திங்கள், 17 அக்டோபர், 2022

Organic Chemistry:

எதற்காக விமானங்களில் மண்ணெண்ணெயை[கெரோசின்] எரிபொருளாக பயன்படுத்துகின்றார்கள். கெரோசின் அடிப்படையில்

டீசலின் கழிவுப் பொருளாகும் மற்றும் இது மலிவானதும் அதிக பணம் செலவாகாது. பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதினால் விமான நிறுவனங்கள் கெரோசினை பயன்படுத்துகின்றார்கள்.

கெரோசின் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் கழிவு பொருள்களை வளிமண்டலத்தில் உமிழ்கின்றது தெரியுமா? ஒவ்வொரு முறையும் விமானத்தில் பறக்கும் போது, எடுத்துக்காட்டாக, ஜெர்மனியிலிருந்து இலங்கை சென்று திரும்பும் ஒரு நபருக்கு சுமார் மூன்று டன் CO2  உமிழப்படுகின்றது.

இதை எதற்காக சொன்னேன் என்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு, வளிமண்டல மாசு பற்றி பேசும் ஒவ்வொருவரும் விமானத்தில் பறந்து கொண்டுதான் இருக்கின்றோம். இது தவிர்க்க முடியாத ஒரு சூழல்தான் இருப்பினும் ஊருக்குத்தான் உபதேசம் அது எனக்கு இல்லை என்று சொல்லாமல்

பயணங்களை கொஞ்சம் குறைத்துக்கொள்வது சுற்றுச்சூழல் மாசு படுவதை தடுக்க உதவும். ஒரு வருடத்தில் ஒரு முறை பயணம் செய்பவர்களுக்காக இல்லை, ஒரு வருடத்தில் 10-15 தடவைகளுக்கு மேல் பறப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டியது.

கரிமவேதியியல்: கரிம வேதியியல் என்பது, இயற்கையாக வரும்  கார்பன்+ஹைட்ரஜன் இணைப்பை கொண்ட புதைபடிவ ஆற்றல் பொருட்கள்: நிலக்கரி, எரிவாயு, பெட்ரோல், கெரோசின் போன்றவைகள்.

ஹைட்ரோ கார்பனில் நிறைவுற்ற, நிறைவுறாத மற்றும் பெட்ரோல் போல் வாசனை உள்ள நறுமண பொருட்கள் என்று பல வகைப்பாடுகள் உள்ளது.

நிறைவுற்ற, நிறைவுறாத மற்றும் பென்சீன் நறுமண பொருட்கள்.

1) நிறைவுற்ற எளிதான பிணைப்புகளான அல்கேன்கள் [C-C] இதிலும் துணைக்குழுக்கள் உள்ளது. அல்கேன் மற்றும் சைக்ளோ அல்கேன்.

மீத்தான்[CH4] ஈத்தேன்[C2H6] புரொபேன் [ C₃H₈]  பூட்டான்[ C4H10] எரிவாயுக்கள் ஒரே மாதிரியான தொடரை கொண்டது. சைக்ளோ பூட்டான் இதுவும் ஒரே மாதிரியான தொடரை கொண்டது. ஹைட்ரோ கார்பன், நான்கு கார்பன் இணைப்பு வரைக்கும் வாயுக்கள் அதற்கு மேலே வரும் இணைப்புகள் திரவங்கள்.

2) நிறைவுறாத இரட்டை பிணைப்புகளான அல்கீன்கள் [C=C] இதிலும் துணைக்குழுக்கள் உள்ளது. அல்கீன்கள் மற்றும் சைக்ளோ அல்கீன்கள். சோப்பு, சலவை பவுடர் மற்றும் பிளாஸ்டிக்  தயாரிப்புகளில் பங்கு எடுக்கின்றது.

2*) அல்கைன்கள் மூன்று இணைப்புகள் C=-C நிறைவுறாத காரமான வாயுக்கள். வெல்டிங் இணைப்பு வாயுக்களாக பயன்படுகின்றது.

3) பென்சோல், நறுமண பொருட்கள் பென்சீன் வளையங்கள்: [பெட்ரோல் வாசனை பொருட்கள்] வாகன எரிபொருள், தொற்றுநீக்கி மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகின்றது.

இவைகளின் கார்பன் இணைப்புகளில் முரண்பாடு காணப்பட்டாலும், இவைகள் அத்துனையும் எரியக்கூடியவை ஒட்சிசனுடன்[O2] இணைந்து எரி சக்தியை வழங்குகின்றது [விளைவு CO2 மற்றும் நீர் உமிழப்படுகின்றது] [CnHm]  cயும் mமும் கார்பன் ஹைட்ரஜன் இணைப்பின் எண்ணிக்கையை குறிக்கின்றது.

ஹைட்ரோ கார்பன்கள் இரண்டு/நான்கு கார்பன்கள் [C-C-C-C] இணையும் போது அவைகள் வாயுக்களாகவும் அதற்கு மேலே கார்பன்கள் இணையும் போது அவை பாரம் உள்ள திரவங்களாகவும் மாறுகின்றது.

ஒரு கார்பன் இணைப்பை கொண்ட மீத்தான்[CH4] எரிவாயுவை பயன்படுத்தி சமையல் செய்யும் போது பாத்திரத்தில் கரி படியாது, கெரோசின் 8 லிருந்து [C16H34] வரைக்கும் கார்பன் இணைப்பை கொண்டது,

நீண்ட நேரம் நின்று எரியும் ஆனால் சமையல் பாத்திரத்தில் கரி படியும் அதே நேரத்தில் CO2 உமிழப்படுகின்றது மற்றும் குறுகிய இணைப்பை கொண்ட எரிபொருள்கள் விரைவாக தீர்ந்து விடுவதினால், கெரோசின் நீண்ட நேரம் நின்று எரிவதினால் விமான எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றது.

ஐரோப்பிய மொழிகள் எப்படி உருவானது: வெறும் ABCD என்ற 26 எழுத்துக்களை வைத்து கொண்டு, ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு கிரேக்கம், ஐரிஷ், இத்தாலியன், டேனிஷ், டச்சு, ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், செக், போர்த்துகீசியம், ருமேனியன், ஸ்லோவாக், பல்கேரியன், குரோஷியன், எஸ்டோனியன், ஃபின்னிஷ், லாட்வியன், லிதுவேனியன், மால்டிஸ், போலிஷ், ஸ்லோவேனியன், மற்றும் ஹங்கேரிய என்னும் 24 ஐரோப்பா மொழிகள் எப்படி உருவானது.

ஐரோப்பிய மொழிகள் உருவானத்திற்கான காரணம் மாறுபட்ட உச்சரிப்புக்கள். ஒரு சொல்லை ஒவ்வொருவரும் தங்களுக்கு தகுந்தால் போல் உச்சரித்தார்கள் அதுவே எழுத்துருவத்தில் நிறுத்தப்பட்டது.

மேற்கோளாக: ஆப்பிள் என்ற ஒரு சொல்லை ஐரோப்பியர்கள் எத்தனை விதமாக உச்சரிக்கின்றார்கள் அதுவே அவர்களின் மொழியானது. ஆங்கிலத்தில் Apfel, ஜெர்மன் Apfel, நெதர்லாந்து Appel, பிரஞ்சு Pomme, கிரேக்கம் mílo (μήλο) இத்தாலி Mela. போர்த்துகீசியம் Maçã ….  

ஒரு சொல்லை ஒரேவிதமாக எல்லோரும் உச்சரித்திருந்தால் இந்த பூமியில் ஒரே ஒரு மொழிதான் இருந்திருக்கும். மாறுபட்ட உச்சரிப்புக்கள் பல விதமான மொழிகள் உருவாவதற்கு காரணியானது.

தமிழ் சரியாக உச்சரிப்பு சொல்லிக்கொடுத்த, குழந்தை என்ற சொல்லை சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள் குயந்தை குட்டி என்றார்கள் இதுவே இன்னுமொரு மொழிக்குடும்பம் உருவாக காரணியானது.

தமிழில் ஆப்பிள் என்றால் குறைஞ்சபட்சம் எல்லா மொழிக்கார்களினாலும் புரிந்து கொள்ள முடியும். ஓசை ஒன்றுதான் எழுத்துருவங்கள் மொழியை வேறுபடுத்தி காட்டியது.

உலக மொழிகளின் வரலாற்றை கல்வெட்டுக்களில் தேடினால் கிடைக்காது ஏனென்றால் அது எங்களுக்குள்ளே புதைந்து கிடக்கின்றது. நன்றி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக