சர்க்கரை நோய், மருத்துவ பயிற்சியாளர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இடையில் நடக்கிற ஒரு இழுபறி, படித்தவர்கள் ஆய்வுகளின் அடிப்படையில் விஞ்ஞான கருத்துக்களை முன் வைக்கின்றனர், மற்றவர்கள் சர்க்கரைநோய் ஒன்னுமே இல்லை காலம் காலமாக உணவின் அடிப்படையிலான மாறுதல்கள் சர்க்கரை நோயை அடியோடு குணமாக்கியிருக்கின்றது என்கின்றனர், இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்றால் இருவருமே தோல்வியடைந்தார்கள் என்பதுதான் உண்மை.
ஏனென்றால் சர்க்கரைநோய் பல முகங்களை கொண்டது அதில் ஒரு சில முகங்கள் சிரிச்சு சிரிச்சு கழுத்தறுக்கும் மற்றவைகள் நேரடியாக கொடூர முகங்களை காட்டுகின்றன.
சர்க்கரை நோயின் கொடூர முகங்கள்: சர்க்கரை நோயாளிகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் நோய் முன்னேறும்போது நோயியல் தோல் மாற்றங்களை அனுபவிக்கின்றனர்.
சர்க்கரை நோய் , மிகவும் பொதுவான நாளமில்லா நோய் ஆகும், இது எப்போதும் அதிகரித்து வரும் பரவல் ஆகும். நோய் படிப்படியாக அனைத்து உறுப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது, மூன்றில் ஒரு பங்கு சர்க்கரைநோயாளிகள் நோயின் போக்கில் பல்வேறு டிகிரிகளில் தோல் மாற்றங்களை உருவாக்குகின்றனர்.
பிருரிடஸ் சர்க்கரைநோய் : 30% நீரிழிவு நோயாளிகளில் தோல் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படுகின்றது. வறண்ட சருமம் நரம்புகளின் செயலிழப்பு ஏற்படுகின்றது.
இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை நீரிழப்பு [நீரிழிவு நோயில்] ஏற்படும், அரிப்பு பொதுவாகவோ அல்லது உள்ளூர்மாகவோ இருக்கலாம். உள்ளூர் அரிப்பு முக்கியமாக முனைகள், பிறப்புறுப்பு, ஆசனவாய் மற்றும் உச்சந்தலையை பாதிக்கின்றது. இது மட்டுமில்லாமல் அதிகரித்த சர்க்கரையை பங்குபோட படையெடுக்கும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மேலும் தோல் அரிப்புக்கு காரணமாகின்றன.
அன்றாட வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்: பயம், உடல் நடுக்கம், பெருந்தீனி ஆசைகள், நரம்பு பிடிப்புகள்,பார்வை பிரச்சினைகள் அதிக கோபம், அடங்காத ஆத்திரம், வாய்ச் சண்டை, தூக்கம், வியர்வை பதட்டம், இதய படபடப்பு, தலைவலி, வார்த்தை கண்டறியும் கோளாறுகள், மயக்கம், குழப்பம், நினைவு தடுமாற்றம், நனவின் தொந்தரவுகள், முகம் வெளிறிப்போதல், குமட்டல், அமைதியின்மை, பதட்டம், எரிச்சல். அடிக்கடி இரவில் சிறுநீர் கழித்தல். உறக்கமின்மை, உடல் தாழ்வெப்பநிலை.
சர்க்கரை நோயின் நிரந்தர பாதிப்புகள்:
• பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, நரம்புமண்டல செயலிழப்பு, குடல் பாலிப்கள்,
• நரம்பு பாதிப்பு உறுப்புகளையும் பாதிக்கும். பின்னர், உதாரணமாக, இரைப்பை குடல் புகார்கள் அல்லது இருதய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
• உயர் இரத்த சர்க்கரை அளவுகள் நமது மூளையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். சர்க்கரை தொடர்பான வைப்புகளின் காரணமாக இரத்த நாளங்கள் மாறினால், மூளையின் தனிப்பட்ட பகுதிகள் குறைவாக வழங்கப்படலாம், இது பக்கவாதம் மற்றும் டிமென்ஷியாவைத் தூண்டும்.
• காயங்கள் குணமாவதில் சிரமம், கால் பாதங்களில் புண்கள், கால் விரல்கள் இழப்பு
• சர்க்கரை ஒரு அமிலம். இரத்த நாளங்கள் உள்பட சகல உள் உறுப்புகளையும் அரித்து அறுத்து திண்டு காலி பண்ணிவிட்டும்...நன்றி
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக