [ஆன்டிஒக்சிடன்] என்றால் என்ன? சுருக்கமாக இரும்பு துருப்பிடித்தல், அதை தடுக்கும் நடவடிக்கைதான்  ஒட்சிசன் ஏற்ற தடுப்பு [ஆன்டிஒக்சிடன்] ஒரு ஆப்பிளை வெட்டி வைத்தால் சில நிமிடங்களில் அதனுடைய நிறம் மாறும் அதை தடுப்பதற்கு சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிளிந்துவிட்டால் அது நிறம் மாறுவதை தடுக்கமுடியும்.


ஒட்சிசன் ஏற்ற தடுப்பு [ஆன்டிஒக்சிடன்] உடல் உயிரணுக்களுக்கான பாதுகாப்புப் பொருட்களாகும், அவை குறிப்பாக அந்நிய ஆக்கிரமிப்பு இரசாயன கலவைகளை நடுநிலையாக்குவதன் மூலம் உயிரணு கட்டமைப்புகளின் ஒட்சிசனேற்றம் சேதப்படுத்துவதைத் தடுக்கலாம்.


ஒட்சிசனேற்ற செயல்முறைகளைத் தடுக்கும் அல்லது தாமதப்படுத்தும் பொருட்கள் விற்றமின்களும், கனிமச்சத்துக்கள் மற்றும் தாவரங்களின் இரண்டாம்நிலை ஆற்றல் பொருள்களும்  அதில் மிக முக்கியமானது விற்றமின்- சி, ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள் போன்றவை.

புற்றுநோய் விழிப்புணர்வு: ஒட்சிசன் ஏற்ற தடுப்பு [ஆன்டிஒக்சிடன்] விற்றமின்களில் விற்றமின் C+E மிகவும் முக்கியமானது. இதனுடன் விற்றமின் A , துத்தநாகம் மற்றும்  செலினியம் இணைந்து உடலை கதிரியக்கம், புற ஊதாக்கதிர்கள் மற்றும் மாசுபடிந்த சுற்றுச்சூழல் நச்சுக்கள் போன்ற பிற தீவிரங்களிலிருந்து உடலை காப்பாற்றுகின்றது.


இது போன்ற பிற தீவிரங்களின் தாக்கங்களினால் உடல் திசுக்கள் அல்லது அணுக்களிலுள்ள எலக்ட்ரான் ஒன்றை இந்த தீவிரங்கள் திருடிவிடுகின்றது அல்லது தள்ளிவிடுகின்றது. ஒரு எலக்ட்ரானை இழந்த திசுக்கள் நடைமுறை இயக்கத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, புற்றுநோய் செல்களாக பரிணாமிக்கின்றது. இது இன்று பிற தீவிரங்களினால் ஏற்படும் புற்று நோய் காரணியாக அறியப்படுகின்றது.


அந்நிய தீவிரங்கள் நல்ல திசுக்களிலுள்ள ஒரு எலக்ட்ரானை திருடி ஆக்கிரமிப்பு செய்கின்றது பொதுவாக மூலக்கூறுகளில், ஒவ்வொரு எலக்ட்ரானுக்கும்  ஒரு புரோட்டான் உள்ளது, அதாவது ஒரு வகையான சம நிலை பங்குதாரர். இருப்பினும், இயற்கையில் ஒற்றை இணைக்கப்படாத எலக்ட்ரான்களைக் கொண்ட பல மூலக்கூறுகளும் உள்ளன. இவை அந்நிய ஆக்கிரமிப்பு பொருள்கள் (ஃப்ரீ ரேடிக்கல்கள்) என்று அழைக்கப்படுகின்றன.


தனிமையான எலக்ட்ரான்கள் ஒரு இணைப்பை தேடுவதால், இந்த அந்நிய ஊடுருவல்கள் மிகவும் வினைத்திறன் கொண்டவை, அதாவது நல்ல திசுக்களிலுள்ள ஒரு எலக்ட்ரானை திருடி ஆக்கிரமிப்பு செய்கின்றது.


இது எப்போதும் மனிதர்களுக்கு நல்லதல்ல. வேதியியல் ரீதியாக ஆக்கிரமிப்பு மூலக்கூறுகள் உயிரினத்தில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் அவை பாதுகாப்பு உயிரணு சவ்வுகள் மற்றும் முக்கிய லிப்பிடுகள் மற்றும் புரதங்கள் இரண்டையும் தாக்கி மரபணுவை (டிஎன்ஏ) சேதப்படுத்துகின்றன.


அந்நிய ஊடுருவல் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் வெளிப்புற காரணிகளின் எங்களுடைய சுற்றுச்சூழலில் அதிகமாக உள்ளது எடுத்துக்காட்டாக: புற ஊதா கதிர்கள், ஓசோன் போன்ற எதிர்வினை பொருட்கள் சிகரெட் புகையில் உள்ள நைட்ரஜன் ஒக்சைடுகள், உணவில் உள்ள கன உலோகங்கள்.


மேலும் பெரும்பாலான ஒட்சிசனேற்ற ஆக்கிரமிப்பு உடலின் சொந்த வளர்சிதை மாற்றத்தில், ஒரு வகையான துணை தயாரிப்பாக மிகவும் சீராக உருவாகின்றன.


முக்கிய தோற்றம் உடலின் உற்பத்தி நிலையங்களான  (மைட்டோகாண்ட்ரியா) இழைமணி கலத்தின் மின் ஆற்றல் உற்பத்தியின்  போது மாற்றப்படும் ஒட்சிசன் மூன்று முதல் பத்து சதவிகிதம் முழுமையாக நீராக மாற்றப்படுவதில்லை. அதற்கு பதிலாக, ஒட்சிசனேற்ற  ரேடிக்கல்கள் (ஆக்கிரமிப்பு மூலக்கூறுகள்) உருவாகின்றன, அவற்றில் பெரும்பாலானவை உடனடியாக நொதிகளால் இடைமறிக்கப்படுகின்றன. ஆனால் மீதமுள்ளவை செல்லுக்குள் நுழைந்து புதிய தீவிரவாதிகளை உருவாக்கலாம். அதாவது நல்ல திசுக்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி ஒட்சிசனேற்ற அழுத்தம் ஏற்படுகின்றது.


எப்படி ஒரு அணுமின்நிலையத்தில் அணுக்கழிவுகள் ஏற்படுவதுபோல் உடலின் மின் உற்பத்தி நிலையங்களான  (மைட்டோகாண்ட்ரியா) இழைமணி கலத்தின் மின் ஆற்றல் உற்பத்தியின் போது கழிவுகள் ஏற்படுகின்றன இந்த கழிவுகள்  உடல் திசுக்களை ஆக்கரமிப்பு செய்கின்றது.


ஒட்சிசனேற்ற தடுப்பு பொருட்கள் உள்ள உணவுகள்: பொதுவாக விற்றமின்-C நிறைந்த உணவுகள் நெல்லிக்காய், ஆப்பிள் அவுரிநெல்லிகள், திராட்சை, ப்ரோக்கோலி. உருளைக்கிழங்கு,கேரட் உள்ளி/பூண்டு மற்றும் விற்றமின்-E மற்றும் துத்தநாகம் போன்ற கனிம சத்துக்கள், செப்பு, செலினியம் போன்ற சுவடு கனிமங்கள்  நிறைந்த உணவுகள் கடலை, விதைகள், பருப்பு, தினை மேலும் தாவரத்தின் இரண்டாம் நிலை ஆற்றல் பொருட்கள்: நிறப்பொருட்கள், வாசனை மற்றும் சுவைகள் ( ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள், பைட்டோஸ்டெரால், சபோனின்கள்)


விற்றமின்கள், உடல் செல்கள் அந்நிய ஆக்கிரமிப்பால் இழந்த ஒரு எலக்ட்ரானை கொடுத்து அதை புதுப்பிக்கின்றது. வாரத்தில் ஒரு நாள் தலைக்கு உடலுக்கு எண்ணை தேய்த்து குளிப்பது மிகச்சிறந்த ஒட்சிசனேற்ற தடுப்பு நடவடிக்கையாகும். இதை கடைப்பிடித்தாலே போதும் இந்த நூற்றாண்டிலியே புற்றுநோய் என்ற வார்த்தை சொல் அகராதியிலிருந்து இல்லாது அழித்திடலாம்.


தாவரத்தின் இரண்டாம் நிலை  பொருட்கள் : தாவரத்தின் இரண்டாம் நிலை ஆற்றல் பொருட்கள் என்பது:   பழங்கள், காய்கறிகள் இலை, தழைகளிலுள்ள  நிறப்பொருட்கள், வாசனை மற்றும் சுவைகளை குறிக்கும். எடுத்துக்காட்டாக : வாழைப்பூ, பாவற்காயிலுள்ள கசப்பு, துவர்ப்பு, உப்பு 


நெல்லிக்காயிலுள்ள புளிப்பு, பூண்டு, வெங்காயம், கறுவா, ஏலக்காய், துளசியிலுள்ள வாசனை, மிளகாய், மிளகு கடுகில் உள்ள உறைப்பு, மற்றும் இவைகளுக்கு உரித்தான சுவைகளையும் குறிக்கும். (மாம்பழம், பலாப்பழம், கொய்யாப்பழ சுவைகள்) மேலும்  தாவரங்கள்  மகரந்த சேர்க்கையின் போது உமிழும் தாவர ஹார்மோன்கள் மற்றும் பூச்சிக்கடி, நோய்க்கிருமிகள், தழைஉண்ணிகளுக்கு எதிராக பாதுகாப்பு நச்சுக்கள், நுரைகள், பிசின் போன்றவைகளும் அடங்கும்.


கரோட்டினாய்டுகள்: சாயங்கள் (மஞ்சள், ஆரஞ்சு சிவப்பு)

ஃபிளாவனாய்டுகள்: சாயங்கள் (சிவப்பு, வெளிர் மஞ்சள், நீலம், ஊதா)

பைட்டோஸ்டெரால்: சவ்வு கட்டுமான பொருள், தாவர ஹார்மோன்கள்,

கொலஸ்ட்ரால்  எண்ணெய் பொருட்கள்

சபோனின்கள்: கசப்பான பொருட்கள்.

குளுக்கோசினோலேட்டுகள்:பூச்சிக்கடி, நோய்க்கிருமிகள், தழைஉண்ணிகளுக்கு எதிராக பாதுகாப்பு நச்சுக்கள், நுரைகள், பிசின்.

புரோட்டீஸ் தடுப்பான்கள்: தாவரத்தின் புரதச் சிதைவைத் தடுக்கின்றது.

மோனோடர்பீன்ஸ்: புதினா, இஞ்சி, சிட்ரஸ் பழங்கள், மசாலா போன்ற மூலிகைகள்

கருவேப்பிலை, விதைகளிலுள்ள வாசனை மற்றும் சுவைகள்.

சல்பைடுகள்: வெங்காயம், பூண்டு/உள்ளியிலுள்ள வாசனை  மற்றும் சுவைகள்.


மனிதர்களில் இந்த ஆற்றல் பொருட்கள் உடல் செல்களின் ஒட்சிசனேற்றத்தை தடுக்கும் ஆற்றலுள்ளவை மற்றும் புற்றுநோய், இருதய நோய், இரத்த அழுத்த நோய்கள் எற்படாமல் பாதுகாக்கின்றது.


குர்செடின்: என்பது தாவரங்களின் இரண்டாம் நிலை ஆற்றல் பொருளை குறிக்க பயன்படும் ஒரு சில தாவரங்களுக்கு வண்ணம் தரும் ஒரு தாவர சாயம். குர்செடின் (குவெர்செட்டோல் அல்லது விற்றமின்-P என்றும் அழைக்கப்படுகின்றது) எங்களது உணவு சங்கிலியில் அதிகமாக  அறியப்படவில்லை, இருப்பினும் நம் உணவின் ஒரு முக்கிய அங்கம்.


இது ஃபிளாவனாய்டுகளின் குடும்பத்திற்கு சொந்தமானது, இந்த நிறமிகள் பூக்கள், பழம் மற்றும் காய்கறிகளை அவற்றின் நிறத்தை கொடுக்கும்.  ஃபிளாவனாய்டுகளில், குவெர்செடின் மிகவும் துல்லியமாக ஃபிளாவனோலில் ஒன்றாகும், அவற்றின் பிரகாசமான மஞ்சள் நிறத்தால் அடையாளம் காணப்படுகின்றது. மற்றும் இந்த மூலக்கூறு அதன் கசப்பான சுவையாலும் வகைப்படுத்தப்படுகின்றது.


பொதுவாக மருத்துவ பயன்பாட்டிற்கு உதவும் மூலிகை தாவரங்களில் செயலில் உள்ள கூறுகளாக குர்சிடின், ஃபிளாவனாய்டாக கருதப்படுகின்றது.


இந்த செயலில் உள்ள மூலப்பொருள் பல உணவுகளிலும், குறிப்பாக  மஞ்சள் நிற காய்கறிகள் மஞ்சள் குடைமிளகாயில் அதிகளவில்  காணப்படுகின்றது. மற்றும் ஆப்பிள், சின்னவெங்காயம்,(பச்சையாக சாப்பிடவேண்டும், அவுரிநெல்லிகள், பச்சை தேயிலை (தேநீர்) நாவற்பழம் மற்றும் விதைகள். குவெர்செடின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும், கணைய புற்றுநோய்க்கு எதிராகவும் மேலும்  இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக