திங்கள், 20 பிப்ரவரி, 2023

Gray hair, gray hair: Why do we have gray hair?

நரைமுடி, இளநரை: எங்களுக்கு  முடி ஏன் நரைக்கின்றது? நரை முடி, வெவ்வேறு காரணங்களைக் கொண்டிருக்கலாம். மன அழுத்தம் மிக முக்கிய காரணிகளில் ஒன்று.

கர்ப்ப காலத்தில் அல்லது மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் பெரும்பாலும் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன.

இருப்பினும் சமநிலையற்ற உணவு அல்லது இரத்த அழுத்த மருந்து போன்ற மருந்துகளை உட்கொள்வது, இந்த செல்வாக்கு காரணிகள் உடலில் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும், இது முடி வேர்களைத் தாக்கின்றது,

முடி வேரில் உள்ள மெலனோசைட்டுகள் இதனால் பாதிக்கப்படுகின்றன இவை வண்ண உற்பத்திக்கு பொறுப்பாகும். மெலனோசைட்டுகள் தொந்தரவு மற்றும் வண்ண உற்பத்தி தடைபட்டால், அதன் விளைவாக நரை முடி ஏற்படுகின்றது.

நரை முடியை இயற்கையாகவே தடுக்கக்கூடிய  மூலப்பொருளை மாண்டரின் தோலில்[ஆரஞ்சு பழம்] ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

மாண்டரின் தோலில் உள்ள இயற்கையான செயலில் உள்ள ஒரு மூலப்பொருள்குறிப்பாக, காட்டு வகை மாண்டரின் தோலில் வலுவான ஒக்ஸிஜனேற்ற பொருள் உள்ளது. இது மாண்டரின்  பூச்சிகளைத் தடுக்க இது முக்கியம்.

இது ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலதிக ஆய்வுகளில், முடி வேரில் உள்ள மெலனோசைட்டுகளை மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்க இந்த செயலில் உள்ள மூலப்பொருளை நரைக்கு எதிராக பயன்படுத்தலாம்  என்று அவர்கள் கண்டறிந்தனர் . 

இப்போது  நரைமுடியை வண்ணமயமாக்க பல்வேறு வழிகள் உள்ளன. இருப்பினும்  பெரும்பாலும்  முடிவுகள் ஏமாற்றமடைய வைக்கின்றது. இயற்கையான முடி நிறத்தை அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது.

தலைமுடிக்கு சாயம் பூசுபவர்கள், ரசாயனப் பொருட்களால் தங்கள் தலைமுடி பெரிதும் பாதிக்கப்படுவதைக் கவனித்திருப்பார்கள்இது தலையின் தோலை உலர்த்தி வறட்சியடைய வைக்கும் மற்றும் முடியை உடையக்கூடியதாக மாற்றும். இதன் விளைவுகள்  முடி உதிர்வது மற்றும்  அடங்க முடியாத அரிப்பு ஏற்படும்.

இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் புற்றுநோய் காரணியாக கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அளவிற்கு சாயங்கள் அவ்வளவு அசாதாரணமானது அல்ல.கெமிக்கல் சாயத்திற்கு பதிலாக இயற்கை முடி நிறங்களை பயன்படுத்தலாம்.

இயற்கையாகவே உங்கள் தலைமுடியை கருமையாக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளது: மாண்டரின் தோல் [ஆரஞ்சு பழம்] மருதாணி  கருப்பு தேநீர், காபியுடன் இயற்கையான முறையில் முடியை டோனிங் செய்தல் மற்றும் எலுமிச்சை கொண்டு முடியை ஒளிரச் செய்தல், வெந்தயம் வேர்களுக்கு நல்ல உரமாகும். இவைகளில் வலுவான ஒக்ஸிஜனேற்ற பொருள் உள்ளது இதன் நிமித்தம் [ஒக்ஸிஜனேற்றம்] சாயம் ஏற்றல் நடைபெறுகின்றது.

எனக்கு இன்னும் வேனும் "கொடு, கொடு" அறிவுத்தாகம் ஆரோக்கியமானது.

உனக்காக நீங்கள் எப்ப வாழப்போகின்றீர்கள், நல்ல காலம் எப்பவரும் என்று பார்த்துவிட்டு வீடு திரும்புகையில் உனக்கான காலம் கடந்துவிட்டதை பார்த்து திகைத்து நிற்பாய்.!

நிறுவனத்திற்காக மட்டும் வாழாதீர்கள்.  உங்கள் முழு சுயத்திற்கும் நேரம் ஒதுக்குங்கள். ஏனென்றால், வருடங்கள் விரைவாகச் செல்கின்றன, வேலைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்வது, காலியான ஒரு இடத்தை உங்கள் வாழ்க்கை உங்களுக்கு விட்டுச் செல்லும்.

எனவே உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் வாழ்க்கையில் நீங்கள் இன்னும் என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?   மேலும் பட்டங்கள் வாங்குவது பணத்தைத் தேடி ஓடுவது அல்லது இன்னும் இயந்திரமாகத்தான் இயங்கப் போகிறீர்களா..? 

எதுவாக இருந்தாலும்  "உழைப்பு-வாழ்க்கை"  என்பதற்குப் பதிலாக "வாழ்க்கை-வேலை" என்று சொல்லுங்கள், அது உங்கள் வாழ்க்கைக்கு  ஒரு  அர்த்தத்தைத் தரும்.  வேறு எதற்கும் உங்கள் இடத்தையும் வாய்ப்பையும் விட்டுக் கொடுக்காதீர்கள்.

அன்பு, வலிமை மற்றும் மகிழ்ச்சி உங்களை தொடர இன்றே தொடங்குங்கள், நாளை நல்ல தொடக்கத்தைப் பெறுவீர்கள். "வசதிகள் சேமித்த நேரத்தை திருடிய மொபைல் போன்கள்"உங்களுடைய ஓய்வு நேரத்தை உங்களுக்கு தெரியாமல் மொபைல் போன்கள் திருடுகின்றன. 

 புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக