இன்சுலின் என்றால் என்ன? : இன்சுலின் என்பது நம் உடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் வளர்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும் மிக முக்கியமான ஹார்மோன் ஆகும்.
மனித இன்சுலின் ஒரு புரதம் [அமினோ அமிலங்களின் கட்டமைப்பு] வாய்வழியாக சாப்பிட்டால் செரிமானம் அடைந்து விடும். அதனால்தான் இயற்கை அதை நேரடியாக இரத்தத்தில் கலக்கும் படியாக வைத்திருக்கின்றது. இன்சுலினில் B- சங்கிலியில் 30 அமினோ அமிலங்களும். A- சங்கிலியில் 21 அமினோ அமிலங்களும் கொண்டுள்ளது. மொத்தம் 51 அமினோ அமிலங்கள் இது புரதம் என்று அறியப்படுகின்றது.
அத்தியாவசிய அமினோ அமிலங்களின் குறைபாடு இயற்கையாக சுரக்கும் இன்சுலின் குறைவுபடும் அல்லது தடைப்படும். புரதம் நிறைந்த உணவுகள் இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கும் அதுவும் கணையம் ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டும் சாத்தியமாகும்.
இன்சுலினின் பணி: உடல் முழுவதும் உள்ள செல்கள் குளுக்கோஸை [சர்க்கரை]உறிஞ்சி, அந்த செல்கள் ஆற்றலுக்காகப் பயன்படுத்தக்கூடிய வடிவமாக மாற்றுவதே இதன் முதன்மைப் பணியாகும். இயற்கையாக நிகழும் மனித இன்சுலின் கணையத்தில் உள்ள பீட்டா செல்களால் உற்பத்தி செய்யப்படுகின்றது, ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இயற்கையான இன்சுலின் சுரப்பு குறைவாகவோ அல்லது முற்றிலுமாக இல்லாது போகின்றது.
இன்சுலின் முதன்மையாக வகை 1 சர்க்கரை நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றது, வகை 1 சர்க்கரை நோயாளிகளுக்கு வேறு வழியில்லை வாழும் காலம் வரை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். வகை 2 சர்க்கரை நோயாளிகள் மற்ற மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் இன்சுலின் அளவு குறைவாக இருந்தால் இன்சுலினை தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த மருத்துவம் வளர்சிதை மாற்றத்தில் குறைவுபடும் இன்சுலினை எடுத்துக்கொள்வதும் உடல் சர்க்கரையை பயன்படுத்தும்படி பார்த்துக்கொள்வதும் மற்றும் உடல் உழைப்பை மேற்கொள்வதும்தான்.
கர்ப்ப காலத்தில் வகை-4 சர்க்கரை நோய் எனப்படும் ஒரு வகை இரத்த சர்க்கரை உயர்வு நோயை உருவாக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இன்சுலின் மருத்துவ பரிந்துரையில் வழங்கப்படலாம். காரணம் கர்ப்பகாலத்தில் மாத்திரைகள் பயன்படுத்தக்கூடாது.
இன்சுலின் செயற்கை மனித இன்சுலின் [ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது, ஆனால் இதுவும் இயற்கையாக நிகழும் மனித இன்சுலின் போன்றது]
சர்க்கரை நோய் சிகிச்சைக்காக மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட இன்சுலின்கள். மனித இன்சுலின் மற்றும் இன்சுலின் ஒப்புமைகளுக்கு இடையே ஒரு வேறுபாடு உள்ளது. மனித இன்சுலின் மனித இன்சுலின் போன்றது. இன்சுலின் ஒப்புமைகள் [Insulinanaloga] மனித இன்சுலின்களை விட வேறுபட்ட இரசாயன அமைப்பைக் கொண்டுள்ளன, இருப்பினும் இரண்டும் மிகவும் நெருக்கமாகவே வேலை செய்கின்றன.
மருத்துவ சந்தையில் பலதரப்பட்ட இன்சுலின் மாறுபட்ட தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களில் இருந்தாலும் இன்சுலின் ஒன்றுதான், ஆனால் இன்சுலின்கள் பொதுவாக விரைவான-செயல்படும், வழக்கமான அல்லது குறுகிய-செயல்படும், இடைநிலை-செயல்படும், நீண்ட-செயல்படும் மற்றும் தீவிரமான, நீண்ட காலம் செயல்படும் இன்சுலின்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
உங்களுக்கு பொருத்தமான ஒரு இன்சுலினை உங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம்.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக