டிஜிட்டல் பணம் [மின்னணு வடிவம்]: உலக நாடுகளிடையே வெகு விரைவில் வரவிருக்கும் டிஜிட்டல் பணத்தைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். அப்ப நாங்கள் இதுவரைக்கும் வங்கி அட்டையில் செலுத்திய பணம் டிஜிட்டல் பணமில்லையா? இது போன்ற நிறைய கேள்விகளை, வரவிருக்கும் டிஜிட்டல் பணம் உங்களுக்காக வைத்திருக்கின்றது.
இதுவொரு பொது நாணயமா என்று கேட்டால் இல்லை ஆனால் ஆம். டிஜிட்டல் உலகம் எல்லோருக்கும் பொதுவானது அங்கு இலக்கங்கள் மட்டுமே மின்னணு வடிவில் ஓடித்திரியப்போகுது.
ஒரு நாட்டினுடைய பணத்திற்கான அடையாளங்கள் குறியீடுகள் எதுவும் இதில் இருக்கப்போவதில்லை. இருப்பினும் நாணயமாற்று வீதம் இன்று இருப்பதுபோலவே இருக்கும்.
இன்று புழக்கத்திலுள்ள பணத்தை நாங்கள் வங்கி அட்டைகளை பயன் படுத்தி, பணப்பரிவத்தனை செய்கின்றோம் சுருக்கமாக ஆன்லைன் வங்கி முறை. இதில் பரிவத்தனை செய்யப்படும் பணம் டிஜிட்டல் பணம் கிடையாது.
உங்கள் பையிலிருக்கும் அல்லது உங்கள் வங்கி கணக்கிலிருக்கும் காகித பணம் டிஜிட்டல் இலக்கங்களாக மாற்றப்பட்டு பண பரிவத்தனை செய்யப்படுகின்றது.
டிஜிட்டல் பணம் என்பது, முற்றும் முழுமையாக காகித பணம், சில்லறைகள் எதுவும் இல்லாதது. முற்றிலுமாக டிஜிட்டல். எடுத்துக்காட்டாக: பிட்காயின் டிஜிட்டல் காசு போல்.
இதுவும் வங்கிகள் எதுவும் இல்லாமல் பிட்காயின் பிளாக்செயின் போல், நானே வங்கி, நானே வாடிக்கையாளர் [அனுப்புபவர்/பெறுபவர்] நானே வங்கி கணக்காளர் என்று செயல்பட போகின்றதா..? இதற்கான பரீட்சார்த்த பணிகள் வெகு மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.
வரவிருக்கும் டிஜிட்டல் பணம் எப்படி செயல்படப் போகின்றது, இதனுடைய நாணய மதிப்பு என்னவாக இருக்கும், உலக நாணய மாற்று வீதம் எப்படி செயல்படப் போகின்றது.
தற்சமயம் புழக்கத்திலிருக்கும் காகித பணத்திற்கு என்ன நடக்கும். இன்று செயல்படும் உள் நாட்டு வங்கிகளின் நிலமை என்ன.
எங்களுடைய பையிலுள்ள பணத்தை வங்கி வாசலில் கால்கடுக்க நின்று மாற்ற வேண்டுமா? கூடுதலாக பணம் வைத்திருந்தால் கணக்கு காட்ட வேண்டுமா, வரி ஏய்ப்பு, கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் நிலை என்ன.
தற்சமயம் விடை சொல்லமுடியாத இது போன்ற பல கேள்விகளை வரவிருக்கும் டிஜிட்டல் பணம் உங்களுக்காக வைத்திருக்கின்றது. எதிர் கொள்வதற்கு இப்பவே தயாராக இருங்கள்.
டிஜிட்டல் பணம் அரசு இயந்திர நிகழ்ச்சி நிரல்களில் முக்கியமான ஒன்று, யாருடைய தலை உருண்டாலும் கண்டிப்பாக டிஜிட்டல் பணம் ஒரு நாள் உலக நாடுகளிடையே பகுதி பகுதியாக வந்தே தீரும்.
அதற்காக உலக வங்கிகள், நாட்டின் மத்திய வங்கிகள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஐரோப்பா, சீனா இதற்காக எப்பவோ வேலை செய்ய தொடங்கிவிட்டார்கள். சீனா ஏற்கனவே 2020 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பைலட் பிராந்தியங்கலில் டிஜிட்டல் யுவானை விநியோகித்துள்ளது.
இன்று புழக்கத்திலிருக்கும் காகித பணம் மற்றும் சில்லறை காசுகள் எல்லாம் சொந்த நாடுகளின் மத்திய வங்கி சேமிப்பு கிடங்கிற்கு செல்லும். அங்கு நாணயமாற்றுவீதம் மதிப்பு செய்யப்படும். ஏனென்றால் ஒவ்வொரு நாடுகளின் மத்திய வங்கிகள் மட்டுமே உள் நாட்டு வங்கிகளின் உதவி இல்லாமல் தனியாக தனித்து இயங்கப்போகின்றது.
இதிலுள்ள ஆபத்துக்கள்: நீங்கள் மொத்தமாக அரசு இயந்திரங்களினால் கண்காணிக்கப்படுகின்றீர்கள். உங்கள் வருமானம் செலவுகள், நீங்கள் சாராயம், பீடி, சிகரெட் போதைப்பொருள் அல்லது கள்ளச்சந்தையில் எதை வாங்கினாலும், அவசியம் இல்லாத இடங்களுக்கு சென்றுவந்தாலும் உங்கள் பண பரிவர்த்தனை மூலம் நீங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றீர்கள்.
மேலும் இணைய ஹேக்கர் தாக்குதல், போன் திருட்டு, தவறிப்போதல் இதன் நிமித்தம் உங்கள் பரஸ்பர கலாச்சார வாழ்க்கை பறிபோகலாம். பொதுவாக பிளாக்செயின்கள், பரவலாக்கப்பட்ட கணினி நெட்வொர்க்குகள் கொஞ்சம் மறைவானது[அநாமதேய] இருப்பினும் அரசு இயந்திரங்களினால் கண்காணிக்கமுடியும்.
புதிய தொழில்நுட்பங்களை நாங்கள் வரவேற்கவேண்டும், டிஜிட்டல் உலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் நடைமுறை வாழ்க்கையிலிருந்து நாங்கள் பிற்படுத்தப்படுவோம், அடுத்த தலைமுறை வாழ்க்கைக்கு தகுதி உள்ளவர்களாக நாங்கள் ஒரு போதும் இருக்கமாட்டோம்.
இதிலுள்ள நன்மைகள்: பணத்திருட்டு, வழிப்பறி, வங்கி கொள்ளை, ஏடிஎம் இயந்திரம் உடைப்பு தடுக்கப்படுகின்றது. இதன் நிமித்தம் அரசும் மக்களும் தங்களுடைய பாதுகாப்பை மேலும் ஒரு படி மேன்படுத்தி கொள்கின்றார்கள்
பணச்சுமை இல்லை. பணப்பையை சுமக்க தேவையில்லை, பணத்தை கட்டி பாதுகாக்க வேண்டிய அவசியமும் இல்லை, மற்றும் இந்த டிஜிட்டல் பண தொழில்நுட்பம், ஏடிஎம் பண இயந்திரத்தில் பணம் எடுப்பதை காட்டிலும் எளிதானது, பாமர மக்கள் கூட இலகுவாக பயன்படுத்த முடியும்.
கள்ள சம்பாத்தியம், வரி ஏய்ப்பு, ஊழல், லஞ்சம் கறுப்பு பண முதலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றது. எவனும் லஞ்சம் வாங்கமாட்டான் வாங்கினால் மாட்டிக் கொள்வான். நீங்கள் நன்கொடை கொடுத்தாலும் அது அரசு இயந்திரங்களுக்கு தெரியும்.
டிஜிட்டல் யூரோ [E-Euro]: ஐரோப்பிய மத்திய வங்கி டிஜிட்டல் யூரோவை வெகுவிரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது மத்திய வங்கி டிஜிட்டல் நாணய வரையறை பண அலகு, மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் [சென்ட்ரல் போங்க் டிஜிட்டல் கரன்சி[CBDC] என்று அழைக்கப்படுகின்றது.இது எங்களினால் நன்கு அறியப்பட்ட பிட்காயின் பண்புகளை கொண்டுள்ளது. பிட்காயின், க்ரிப்டோகரன்சி பிளாக்செயின்கள் எனப்படும் பரவலாக்கப்பட்ட கணினி நெட்வொர்க்குகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் என்று அறியப்படுகின்றது.
2026 ஆம் ஆண்டில் டிஜிட்டல் யூரோ நுகர்வோர் ஸ்மார்ட்போன் ஆப் செயலி பயன்பாட்டிற்கு வரலாம். இன்னும் மூன்று ஆண்டுகளில் டிஜிட்டல் நாணயத்துடன் ஷாப்பிங் செய்ய முடியும் இது வணிகங்களுக்கு பணம் செலுத்துவதை இன்னும் எளிதாக்கும்.
இருப்பினும், டிஜிட்டல் நாணய வருகையால் சில்லறை காகித பணம் மறுக்கப்படாமல், தொடர்ந்து புழக்கத்தில் இருக்க வேண்டும் என்று பலராலும் முன் மொழியப்படுகின்றது. எது எப்படியோ “டிஜிட்டல் யூரோ கமிங் சூன்”
வரவிருக்கும் புதிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை இன்டர்நெட் இல்லாமலும் இயங்கும் ஆப், சிம் கார்ட், புளூடூத் வசதிகளையும் கொண்டது. வணிகங்களின் அட்டை இயந்திரத்தின் மேல் உங்கள் போனை வைத்தாலே போதும் பண பரிவர்த்தனை நடந்தேறிவிடும் இதனுடைய உண்மைத்தன்மை, பண பரிவர்த்தனை முறை வந்த பிற்பாடுதான் சரியாக தெரியும்.
ஐரோப்பிய மத்திய வங்கி[ECB] டிஜிட்டல் யூரோவைபற்றி என்ன சொல்கின்றது: டிஜிட்டல் யூரோவின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, ஐரோப்பிய பணத்தைப்போலவே பாதுகாப்பானது உடனடியாக பண பரிவர்த்தனை செய்யப்படும்.
எடுத்துக்காட்டாக, பிளாக்செயின் அணுகுமுறையால் உங்கள் பணபரிவத்தனை பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியும். கூடுதலாக, வாங்குபவரின் தனியுரிமை ஷாப்பிங் செய்யும் போது, நாணயங்கள் மற்றும் பில்களுடன் பணம் செலுத்தும் போது தனிப்பட்ட தரவுகள் எதுவும் இதில் அனுப்பப்பட மாட்டாது.
ஏனெனில் உங்கள் தனிப்பட்ட தரவுகள் மறைவானது[அநாமதேய] பாதுகாக்கப்படும் என்று நம்பிக்கை அளிக்கின்றது. அதாவது சக வாடிக்கையாளர்களுக்கு உங்கள் கணக்குகள் மறைமுகமானது ஆனால் அரசு இயந்திரங்கள் உங்களை கவனிக்கும் என்ற பொருளில் இதை விளங்கி கொள்ளலாம்.
மேலும் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துவது, உள்நாட்டு வணிக வங்கிகளின் நிதி நிலமைகளை நிலையற்றதாக மாற்றும் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். அதாவது திவால் ஆகும் என்று அர்த்தம் கொள்ளலாம்.
புதிய டிஜிட்டல் சூழ்நிலை, உள்நாட்டு வங்கிகளை நம்பாத வாடிக்கையாளர்கள் அல்லது தங்கள் வழக்கமான வணிக வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து, அதை மத்திய வங்கியில் டிஜிட்டல் கணக்குகளில் டெபாசிட் செய்வார்கள்.
இதனால் பெரிய தொகைகள் வங்கித் துறையில் இருந்து ECB க்கு[மத்திய வங்கிக்கு] மாற்றப்படுகின்றன. மேலும் இது உள்ளூர் வங்கி அமைப்பில் பணப்புழக்க நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
இத்தகைய அபாயங்களைத் தடுப்பதற்காக, வரம்புத் தொகைகள் அல்லது இரண்டு-நிலை வட்டி முறை போன்ற பல்வேறு வழிமுறைகள் தற்போது ஆய்வு செய்யப்படுகின்றன. நன்றி.
டிஜிட்டல் பணபரிவர்த்தனை பிளாக்செயின் இப்படித்தான் செயல்படுகின்றது.1) நீங்கள்[A] உங்கள் நண்பனுக்கு[B] 100 யூரோ பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும்.
2) உங்கள் [A] டிஜிட்டல் 100 யூரோ பணபரிவர்த்தனை பிளாக்செயின் நெட்வொர்க்கிற்கு அனுப்பப்படுகின்றது.
3) உங்கள்[A] பணபரிவர்த்தனை தரவுத் தொகுதியில் சேர்க்கப்படுகின்றது.
4) குறியாக்க நுட்பங்களைப் பயன்படுத்தி பிணையத்தால் தொகுதி சரிபார்க்கப்படுகின்றது.
5) சரிபார்க்கப்பட்ட தொகுதி, தொகுதி சங்கிலியில் சேர்க்கப்படுகின்றது. இது ஒரு தரவுத்தளத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் சேமிக்கப்படுகின்றது.
6) நீங்கள்[A] உங்கள் நண்பனுக்கு[B] அனுப்பிய டிஜிட்டல் 100 யூரோவை உங்கள் நண்பன்[B]பெற்றுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக