ஞாயிறு, 5 மார்ச், 2023

Thymus Gland [Police Academy]

தைமஸ் சுரப்பி [போலீஸ் அகாடமி] : இந்த சுரப்பி நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகின்றது. வெள்ளை இரத்த அணுக்கள் [லிம்போசைட்டுகள்] தைமஸில் அவற்றின் நோயெதிர்ப்பு பண்புகளைப் பெறுகின்றன, அதாவது  அந்நிய ஊடுருவல்களை எப்படி அடக்குவது என்று இங்கு பயிற்சிவிற்கப்படுகின்றது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தில் அதிரடிப்படையாக விளங்கும்  T-லிம்போசைட்டுகள் இங்கு பயிற்சி எடுக்கின்றன.நோயெதிர்ப்பு செல்கள் உடலின் சொந்த மேற்பரப்பு எதிரியாக்கி கட்டமைப்புகளை, ஆன்டிஜெனின் MHC வளாகத்துடன் பிணைத்தல். மற்றும் வேறுபடுத்தி பார்க்கும்  வகையில் வடிவமைக்கப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக சொந்த உடல் அல்லாத MHC ஆன்டிஜென்களிலிருந்து பாக்டீரியா, வைரஸ்கள் ஆன்டிஜென்கள்-MHC-2 நோயெதிர்ப்பு செல்களை அடையாளம் கண்டுகொள்ளவும் சொந்த உடலைத் தாக்கி, சுய உடல் தாக்கி நோய்கள் [ஆட்டோ இம்யூன் நோய்கள்ஏற்படாமல் தடுக்கவும் இங்கு பிரத்தியோக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.

MHC வகுப்பு I வளாகங்கள் பெரும்பாலான பாலூட்டிகளின் உடல் செல்களில் உள்ளமைக்கப்பட்டாலும், MHC வகுப்பு II வளாகங்கள் B செல்கள், விழுங்கி செல்கள் [மேக்ரோபேஜ்கள்], டென்ட்ரிடிக் செல்கள் அல்லது தைமஸ் எபிட்டிலியம் போன்ற சில செல் வகைகளில் மட்டுமே காணப்படுகின்றன.

அதே நேரத்தில், நோயை எதிர்க்கும் T-உயிரணுக்களின் முதிர்ச்சி தைமஸ் ஹார்மோன்களால் தூண்டப்பட்டு போர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற படைவீரர்கள், முதிர்ச்சி அடைந்த ஆன்டி உடல்களுக்கு நோயெதிர்ப்பு முத்திரை வழங்கப்பட்டு சேவைக்காக பணிக்கப்படுகின்றது. தகுதி இல்லாத T-லிம்போசைட்டுகள் குழுமத்திலிருந்து நீக்கப்படுகின்றன.

தைமஸ் சுரப்பி, T-லிம்போசைட்டுகளின் முதிர்ச்சிக்கு தேவையான இரண்டு மிக முக்கியமானவை தைமோசின் மற்றும் தைமோபொய்டின் I ,II ஹார்மோன்களை உருவாக்குகின்றது,

இங்கு சரியாக பயிற்சி வழங்கப்படவில்லையென்றால் அதாவது ஹார்மோன்களின் குறைபாடு சொந்த உடலையே, T-உயிரணுக்கள் தாக்கி அழித்து சர்க்கரை நோய் வகை-1 உட்பட பல வகை சுய-உடல்-தாக்கி நோய்களை ஏற்படுத்துகின்றது.

சிதைவுற்ற தைமஸ் சுரப்பியை மீண்டும் செயல்படுத்தி நோயை எதிர்க்கும் திறனாக வளர்த்தெடுக்கும் மருத்துவம் இன்று வரைக்கும் இல்லை இருப்பினும் புற்றுநோய் செல்களை இனம் கண்டு தாக்கும் T-லிம்போசைட்டுகளை பயிற்சிவிக்கும் மருத்துவம் தற்போது அறிமுக பயன்பாட்டில் இருக்கின்றது.

தைமஸ் சுரப்பி என்பது: மார்பகத்திற்குப் பின்னால் உள்ள ஒரு உறுப்பு. இது பிறக்கும் போது நிணநீர் மண்டலத்தின் மிகப்பெரிய உறுப்பு மற்றும் குறிப்பாக குழந்தை பருவத்தில், நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தைமஸ் சுரப்பியானது டி லிம்போசைட்டுகளின் பள்ளி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

[தைமஸிலிருந்து டி] ஏனெனில் டி லிம்போசைட்டுகள், லிம்போசைட்டுகளின் துணைக்குழு ‎ , நோயெதிர்ப்பு மண்டலத்தில் உடலின் சொந்த மற்றும் அந்நிய ஊடுருவல்  செல்களை [வைரஸ், பாக்டீரியாவேறுபடுத்துவதற்கு அங்கு கற்றுக்கொள்கின்றன இதன் பொருள் அவை தைமஸ் சுரப்பியில் செயல்படும் பாதுகாப்பு செல்களாக முதிர்ச்சியடைகின்றன. பருவமடையும் வரை உறுப்பு வளரும் . வயது வந்தவர்களில், இது அளவு மற்றும் முக்கியத்துவத்தில் குறைகின்றதுபுத்தக

வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக