கணைய அழற்சி:[Pancreatitis] கணைய அழற்சி காரணங்கள் மற்றும் அறிகுறிகள்: சளி, எச்.ஐ.வி வைரஸ், ஹெபடைடிஸ் போன்ற வைரஸ் தொற்றுகள். கடுமையாக உயர்த்தப்பட்ட கால்சியம் அளவுகள் அல்லது கடுமையாக உயர்த்தப்பட்ட இரத்த கொழுப்பு அளவுகள்.
தவறாக மடிக்கப்பட்ட புரதம், பரம்பரை (பரம்பரை கணைய அழற்சி) டையூரிடிக்ஸ், இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகள், ஹார்மோன்கள் போன்ற சில மருந்துகள். நிகோடின் நுகர்வு. அதிக மதுபானம் சர்க்கரை நோய் வகை II. [ தவறான சிகிச்சை, கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட சர்க்கரை நோய்]
புதிதாக இணைந்த இரகசிய கொலைகாரன் கொரோனா வைரஸ் தொற்றும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, காரணம் கொரோனா வைரஸைப் பற்றிய சரியான ஆய்வுகள் இன்னும் இல்லை, அது நம்மிடத்தில் என்ன செய்து கொண்டிருக்கின்றது....?
கடுமையான அல்லது நாள்பட்ட கணைய அழற்சி: கணையத்தின் கடுமையான (திடீரென்று நிகழும்) வீக்கம் விரைவில் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும், நாள்பட்ட (தொடர்ச்சியான) கணைய அழற்சி, மறுபுறம், படிப்படியாக உருவாகின்றது. வீக்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களால் கணையத்தை நிரந்தரமாக சேதப்படுத்துகின்றது.
கடுமையான கணைய அழற்சி பொதுவாக 40 முதல் 60 வயதிற்குள் ஏற்படுகிறது. ஆண்களை விட பெண்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். நாள்பட்ட கணைய அழற்சி, மறுபுறம், பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கின்றது.
ஆல்கஹால் கணையத்தை சேதப்படுத்துகின்றது: நாள்பட்டதாகவோ அல்லது கடுமையானதாகவோ இருந்தாலும் - கணைய அழற்சியின் இரண்டு வடிவங்களிலும் மது அருந்துதல் பெரும்பாலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
நாள்பட்ட கணைய அழற்சியின் 80 சதவீத நிகழ்வுகளில் ஆல்கஹால் தீர்க்கமான காரணமாகும். மதுபானம் கல்லீரலை மட்டுமின்றி மூளை, கணையம், மண்ணீரல், இரைப்பை குடல் வரைக்கும் சேதத்தை விளைவிக்கும்.
ஆல்கஹால் உடலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு நச்சு பானம். என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.ஓருவருக்கு 50 வயதில் சர்க்கரை நோய் தெரிய தொடங்கியது என்றால் 15 -20 வருடங்களுக்கு முன்பு/ வருடங்களாக மதுபானம் குடித்திருக்கும் நபராக இருந்திருப்பார் அவருடைய கணையம் ஆல்கஹாலால் அவிந்து வெந்து இனி என்னால் இயங்க முடியாது என்று மறுத்திருக்கும். அதனுடைய ஒரு வெளிப்பாடுதான் இரத்த சர்க்கரை உயர்வு.
கடுமையான கணைய அழற்சி: பித்தப்பை கற்கள் பெரும்பாலும் குற்றவாளியாக பார்க்கப்படுகின்றது.
பித்தப்பைக் கற்கள் அல்லது பிற பித்தநீர் பாதை நோய்கள் கடுமையான கணைய அழற்சியின் 40 சதவீத நிகழ்வுகளுக்கு காரணமாகும் . ஒரு ஆரோக்கியமான நபரில், கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் செரிமான சுரப்பு [கணைய சாறு/கணைய லிபேஸ்], கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பித்தத்துடன் சேர்ந்து, ஒரு பொதுவான குழாய் வழியாக சிறுகுடலுக்குள் பாய்கின்றது.
பித்தப்பை கற்களால் இந்த பாதை தடுக்கப்பட்டால், பின்னடைவு ஏற்படுகின்றது. இதன் நிமித்தம், கணைய சாற்றில் உள்ள நொதிகள் சுரப்பி திசுக்களைத் தாக்குகின்றன, இதனால் கணைய அழற்சி எதிர்வினை தூண்டுகின்றது.
கணைய அழற்சி, இதற்கு கணையம் மட்டும் தான் காரணம் அதனால் இது "கணைய சர்க்கரை நோய்" என்றும் அழைக்கப்படுகின்றது.
கணையம்:
செரிமான அமைப்பு
[கணைய சாறு]
- அமிலேஸ்.
- லிபேஸ்.
- எலாஸ்டேஸ்.
- கைமோட்ரிப்சினோஜென்.
- டிரிப்சினோஜென்.
கணைய லிபேஸ் : கொழுப்பு செரிமானத்திற்காக கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு நொதியாகும்.
அமிலேஸ்கள்: என்சைம்கள்/ ஸ்டார்ச் மற்றும் கிளைகோஜனை உடைக்கும் நொதிகள். அமிலேஸ்கள் கணையம் [கணைய அமிலேஸ்] மற்றும் வாய்வழி குழியின் உமிழ்நீர் சுரப்பிகள் [உமிழ்நீர் அமிலேஸ்] ஆகியவற்றில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கணைய எலாஸ்டேஸ்: அனைத்து முதுகெலும்புகளிலும் கணையத்திலும் உற்பத்தி செய்யப்படும் ஒரு செரிமான நொதியாகும். இந்த என்சைம் புரதங்களை உடைக்கின்றது
சைமோட்ரிப்சினோஜென்: எக்கிமோட்ரிப்சினோஜென், சைமோட்ரிப்சினின் செயலற்ற முன்னோடி இது கணையத்தில் உருவாகி சேமிக்கப்பட்டு செரிமான சாறுகளுடன் டூடெனினத்தில் [duodenum] வெளியிடப்படுகின்றது.
டிரிப்சின்: கணையத்தின் செல்கள் சுய-செரிமானத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள செயலற்ற வடிவ டிரிப்சினோஜனை உருவாக்குகின்றன. என்சைம் சிறுகுடலை அடைந்தால் மட்டுமே அது மற்றொரு நொதியான என்டோபெப்டிடேஸ் மூலம் செயலில் உள்ள டிரிப்சினாக மாற்றப்படுகின்றது.
நாளமில்லா அமைப்பு: [ஹார்மோன்கள்]
- கணைய பாலிபெப்டைட்.
- சோமாடோஸ்டாடின்.
- இன்சுலின்.
- குளுகோகன்.
கணைய பாலிபெப்டைட் : அதிக புரத உணவு இருக்கும் போது சுரக்கப்படுகின்றது. இது மனநிறைவின் உணர்வைத் தருகின்றது மற்றும் அதன் மூலம் உணவு உட்கொள்ளலைக் குறைக்கின்றது. இது எக்ஸோகிரைன் கணையத்தைத் தடுக்கின்றது, பித்தப்பையின் தளர்வை ஏற்படுத்துகின்றது மற்றும் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாவதை ஊக்குவிக்கின்றது.
சோமாடோஸ்டாடின்: என்பது ஒரு பெப்டைட் ஹார்மோன் ஆகும், இது வளர்ச்சி ஹார்மோன் உட்பட பல்வேறு ஹார்மோன்களின் சுரப்பைக் கட்டுப்படுத்துகின்றது. இது அக்ரோமேகலி, நியூரோஎண்டோகிரைன் கட்டிகள் மற்றும் இரைப்பைக் குழாயில் இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த பயன்படுகின்றது.
இன்சுலின்: வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது இரத்த சர்க்கரையை குறைக்கும் ஒரே ஹார்மோன் ஆகும். அதன் வேலை: குளுக்கோஸ் [டெக்ஸ்ட்ரோஸ்] இரத்தத்தில் இருந்து உடலின் செல்களுக்குள் செல்வதை உறுதி செய்கின்றது. [ ஒரு திறவு கோலாக பயன்படுகின்றது.
அதாவது செல்கள் அவற்றின் எரிபொருளைப் பெறுவதை உறுதிசெய்வதற்கு இந்த ஹார்மோன் பொறுப்பாகும். [சர்க்கரை சரியாக விநியோக பட்டுள்ளதா அல்லது திருடப்பட்டு உள்ளதா/ விரயம் செய்யப்பட்டதா என்றும் கண்காணிக்கின்றது.
குளுகோகன்: கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிளைகோஜனிலிருந்து குளுக்கோஸை உற்பத்தி செய்வதன் மூலம் இரத்தச் சர்க்கரை அளவைத் தூண்டுகின்றது.[ சேமித்த சர்க்கரையை மறு சுழற்சி செய்ய உதவுகின்றது.
இன்சுலின் தட்டுப்பாடு/ இரத்த சர்க்கரை அளவு குறையும் போது இந்த ஹார்மோன் செயலில் இறங்குகின்றது.
குளுகோகன் ஊசி: இரத்தச் சர்க்கரைக் குறைவு சிகிச்சைக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. சர்க்கரை-விசர் [ பைத்தியம்], ஏற்படாமல் தடுக்கும்.
இன்சுலின் சர்க்கரை குறைப்பதற்காக சுரக்கின்றதுnகுளுகோகன் சர்க்கரையை கூட்டுவதற்காக சுரக்கின்றது. இரண்டு ஹார்மோன்களும் எதிரும் புதிருமாக செயல்படுகின்றது.
நேரப் பயணம்: சர்க்கரை நோய் வகை-॥ க்கு நீங்கள் "Time travel" பின் நோக்கிய ஒரு நேரப் பயணத்தை செய்ய முடியும். எந்த இடத்தில் உங்கள் ஆரோக்கியம் தொலைந்தது , அதை சரிபார்ப்பு செய்வதன் மூலம் உங்கள் சர்க்கரை நோயின் வேகத்தை தணிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
கணைய சர்க்கரை நோய்: கணையம் இன்சுலினை மட்டுமில்லாமல் மிகமுக்கியமான செரிமான திரவங்களையும் சுரக்கின்றன, கணையத்தின் செரிமான செயல்பாடு இல்லாதது அல்லது பலவீனமடைந்திருப்பதின் அறிகுறிகள், மென்மையான, ஒட்டும், சில சமயங்களில் சாம்பல் நிற மலம் மற்றும் வயிற்றுப்போக்கு எடை இழப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம்..கணைய சர்க்கரை நோய் பெரும்பாலும் நாள்பட்ட கணைய அழற்சியால் ஏற்படுகின்றது.
டைப் 3 சி சர்க்கரைநோய்" என்று பேசும் போது, "கணைய தனிமை சர்க்கரைநோய் " என்ற சொல் கணைய புற்றுநோய், கணையத்தில் ஏற்படும் காயங்கள் (உதாரணமாக விபத்துக்குப் பிறகு), சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் அல்லது ஹீமோக்ரோமாடோசிஸ் (இரும்பு சேமிப்பு நோய்) ஆகியவையும் இந்த வகை சர்க்கரைநோயைத் தூண்டலாம்.
இரும்புச் சேமிப்பு குறைபாட்டால் ஏற்படும் சர்க்கரைநோய் (ஹீமோக்ரோமாடோசிஸ்) என்றால்: அதிகளவு இரும்பு சத்து கணையத்தில் குவிகின்றன.
இரும்புச் சேமிப்பு குறைபாடு, குடல் உணவில் இருந்து குறிப்பாக அதிக அளவு இரும்பை உறிஞ்சுகின்றது. உடலில் உள்ள தனிப்பட்ட உறுப்புகளில் இந்த இரும்புச் சத்து குவிகின்றது. இதன் நிமித்தம் கணையம் இரும்புச் சுமையால் பாதிக்கப்பட்டு, போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாவிட்டால், இரத்த சர்க்கரை உயர்வு ஏற்படுகின்றது. இதன் நிமித்தமாக சர்க்கரை வகை 3c நோய் உருவாகலாம்.
வகை 1 மற்றும் வகை 2 சர்க்கரை நோயைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் அதே மருத்துவ சோதனைகளைப் பயன்படுத்தி கணைய சர்க்கரை நோய் கண்டறியப்படுகின்றது.
கணைய சர்க்கரை நோயில் வளர்சிதை மாற்றம் மிகவும் நிலையற்றதாக இருப்பதால், அன்றாட வாழ்வில் கடுமையான அவசரநிலைகள் ஏற்படலாம்.
மற்ற வகை சர்க்கரைநோய்களைக் காட்டிலும் கணைய நோயால் ஏற்படும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இரத்தச் சர்க்கரைக் குறைவு மற்றும் ஹைப்பர் கிளைசீமியா அடிக்கடி ஏற்படலாம், இது விரைவான நடவடிக்கை தேவை மற்றும் உயிருக்கு ஆபத்தானது.
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மெட்ஃபோர்மின் போன்ற மருந்துகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது இன்சுலின் செலுத்த வேண்டும். அதிக உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் மதுவைத் தவிர்ப்பது போன்றவற்றுக்கு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவது உதவுகின்றது .
இதில் தனிநபர் மருத்துவ பரிந்துரைகள் மிகவும் அவசியமானது காரணம் கணையம் எவ்விதமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை பொறுத்தது. மருத்துவ சிகிச்சைகள் தொடங்கப்படுகின்றது.
வகை 3c சர்க்கரை நோய் பற்றிய அறிவு, பொது மக்கள் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்களுக்கு இன்னும் தெளிவாக இல்லை, இது பிழையான நோயறிதலுக்கு வழிவகுக்கின்றது, இது சில நேரங்களில் வகை 1 சர்க்கரை நோய் அல்லது மக்கள் வகை 2 சர்க்கரை நோய் என தவறாக கண்டறியப்படுகின்றது.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக