புதன், 22 மார்ச், 2023

International Courts Two. Both are located in The Hague, Netherlands.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள் சர்வதேச நீதிமன்றங்கள் இரண்டு. இந்த இரண்டும் நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது.

1) சர்வதேச  நீதிமன்றம் [Uno]. இதனுடைய பிரதான முற்றம் ஐக்கிய நாடுகள் சபை. நிறுவப்பட்ட ஆண்டு: 1945,   73 உறுப்பினர்களை உள்ளடக்கியது. 2) சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.[ICC ] இது சர்வதேச சட்ட நீதிமன்றம் அரசுகளுக்கிடையேயான அமைப்பு மற்றும் இதுவொரு தன்னாட்சி அமைப்பு சர்வதேச தீர்ப்பாயம்  ஆகும்.

ரோம் சட்டத்தின் அடிப்படையில் 1998 ஆண்டிலிருந்து இயங்கத் தொடங்கியது. இது 1993 முதல் 2017 வரை இருந்த நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள ஒரு தற்காலிக குற்றவியல் நீதிமன்றமாகும்.

1991 முதல் யூகோஸ்லாவியப் போர்களில் செய்யப்பட்ட கடுமையான குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பை இது எடுத்துக் கொண்டது. இருப்பினும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  என்று அழைக்கப்பட்டாலும் இது உலக நீதிமன்றமாக இல்லை.

போஸ்னியப் போரில் செர்பிய போர் குற்றவாளிகளுக்கு பன்னிரண்டு ஆண்டுகள் சிறை, ஹேக்கில் தண்டிக்கப்பட்டவர் செர்பிய பாதுகாப்பு சேவையின் இரண்டு முன்னாள் தலைவர்களான ஜோவிகா ஸ்டானிசிக் மற்றும் ஃபிராங்கோ சிமாடோவிக் ஆகியோர், பொஸ்னியப் போரில் கொலை, துன்புறுத்தல் மற்றும் வெளியேற்றத்திற்கு உதவுதல் மற்றும் உதவி செய்ததற்காக ஹேக்கில் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டார்கள்.

இருப்பினும் யூகோஸ்லாவியா தீர்ப்பாயத்திற்கு மாறாக, நீதிமன்றம் ஒரு .நா நீதிமன்றம் அல்ல, மாறாக ஒப்பந்த மாநில நீதிமன்றமாகும்.  123 நாடுகள் உறுப்பினர் கட்சிகளாக உள்ளது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், அரபு, சீனா, ரஷ்யா போன்ற ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளில் இது  இயங்குகின்றது.

ஆரம்பத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கையொப்பமிட்டார்கள் இருந்தும் கையொப்பத்தைத் திரும்பப் பெற்றார்கள். இந்தியாவும் சீனாவும்  கையெழுத்துப் போடவில்லை ஆகவே இந்த இரு நாடுகளும் உறுப்பினர்கள் அல்ல

இனப்படுகொலை. தனி நபர் குற்றம். போதைப் பொருள். போர் குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள். வலுக்கட்டாயமாக மக்களை இடம் மாற்றுதல்  ஒரு மக்கள் தொகையை நாடு கடத்தல், நில ஆக்கிரமிப்பு, மக்களை அழிக்கும் நோக்குடன் செய்யப்படும் செயல்கள் [ தொற்று நோய்களை பரப்புகின்ற செயல்] சித்திரவதை, பாலியல் அடிமைத்தனம்.

குற்றவியல் மற்றும் சர்வதேச சட்டம் இது இனப்படுகொலை , மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் , போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக் குற்றங்களுக்காக தனிநபர்கள் மீது வழக்குத் தொடர அதிகார வரம்பைக் கொண்ட முதல் மற்றும் ஒரே நிரந்தர சர்வதேச நீதிமன்றம் இதுவாகும் . இது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான சர்வதேச நீதிமன்றத்திலிருந்து வேறுபட்டது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் க்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் [ICC] கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதுஇது குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கைது வாரண்ட் நியாயமானது என்று விவரித்தார்.

கற்பழிப்புகள் மற்றும் சித்திரவதைகள் போன்ற ஆப்கானிஸ்தானில் போரின் போது செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கான குற்றச்சாட்டுகளை பரிசீலிக்குமாறு நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் நடந்த அட்டூழியர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ICC] ஒரு முக்கிய சட்ட சமர்ப்பிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

போராட திராணி இல்லாத சிறுபான்மை இன மக்களும் சட்டத்தையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தி சர்வாதிகாரிகளையும் அடக்க முடியும் என்பதற்கு  சர்வதேச தீர்ப்பாயம் [நியாய சபை]   ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் [ICC] மற்ற நீதிமன்றங்கள் போலத்தான் இயங்குகின்றது.

புடின் கைது பற்றி பலதரப்பட்ட வாதங்கள் முன்  வைக்கப்படுகின்றது. யார் ரஷ்யா அதிபர் புடின் மேல் வழக்கு தொடர்ந்தது ? நீதிமன்றங்கள் தானாக ஒருபோதும் வழக்கு தொடராது யாராவது வழக்கு போட்டால் அதை விசாரிக்கும் அதிகாரம் பெற்றது.

உக்ரைனில் இருந்து வரும் பயங்கரமான காணொளிகள் படங்களை பார்த்துவிட்டு  உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

உக்ரைனில் நடக்கும் பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிராகவும்ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து குழந்தைகள் சட்ட விரோதமாக நாடு கடத்தப்படுவதற்கும் ரஷ்ய கூட்டமைப்பிற்கு மீள்குடியேற்றத்திற்கும்  ரஷ்ய  அரசுத் தலைவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பாகும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது இருப்பினும் ரஷ்யாவிற்கு சென்று புடினை கைது செய்வதற்கு சர்வதேச நீதிமன்றத்துக்கு தனிப்பட்ட போலீஸ் படைகள் எதுவும்  கிடையாது அதற்கு ஐக்கிய நாடு சபை படை பிரிவு தேவை.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு ஒரு பயணத்தில் விளாடிமிர் புடினை கைது செய்ய முடியுமா? ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் BRICS உச்சிமாநாடு நடைபெறுகின்றதுபுடின் எப்போதும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வின் போது கைது செய்யப்படலாமாஐசிசி ரஷ்யா மற்றும் அமெரிக்காவைத் தவிர்த்து 123 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த நாடுகளின் போலீஸ் படைகளினால் கைது நடக்கலாம் ....?

பிரதிவாதி ஹேக் நீதிமன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் சட்டத்தின்படி, ஹேக் நீதிமன்றம் வாதியும் பிரதிவாதியும் நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக இருக்கும் அல்லது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலால் பரிந்துரைக்கப்படும் வழக்குகளை மட்டுமே கையாள முடியும். ரஷ்யா நீதிமன்றத்தின் ஒரு பகுதியாக இல்லை, .நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினராக, நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்வதைத் தடுக்கலாம்.

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும் ஆனால் எப்படி? இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற ஆக்கிரமிப்பு குற்றத்திற்கு பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நீதி வேண்டும்.

பொய்களுக்குள்ளே உண்மைகளை தேடிமரியுபோலில் /கிழக்கு உக்ரைனில் காரை ஓட்டி சென்றவர்  உண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்தானா! இந்த கேள்வி பலரையும் ஆச்ரியப்படுத்துதில்லையா.

மரியுபோலில் இருந்தவர் உண்மையான விளாடிமிர் புடின் இல்லையா !?   அப்ப யார் அவர்ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹுசைன் அந்த நேரத்தில் குறைந்தது மூன்று இரட்டைர்களை  கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றதுதாக்குதல்கள் மற்றும் படுகொலைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக. சதாம் ஹுசைன் தன்னைப்போல் உருவம்  கொண்ட மூவரை  வேலைக்கு வைத்திருந்தார். [ அசல் சதாம் ஹுசைன் உயிருடன் இருப்பதற்கு வாய்புகள் கூட இருக்கின்றது]

2020 ஆம் ஆண்டில், புடினே பொது நிகழ்ச்சிகளுக்கு உடல் இரட்டையைப் பயன்படுத்த குறைந்தபட்சம் தனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக ஒப்புக்கொண்டார். ஆனால், அப்போது, அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக அவர் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, 2000 களின் தொடக்கத்தில் தனக்கு இந்த சலுகை வழங்கப்பட்டதாக அவர் அந்த நேரத்தில் ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸிடம் கூறியிருக்கின்றார்.

புடின் தனது பதவிக்காலத்தின் முதல் ஆண்டுகளில் செச்னியாவில் ஒரு போரை நடத்தினார் மற்றும் இஸ்லாமிய போராளிக் குழுக்களின் தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காக இருந்தார், அவர் நீண்ட காலமாக அவர்களின் குறியாக இருந்து வருகிறார், இன்று உக்ரைனுக்கு எதிரான அவரது ஆக்கிரமிப்பு போருடன், அவருக்கான பாதுகாப்பு நிலைமையும் கடுமையாக மோசமடைந்துள்ளது. கடைசியில் புடின்  டபுள் வாய்ப்பை ஏற்றுக் கொண்டாரா? இப்போது அந்த வாய்பினை பயன்படுத்தியிருக்கலாம் .  

இந்த உலகத்தை நம்பமுடியவில்லை எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்அடோல்  ஹிட்லர்  கூட ஒரே நேரத்தில்  இரண்டு இடத்தில் இருந்தார். உங்களால் முடியும் வரை உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் மற்றவர்களை நம்பி ஏமாந்து போகாதீர்கள். ஆள் மாறாட்டம்  என்பது மனிதகுல வரலாற்றில் பதியப்படாத ஒரு வரலாறு.  

 

"உண்மைகள் புதையுண்டு போகும் போது பொய்கள் வரலாறு படைக்கின்றன"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக