சனி, 18 மார்ச், 2023

Zinc deficiency, inflammatory skin reactions can be symptoms of zinc deficiency,

துத்தநாகம் [ Zn+2]  குறைபாடு : துத்தநாக சத்தின் குறைபாடு, அழற்சி தோல் எதிர்வினைகள் துத்தநாகக் குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம்.மற்றும் உடையும் நகங்கள், கடுமையான  முடி உதிர்வு பாதிக்கப்பட்ட நபர்  கடுமையான   அறிகுறியாக கொத்து கொத்தாக மயிர்களை இழக்கின்றனர். அதாவது சீக்கிரமாக வழுக்கைத்தலை ஏற்படும்.

துத்தநாகம் பார்வைக் கோளாறுடன் நேரடி தொடர்புடையது மற்றவற்றுடன், விற்றமின் ஒழுங்குமுறைக்கு துத்தநாகம் பொறுப்பு . இந்த விற்றமின் பார்வைக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே துத்தநாகக் குறைபாடு பார்வைக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் . பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக வறண்ட கண்களால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் குறிப்பாக ஒளிக்கு உணர்திறன் உடையவர்கள். [  எரிச்சல் அடைதல், கண்கள் கூசுதல்]

மற்றும் தொற்று நோய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்றது குறிப்பாக வைரஸ் தங்கள் உதிரிப்பாகங்களை தயாரிப்பதற்கு துத்தநாகம் பெரும் இடைஞ்சலாக இருக்கின்றது. இதன் நிமித்தம் துத்தநாகம் வைரஸ் பெருக்கத்தை நேரடியாக கட்டுப்படுத்துகின்றன.

மேலும் துத்தநாகம் மீளுருவாக்கத்தை ஆதரிக்கின்றது . எனவே சுவடு கனிமம்  உறுப்புகளில் குறைபாடு தோல் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படலாம். பொதுவாக பொடுகு , கொப்புளங்கள் அல்லது குறிப்பாக வறண்ட சருமம். முகப்பரு மற்றும் அரிக்கும் தோலழற்சியும் ஏற்படலாம் . பொதுவாக பாதிக்கப்பட்ட பகுதிகள் வாய், பிட்டம், முழங்கைகள்,முழங்கால்கள் மற்றும் கணுக்கால் வரை.

பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு துத்தநாகக் குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம். ஆன்டிபாடிகளின் உருவாக்கம் மற்றும் செயல்படுத்துவதில் துத்தநாகம் ஈடுபட்டுள்ளது. துத்தநாகக் குறைபாட்டின் ஒரு பொதுவான அறிகுறி, அதனால் நோய்த்தொற்றுகளுக்கு அதிக உணர்திறன் உள்ளது. சுவடு உறுப்பு [துத்தநாகம்] ஒரு சிறிய குறைபாடு கூட ஒரு குளிர் வெடிப்புகளை ஊக்குவிக்கின்றது [ உதடு வெடித்தல்]

காயம் குணமடைய துத்தநாகத்தின் போதுமான விநியோகம் அவசியம்  ஒருபுறம், சுவடு உறுப்பு செல் வளர்ச்சி மற்றும் செல் புதுப்பித்தலை ஆதரிக்கின்றது.

மறுபுறம், துத்தநாகம் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது. உடலில் துத்தநாகம் இல்லாவிட்டால், காயம் குணப்படுத்தும் கோளாறுகள் ஏற்படலாம். திறந்த காயங்கள் சரியாக குணமடையவில்லை என்றால், பாக்டீரியாக்கள் உள்ளே வரலாம், இது தீவிர வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

விரைவாக காயங்களை ஆற்றுவதில் துத்தநாகம் முக்கிய பங்கு வகிக்கின்றது குறிப்பாக சர்க்கரை நோய் புண்கள் நீண்ட காலமாக குடலிலுள்ள  புண்களை ஆற்றும் திறன் உள்ளது.

துத்தநாகம் வளர்ச்சிக்கு இன்றியமையாதது, ஏனெனில் சுவடு உறுப்பு செல் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க அளவில் ஈடுபட்டுள்ளது. தசையை வளர்ப்பதில் துத்தநாகமும் பங்கு வகிக்கிறது. இதனால்தான் குழந்தைகள் மற்றும் குறிப்பாக இன்னும் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு துத்தநாகத்தின் தேவை அதிகமாக உள்ளது. துத்தநாகம் குறைவாக இருந்தால், வளர்ச்சி தாமதமாகும்.

பசியின்மை ருசியின்மை தூக்க கோளாறு அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு ஹார்மோன்களின் சமநிலை பாதிப்பு இளம் பெண்களின் மாதவிடாய் கோளாறு கருச்சிதைவு உடல்மன சோர்வுக்கு வழி பார்க்கின்றது.

இரும்பு உலோக சத்துக்கு பிறகு இரண்டாவது முக்கிய உலோக சத்தாக கருதப்படுகின்றது அதாவது இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது அந்த இடத்தை துத்தநாகம் நிரப்பி வேலை செய்கின்றது இரும்பை பொறுத்தவரை துத்தநாகம் ஒரு ஒட்சிசனேற்ற தடுப்பு பொருளாக செயல்படுகின்றது. [இரும்பை துருப்பிடிக்காமல் பாதுகாக்கின்றது.

மேலும் விற்றமின் B6 பற்றாக்குறையுடன்  நேரடி தொடர்புடையது இந்த விற்றமின் குறைபாடு ஆண்மை குறைபாட்டுக்கு காரணியானது. துத்தநாகம் பல வளர்ச்சி மாற்ற செயல்பாடுகளை நிறைவேற்றுகிறது உதாரணமாக, ஆரோக்கியமான தோல், கண்கள்  மற்றும் உடல் பாதுகாப்புகளுக்கு முக்கியமானது.

உணவுகளிலிருந்து அதிக அளவுகளில் வரும் துத்தநாகம் கல்லீரல், எலும்பு, தோல், மயிர்  மற்றும் தசைகளிலும் சேமிக்கப்படுவதினால் அதிகமாவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கின்றது

துத்தநாக-சத்து குறைபாடு இரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் மற்றும் தோல் அழற்சி, தலை-முடி இழப்பு, அடிக்கடி சளிபிடித்தல், முகப்பரு, படை, களைப்பு, பலவீனம், சோம்பல், மன அழுத்தம், ஹார்மோன்களின் குறைபாடு குறிப்பாக ஆண்மையின்மை, கருவுறாமை, இன்சுலின் குறைபாடு, உலர்ந்த கண்கள். வாசனை, சுவை மற்றும் பார்வைக்கோளாறு போன்ற நோய்களுக்கு காரணியாக இருக்கின்றது

துத்தநாகம் பல உடல் கட்டுமான பணிகளில் பங்களிப்பு செய்கின்றது மேற்கோளாக, ஹார்மோன்களை உற்பத்தி செய்வதில் ஒரு செங்கல்லாக, செல் கட்டுமானத்தில் பங்காற்றுகின்றது, குறிப்பாக இன்சுலின் உற்பத்தியில் அமினோ அமிலங்களின் இணைப்பு சங்கிலியாக துத்தநாகம் செயல்படுகின்றன.

இந்த சத்து இல்லாமல் கணையம் உற்பத்திசெய்யும் இன்சுலின்  பழுதுபட்டுஓட்டை விழுந்த இன்சுலினை உற்பத்தி செய்கின்றது. பழுதுபட்ட சாவிய போட்டு ஒரு பூட்டை திறக்க முயற்சி செய்தால் என்னவாகும்! சாவி உடைந்து பூட்டில் மாட்டிக்கொள்ளும், பிறகு எந்த சாவியை போட்டும் பூட்டை திறக்க முடியாதுபழுதுபட்ட இன்சுலின் செல்லை திறக்கும் போது முறிந்து போகின்றது,

இந்த இடத்தில் மெட்ஃபோர்மின் மாத்திரைகள் பழுதுபட்ட செல் வாயில் கதவுகளை திறப்பதற்கு ஒரு கள்ளச் சாவியாக செயல்படுகின்றது. இந்த மாத்திரையின் நீண்ட கால பாவனை செல்வாயில் கதவுகளை மூட முடியாதவாறு  எந்த நேரமும் திறந்தே வைத்திருக்க அனுமதிக்கின்றதுஇதன் நிமித்தம் மூடாமல் தொடர்ந்து திறந்தே இருக்கும் செல் வாயில் கதவுகளும் ஆபத்தானது. தொற்று நோய்களின் பெருக்கம் தீராத சரும அரிப்புக்கு வழிவகுக்கும்.

கவனத்தில் கொள்ள சில தகவல்கள்: மது அருந்துதல், கல்லீரல்-நோய், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் கருத்தடை மாத்திரைகள், கொழுப்பைக் குறைக்கும் சில மருந்துகளினால் துத்தநாக-சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது

நகங்கள் மீது ஏற்படும் வெள்ளை புள்ளிகளை கொண்டு  துத்தநாக-சத்து குறைபாட்டினை ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடியும். இரும்பு, தாமிரம், துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம், மற்றும் தாது-உப்புகளை மனித உடல் உருவாக்கி கொள்வதில்லை, உணவுகள் மூலம் தான் உடல் உறிஞ்சிக்கொள்கின்றது

துத்தநாக-சத்து  நிறைந்துள்ள உணவுகள்: அரிசி-தவிடு, முந்திரிப்பருப்பு, கம்பு, வரகு, சூரியகாந்தி-விதைகள், கோதுமை, ஓட்ஸ், பட்டாணி, பயறு, மொச்சை-கொட்டை, சிறு-முழு தானியங்கள், நல்ல பசும் பால், தயிர், பழங்கள். காய்கறிகள், உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, சிகப்பு அரிசி குறிப்பாக சிகப்பு நிற தானியங்களில் அதிகளவில் நிறைந்திருக்கின்றது.

சாராம்சம்: துத்தநாகம்  300 க்கும் மேற்பட்ட [என்சைம்] நொதிகளின் செயல்பாடுகளுக்கு அவசியமான கனிமமாகும். ஆண்களின் வளர்ச்சி ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன்  தைராய்டு மற்றும் பாலியல் ஹார்மோன்களை அதிகரிக்க செய்கின்றது.

சேமிப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று மறுசுழற்சி செய்யக்கூடிய சேமிப்பு மற்றது சுழற்சி செய்யப்படாத சேமிப்பு.  உடல்,  உணவின்  மூலம் வரும் அளவுக்கு  அதிகமான   துத்தநாக சத்தை சேமிக்கின்றது.

இருப்பினும் அது மறுசுழற்சி செய்யப்படாத சேமிப்பு. இரும்பு மண்ணீரலில் மறுசுழற்சி செய்யப்படுகின்றது  ஆனால் துத்தநாகம் இருப்பில் போடப்படுகின்றது. எனவே உங்கள்  அன்றாட தேவையை பூர்த்தி செய்ய ஒவ்வொரு நாளும் உணவில் துத்தநாகத்தை  உட்கொள்ள வேண்டும்.

நாள் ஒன்றுக்கு, ஒரு சராசரி வளர்ந்த மனிதனுக்கு 11-12 மில்லி கிராம் துத்தநாகம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகின்றது. விதைகள் பருப்பு வகைகள் குறிப்பாக கொண்டக்கடலை பயறு பீன்ஸ், பூசணி, சணல் விதைகள்  போன்ற அனைத்து விதை உணவுகளிலும் துத்தநாகம் தாராளமாக உள்ளது.

துத்தநாகக் குறைபாடு செரிமான கோளாறு, வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உணவின் வாசனை சுவை அறிதல் மற்றும்  அம்மாவின் சமையல் உணவின் தரத்தை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்கின்றன. பசியின்மை உணவின் மேல் நாட்டமின்மை  போன்ற குறைகளை நிரந்தரமாக  ஏற்படுத்தும். சுவையில்லை நாக்கு செத்து போச்சு என்று சொல்பவர்களுக்கு துத்தநாக சத்து குறைபாடு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

படத்திலுள்ள சொற்கள்

1) துத்தநாகம்  அறிவாற்றல் செயல்பாட்டிற்கு பங்களிக்கின்றது.

2) நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு பங்களிக்கின்றது.

3) துத்தநாகம்  கொழுப்பு அமில வளர்சிதை மாற்றத்திற்கு பங்களிக்கின்றது.

4) சாதாரண கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கத்திற்கு பங்களிக்கின்றது.

5) துத்தநாகம்  தோல், நகங்கள், எலும்புகள் மற்றும் முடி பராமரிப்புக்கு பங்களிக்கின்றது.

6) துத்தநாகம் ஒட்சிசனேற்ற அழுத்தத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகின்றது.

 

துத்தநாகக் குறைபாட்டின் சாத்தியமான அறிகுறிகள்

முடி கொட்டுதல்: முடி உதிர்தல், மூளை: கவனம் செலுத்துவதில் சிரமம்  கவன சிதறல் மற்றும் கற்றல் குறைபாடு,

 

உணர்வு உறுப்புகள்: மனச்சோர்வு மற்றும் புலன் உணர்வின் குறைபாடு, எ.கா; இரவு குருட்டுத்தன்மை, சுவை மற்றும் வாசனை கோளாறுகள்

 

பலவீனமான இயக்கி: சுவாசக்குழாய் நோய்த்தொற்றுக்கு அதிக உணர்திறன், எடை இழப்பு,

 

பாலியல் உறுப்புகள்: ஆண்கள் மற்றும் பெண்களில் கருவுறுதல் குறைபாடுகள், எலும்பு வளர்ச்சி தாமதங்கள்

 

சருமம்: அழற்சி தோல் எதிர்வினைகள், தோல் மாற்றங்கள்,  காயம் ஆறுவதில் தாமதம்

 

நகங்கள்; உடையக்கூடிய, வெள்ளை புள்ளிகள் கொண்ட நகங்கள்

 



"உண்மைகள் புதையுண்டு போகும் போது பொய்கள் வரலாறு படைக்கின்றன"




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக