புதன், 27 ஏப்ரல், 2022

 நான்காவது பூஸ்டர்: கொரோனாவுக்கு எதிரான நான்காவது தடுப்பூசி எதற்காக போட வேண்டும்? ஒவ்வொரு முறையும் நினைவக செல்கள் கொரோனா வைரஸுடன் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ளும்போது, அவை வெளிப்படையாக சிறப்பாக கற்றுக்கொண்டு சிறந்த பாதுகாப்பை உங்களுக்கு வழங்குகின்றன.

எந்த நோய்க்கிருமிகள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்கின்றதோ அந்த கிருமிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்புசக்தி அதி சிறந்த பாதுகாப்பு கண்காணிப்பை திறம்பட மேற்கொள்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி எல்லோருக்கும் எல்லா காலத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒரு சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி, மந்தமாக அல்லது காலதாமதமாக நோய்க்குறிகளை வெளிப்படுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ்களை கண்டும் காணாமலும் இருந்து விடும் அல்லது அவைகளை எதிர்த்து மந்தமாக செயல்படுகின்றது மேலும் மற்றைய நோய்களுக்காக எடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அடக்கிவிடுகின்றது. இந்த காலகட்டத்தில் தொற்று நோய்கள் தலைவிரித்தாடும்.


பிரத்தியோகமாக ஒரு செய்தியை நோய்எதிர்ப்பு சக்திக்கு எடுத்து சொல்ல வேண்டிய ஒரு சூழலுக்கு நீங்கள் தள்ளப்படுகின்றீர்கள். “இப்படிக்கு ஒரு மெசேன்சர்” கொரோனா வைரஸ் மாறுபாடு ஓமிக்ரான் BA.2என்ற ஒருவன் வருவான் அவனை வழிமறித்து தாக்கு அவனுடைய அடையாளம் இது.


காளையை வளர்த்தால் மட்டும்போதாது அதை ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தயார்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்புசக்தியை உயர்த்தினால் மட்டும் போதாது அதை பயிற்றுவிக்க வேண்டும். இந்த வேலையை தடுப்பூசிகள் மிக சிறப்பாக செய்கின்றன


நீங்கள் மீண்டும் கொரோனா வைரஸுடன் தொடர்பு கொண்டால், புதிய ஆன்டிபாடிகள் உடலில் உடனடியாக உருவாகின்றன அதிகளவு ஆன்டிஉடல்கள் உருவாகியிருந்தால் அவைகள் திறம்பட உடலை பாதுகாக்கின்றது. உங்கள் நினைவக செல்களில்(B-செல்கள்) வைரஸ்களை நினைவில் வைத்திருக்கின்றது என்பதை இவை உறுதி செய்கின்றன


நீங்கள் இப்போது வெளி நடவடிக்கைகளில் தொற்றுநோய்க்கு எதிராக ஒரு பாதுகாப்பாக இல்லாவிட்டாலும் இது (கோவிட்-19) Sars Cov-2 குழும வைரஸ்களின் கடுமையான போக்கைத் தடுக்கின்றது.


நான்காவது பூஸ்டர் அல்லது நோய்த்தொற்றுக்குப் பிறகு நினைவக செல்கள் வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். 2002/03 இல் Sars Cov-1 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 17 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்த வைரஸ் வகைக்கு எதிராக T செல்கள் விரைந்து செயல்படுவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கின்றது.


எனவே கொரோனா. தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களும் மற்றும் இரண்டு/மூன்று முறை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் நான்காவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது அவசரமாக பரிந்துரைக்கப்படுகின்றது.


Novavax-புரத தடுப்பூசி மற்றய COVID-19 கொரோனா தடுப்பூசிகளைப் போலவே, Nuvaxovide தடுப்பூசியும் கொரோனா வைரஸுடனான தொற்றுநோயை எதிர்த்துப் போராட உடலைத் தயார்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியில் ஸ்பைக் புரதங்கள் என்று அழைக்கப்படும் S-முனைப்புரதம்


ஆய்வகத்தில் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கொரோனா வைரஸின் சிறிய போலி துகள்கள் உள்ளன. தடுப்பூசியின் மூலம் இவை உடலுக்குள் சென்றால், அவை அந்நியமாக அங்கீகரிக்கப்பட்டு, ஆன்டிபாடிகளை உருவாக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகின்றன. இது ஒரு பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் உருவாக்குகின்றது.


ஸ்பைக் புரதத்தின் தீங்கு விளைவிக்காத நகல்களை உருவாக்க உடலை ஊக்குவிக்கும் mRNA மற்றும் வெக்டர் தடுப்பூசிகளைப் போலன்றி, Novavax வைரஸ் புரதத்தின் உறையின் செல்-பண்படுத்தப்பட்ட பகுதிகளுடன் நேரடியாக செலுத்தப்படுகின்றது. நோயெதிர்ப்பு எதிர்வினையை வலுப்படுத்த, புரோட்டீனிம்பிஸ்டோல்ட்டில் துணை (பொட்டென்டியேட்டர்) என்று அழைக்கப்படும் பொருள் உள்ளது. அதாவது வலுச்சண்டைக்கு வலுச்சேர்க்கும் பொருள், இது நோய்எதிர்ப்பு சக்தியை கொம்பு சீவிவிடுகின்றது.


Nuvaxovid போன்ற புரோட்டீன் அடிப்படையிலான தடுப்பூசிகளில் எந்த வகை அசல் நோய்க்கிருமிகளின், நோய்க்கிருமி கூறுகள் எதுவும் இல்லை, அவை தங்களைப் பெருக்கி நோயை உண்டாக்கும் என்று பயம் கொள்ளத்தேவையில்லை அவை வெறும் போலித்துகள்கள்.


காய்ச்சல் தடுப்பூசிகளும் இந்த அடிப்படையில் தான் செயல்படுகின்றன mRNA (மெசேன்சர்) மற்றும் வெக்டார் தடுப்பூசிகளில் எந்த மறுஉருவாக்கம் செய்யக்கூடிய வைரஸ்களும் இல்லை, தடுப்பூசியின் புரதத் துகள்கள் நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுகின்ற பின்னணியை மட்டுமே கொண்டுள்ளது.


நவீனமயப்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை குறித்து அதிகம் பயம் கொள்ளத்தேவையில்லை. அவை உங்களுக்கு 90 விழுக்காடுகள் கொரோனா குழும வைரஸ்களுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றது. நன்றி.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக